தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 12, 2016

என் நூல் அகம் 9


வணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்கள் வீட்டில் புதுக்கோட்டை பதிவர்களை சந்தித்தேன் என்று சொன்னேன் அல்லவா ! பதிவர் தோழர். திரு. மது அவர்கள் கவிஞர் திரு. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய ‘’பித்தன்’’ என்ற நூலை அன்புடன் எனக்கு பரிசளித்தார்கள் அதனைப்பற்றிய எனது பார்வையில் இதோ....

‘’கவிக்கோ’’ அப்துல் ரகுமான் இந்தப் பெயரைத் தெரியாத எழுத்தாளர்கள் உண்டா ? பலரும் வியந்து போற்றும் இந்தக் கவிஞனின் கவிதையை நான் இதுவரை சுவாசித்ததில்லை கவிஞர் திரு. ரூபன் அடிக்கடி என்னிடம் சொல்வார் ‘’ஜி இவருடைய கவிதையை படியுங்கள்’’ என்று எனக்கு அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை நாட்டுக்கு வரும் பொழுதெல்லாம் வாங்க வேண்டுமென நினைப்பேன் ஏதோ காரணங்களால் மறந்து விடுவேன் இன்று இதைப் படித்தவுடன் நாமும் கவிதை எழுத முயற்சிக்கலாமே என்ற எண்ணமே மேலோங்கியது காரணம் கவிதை எழுதுவதற்கு கடினமான வார்த்தைகள் வேண்டும் என்று நினைத்திருந்தேன் இவ்வளவு எளிய வார்த்தைகளையும் புகுத்தி ரசிக்க வைக்கலாம் என்பதை இப்பொழுது புரிந்து விட்டேன் ஆகவே இனி நானும் கவிதை எழுதப்போறேன் மனதை திடப்படுத்திக் கொண்டு எனது கவிதையையும் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் படிப்பீர்களா ? படிப்பீர்களா ?

நான்தான் கேட்டேன் மேடை போட்டு யாரோ கேட்கிறார்கள் என்று நினைத்தால் ? அதற்கு நான் பொறுப்பல்ல !
இந்நூலைக் குறித்து முன்னாள் தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்கள் 19.07.1998 அன்று முன்னுரை போல் பேசியிருந்ததும் இருக்கின்றது எனக்கு அடைமொழி எல்லாம் போட்டு பெயர் சொல்லத்தெரியாது காரணம் நான் சராசரி மனிதர்களிடமிருந்து விலகி நிற்க விரும்புபவன். 
சரி நாம் வந்த விடயத்துக்குள் செல்வோம் கவிஞரைப்பற்றி நான் புகழ்ந்து எழுதுவது மெர்க்குரி லைட்டுக்கு மெழுகுவர்த்தி பிடித்த கதையாகி விடும் ஆகவே என்னைக் கவர்ந்த வரிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
பித்தன் ஒரு வேற்று மனிதனுடன் உரையாடுவது போலவே கடைசி வரை கொண்டு செல்கின்றது கவிதை முடிவில் பித்தன் அவரல்ல நாம்தானோ என்று மனதில் தோன்றி விடுகிறது அந்த அளவுக்கு முரண்பட்ட விடயங்கள் சொல்லிச் சென்ற விதம் அழகிய அழகு.
கீழ் காணும் பச்சை நிற எழுத்துக்கள் மட்டுமே கவிஞருக்கு சொந்தமானது.

// மதவாதி
என் தோட்டத்துப்
பூவில் மட்டும்தான்
தேன் இருக்கிறது
என்கிறான் //
மதவாதியின் அறியாமைக்கு இதைவிட சவுக்கடி கொடுத்து விட முடியுமா ?
// நெருப்பு
நெருப்பாக மட்டுமே
இருக்கிறது.
நீங்கள்தான் அதை
நல்லதாகவோ
கெட்டதாகவோ
ஆக்கிக்கொள்கிறீர்கள் //
நெருப்பை வைத்து நல்லவன் வீட்டுக்கு விளக்கு ஏற்றுகிறான், கெட்டவன் வீட்டுக்கே நெருப்பு மூட்டுகிறான் உண்மைதானே...
// இறைவனைத் தேடிப்
புறப்படாதீர்கள்.
அவன்
காணாமல் போன
பொருள் அல்ல: //
பலரும் தேடுகின்றார் பெற்ற தாயை உதாசினப்படுத்தி விட்டு...
// காலம் என்பதே
ஒரு பொய்க் கணக்கு.
அதில்
நிகழ்காலம் என்பது
போலித் தொகை //
காலத்தைக் குறித்த கவிஞரின் கணக்கு வரிகளே... இவை.
// ஜனனத்தில்
ஒரு கதவு
திறக்கிறது,
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது,
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா ?
வெளியேறுகிறோமா ? //
மரணத்தை நேசிப்பதா ? ஜனனத்தை யாசிப்பதா ? குழப்பம்தான் தோன்றுகிறது.
// வெயிலிலிருந்து தப்பிக்கக்
கூரை கட்டுகிறீர்கள்,
அதனால்
நிலவை இழந்து விடுகிறீர்கள் //
கவிஞரின் முரண்பட்ட மாற்றுச் சிந்தனைகள் நூல் முழுவதுமே கண்டேன்.
// நாம்
அவள் வழியாகவே
பிரவேசிக்கிறோம்,
அவள் வழியாகத்தான்
வெளியேறவும் வேண்டும் //
ஒரு மறைமுகமான உண்மையை எவ்வளவு நாசூக்காக விவரிக்கிறார்.
// உன் கண்ணீர்
உன்னுடையதல்ல,
அது ஒரு
மகா சமுத்திரத்திலிருந்து
உன் வழியாகக்
கசியும் நீர் //
கண்ணீர்த் தொட்டியை மகா சமுத்திரம் என்ற கவிஞரின் வரிகள் கண்ணில் நீரையே வரவழைத்தன...
// காயங்கள் இல்லையென்றால்
உங்கள்
இதயப் பாத்திரம்
காலியாக இருக்கிறது
என்று அர்த்தம்,
காலிப் பாத்திரம்
வைத்திருப்பவர்களே !
காயங்களை
யாசியுங்கள் //
என் இதயப் பாத்திரம் காலம் முழுவதும் நிறைந்தே இருக்கின்றதே அப்படியானால் ? நான் சந்தோஷிக்க வேண்டும் ஆம் இன்று முதல் சந்தோஷிக்க, தொடங்குகிறேன் காயப்படுத்தும் இனிய எதிரிகளுக்கு நன்றி.
// பாரத்தை
இறக்கி வைப்பது
மகிழ்ச்சியானது
என்கிறீர்கள்,
ஆனால்
மரணத்தில்
அழுகிறீர்களே, ஏன் ? //
பிரிந்து செல்வதைவிட மரணமே மேல் என்கிறார்களே... அப்படியானால் அழுவது தவறுதானோ ?
// பாரம் என்றாலே
வெறுப்பானது என்று
நினைக்கிறீர்கள்.
இல்லை,
கர்ப்பம் சுமக்கும்
தாய்மையின் மகிழ்ச்சியை
நீங்கள் பார்த்ததில்லையா ? //
சுகமான சுமைகள் என்பது இதுதானே....
இப்படி நூல் முழுவதும் சுகமான ராகங்கள் அழகாக இழையோடிச் செல்கின்றது கவிஞரின் கவிதையை விமர்சிக்கும் தகுதியை வளர்க்க நானும் இன்று முதல் கவிதை எழுத முயல்வேன் நல்லதொரு நூல் தந்த தோழர் திரு. மது அவர்களுக்கு மீண்டும் நன்றி வணக்கம்.
அன்புடன்
கவிஞராக பேராசைப்படும் உங்கள் கில்லர்ஜி

எனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...


தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

57 கருத்துகள்:

  1. கவிக்கோ அவர்களின் கவிதைகள் வாசிக்கத் தந்தீர்கள்...
    நல்ல நூல் விமர்சனம்... அருமை...
    அப்படியே நம்ம சிவகங்கை கவிஞர் மீரா. அவர்களின் கவிதை நூல் கிடைத்தாலும் வாசியுங்கள்... கவிஞராக மாற இருக்கும் தங்களுக்கு உதவியாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  2. இன்னும் படிக்கவில்லைபித்தன் விரைவில்தேடுகின்றேன் பகிர்வுக்கு நன்றிகள் ஜீ!

    பதிலளிநீக்கு
  3. எடுத்துக் காட்டியுள்ள வரிகள் மனத்தைக் கவர்கின்றன. நல்ல பகிர்வு. சிந்திக்க வைக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  4. நண்பரே கவிதைகள் அனைத்தும்
    சிந்திக்க தூண்டிய வரிகள்....
    அருமையோ அருமை.....

    பதிலளிநீக்கு
  5. கவிஞர் ஆவது பேராசை அல்ல நண்பரே
    நாலுபேர் நம் வரிகளை ரசித்தாலே
    கவிஞர் ஆகலாம்.....
    உங்கள் பதிவுகளையே ரசிக்க நாங்கள்
    இத்தனைபேர் இருக்கிறோம்.....
    கவி எழுதினால் புது பார்வையாளர்களும்
    வருவார்கள் நண்பரே....
    எழுதுங்கள் நாங்களே உங்கள்
    ரசிகர்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகையும் ஆலோசனையும் நன்று.

      நீக்கு
  6. வணக்கம் ஐயா.இன்றைய நாள் தங்களின் நூல் அகத்தோடு தொடங்கியுள்ளேன் ஐயா.நானும் இரசித்தேன் ஐயா.பூக்களில் தேன்,நெருப்பை நல்லது கெட்டது,இறைவனை தேடாதீர்கள்,காயம் இல்லை என்றால் இதயம் காலி,தாய்மையின் அழகு சுமை,ஜனனம் மரணம்,மிக அருமையான வரி நிலாவை தொலைத்துவிடுவது.சூப்பர் ஜி சூப்பர்.

    இப்ப தங்களுக்கு,தங்களின் கவிதைகளை யாசிக்க ஆவலோடு உள்ளேன் ஐயா.கட்டாயம் நான் தங்களின் கவிதையை இரசிப்பேன் காரணம் தங்களின் பதிவுகள் அனைத்துமே யதார்த்தங்களா இருக்கும் ஐயா.வாழ்த்துகள் இனிதே ஆரம்பம் ஆகட்டும் தங்கள் கவிதைத் தொடர்கள்..நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஆதரவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது சகோ நன்றி

      நீக்கு
  7. இனி நானும் கவிதை எழுதப்போறேன்
    #வாழ்த்துக்கள்,
    மேலும் ஆசானின் நூல் விமர்சனம் அருமை
    நன்றி!

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் படிக்கின்ற நூல்கள் அப்படியே தங்கள் அகத்தில் படிந்து விடுகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  9. பித்தன் - நூல் அறிமுகம் அருமை..

    நல்லதொரு கவிதைத் தொகுப்பு..

    பதிலளிநீக்கு
  10. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அருமையான கவிதைகளை தங்களின் பொருள் பொதிந்த குறிப்புகளோடு தந்தமைக்கும் நன்றி! விரைவில் இன்னொரு ‘கவிக்கோ’வை எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு தூரம் எதிர்ப்பார்ப்பது தேவையில்லாதது நண்பரே அதற்கு காலஅவகாசம் வேண்டும் ஆதரவுக்கு நன்றி

      நீக்கு
  11. கவிஞர் கில்லர்ஜிக்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசிலில் குதித்தவுடன் வருங்கால முதல்வர் வாழ்க ! என்று சொல்வது போல் இருக்கின்றது நண்பரே....

      நீக்கு
  12. நல்ல பகிர்வு, விமர்சனம். நீங்கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்கும் வரிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக இறைவனைத் தேடுதல் குறித்தக் கவிதை. நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு (அவனை/அவளை) தெய்வத்தை (ஏன் எப்பொதும் இறைவனை எல்லோரும் ஆண் பாலாகவே குறிப்பிடப்படுகிறார்கள்???!!!) வெளியில் எல்லாம் தேடுகின்றோம்.

    மற்ற வரிகளும் சிறப்பு. கவிக்கோவை வாசித்ததுண்டு. பகிர்விற்கு மிக்க நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  13. உண்மைதான் எனக்கும் இந்த ஐயம் உண்டு அவன்/அவள் என்பதைவிட 'அது' என்பது பொருந்தும் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  14. உங்கள் நூல் அகம் வந்தேன். கண்டேன். படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அருமையான நூல் அறிமுகம். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    ஜி

    அற்புதமான வரிகளின் சொத்தக்காரர் பற்றியும் அவரின் நினைவில் பூத்த மலர்களையும் இரசித்தேன் ஜி த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  17. பித்தன் நூலினைப் படித்து ரசித்திருக்கிறேன் நண்பரே
    இன்று தங்களால் மீண்டும் படித்த உணர்வு
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  18. ஏற்கெனவே கவிதைகள் எழுதியிருக்கும் நீங்கள், அப்துல் ரகுமானின் கவிதைகளைப் படித்தபிறகு, 'தகுதியை வளர்க்க நானும் இன்று முதல் கவிதை எழுத முயல்வேன்'என்று எழுதியது கூடுதல் அர்த்தம் தருகிறது. நல்ல கவிதைகளைப் படித்த நல்ல விளைவு இது என்றே நினைக்கிறேன். வைரமுத்து ஒருபாணி எனில் ரகுமான் வேறொரு பாணி! பூடகமாகவே அல்லது முழுவதையுமே நம் சிந்தனைக்கு விட்டு சித்து விளையாட்டுக் காட்டுவதில் வல்லவர். அவரது “பால்வீதி” படித்து, மிரண்டு போனவன் நான். நீங்களும் தேடிப்படியுங்கள். வானம்பாடி எனும் தமிழ்மறுமலர்ச்சிக் கவிஞர் குழுவைச் சேராமலே தனிமரமே தோப்பாக வளர்ந்தவர்! படியுங்கள், எழுதுங்கள் வருக கவிஞரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே அருமையான கருத்துரையைத் தந்து தன்நம்பிக்கையை கொடுத்தீர்கள் நன்றி எல்லாம் சரி கடைசியில் ஏன் அந்த நான்கு எழுத்து ?

      நீக்கு
  19. கவிதை தொகுப்பு அருமை சகோ. எனது பதிவு தயிர் ரசம் சுவைக்க வலைப்பூ வருகை தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  20. என்னிடம் இன்னும் நான் படிக்கத் துவங்காமல் நிறையவே நூல்கள் இருக்கின்றன. ஒரு காலத்திலொரு வொரேஷியஸ் ரீடராக இருந்தவன் . இப்போது படிப்பது சிரமம் தருகிறது சிரமத்துடன் படித்தால் ரசிக்க முடியாது அருமையான நூல் விமரிசனம் எது உங்களைப் பாதித்ததோ அதைக் குறிப்பிட்டு எழுதுவது உங்கள் பாணி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மனதை தொட்டதைதானே எழுத முடியும் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. நண்பரே கவிக்கோவின் நூலைப் படித்து விட்டு கவிதைப் பித்தனாகவே மாறிவிட்டீர்கள் போலிருக்கிறது. இருக்கின்ற உரைநடையில் இருக்கும் சொற்களை முன்னும் பின்னும் போட்டாலே கவிதைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இருப்பினும் கவிதை வரிகள் கோர்வையாக சிறிது யோசித்தல் அவசியமாகின்றதே.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. அன்புள்ள ஜி,

    கவிக்கோவால் கவிஞன் பிறந்தான்...!

    கவிக்கோலால் காரியம் ஆற்றுவான்...!

    காவியம் படைத்து மூடக்கருத்துகளை அறுப்பான்...!

    காலத்தில் வாழ்ந்து வையத்தை வாழ வைப்பான்...!

    வாழ்க! வளர்க!

    நன்றி.

    த.ம. 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே... தங்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  23. அப்துல் ரகுமான் அவர்கள் யதார்த்த
    வரிகள் என்றும் வாழ்வில் நிலை கொள்பவை/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே எனது கருத்தும் இதுவே வருகைக்கு நன்றி.

      நீக்கு
  24. அப்துல் ரகுமான் அவர்களின் அருமையான கவிதை தொகுப்பை தந்தீர்கள்.
    பகிர்வுக்கு நன்றி.கவிதை எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  25. கவிதையும் பதிவும் அழகிய அழகு!

    பதிலளிநீக்கு
  26. என்ன அருமையான வரிகள் ....

    பதிலளிநீக்கு
  27. கவிஞரின் வரிகளும் தங்களின் counter attackம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி கவிஞரே...

      நீக்கு
  28. நூல் விமர்சனம் அருமை சகோ...

    கவிதையும் படிக்கத் தந்து....அதற்கு கருத்தும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்...ரசனை

    கவிதைகள் ஒவ்வொன்றும் கவிதை....

    நான் எழுதுவது என்னவோ...? தெரியவில்லை.ஆனாலும் விடுவதில்லை:)))


    கவிதை புனைந்து வாருங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
    தம 13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோ

      நீக்கு