செவ்வாய், நவம்பர் 25, 2014

காயல்பட்டணம், கயல்விழி & காயாம்பு.


என்வாழ்வில், என்னை சந்தோஷப்படுத்திய நண்பர், நண்பிகளைவிட என்மனதை காயப்படுத்தியவர்கள் ஏராளம், தாராளம் சர்வசாதாரணமாய் ஒருவார்த்தையை சொல்லிவிட்டு அவர்கள் போய்விடுவார்கள், அந்தவார்த்தைகள் எனக்குள் முள்ளாய் குத்திக்கொண்டே.. இருக்கும், விபரம் தெரிந்த நாள்முதல் இப்படித்தான் சராசரி மானிட ஜீவராசிகளைப்போல் என்னால் இருக்கமுடிவதில்லை, மற்றவர்கள் பார்வையில் எனது வாழ்க்கை நன்றாக தெரிவதற்க்கும், எனது பார்வையில் நாசமாய் போனதற்கும் காரணம் எனது ஞாபகசக்தி எதையுமே மறக்கமுடிவதில்லை, ஞாபகசக்தி என்வாழ்வாதாரத்தை உயர்த்திவிட்டு, வாழ்க்கையை அழித்துவிட்டது, நான் சொல்லும் வாழ்வாதாரம் என்பது பிறர்காணும் உடையணிந்த உருவம் போன்றது, வாழ்க்கை என்பது பிறர் அறியா உடையற்ற சரீரம்போன்றது பலஇரவுகள் உறக்கம் வராமல் வேதனைப்பட்ட தினங்களும் ஏராளம் இதில் மிகப்பெரிய வேதனை என்னவென்றால் அந்த வார்த்தைகள் என்னை காயப்படுத்துமே என்றோ ? காயப்படுத்தி விட்டதே என்றோ ? அறியாத நண்பர்களும், நண்பிகளும்தான் ஏராளம், இந்த நிகழ்வுகள் நாளுக்குநாள் பெருகிவருவது கண்டு என்னை நானே வெறுத்ததும் உண்டு மற்றவர்களை குறைசொல்வது எப்படி நியாயமாகும் ? தொடக்கம் என்னிடம்தானே... இதுகூட என்னை நிறைய விசயங்கள் எழுத உதவியானது, தனிமையை தேடினேன் நண்பர்கள், நண்பிகள் வட்டத்தை சுருக்கினேன், மனம் அமைதியாக தொடங்கியது தனிமை என்சுமையை இறக்கிவைப்பது போன்ற உணர்வு, கூடவே மனம் தானாகவே சுமையின்றி பறப்பது போன்ற உணர்வும், என்இனிய இந்தியாவில் தனிமை சுலபமாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம், அயல்நாடுகளில் வேலை செய்யும் BACHELOR களுக்கு வாய்ப்புகள் குறைவு, காரணம் வீட்டில் தனியாக இருக்கமுடியாது யாராவது ஒருநண்பர், நண்பிகள் இருந்துகொண்டே இருப்பார்கள், இங்குள்ள வாழ்க்கைச்சூழல் அப்படி, எனக்கு எனது CAR தான்வீடு பல நேரங்களில் தனிமையைதேடி WEEL போனபோக்கில் காரைவிடுவேன், நான்குபுறமும் காரின் கருப்புநிற கண்ணாடி கதவுகளை அடைத்துக்கொண்டு தனிமையில் இருக்கத்தொடங்கினேன், நான் யாருக்கு கெடுதல் செய்தேன் ? கெடுதல் நினைப்பதுகூட தவறு என்ற, கொள்கை என்னுடையது, நான் என் வேதனைகளை சொல்லிஅழ ஒருமடி கிடைக்காததால்தானே ! மார்பில் தாங்கி ஆறுதல் சொல்ல ஒருதுணை இல்லாததால்தானே ! இந்ததனிமை தேடல். தனிமையில் அழுவது தவறில்லையா ? என்னை நானே கேட்டு, எப்படித்தவறாகும் ? தனிமையில் சிரிப்பதுதான் தவறு. என, எனக்கு நானே கவிதை எழுதி பதில் சொல்லிக்கொள்வேன்.
 
என்மனச்சுமை இறக்கிட
ஒரு இடம்கொடு இறைவா !
என்கணம் விட்டுஅகல
ஒரு தருணம்கொடு தலைவா !
என்னுள் நுளைந்த சுமையே !
என்று விடுவாய் எமையே !
இமைபோல் காக்கும் கணையே !
இன்றே விடுவாய் எனையே !
துணையாய் இருக்கும் வினையே !
விட்டு விடுவாய் எனையே !
முள்ளாய் குத்திய சொல்லே !
எய்தவ(ள்)ன் மனம் ஒரு கல்லே !
காயம்பட்ட, மனம் மறந்துவிட
தாயும் தினம் மருந்துயிட
என்மனம் விட்டு, அழ
எனக்கொரு மடி,கொடு(த்)தாயே !
 
சாம்பசிவம்-
எழுதுனது யாரு... காயாம்புவா ? கயல்விழியா ? ரெண்டுபேருக்கும் ஒத்துப்போகுதே....
Video
(Please ask Audio Voice)58 கருத்துகள்:

 1. காயாம்பூவோ - கயல்விழியோ - கண்ணீர் எதற்கு?...

  (ரெண்டு பேருக்கும் ஒத்து போகிற மாதிரி இருந்தாலும் - பின்னாளில் தனிமையில் சிரிக்கும் படியான நிலை வந்து விடக்கூடாது!?..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையே நியாயமான கருத்துக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
  2. நண்பன் கில்லருக்கு,

   அனேக வணக்கங்கள்.

   நண்பர் என்றால் ஒரு அன்னியம் எட்டிபார்க்கும் எனவே நண்பன் என்கின்றேன் கொஞ்சம் அன்னியோனியம் கிட்டிசேர.

   அணிந்துகொள்ள செருப்பில்லையே என கவலைபட்டானாம் ஒருவன் , காலே இல்லாத ஒருவனை பார்க்கும்வரை.

   உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு.

   CHEER -UP MAN , KEEP DRIVING YOUR PEN (பெண் அல்ல)

   நன்றி, வணக்கம்.

   கோ.

   நீக்கு
  3. அன்னியோனியமாகிப்போன நண்பனின் வருகையும், கருத்துரையும், 6தலும் கண்டு அகமகிழ்ந்தேன் நன்றி வேண்டாமே நண்பனுக்கு...

   நீக்கு
 2. பலநேரங்களில் சொற்கல்(ள்) விடுவோர் விழட்டும்
  பலனாய் நெஞ்சிலம்பென தெரிந்தோ தெரியாமலோ
  விடுவார் விட்டறிவிலர் காண் மனமே
  விடாது நில் நிமிர்ந்து.

  பதிலளிநீக்கு
 3. சில சமயம் நம்மை அறியாமல் வெளிப்படும் சில சொற்கள் கூட பிறரை காயப்படுத்திவிடுவது உண்டு. நானும் இப்படி காயப்படுத்தி காயப்பட்டதும் உண்டு! எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பா, நான் காயம் பட்டதுண்டு, ஆனால் காயப்படுத்தியதில்லை. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 4. சாம்பசிவம் , கயல்விழி, காயாம்பு...... எல்லாமே தெரியாமல் இருக்கிறதே. எழுதுவது ஆறுதல் கொடுக்குமானால் எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்புரியும்படி எழுதுங்கள். இந்த எழுத்துக்கள் உங்களைக் காயப் படுத்த அல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்து எமக்கு மனஆறுதல் தருகிறதே... ஐயா இனியெனும் எழுத முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 5. "//நான் என் வேதனைகளை சொல்லி அழ ஒரு மாடி கிடத்தால் தானே//"

  உங்களுக்குத்தான் எத்தனை மடிகள் ஐயா(வலைப்பூ சொந்தங்கள் மூலமாக), பிறகு ஏன் இப்படி ஒரு வரி.

  தனிமையில் இனிமை காண முடியுமா என்று ஒரு கவிஞன் கேட்டான். கண்டிப்பாக முடியும். தனிமையில் உட்கார்ந்து, மனதில் உள்ள குமறல்களை,சந்தோஷங்களை எல்லாம் வலைப்பூவில் கொட்டினால் தானாக இனிமை காண முடியும். அதை விட்டுவிட்டு, இப்படி WEEL போன போக்கில் எல்லாம் இனிமேல் தயவுசெய்து காரை விடாதீர்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே, சமீப காலமாக வலைச்சொந்தங்களால் எனது மனம் மாற்றம் கண்டதை உணர்கிறேன் இதை நானெழுதி பல மாதங்களாகிறது வரிசைப்படி வெளியிடும்போது இதுவும் வந்து விட்டது ஆனால் தற்போதைய வாழ்வுக்கும் இதற்க்கும் தூரம் அதிகமாகி கொண்டே வருகிறது... வருகைக்கு நன்றி,

   நீக்கு
 6. உள்ளம் என்பது எப்போதும்
  உடைந்து போகக்கூடாது
  என்ன இந்த வாழ்க்கை என்ற
  எண்ணம் தோன்றக்கூடாது
  எந்த மனிதன் நெஞ்சுக்குள்
  காயமில்லை சொல்லுங்கள்
  காலப் போக்கில் காயமெல்லாம்
  மறைந்து போகும் மாயங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான எனக்கு மிகவும் பிடித்த வரிகள் சகோ.. மாடிப்படி மாதுவின் முதல் வருகைக்கும், ஆறுதலான கருத்துரைக்கும் மிக்கநன்றி.

   நீக்கு
 7. கவலை இல்லாத ஒரே ஒரு மனிதரை எங்களுக்குக் காட்டுங்கள் கில்லர் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக யாராலும் காட்ட முடியாது சகோதரி தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   நீக்கு
 8. ஏனப்பா இந்த சோகம்!? என்னாயிற்று எங்கள் நண்பருக்கு?! இப்படி ஒரு சோகக் கண்ணீர். அட விட்டுத் தள்ளுன்ங்க பாஸ்! வலையுலகமே இருக்குல்ல.....அமெரிக்காவுலருந்து தமிழன் ஒரே சோகக் கண்ணீர், செண்டிமென்டா வரிகள் வாசிச்சுட்டு இந்தப்பக்கம் வந்தா....நீங்களுமா...

  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ப்ளீஸ்! சரி ஞானி ஸ்ரீபூவு என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு? உங்க சோகத்தக் கண்டுகிடாம...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் பழைய கஞ்சி நண்பரே,, இப்பொழுதெல்லாம் தங்களைப்போன்ற நண்பர்கள் கிடைத்த காரணத்தால் தினம் பொன்னி அரிசி சோறுதான் கவலையில் ஆழ்த்தி விட்டேன் என்று சொன்னதற்காக அடுத்த பதிவு குலுங்க குலுங்க சிரிப்பீர்கள் ஞானி ஸ்ரீபூவு ஆசியால்.

   நீக்கு
 9. தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே ஜி!
  உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்யும் உங்களுக்கேன் கவலை?
  கவலைதான் உங்களைக் கண்டு கவலைப்படவேண்டும்!
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி கவிஞரே... தாங்கள் சொல்வது ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்னதைப்போல் துன்பத்தை துன்புறுத்து என்பதைப்போல் அருமையாக இருக்கிறது தங்களைப்போன்றவர்கள் இருக்கும்போது கவலை இனி எம்மிடம் கவலைக்கிடமாவது உறுதி,

   நீக்கு
 10. அதுவும் வந்துவிட்டு போகடடும் நண்பரே..!! அந்த அனுபவமும் தாங்கள் ஞானியாக உதவும்

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. தொடர்ந்து ஓட்டுப்போட்டு எம்மையும் நாட்டை ஆளும் பேராசையை உணர்த்தும் நண்பரே... நன்றி.

   நீக்கு
 12. பகிர்ந்துகொள்ளுங்கள் நாங்கள் இருக்கிறோம். மனச்சுமை குறையும். எழுதுவதைப் போல முடிந்தவரை அதிகமாகப் படிக்கவும் முயற்சி செய்யுங்கள். இன்னும் மனம் நிம்மதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றி முனைவர் அவர்களே தாங்கள் சொன்னதை செய்து கொண்டே.... இருக்கிறேன், இருப்பேன் கடைசிவரை..

   நீக்கு
 13. இதுவும் கடந்து போகும் அண்ணா...
  நிறைய எழுதுங்கள்... எழுத்து உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்....

  பதிலளிநீக்கு
 14. சுய பச்சாதாபம்.ஒரு மோசமான வியாதி,அதில் இருந்து விடுபட்டு விட்டீர்கள் ,இனியெல்லாம் சுகமே !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான் சொன்னபிறகு இனி சுகமே... வருகைக்கும், வாக்குக்கும் நன்றி.

   நீக்கு
 15. அன்புள்ள நண்பர் கில்லர்ஜி,

  கயல்விழியிலிருந்து...
  கசிவதா குருதி....
  உறுதியாய் ...இது இனி
  இறுதியாய்...!

  சில நேரங்களில் மனம் சுமையாகும்...
  அது கூட சுக வேதனைதான்...!
  மனச்சுமையை இறக்கி வைத்தால்
  மனசு இதமாகும்... சிலாகித்து
  எண்ணப்பறவை சிறகடிக்கும்...!

  நண்பரே ஒரு தவறு நடந்து விட்டது...! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? தவறியும் வானம் மண்ணில் விழுந்து விட்டதா என்று கேட்கிறீர்கள்...! இல்லை அய்யா...

  தாங்கள் Boat ஓட்டுவதற்குப் பதிலாக கார் ஓட்டுகின்றேரே! ‘ தியாகம் ‘ திரைப்படத்தில் வரும் சிவாஜி போலேவே இந்த ஜி -யைப் பார்த்தேன்....என்ன ஒற்றுமை பாருங்கள்... லட்சுமி போலவே கயல்விழியைப் பார்த்தேன்.

  நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு...
  ஒன்று மனசாட்சி...
  ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா...
  ஆண்டவன் அரிய நெஞ்சில்
  ஒரு துளி வஞ்சம் இல்லை...
  அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை...
  மனிதனம்மா மயங்குகிறேன்.
  தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே!

  மனிதனாக அழுவதிலிருந்தே...
  தவறுக்கு துணியமாட்டீர்கள் என்பதை அருமையாக படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்!

  நன்றி.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே ஒற்றுமையை இவ்வளவு சரியாக சொல்வீர்கள் என நான் நினைக்கவே இல்லை அதிலும் எனக்கு தெரியாத விசயம் ஒன்றும் உள்ளது ஆம் கவிஞரே சிவாஜி – கில்லர்ஜி.

   இனி தெய்வகுற்றம் நிகழாது என நம்புகிறேன் கவிஞருக்கு புரிந்திருக்குமென்று கருதுகின்றேன்.
   நன்றி.

   நீக்கு
 16. வலைப்பூ மடி இருக்கே நண்பரே. ஞாபக சக்தியை அதில் திருப்பி விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 17. இதுவும் கடந்துபோகும் என்று துணிந்து நின்றால் வெற்றிதான் பாஸ் எதிலும் பற்று வைக்காமல் இருப்போம்!!!!

  பதிலளிநீக்கு
 18. நம்மை நாமே செம்மைபடுத்துக் கொள்வது தான் சிரமமே... அதில் வெற்றி பெற விட்டாலும், திருப்தி அடைந்தாலே என்றும் சுகமே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொன்னீர்கள் நண்பரே,, போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து இதுவும் அருமை வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. உங்கள் எழுத்து எங்களுக்கும்
  பேசுவது குறித்த எச்சைக்கைக் கொடுக்கிறது
  ஒருவகையில் ஆறுதலையும்...
  சேம் பிளட் என்பதால்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களைப் போன்றவர்களின் வருகையால் இன்னும் நிறைய எழுதுவேன் கருத்துரைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 20. ஓட்டுப்பட்டை காணவில்லையே...என நினைத்தேன்.

  தம. 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் முறை தமிழ் மணம் வாக்களிப்பிற்க்கு நன்றி.

   நீக்கு
 21. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு .... அருமையான பாட்டுதான் ஆனால் மனம் சுணங்கும் நேரங்களில் அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.... என் பதிவில் நம்பிக்கை மனுஷிகளைப் பார்த்த பின்பும் இப்படித் தோன்றக் கூடாதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக... தங்களின் ‘'நம்பிக்கை மனுஷிகள்’’ படித்திருந்தும் இப்படியெல்லாம் எழுதியிருக்க கூடாதுதான் பலநேரங்களில் நாமும் பிறரைப்போல் படிக்க வில்லையே என்ற என்னுள் இருக்கும் ‘’தாழ்வு மனப்பான்மை’’ அவ்வப்போது என்னை எட்டிப்பார்க்கிறது இது எழுதி நெடுங்காலமாகிவிட்ட காரணத்தால் இட்டேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. மறதி சில நேரங்களில் நன்மையே...காயங்கள்..வடுவாய் இருப்பின்...சாசனமிட்டு மனதில் அமரும்....வடுக்களை நினைக்க வேண்டாம்..சகோ..அது தன்னிரக்கத்தை ஏற்படுத்தி நம்மைக்கொன்றுவிடும்...நமக்கு நாம் தான் ஆறுதல்...ஓகேவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும், 6தலுக்கும் நன்றி.

   நீக்கு
 23. //ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுமே
  வாழ்வென்றால்
  போராடும் போர்க்களமே//

  நண்பரே கவலை வேண்டாம்
  பிறரை மன்னிக்கக் கற்றுக் கொள்வோம்
  எழுதுங்கள் நண்பரே
  எழுத்து நம்க்கு நிம்மதி தரும்
  இசையின் மடியில் கண் மூடி அமருங்கள்
  உங்கள் கவலைகள் காற்றோடு காற்றாய் கலந்து மறைந்து போகும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே, எழுத்தும், இசையும் எனக்கு மிகவும் பிடித்தவையே... வருகைக்கும் வாக்களிப்பிற்க்கும் நன்றி.

   நீக்கு
 24. நிறைய பேச வேண்டும் உங்களுடன் என்று நினைக்க வய்த்த பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசலாமே தோழரே.... வருகைக்கும், கருத்துகைக்கும், தமிழ்மண வாக்கிற்க்கும் நன்றி தோழா.

   நீக்கு
 25. அன்பரே
  எல்லாவற்றையும்
  எல்லோரிடமும்
  சொல்வதால் கவலை தீருமென்றால்
  இன்று
  ரகசியம்
  என்று
  சொல்லவே
  எதுவும் இருக்காது நான் படித்த
  எனக்கு பிடித்த
  ஒரு வாக்கியம்

  ' உன் கவலைகளை பிறரிடம் சொல்லாதே'

  'பாதி பேருக்கு அதைப்பற்றி கவலை இல்லை'

  மற்றவர்களுக்கோ ?!

  அது மகிழ்ச்சி தரும் விஷயம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே,,, எனது வாழ்வில் ரகசியங்களை அவ்வளவு எளிதில் யாரிடமும் சொல்லி விடமாட்டேன், சதா ‘’ரணமாக’’ வலிகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நான் இதை சாதாரண விசயமாகத்தான் கருதுகிறேன் தாங்கள் சொன்ன தத்துவமும் மிகச்சரியே கருத்துரைக்கு நன்றி நண்பா...

   நீக்கு
 26. வணக்கம்
  தங்களின் வினாக்களில் நியாயம் உள்ளது..சொல்லிய விதம் நன்றாக உள்ளது..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...