செவ்வாய், ஜனவரி 09, 2018

அந்தோ பரிதாபம்


இவன் யார் ? ஒருக்கால் மனநோயாளியாக இருந்தால் அதற்காக நாம் இறைவனிடம் பிரார்த்திப்போம் இல்லையேல் இவனும் இந்தியன்தான் தேசியக்கொடியின் மீது தீ வைக்கும் அளவுக்கு இவனுக்கு அப்படி என்ன நாட்டின் மீது கோபம் ? இதை சாதாரணமாக நினைத்து தேசத்துரோகி என்று ஒற்றை வரியில் சொல்லி விட்டு போகமுடியாது அவனது நிலையிலிருந்து யோசிக்க வேண்டும் இவன் யாராலும் பாதிக்கப்பட்டு இருந்தானா ? பொதுவாக அரசியல்வாதிகளை, காவல்துறையினரை, பணம் படைத்தவரை சாதாரண மனிதர்கள் தனது புறம் நியாயம் இருந்தும் எதிர்க்க முடியவில்லை அந்தக் கோபத்தின் விளைவாக கூட இருக்கலாம் நான் சந்தன கடத்தல் வீரப்பனை தியாகி என்று சொல்ல வரவில்லை அவரும் இந்த இழிநிலைக்கு போனதற்கு பின்னணி அரசியல்வாதிகளும், காவல்துறையினரும்தானே அதைப்போல இவனும் ஏதோ காரணங்களால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் இவன் மத்தியில், மாநிலத்தில் ஆளும் தலைமைகளின் புகைப்படங்களை இப்படிச் செய்திருந்தால் அது எதிர்க்கட்சியின் சதி என்று முடித்து (இவனையும்) விடுவோம் இவன் தனது பிரச்சனையை வெளிப்படுத்த புதுமையாக இப்படி செய்வோம் என்று கருதி இருக்கலாம் காரணம் இப்பொழுது புரட்சி செய்வதில்கூட புதுமையை கையாலும் உலகமாகி விட்டது அதேநேரம் தேசியக்கொடி என்பது அனைத்து இந்தியனுக்கும் உயிர் நாடி போன்றது அதை இப்படிச்செய்பவன் யாராக இருந்தாலும் இந்தியாவுக்குள் வாழத்தகுதி இல்லாதவனே இப்படிப்பட்டவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அவர்களை இந்த நாட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுகிறோம் சமூகத்தால் பாதிக்கப்பட்டவனும், மற்றொரு பாதிக்கப்பட்டவனும் சந்திக்கும் பொழுது அவர்களுக்குள் ஒரு தீப்பொறி எழுகின்றது இவர்கள் இவனது ஜாதியினரைத் தேடி அலையும் பொழுது அது ஒரு குழுவாகி பிறகு அமைப்பாகிறது இதற்கும் அரசு அங்கீகாரமும் அதற்குறிய அனுமதி எண்களும் கொடுப்பது கொடுமையிலும் கொடுமை ஒரு அசம்பாவிதம் நடந்து முடிந்து விடுகிறது அதற்கு ஒரு அமைப்பினர் இதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று அறிக்கை விடுகின்றார்கள் ஒருக்கால் யாரும் பொறுப்பேற்று அறிக்கை வரவில்லை என்றால் அரசாங்கமே அறிவிக்கின்றது இதற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லையென்று இது கேலிக்கூத்தாக இல்லை.

ஒரு கொலை நடந்த பிறகு நான்தான் கொலை செய்தேன் என்று தனியொரு மனிதன் சொன்னான் என்றால் உடனே அவனை கைது செய்யும் சட்டம் இதை மட்டும் செய்ய முடியாதா ? இந்த தீவிரவாத அமைப்புகள் எங்கிருந்து அறிக்கை விடுகின்றார்கள் இவர்களுக்கும் மின்னஞ்சல், இணையதளம் எல்லாம் இருக்கின்றது என்றும் சொல்கின்றார்கள் என்ன ? இலவோ புரியவில்லை இந்த நாடு குட்டிச்சுவராகிப் போய்க்கொண்டு இருப்பதற்கு மூலகாரணமே அரசுதான் உதாரணத்துக்கு நாளிதழ்களில் படித்து இருப்பீர்கள் இருபத்து ஆறு வழக்குகளில் கைதாகி எட்டுமுறை சிறையிலிருந்து தப்பிய டேஞ்சர் டேவிட்டை காவல்துறையினர் வலை வீசித் தேடுகிறார்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன் எட்டுமுறை சிறையில் வைக்கும் பொழுது இருக்கட்டும் இரண்டாவது முறை சிறையில் வைக்கும் பொழுதே அவனது குதிகால் நரம்பை வெட்டி இருந்தால் இவன் இப்படி ஓடியிருக்க முடியுமா ? இவனுக்கு ‘’டேஞ்சர்’’ என்ற பட்டத்தை மகுடம் சூட்டியது யார் ? அதாவது இரண்டு முறை சிறை சென்று வெளியே வந்தாலே சிறைத்துறையே இவர்களுக்கு பயப்படுகின்றது என்பதே உண்மை. காவல்துறையினரின் வீரம் யாரிடம் காட்டப்படுகிறது தெரியுமா ? சாதாரண நடுத்தவர்க்கம் இருக்கின்றதே அதாவது கௌரவத்துக்கு பயந்து வாழும் மானம் போனால் உயிரையே துறக்கும் சாமானியர்கள், வங்கியில் விவசாயக்கடன் வாங்கி விட்டு கேட்கும் பொழுது கட்ட முடியாத மிகச் சாதாரணமானவர்களிடம் மட்டுமே கோடிகள் கடன் வாங்கிய மல்லையாவை இவர்கள் என்ன செய்தார்கள் ? கோடிகள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை என்ன செய்தார்கள் ? முடியாது காரணம் இவர்களுக்கு அரசியல்வாதிகளே முதலாளி.

என்று காவல்துறை மத்திய அரசின் ராணுவத்தின் தனி பிரிவாக இணைக்கப்பட்டு மாநில அரசு தலையிடாமல் தன்னிச்சையாக செயல் படுகிறதோ அதுவரை நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சாமானியர்களின் நிலை அந்தோ பரிதாபம்.

Chivas Regal சிவசம்போ-
காவல்துறையை மத்திய அரசு கிட்டே ஒப்படைச்சு தேர்தல் நேரத்தில வீடு புகுந்து அடிச்சு பிஜேபிக்கு ஓட்டுப் போடச் சொல்லவா ? அப்படினு நாம கேட்டா... குடிகாரப்பயல்னு சொல்லுவாங்கே...

சாம்பசிவம்-
இல்லைனா... இராணுவத்தை வச்சு ஓட்டுப் போடச்சொல்ல முடியாதோ...

சிவாதாமஸ்அலி-
நாடு நாசமாப்போக இவங்களே... ஐடியா கொடுப்பாங்கே போலயே...

53 கருத்துகள்:

 1. மீ தான் இங்கேயும் 1ஸ்ட்டூஊஊஊஊ:)... ஐ திங் சோஓஓஓ:)) ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 2. கில்லர்ஜி என்னமோ சொல்ல வாறீங்க எண்டு மட்டும் புரியுது... இந்த boy தான் ஒரு கெத்துக்காகத்தான் செய்தேன் எனச் சொன்னதாகப் படிச்சேன்... இப்படிச் செய்தால் பேப்பரில் படம் வரும்.. இண்டநெட் எல்லாம் பெயர் அடிபடும் என்றும் சிலர் நினைக்கிறார்களோ என்னமோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க புரிஞ்சால் சரிதான் இவனும் விளம்பர பிரியரோ....

   நீக்கு
 3. ஹலோ பூஸாரே....நடுஜாமத்துல கில்லர்ஜி போட்ட நாங்கல்லாம் எப்படி ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉனு சொல்லறது..ஹா ஹா ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிய்ய்யா...வ்வுக்கெல்லாம் நடு ஜாமத்துலயும் கண்ணு தெரியுமே!..

   நீக்கு
  2. ஹா ஹா ஹா:)). துரை அண்ணன்:)

   கீதா.. கடமைதான் முக்கியம் நித்திரை அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)..

   நீக்கு
 4. ஒரு விஷயம் உண்மை. அரசியல்வாதிகளையும், அதிகாரம், பணம் படைத்தவர்களை சாதாரண மக்களால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஆனால் அதனால் எல்லாம் வீரப்பரையோ, ஆட்டோ சங்கரையோ நியாயப்படுத்திவிட முடியாது.

  ஆனால் அதற்கு வன்முறை தீர்வல்ல.

  காவல்துறை செய்வது எதுவும் சரியில்லைதான். வழக்கு பதியப்படவே லஞ்சம் கேட்பது முதல் கட்டப்பஞ்சாயத்து வரை.

  ஆனால் அவர்கள் தப்பித்தவறி ஏதாவது செய்துவிட்டால் உடனே மனித உரிமைக்க கமிஷன் ஆஜராகி விடும். இந்த மனித உரிமைக் கமிஷன் ஒரு வினோதம். போலீஸ்காரர்கள் கொல்லப்படும்போது அது தூங்கி விடும். குற்றவாளிகள் பாதிக்கப்படும்போது விழித்து எழுந்து தப்பாமல் ஆஜராகிவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி நான் வீரப்பன் அண்ணின் செயலை நியாயப்படுத்தவில்லை மனித உரிமைக் கமிஷனுக்கு கமிஷன் போனால் வேலை நடக்குமோ...

   நீக்கு
 5. மல்லையாக்களை ஒன்றும் செய்ய முடியவில்லையாம். ஐம்பதாயிரம் ஒரு லட்சம் கல்விக்கடன் பெற்று. கல்வி முடிந்து இரண்டு வருடங்களுக்குள் கட்டமுடியாதவர்களை என்ன துரத்து துரத்துகின்றன வங்கிகள்! இதுவும் ஜனநாயகம்! போலீசை தனிப்பிரிவாக அறிவிப்பதும் (மக்களுக்கு) பாதுகாப்பானதல்ல என்பது என் அபிப்ராயம்!

  பதிலளிநீக்கு
 6. கொடியை எரித்த அந்தப் பையன் விளம்பரப்பிரியன் போலும். காவல்துறை நண்பர்களோடு சேர்ந்து செல்பி எடுக்கிறானே...

  பதிலளிநீக்கு
 7. கில்லர்ஜி இப்ப அந்தப் பையன் என்ன ஆனார்? எனக்கு இந்தச் செய்தி பற்றி தெரியவில்லை...என்றாலும் அந்தப் பையன் ஒரு வேளை ஏதோ ஒரு விதத்தில் மனம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்...இல்லை பிரபலப்படுத்திக் கொள்ளும் ஆர்வம்? அல்லது நண்பர்கள் குழுவிடம் ஏதேனும் பெட் கட்டுவது...இப்படிக் கூட நடக்கிறது...நண்பர்கள் குழுவில் பாரு நான் யார்னு என்று சொல்லி இப்படிச் சில விஷயங்களைச் செய்வது.சென்னையில் இப்படித் தொடங்கியதுதான் பைக் ரேஸ் ஏதேனும் ஒரு இடத்திலிருந்து மெரினாவை உதாரணத்திற்கு அடையார் என்று எடுத்துக் கொள்ளூங்கள்...நார்மலாக ட்ராஃபில் இல்லை என்றால் அடையாரிலிருந்து மெரினாவை அடைய 15 - 20 நிமிடம்..அதாவது நான் சொல்லுவது பைக்கில் சென்றால்...ஆனால் இந்தக் குழு 3 நிமிடத்தில் அதுவும் ட்ராஃபிக் இருக்கும் நேரம் அல்லது ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் 2 நிமிடம் என்று சொல்லி விர் விர்ரென்ரு பறப்பார்கள். பயமாக இருக்கும்...ரொம்பவே பயமாக இருக்கும். அதில் நேர்ந்த உயிரிழப்புகளுக்குப் பிறகு நிறுத்தப்ப்ட்டதாக அறிந்தேன்...தெரியவில்லை...நிறுத்தப்பட்டதா என்று..

  அப்படிப்பட்ட ஒருவனாக இருப்பானோ? உங்கள் கட்டுரையின் கருத்து புரிகிறது...சரியான வார்த்தைகள்தான். அனைத்தும்...நல்ல கருத்துகள்... அப்புறம் பையனைப் பற்றிச் சொல்லலையே...சாமானியர்கள் போலீஸில் மாட்டுவதைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க...குண்டாக்கள் தப்பிக்கறாங்க....பையனுக்கு என்ன ஆச்சு என்று சொல்லி இரண்டையும் இணைத்திருக்கலாமோ..

  அப்புறம் இது போன்ற செயல்கள் முதலில் வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது கில்லர்ஜி. எந்த ஒரு குற்றத்தின் நிக்ழ்வும் முதலில் வீடுதான் காரணம் அப்புறம் தான் சமூகம், அரசு என்று நீங்கள் சொல்வது....அரசுதான், சமூகம் தான் காரணம் என்றால் நாம் எல்லோருமே இப்படி ஏதேனும் செய்டு கொண்டிருப்போம்..இல்லையா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தவறுகளின் தொடக்கம் நமது வீடுதான் பிறகுதானே சமூகத்துக்குள் நுழைகிறான்

   விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 8. ஹையோ, அப்படி எல்லாம் ஓட்டுப் போடச் சொல்ல முடியாது! யாரும் மிரட்டினால் ஓட்டுப் போடவும் மாட்டாங்க கில்லர்ஜி! ஆனால் நம் நாட்டில் பொதுவாகக் காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன என்பது உண்மை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சிவசம்போ சொன்னதை எல்லாம் கணக்கில் எடுக்கப்படாது அவரு அதிராவோட அங்கிள்.

   நீக்கு
 9. என்னமோ போங்க..
  ஒன்னும் வெளங்கலே!..

  பதிலளிநீக்கு
 10. அத்துமீரல்கள் எல்லோர் தரப்பிலும் உள்ளன. அரசாங்கம் அரசியல்வாதிகள் போலீசார் சாதிச்சங்கங்கள் ஆகிய எல்லோரும் வாயப்பு அமைந்தால் அத்துமீரி தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்கிறார்கள். எளியவர்களை ஏறி மிதக்கிறார்கள். இது குழு மனப்பான்மை. ப்ளூரலிசம். ஆனால் தனிமனிதனின் அத்துமீறல்கள் இவனின் செல்வாக்கை கருத்தில் கொணடு பாரக்கிறார்கள். வலியவர்கள் தப்பிவிடுகிறார்கள் எளியவர்களை மூர்க்கத்தனமாக அடித்து அடக்கிவிடுகிறார்கள். அரசாங்கமும் போலீசாரும் எளியவர்களை அடித்து நொறுக்கி சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாக மார்தட்டிக்கொள்கிறுர்கள். ஏனோ இவர்ளால் மல்லையாக்களை ஒன்றூம் செய்ய முடிவதில்லை. இது இப்படித்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகான கருத்துரை

   தனிமனித ஒழுக்கம் பேணப்படுமானால் சமூக மாற்றம் நிகழ வாய்ப்பு உண்டு விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 11. மன நிலை சரியில்லை என்றால் வேறே எத்தனையோ கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆக்ஷன்கள் இருக்க (சட்டையைக் கிழிக்கிறது ,வெவ்வெவ் வே என முக சேஷ்டைகள் காண்பிப்பது போன்ற)இதைத்தான் செய்யவேணுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே... லூசுப்பய நீங்க நல்லாவே ஐடியா கொடுக்குறீங்க ....

   நீக்கு
 12. மோடி அடிச்சு எல்லாம் வோட்டுக் கேட்டகமாட்டார் அவருக்கு ஜெயிக்க வேண்டி மற்றவ்ர்களின் வோட்டை அவரே போட்டுக் கொள்வார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சரி, அப்போ ஏன் தமிழ்நாட்டில் போட்டுக்கலை? குஜராத்தில் ஈவிஎம், ஹிமாசலில் ஈவிஎம் எனில் ஏன் தமிழ்நாட்டில் அது மாதிரி செய்யலை? தர்க்கரீதியாகச் சிந்தியுங்க! எல்லா மாநிலங்களிலும் தங்களுக்குத் தாங்களே ஓட்டுப் போட்டுக்கறவங்க இம்மாதிரி மாநிலங்களிலும் ஏன் போட்டுக்கறதில்லை?

   நீக்கு
  2. ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஊ பக்கோறா, கச்சான் எல்லாம் எடுத்திட்டு ஓடியாங்கோஓஓஓஒ சாப்பிட்டுச் சாப்பிட்டே புறுணம்:) பார்க்கலாம்ம்ம்ம் இங்கின கட்சி மோதல்ல்ல் ஆரம்பம்:))... அணைஞ்சு போயிடாமல் எண்ணெய் விட்டுக்கொண்டிருப்போம்ம் ரெண்டு பக்கமும்.. ஹா ஹாஅ ஹா .. ஹையோ விடுங்கோ விடுங்கோ மீ முருங்கியில ஏறி இருந்திடுறேன்ன்ன்:))

   நீக்கு
  3. அதுக்கு பேருதான் சாமர்த்தியம் என்கிறது..

   நீக்கு
  4. அவருக்கு அம்பூட்டு தைரியம் வந்துடுச்சா... தமிழரே....

   அதிரா நல்லாவே வேலை செய்றீங்களே....

   நீக்கு
 13. இப்போ இருக்கும் சிஸ்டம் மொத்தமும் சரியில்லை. அதில் இருக்கும் நல்லவர்களையும் மோசமாக்குகிறது இப்போது இருக்கும் சிஸ்டம். பெரும்பாலும் நாம (அதிகாரத்தில் உள்ளவர்கள்) கண்ணை மூடிக்கொண்டு எல்லாம் நன்றாக இருப்பதுபோல் நினைத்துக்கொள்கிறார்கள்.

  1. போலீஸ் ஸ்டேஷன் சரியாக நடப்பதற்கு பணம் வேண்டும். ஆட்டமேஷன் வேண்டும். எல்லாவற்றையும் கணிணியில் பதிவு செய்து, அதனைக் கையாள பயிற்சி கொடுக்கவேண்டும். இதனைச் செய்யும்போது காவல்துறைக்கு ஓரளவு ஆட்கள் இருந்தால் போதும். இதற்கு அடுத்தபடியாக, ஆன்லைனிலேயே கம்ப்ளெயின்ட் பதிவுசெய்ய வேண்டும். இப்படி வெளிப்படையாக இருந்தால் ஓரளவு இந்தத் துறையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம். ஆனால், அரசு இதற்கு செலவழிப்பதில்லை (எந்த அரசும் என்றுதான் நினைக்கிறேன். நான், போலீஸில் பெரிய அதிகாரி சிபாரிசு செய்து, ஒரு திருட்டு கம்பிளெயின்ட் கொடுக்க பெங்களூர் காவல் நிலையத்தை அணுகியபோது அவர்கள் 3000 ரூ, பிரின்டர் ரிப்பன் செலவு, ஸ்டேஷனரி செலவு என்று வாங்கிக்கொண்டார்கள். அப்போ ஏழைகள் சொல் அம்பலத்தில் ஏறுவது எப்படி? அரசு இதற்கு பணம் ஒதுக்கவில்லையெனில் எப்படி ஸ்டேஷன் செயல்படும்?)
  2. போலீசுக்கு தேவையானவைகளைச் செய்துவிட்டு, பிறகு அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அரசியல்வாதிகள், குற்றவாளிகளுக்குப் பரிந்துகொண்டு ஸ்டேஷன் வரக்கூடாது என்ற நிலையைக் கொண்டுவந்தால், நிச்சயம் சட்டம் ஒழுங்கு மேம்படும். (ஜெ. இருந்தபோது, அதிமுக பிரமுகர்கள் ஸ்டேஷனுக்குச் செல்லக்கூடாது என்று தடை போட்டிருந்தார் எனப் படித்திருக்கிறேன்)

  நீதித்துறை, காவல்துறை போன்றவர்கள், சமூகத்தின் ஒழுங்கைப் பேணும் பொறுப்பில் இருப்பவர்கள். அவர்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே லஞ்சம் புகுந்து விளையாடினால், அது எப்படி சமூகத்துக்கு நன்மை செய்யும்? செய்யும் உணவில், சிறிது விஷத்தையும் கலப்பதுபோல் இது.

  இப்போ சப்ஜெக்ட். புதிய தலைமுறை ஒழுங்கைப் பேணாவிட்டால் வருங்கால சமூகம் பாதிக்கப்படும். என்னைப் பொறுத்தவரையில், இந்தப் பையனை, சமூகத்தைவிட்டுத் துரத்தவேண்டும். இவன், இரு நாட்கள் முன்பு பைக்கில் போலீஸ் பேரிகேடை இழுத்துக்கொண்டு சென்ற அயோக்கியன் இவர்களெல்லாம் சமூகத்தின் புற்று நோய். அவர்களைத் திருத்துவதில் நேரத்தை வீணாக்கக்கூடாது. They must be eliminated from society.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகாக விளக்கினீர்கள் தண்டனைகள் கடுமையாக வேண்டும் என்பதே எமது அவா.

   செல்லில் எழுதுவதால் விரிவாக மறுமொழி தர இயலவில்லை மன்னிக்கவும்.

   நீக்கு
 14. வணக்கம் சகோ!

  தன்னை முன்னிலைப் படுத்துவதற்காக இப்படியுமா செய்வார்கள்?...
  தம்மை யாரென வெளிக்காட்டாமலே இளைஞர் சமுதாயம் அளப்பரிய செயல்கள் செய்கிறார்கள் என்றும் அறிந்து மகிழ்ந்திருக்கிறேன்.
  ஆனால் இத்தகைய குயுக்தி மனப்பான்மை உள்ளவர்களை என்னவென்று சொல்ல...:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ என்ன செய்வது நாம் இன்னும் என்னவெல்லாம் நாம் சந்திக்க வேண்டியது இருக்கோ....

   நீக்கு
 15. முன்னரே படித்த பார்த்த செய்தி. மறுபடியும் தங்கள் பதிவு மூலமாக கூடுதல் விவரங்களுடன் தெரிந்துகொள்ளமுடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

   நீக்கு
 16. நேற்றில் இருந்து எங்குமே பின்னூட்டங்கள் போடா முடியாம இருக்கே :(
  இந்த சம்பவம் முகப்புத்தகத்தில் 2016 வாக்கில் படித்த நினைவு ..பிறகு என்ன ஆனது .
  காவல்துறை யாராலும் கட்டுப்படுத்தப்படாமல் நேர்மையா நடக்கணும் அதுக்கு வழி இருக்கா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இந்தப்பதிவு உண்மையிலேயே 2016-ல் எழுதி ட்ராப்ட்டிலேயே கிடந்தது காவல்துறை லஞ்சம் வாங்குவதை நிறுத்தினால் ஸ்காட்லாண்டை பின்னுக்கு தள்ளி விடலாம்.

   நீக்கு
 17. இதில் இன்னொரு கோணம் இருக்கிறது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படாமல் ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வெளியே வருபவர்களை என்ன சொல்ல சட்டத்தின் குறையா அரசின் குறையா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒட்டு மொத்த மனிதர்களின் எண்ணங்களும் செம்மையானால் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரலாம் ஐயா

   நீக்கு
 18. சிஸ்டம் சரி இல்லைண்ணே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி எல்லாம் ரஜினியை நக்கல் பண்ணப்படாது.... சகோ.

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  நல்ல பதிவு. மனநிலை சரியில்லாததின் விளைவாக அந்த மனிதர் தான் செயவதறியாது அந்த செய்தாலும், இறுதியில் தன் செயலில் தவறொன்றும் இல்லை என்ற பாவத்தில் இளநகையுடன் போஸ் தருகிறரே! ஒரு வேலை பின்னூட்டகங்களில் சொல்லியிருப்பது மாதிரி விளம்பர நோக்கமா? அதற்கு தேசிய கொடிதானா கிடைத்தது!மொத்தத்தில் எதுவும் சரியில்லை.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நீங்கள் சொல்வது போல அவன் வருந்தவில்லையே....

   நீக்கு
 20. எல்லா விதத்திலும் பிரச்சனைகள் - சிலர் விளம்பரப் பிரியர்களாக இருக்கிறார்கள். சிலர் தன்னைத் தவிர மற்றவர் எல்லாருமே கெட்டவர்கள் என நினைக்கிறார்கள். மொத்தத்தில் இங்கே யாருமே சரியில்லை. வேறென்ன சொல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஒரு சதவீதம் மக்கள் நல்லவர்களாக இருப்பதும் உண்மைதான் ஜி

   நீக்கு
 21. சட்டங்கள் கடுமையாகும்வரை தவறுகள் குறையாது ஜி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரபு நாட்டு சட்டங்கள் இந்தியாவில் வரவேண்டும் நண்பரே

   நீக்கு
 22. நாளுக்குநாள் பயித்தியங்கள் உருவாகி வருவது அந்தோ பரிதாபம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா சரியாகத்தான் சொன்னீங்க வருகைக்கு நன்றி

   நீக்கு
 23. கொடி எரிப்பது குற்றம் கட்டுரை படித்தேன் சகோதரா..
  என்னவோ தாறுமாறாக நடக்கிறது.....
  எதை எழுதுவது என்று தெரியவில்லை...
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 24. எந்த ஒரு குற்றத்தின் நிகழ்வுக்கும் முதலில் வீடுதான் காரணம் - கீதா அவர்களின் இந்தக் கருத்து சிந்திக்கத் தக்கது.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...