தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 13, 2016

7 ½


வாங்க தொல்காப்பியம் என்ன காலையிலேயே இந்தப் பக்கம் உட்காருங்க, நல்லாயிருக்கீங்களா ?
நல்லாயிருக்கேன் பிரசாத், வேலைக்கு கிளம்பலையா... எங்கே உங்க புது மனைவியை காணோம்... ?
இன்னைக்கு சனிக்கிழமையில்ல... அதான் கோயிலுக்கு போயிருக்கா.
இன்னைக்கு எந்தக் கோயிலு ?
சனீஸ்வரன் கோயிலுக்கு.
சரிதான், என்னமோ கேள்விப்பட்டேன்.. எந்த நேரமும் வீட்ல சண்டையாம்..
என்ன செய்யிறது தினம் ஏழரையாத்தான் இருக்கு.
ஜாதகம் பார்த்துதானே, கல்யாணம் செஞ்சீங்க, ஆமா எத்தனை பொருத்தம் இருந்துச்சு ?
ஏழரை.
சரிதான் எந்த சோஸியருட்ட பார்த்தீங்க ?
நம்ம சோலந்தூர் சோஸியர் சோனைமுத்து.
அவரே ஒரு ஏழரை புடிச்சவரு, அவருட்டே போயி பார்க்கலாமா ?
(வீட்டுக்குள் நுழைந்த நளாயிணி)

வாங்கண்ணே நல்லாயிருக்கீங்களா ? அண்ணி நல்லாயிருக்காங்களா ?
ஆமாம்மா... என்ன கோயிலுக்கு போயிட்டு வர்றியா ?
ஆமா, இந்தாங்க பிரசாதம் எடுத்துகங்க...
வந்ததுக்கு பிரசாதம் கெடைக்கணும்னு, பிராப்தம் இருந்திருக்கு பிரசாத்துக்கு கொடுமா...
(நளாயிணி வெடுக்கென்று தலையை இழுத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள்)

என்னம்மா, பிரசாத்துக்கு பிரசாதம் கொடுக்கலையா ?
இதுக்கா  நான் பிரகாரம் சுத்தி பிரசாதம் வாங்கி வந்தேன் ?
என்னம்மா நீ புருஷனுக்கு, கொடுக்குறதுக்கு இப்படி செல்றே... ?
வேணும்னா அவரைப் போயி வாங்கச் சொல்லுங்க...
வேணாம் விடுங்க தொல்ஸ் இந்தச் சனியன்ட்ட, வாங்கி என்ன  ஆகப்போகுது ?
யாரு.. சனியன், நீங்களா ? நானா ?
ஏம்மா, நீ வாங்குனா என்ன புருஷன் வாங்குனா என்ன ?
இவரு கூடத்தான் சம்பளம் வாங்கிட்டு வர்றாரு எனக்கிட்டயா  கொடுக்குறாரு ?
பார்த்தீங்களா... இந்தக் கிரகத்தை கட்டிக்கிட்டு கண்டகண்ட நாய்க்கு முன்னாலயெல்லாம் அவமானப்பட வேண்டியிருக்கு... ச்சே என்னபொழப்பு.
(தனக்குள்... இவன் நாய்னு யாரைச் சொல்றான் ?)

இங்கே மட்டும் என்ன வாழுதாம் தெருவுலபோற நாயெல்லாம் கூட்டிக்கிட்டு வந்து தினம் பஞ்சாயத்து வைக்கிறது.
(தனக்குள்... இவ தெருநாய்னு யாரைச் சொல்றா ? சரிதான் இன்னைக்கு நமக்குத்தான் ஏழரை)
புடிக்கலைனா உன்அப்பன் வீட்டுக்கு போடீ...
போறேன் எனக்கென்ன சாதிசனம் இல்லையா ?
ச்சே... அன்னைக்கே, சொன்னேன்.....
கணவனும், மனைவியும் தொல்ஸ் வெளியே போனதுகூட தெரியாமல் 
சண்டையிட்டு கொண்டிருக்க..... வீட்டை விட்டு வெகுதூரம் வந்திருந்த தொல்காப்பியம் மணியை பார்த்தார் 07.30 am


7 ½ ஐ இழுத்து விட்டவர் நண்பர் திரு. அஜய் சுனில்கர் ஜோசப்

57 கருத்துகள்:

 1. ஹும் 71/2 சனி தமிழ் மணத்தில் இணையவும்மறுக்கின்றது...ஓட்டும் போட முடியவில்லை....71/2 சனி முடிந்ததும் ஓட்டு போடுகின்றோம் அதுவரை சனி சுற்றட்டும்....இப்போது 71/2 சனி பற்றிய பலன்கள் சொல்லுகின்றோம்..அடுத்து

  பதிலளிநீக்கு
 2. 71/2 நன்றாகவே பிடிச்சுருச்சு போல..ஹஹஹ்ஹ 71/2 முடிந்துவிட்டதா...சரி

  உங்கள் 71/2 முடிந்துவிட்டதென்றால், தமிழ்நாட்டின் 71/2 க்கு முடிவு என்ன என்று கொஞ்சம் சொல்லுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் நாட்டுக்கு 7 ½ புடிச்சு 69 வருஷமாச்சே....

   நீக்கு
 3. என்ன ஜி 71/2 இப்படி உங்கள் ஓட்டுப்பட்டையையும் தூக்கிக் கொண்டு ஒளிந்து கொண்டுவிட்டதே....

  பதிலளிநீக்கு
 4. ஹஹ நாங்க இன்னிக்கு அதிசயமா முதல்ல வந்தது கூட 71/2 தான் போல அதுக்குப் பிடிக்கலை அதான் பட்டையை ஒளிச்சு வைச்சுருச்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் நீங்களே சொல்லிட்டீங்களே... அதிசயமாக முதலில் வந்தோம்னு....

   நீக்கு
 5. 7.30 நகைச்சுவையில் அடித்து ஆடும் திறன் ரசித்தேன் ஜீ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ரசிப்புக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 6. ஏழரை... பொல்லாதவர்க்கு தான் ஏழரை! வாழ்வோருக்கு ஒரு மூதுரை ஏழரை எப்படி வாழவேண்டும்...எனக் கற்றுத்தரும் ஏழரை!

  அருமை நண்பரே!
  பின்குறிப்பு: இனி யார்வீட்டிற்கும் செல்லவேண்டாம்! ( பதிவிற்கு கதைக்கரு கிடைக்குமென்றாலும் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தைவிட பின்குறிப்பு என்னை மிரட்டுகின்றது.

   நீக்கு
 7. வயிறு வலிக்கு மாத்திரை ப்ளீஸ் ஜி... ஹா ... ஹா ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சனீஸ்வரன் கோயில்ல பிரகாரம் சுற்றி பிரசாதம் வாங்கி சாப்பிட்டால் போதும் ஜி எதுக்கு வீண் செலவு ?

   நீக்கு
 8. நான் வசிக்கும் தெருவில் ஒருத்தர் இருக்காரு... அவரு பேரே..ஏழரைதான் நண்பா...... அவர் மனைவிகூட சண்டையிட மாட்டார் தெருக்காரரிடம் தான் சண்டையிடுவார்.அதுவும் என்னிடம்...... சொல்லவே வேண்டியதில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெய் ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடன் வைங்க நண்பரே அந்த 7 ½ யை சரிக்கட்டி விடலாம்

   நீக்கு
 9. ஓட்டு போட முயன்றால்...சர்வர் எரர் என்று வருகிறது நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவே 7 ½ தானே நண்பரே.... வேற எப்படி இருக்கும் ?

   நீக்கு
 10. அய்யோ நண்பரே
  நானா ஏழரையை இழுத்து
  விட்டேன்....
  இது அபாண்டமான
  குற்றச்சாட்டு .....

  இருந்தாலும் ஏழரை
  பதிவு அருமை நண்பரே....

  பதிலளிநீக்கு
 11. இதற்குத்தான் பிறர் விஷயங்களில் தலையிடக் கூடாது என்பது . கேட்க வேண்டுமா நாய் என்றும் பேய் என்றும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா பொண்டாட்டியும், புருசனும் நாய்னுதான் சொன்னாங்க நீங்க பேய்னு சொல்லிட்டீங்களே.... ஐயா பாவம் தொல்காப்பியம்.

   நீக்கு
 12. பத்தரைக்கு வந்துட்டேன். ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது முகூர்த்த நேரம்தான் நண்பரே நலமா ?

   நீக்கு
 13. ஏழரையை எடுத்து வச்சி ரொம்ப நேரமாச்சு... அதுக்கு அப்புறம் ஊருக்குப் பேசி, சமையல் பண்ணி முடிச்சிட்டு வந்து பாதி படிச்சதை முழுதும் படித்து கருத்து இடுறேன் அண்ணா...

  ஏழரை நல்லாத்தான் இருக்கு... பாவம் தொல்ஸ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொல்ஸ் பாவம்தான் அவன் ஏன் அந்த வீட்டுக்கு போறான்

   நீக்கு
 14. சத்தியமா 7 1/2 எங்களுக்குத்தான்.

  பதிலளிநீக்கு
 15. 7.30 அறுபது நொடி தான்.. ஓடி விடும் :) ஹாஹா

  பதிலளிநீக்கு
 16. அருமை நண்பரே
  கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாவிடில், விட்டுக் கொடுத்து நடக்காவிடில்,
  வாழ்வு முழுதும் ஏழரைதான் நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 17. சோலந்தூர் சோசியர் சோனமுத்து தான் துபாய்க்குப் போய்ட்டாராமே..

  அவரோட அசிஸ்டண்ட் ஒருத்தன் இருப்பானே..
  அவங்கிட்ட ஒருதடவை கன்சல்ட் செஞ்சு பார்க்கலாம்!..

  எப்படியோ -
  தொல்காப்பியத்தின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி இங்கேயுமா சோசியருக்கு பிழைப்பு ஓடுது ?

   நீக்கு
 18. 7.30 பதிவு அருமை..
  இதை கற்பனை என தப்பிக்கவேண்டாம்...அடிக்கடி பார்ப்பதும்..அனுபவிப்பதும் தான்.. என்ன நீங்க எழுதிட்டிங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் எழுதும் விடயங்கள் அனைத்துமே நம்மைச்சுற்றி நடப்பவைதானே நண்பரே... வேற்றுக்கிரகத்து விடயம் இல்லையே.... வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. 71/2 நல்லா வேளை செய்கிறது....பதிவிலும் சரி...கருத்துகளிலும் சரி.....சிரிச்சு வயிற்று வலி தான் வந்தது...ஓ...இது தான் 71/2 யோ...?

  அப்பா சாமி....ஹிஹிஹி...5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ
   என் நூல் அகம் 9 படிக்கவில்லையே....

   நீக்கு
 20. 7 1/2 பதிவு நல்ல நகைச்சுவையாக இருந்தது சகோ.

  பதிலளிநீக்கு

 21. தொல்காப்பியத்தை வெளியேற்ற கணவன் மனைவி இருவரும் சண்டை போடுவதுபோல் நடித்து அவரை வெளியேற்றிவிட்டு, பின்னர் அவர் போனதும் சிரித்து பேசிக்கொண்டு இருப்பார்கள் என கடைசியில் முடித்திருப்பீர்கள் என நினைத்தேன்! பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே இதுவும் நன்றாகத்தான் இருக்கின்றது இருப்பினும் மற்றொரு 'க்ளூ' கொடுத்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 22. யாராவது எதையாவது சொல்லி விட்டுப் போய்விடுகிறார்கள். நீங்கள் அந்த வார்த்தையை வைத்துக் கொண்டு விளையாடி விடுகிறீர்கள்! இந்தப் பதிவு எனக்கு எப்படி அப்டேட் ஆகாமல் போனது என்று தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நானென்ன செய்வது வருபவர்கள் சீண்டி விடுகின்றார்கள்.

   நீக்கு
 23. இன்றைய என் பதிவும் உங்கள் பதிவுக்கும் , ஏழரை ..இல்லை இல்லை ..ஏழாவது வாக்கு விழாமல் இருப்பது சனீஸ்வரன் சதியா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா 7 ½ தலைப்பு வச்சது தவறாகி விட்டதோ.... இரண்டு ஜிக்களையும் பிடித்து விட்டதே...

   நீக்கு
 24. நல்லா இருக்கு பதிவு,, நல்ல வேளை நான் அது கடந்த பின் தான் வந்தேன் சகோ,,, நீங்க பாட்டுக்கு நான் லேட்டா வந்ததற்கு காரணம் சொல்கிறேன் என நினைக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 25. ரசித்தேன் சகோதரா...
  உடல் நலமின்றி இருந்தேன்..
  இப்போது பரவாயில்லை...
  எப்ரலுக்கு 69 வயது
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு