தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 22, 2016

कमरा में आइए जी (கம்ராமே ஆயியே ஜி)


சில வருடங்களுக்கு முன்பு ஒருநாள் BUS STOPபில் நான் காத்திருந்தேன் எனதருகே ஒரு NEW BMW CAR வந்து நின்றது அதிலிருந்த ஒருவர் எனது இந்திய மொழியான ஹிந்தியில் POST OFFICE போகவேண்டுமென வழி கேட்டார் நானும் சொன்னேன் பிறகு என்னை எங்குபோக வேண்டுமென கேட்டு நான் இறக்கி விடுகிறேன் எனசொன்னார் எனக்கும் வெயில் கொடுமை தாங்க முடியாததால் ஏறிக்கொண்டேன் தான் இந்தியன் from MUMBAI என்று அறிமுகப்படுத்தி கொண்டார் அவர் AL AIN னிலிருந்து வருவதாகவும் தனக்கு ABUDHABI பற்றி சரியாக தெரியாது எனவும் சொன்னார் நான் இறங்க வேண்டிய இடம் வரவும் அவர் தன்னுடன் வரமுடியுமா ? PLEASE எனக்கேட்டார் என்னுடைய வேலை அப்படியொன்றும் அவசரமில்லை ATM மில் பணமெடுத்து WESTERN UNION னில் ஒரு நல்ல காரியத்திற்கு அனுப்ப வேண்டும் அவ்வளவுதான் சரியென POST OFFICE போனோம் CAR PARK ல் PAY TICKET செய்து விட்டு உள்ளே போனால் TOKEN SYSTEM சுமார் 150 நபர்களுக்கு, பிறகு தான் எங்களுக்கு எப்படியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும் என்ன செய்வது ? 

நாம் போய் விடலாம் எனநினைத்தேன் அப்பொழுதுதான் COUNTER ரில் எனது EGYPT நண்பனொருவன் இருப்பதை கண்டேன் அவன் எதிர்புறம் அமர்ந்து கொண்டு அவனுக்கு MOBILE செய்து அடுத்த நம்பரை தட்டுமுன் தனது நண்பருடைய வேலையை முடித்துக்கொடு எனசொன்னேன் அவன் வரச் சொல்லவும் இவரை போகச் சொல்லி ஜாடை காண்பித்தேன் உடன் போய் EMIRATES I.D யை வாங்கி வந்தார் அவருக்கு மிகமிக சந்தோஷம் காரணம்.

வழி காண்பித்தது வந்த வேலை உடன் முடிந்தது CAR க்கு PAY PARKING விசயம் அவருக்கு தெரியாது ஒருவேளை நான் வராமலிருந்தால் POLICE FINE வந்திருக்கலாம்.

தனது அரபாபுக்கு (முதலாளி) MOBILE செய்து தான் EMIRATES I.D யை வாங்க இரண்டு மணி நேரமாகும் எனச்சொன்னார் பிறகு என்னை வழுக்கட்டாயமாக RESTAURANT அழைத்துப் போயி COFFEE சாப்பிட்டோம் பிறகு என்னை BANKகில் நிறுத்தி பணம் எடுக்கும்வரை நின்று என்னுடன் EXCHANGE வந்து பணம் அனுப்பி விட்டு என்னை எனது ROOMல் கொண்டு வந்து விடுகிறேன் எனக்கு நேரமிருக்கிறது எனச்சொல்லி வந்தார் ஒரு பேச்சுக்காக (கம்ராமே ஆயியே ஜி) 
அறைக்கு வாருங்கள் என்றேன் உடன் வந்து விட்டார் சரியென உள்ளே சென்றோம் எனது நண்பர்களிடம் நண்பரென அறிமுப்படுத்தினேன் (வேறு என்ன சொல்ல முடியும்) TEA போட்டுக் கொடுத்தார்கள் குடித்துக் கொண்டு இருக்கும்போது TOILET டிலிருந்து மற்றொரு நண்பர் வந்தார் இருவரும் ஒரு கணம் பார்த்துக் கொண்டது தான்தாமதம் ROOM அதிர்ந்தது... 

ஹரே இக்பால், ஹரே எட்வர்ட், இருவரும் கட்டித்தழுவிக் கொண்டார்கள் MUMBAI PUNEயில் இருவரும் பால்யகாலம் தொடங்கி பள்ளி நண்பர்கள் 27 வருட பிரிவுக்கு பின் இன்று சந்திக்கிறார்கள் இருவருமே கண் கலங்கியது 

எங்கள் அனைவருக்குமே கலக்கத்தை உண்டு பண்ணியது பிறகென்ன இருவரும் தனியாகப் போயி ஒருமணி நேரமாக பேசினார்கள் MOBILE No: பரிமாற்றம் பிறகு அடிக்கடி வந்து போனார்(கள்) நெடுங்கால நண்பர்கள் சேர்வதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ நான் காரணமாகி விட்டேன்.

இதன் அடிப்படை காரணமென்ன ? அவர் எனக்கு உதவ காரணம் தெரியாத இடம் நான் அவருக்கு உதவ முதல் காரணம் வெயில் கொடுமை இரண்டாவது எனக்கு வேலையில்லை பொழுது போக்க ஆள் கிடைத்தது.

மேலும் இருவருக்குமே உதவும் மனப்பான்மை இருந்திருக்கிறது.

காணொளி

44 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஜி

  நல்லமனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..இந்தியில் நல்ல உரையாடல்.வீடியோ அருமை படித்து மகிழ்ந்தேன் ஜி த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிஞர் ரூபனின் உடனடி வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. சந்தர்ப்பம் தானாகவே அமையும் இறைவன் அருளால். நாம் காரணகர்த்தா அவ்வளவே. உங்கள் நண்பர்கள் உங்கள் உதவியை மறக்கவே மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையான விடயத்தை அழகாக சொன்னஈர்கள்.

   நீக்கு
 3. வெயில் தந்த நண்பர்கள் வாழ்க

  பதிலளிநீக்கு
 4. நட்பு.
  திடீர் நட்பு... நெடுநாளாக பிரிந்திருந்த நட்பை சேர்த்து வைத்திருக்கிறது....
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நம்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. நான், நீண்ட காலத்துக்கு பின் ஒரு பால்ய நண்பரை பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தேன் ,விசாரித்தபோது அவர் காலமாகிவிட்டார் என்று அறிந்ததும் மிகுந்த வருத்தம் அடைந்தேன் !ஆனால், நீங்கள் சேர்த்து வைத்த நண்பர்கள் இரட்டிப்பு சந்தோசம் அடைந்து இருப்பார்கள் என்பது நிச்சயம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மையில் வேதனையாகத்தானே இருக்கும் இவர்கள் மகிழ்ந்தது உண்மை.

   நீக்கு
 6. சந்தோஷமான நிகழ்வுதான். அதிலும் நீங்களே அந்த நிகழ்வுக்கு காரணம் எனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது நண்பரே...

   நீக்கு
 7. நெடுநாள் நண்பர்களை தங்களது திடீர் நட்பு இணைத்ததறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு

 8. முன்பின் தெரியாதவருக்கு உதவிசெய்ததன் மூலம் அவரது பழைய நண்பரை காண உதவியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எப்பொழுதுமே உதவுவது எனது பொழுது போக்குதான்.

   நீக்கு
 9. மகிழ்ந்தேன் நண்பரே
  ஒரு சிறிய உதவி நெடுநாள் நண்பர்களை இணைத்திருக்கிறதே
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இது யதார்த்தமாக நிகழ்ந்த நிகழ்வே...

   நீக்கு

 10. முன் பின் தெரியாதவராக இருந்தாலும் நீங்கள் செய்த உதவியின் மூலம் பழைய நண்பர்கள் இணைந்தது மகிழ்ச்சி சகோ.

  நானும் என்னுடன் படித்த சினேகிதியை 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் ஜவுளிக்கடையில் சந்தித்தேன். எங்கள் இருவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணி கொண்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இது உண்மையில் அதிர்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருந்திருக்கும் சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 11. நம்ம ஊரு அனுபவம் மாதிரி எதுவும் நடந்திருக்குமோ என வரிகளை நகர்த்திக் கொண்டே வந்தேன். அப்படி ஏதுமில்லை! இப்படியான நிகழ்வுகள் மூலமாக தான் சிலரின் மனதில் நிலைத்து விடுகிறோம். அருமை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே இதே இந்தியாவாக இருந்திருந்தால் ? அவரது காரில் ஏறியிருப்போமா ? வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 12. சமய‌த்க்தில் செய்கின்ற உதவி வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தும்! உங்கள் விஷயத்தில் பிரிந்திருந்த நண்பர்கள் ஒன்று சேர நீங்கள் காரணமாயிருந்திருக்கிறீர்கள்! இருவரின் மகிழ்விற்கு காரணமாகியிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி

   நீக்கு
 13. நல்ல அனுபவம்..

  இதே போல குவைத்தில் எனக்கும் ஒரு அனுபவம் கிட்டியது..

  ஆனால் - இது போல் இல்லை..
  எனினும் அனைவருக்கும் மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களது அனுபவத்தையும் எழுதுங்களேன்.

   நீக்கு
 14. எந்த ஒரு செயல் நடப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று தெரிகிறது! வாழ்க!

  பதிலளிநீக்கு
 15. ஜி..பயன் கருதாமல் செய்யும் எந்த உதவியும் நன்மையே பயக்கும்..

  எந்த செயலுக்கும் ஒரு தொடர்பு இருந்தே ஆகவேண்டும் என்னும் கேயாஸ் தியரியும் நினைவு வருகிறது

  பதிலளிநீக்கு
 16. எதுக்கும் கொடுத்து வைத்திருக்கனும் என்று சொல்வார்கள் அது போல் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 17. ஓட்டுப் பெட்டியை காணவில்லை நண்பரே..

  பதிலளிநீக்கு
 18. நட்பு எப்படி எல்லாம் பிறக்கிறது, தொடர்கிறது மலர்கிறது. வாழ்த்துக்கள் ஜி.

  பதிலளிநீக்கு
 19. எங்கோ வேர் விட்ட மரத்தின் கிளைகள் அபுதாபியில் பாவி ஒன்றை ஒன்று ஆரத்தழுவிக்கொள்கிறதுதான்,

  பதிலளிநீக்கு
 20. நண்பர்கள் சேர்ந்தது அருமை நண்பரே....

  பதிலளிநீக்கு
 21. உண்மையான அன்புடனான நட்பு என்றேனும் ஒரு நாள் சந்திக்கும் பிரியாது என்பதும் நடப்பது ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் இருக்கும் என்பதும் உண்மைதான் போலும்...வாழ்க வளர்க உங்கள் நட்பு + நட்பூக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையே எந்த செயலுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதற்க்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான் வருகைக்கு நன்றி

   நீக்கு