தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மார்ச் 03, 2016

கள்ளக்குறிச்சி, கல்யாணராமன் Weds கல்யாணி

இந்த டிக்கெட் எடுத்த எனது முயற்சி கொஞ்சம் கஷ்டமானது தேதியையும், நேரத்தையும் பாருங்கள்.

இன்றைக்கு தேதி11மாதம்12 வருஷம் 13 மணி 14 நிமிஷம் 15 நொடி16 இது நல்லாயிருக்கு அதனால இந்த சமயத்துல தாலி கட்டி கல்யாணம் செய்து கொள்ளலாம் என நானும் கல்யாணியும் முடிவெடுத்தோம் ஆனால் வீட்டில் எதற்கு எடுத்தாலும் பஞ்சாங்கம் பார்ப்பார்கள் ஆச்சாரமானவர்கள் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் முக்கியமான காரணம் அவள் மள்ளாங்கி ஜாதியைச் சேர்ந்தவள் நாங்கள் ஊடகழி ஜாதி, அதனால் வீட்டிக்கு தெரியாமல் கோவிலில் வைத்து முடித்துக் கொள்ளலாம் எனமுடிவு செய்து விட்டோம் அதன்படி மலையில் அமைந்திருக்கும் தேவகோட்டை தேவையறிந்த தேவதையம்மன் கோவிலில் நண்பர்கள் ஜமாலுதீன், ஆல்பர்ட் துணையோடு தாலி கட்டுவதாக முடிவெடுத்தோம் அவர்கள் தான் இதற்கு சரியானவர்கள் ஜமால்கூட கேட்டான்..
ஏன்டா கல்யாணராமா அந்த நேரத்துல கோவில்ல நடை சாத்தி விடுவாங்களாமே ஐயர் கூட இருக்க மாட்டாராமே ?
அதனால என்னடா ஐயரா தாலி கட்டப்போறாரு நான்தானே தாலி கட்டபோறேன் நீ கல்யாணியை கூட்டிக்கிட்டு சரியான நேரத்துக்கு கோவிலுக்கு வந்துரு.. நானும் ஆல்பர்ட்டும் சாமான்களை வாங்கிட்டு ஒரு மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்துடுவோம்.
ஏற்கனவே BOOKING செய்து வைத்த LODGEல் போய் பட்டு வேஷ்டியை உடுத்திக்கொண்டு சாமான்களை வாங்கி கொண்டு கோவிலை நோக்கி வந்தார்கள் CARரை கல்யாணராமன் தான் ஓட்டி வந்தான் சொன்னபடியே ஒரு மணிக்கு வந்து விட்டார்கள் மலையில் கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் கல்யாணராமனுக்கு ஞாபகம் வந்தது..
டேய் ஆல்பர்ட் CARக்கு PARKING TICKET வைக்க மறந்துட்டேன் நீ சாமான்களை கொண்டுபோ POLICE வந்தா FINE எழுதிடுவான் இப்ப வந்துடுறேன் நமக்கு நேரம் இருக்கு.
அவனை அனுப்பி விட்டு கீழே வந்து TICKET எடுத்து CAR-ரில் வைத்து பூட்டி விட்டு வேகமாய் வந்தான், மலைஏற குனிந்து படியைத் தொட்டு வணங்கும்போது... நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்...
ஆத்தா நீ தான் அவனைக் கேக்கணும் தாயே....
என ஓங்காரமிட்டு தேங்காயை உடைத்தார்.. உடைந்த தேங்காயின் பகுதி குனிந்த கல்யாணராமனின் கண்ணில் அடித்துக் கிழிக்க...
''அம்மா''
எனஅலறி மயங்கி கீழே விழுந்தான்... யாரோ ஒருவர் 108டை அழைத்து AMBULANCEக்கு விபரம் சொல்லிக் கொண்டிருக்க... மலையின் மேலே கல்யாணி.
ஆத்தா தாயே இந்த கல்யாணத்தை நீ தான் நல்லபடியா நடத்தி வைக்கணும் உனக்கு108 தேங்காய் உடைக்கிறேன்.
என மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தாள்... எதுவுமே தெரியாமல் மாலைகளை தூக்கி கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தான் ஆல்பர்ட்.
 காணொளி

34 கருத்துகள்:

 1. ஹஹஹ சே ஏகப்பட்ட ஐட்டம்களோட நல்ல விருந்து கிடைக்கும்னு காலைலருந்து பட்னியா கிடந்து வந்தவங்களை இப்படிய ஏமாத்துறது..கல்யாணமே நின்னு போச்சோ...அது சரி கண்ணுலதானே பட்டுச்சு கண் திருஷ்டி??!!எதுக்கு 108? தாலி கட்டிட்டுப் போயிருக்கலாம்..ஹும் விருந்து போச்சே...இருந்தாலும் மொய் வைச்சாச்சு...இதே கல்யாணராமன் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வைச்சா மொய் எல்லாம் வைக்க முடியாது...ஒரு தடவைதான் மொய் ..ஹஹாஹ்ஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கள்ளத்தனமாக கூட்டிக்கிட்டு கல்யாணம் பண்ணுறவன் உங்களுக்கு விருந்து வைப்பானா ? தேங்கா மூடி கண்ணுல அடிச்சு கண்ணாம்பட்டை மாங்கா மாதிரி பிழந்து போய் மயங்கி கிடக்கிறவன் எப்படி தாலி கட்டுவான் ? நீங்க செய்த மொய்யும் கல்யாணராமனுக்கு போகாது தேவையறிந்த தேவதையம்மன் உண்டியலுக்குதான் போயிருக்கும்.
   மள்ளாங்கி ஜாதிக்காரியைக் கட்டுறதுக்கு ஊடகழி ஜாதிக்காரங்க உங்க ஊருல விட்ருவாங்களோ ? நாங்க விடமாட்டோம்ல.....

   நீக்கு
 2. சற்றே வித்தியாசமான அனுபவம்தான். அருமை.

  பதிலளிநீக்கு
 3. ஏதோ கதை முடியாமல் தொக்கி நிற்பது போல் தெரிகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா 108-ஐ பந்தப்படுத்தி எழுதினேன் நினைப்பது 1 நடப்பது 1 தானே....

   நீக்கு
 4. என்னமோ சொல்ல்வ வருவது போல் இருக்கின்றதே! எனக்குத்தான் புரியவில்லையோ என்னமோ?

  இப்படில்லாம் உங்க ஊரில் ஜாதி இருக்கின்றது என எனக்கு இப்பத்தான் தெரியும்!

  ஆரமபத்திலிருந்து ஆர்வமாய் படித்து முடிவில் ஐயோஎன சொல்லும்படி ஒரு ஜோடியை இப்பூடி பிரிச்சிப்பிட்டிங்களே சார்!? இது நியாயமா?

  சுவாரஷ்யமான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கல்யாணராமன் பேசும் போது கண்ணு சிமிட்டுச்சே... அப்பவே தெரியலையா ? அவன் ஊடகழி ஜாதிக்காரன்னு...

   நீக்கு
 5. ஆத்தாளை வேண்டினால் கல்யாணம் தடை படாதே...!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆத்தாளை நம்பி வந்தவனுக்குத்தான் இந்த கதி.

   நீக்கு
 6. நண்பரே...
  108 க்கு அழைத்து ஆம்புலன்ஸ்
  வந்திச்சா....
  108 தேங்காய் உடைதாளா
  கல்யாணி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உங்களுக்கு தெரியாதா ? ஆம்பளை அவுன்சு லட்சணம் ?
   கல்யாணத்துக்கு கத்திரிக்காய் வாங்கச் சொன்னால் காடாத்துக்கு முருங்கைக்காய் வாங்கிட்டு வருவாங்கே...

   நீக்கு
  2. ஆப்பள அவுன்சு ல ஒரு முறை அனுபவம் ...
   எழவுக்கு சொல்லி பதினாறுக்கு வந்தது போல்
   வந்தாங்க நண்பரே...

   நீக்கு
  3. 16-ஆம் நாளாவது வந்தாங்களே... இதுதான் நண்பரே நமது வாக்குரிமையின் பலழளம்

   நீக்கு
 7. 11/12/13 க்கு அப்புறம் - 11/12/14, 11/12/15 எல்லாம் போய் விட்டதே..

  கல்யாணராமனுக்கு காயம் ஆறியதும் - கல்யாணியின் கையைப் பிடித்த சேதி எல்லா நாளிதழ்களிலும் வந்ததே..

  படிக்கவில்லையா?..

  கல்யாணி இப்போ கைப்பிள்ளைக்காரி ஆயிட்டாளே!..

  அதுவும் தெரியாதா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இந்த விசயம் குவைத் பத்திரிக்கையில் வந்துச்சா ? யூ.ஏ.ஈ பத்திரிக்கையில் வரலையே....

   நீக்கு
 8. அடடா... கடைசில 108 கூப்பிட வேண்டியதா போச்சே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எல்லாம் விதிப்படிதானே நடக்கும்.

   நீக்கு
 9. இந்த கல்யாணம் நின்றதில் எனக்கு உடன்பாடில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது ஜி ? எல்லாம் பகவான் செயல்.

   நீக்கு
 10. என்ன சகோ இப்படி பன்னிட்டீங்க,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னைக் கேட்டால் ? அவன் விதி அப்படி...

   நீக்கு
 11. சற்று வித்தியாசமான பதிவு சகோ.

  பதிலளிநீக்கு
 12. 108 தேங்காய் உடைத்தால் தான்
  கலியாணம் என்றால்
  எனக்கு வேண்டாம் தம்பி!

  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எது வேண்டாம் தேங்காயா ?

   நீக்கு
 13. ‘நினைப்பது ஒண்ணு நடந்தது ஒண்ணு என்ற ஒரு பழைய திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது இந்த பதிவைப் படிக்கும்போது. இதன் தொடர்ச்சியாக கல்யாண ராமன் மருத்துவமனையில் குணமாகி பின்பு உண்மையில் ‘கல்யாண ராமன்’ ஆன கதையை எழுதலாமே?

  அது சரி. உங்களுக்கு மட்டும் கார் நிறுத்துமிடத்தில் தந்த சீட்டை வைத்து எப்படி கதை எழுத வருகிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ராமன் எப்படி கல்யாணராமன் ஆனான் ? என்பதை பகவான்(ஜி)எழுதியபடி நடக்கும் அதையும் பொருத்திருந்து பார்ப்போம்.

   நண்பரே அந்த நேரத்துக்காக காத்திருந்து டிக்கெட் எடுத்தேன் இது முன்கூட்டியே போட்ட திட்டம் பிறகுதான் டிக்கெட்டை வைத்து கதை பிறந்தது வருகைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 14. தேவையில்லாம கள்ளக்குறிச்சியை இழுக்கின்றீங்க நண்பரே! கள்ளக்காதல் என்பதற்காக, எதுகை மோனைக்காக கள்ளக்குறிச்சிய இழுத்தீங்க இல்லே... அதான் இப்படியாச்சு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யய்யோ சாபம்தான் இப்படி ஆகி விட்டதோ...

   நீக்கு
 15. தம 9
  அடடா...இப்படி ஆகிப் போச்சே....

  பதிலளிநீக்கு