திங்கள், ஜனவரி 01, 2018

இன்று முதல்


2018
நட்பூக்களுக்கு... கில்லர்ஜியின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சமூகத்தில் பெரும்பாலும் நல்ல மனிதர்கள்தான் கவலைப்படுகிறார்கள் சில நேரங்களில் அவர்கள் புலம்புவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்... அதேநேரம் குடிகாரன், திருடன், அயோக்கியத்தனம் செய்யும் எந்த மனிதனாவது எனக்கு கவலையாக இருக்கிறது எனச் சொல்லி கேட்டிருக்கிறீர்களா... அதற்கு சாத்தியமே இல்லை ஏன் இந்த முரண்பாடு விதி விளையாடுகிறது என்றும் தெய்வம் நம்மை சோதிக்கிறது என்றும் நாம் புலம்புகின்றோம் இதற்கு காரணம் நமது மனசாட்சியே சோதனைகள் வரும்போது கவலைப்பட்டு என்ன ஆகபோகிறது ஆகவே இதுவும் கடந்து போகும் என நினைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை நோக்கி கடந்து போக முயற்சிக்க வேண்டும் இந்த தருணத்தில்....


என்ன நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
என்பதை நினைத்துப்பார்
நான் மதவாதம் பேசவரவில்லை மதவாதியும் இல்லை

நாம் எதையும் கொண்டு வரவில்லை கொண்டு போகவும் முடியாது இதுதான் உண்மை அதற்காக நாமும் குடிகாரர்களை போல் வாழ்ந்தால் என்ன என்று நினைத்தால் அது அறியாமை அவர்களுக்கு எதுவுமே இல்லை அதனால்தான் சில நேரங்களில் தெருக்களில் எதுவுமே இல்லாமல் கிடப்பார்கள் பார்த்திருப்பீர்கள்... திருடர்களுக்கு அயோக்கியர்களுக்கு வெட்க உணர்வு கிடையாது

மனிதன் தவறு செய்ய வெட்கப்பட்டால் அவன் மாமனிதனாகி விடுவான்
இப்பொழுதும் சொல்கிறேன் நான் மதவாதம் பேசவரவில்லை காரணம் மேற்கண்ட இரு தத்துவங்களும் இரண்டு மதங்களில் சொல்லப்பட்டது

ஆகவே வாழும் இந்த வாழ்க்கை உயர்ந்ததே என நினைத்துப்பார் வாழ்க்கை இனிக்கும் மனம் உயர்வுக்கு வழி வகுக்கும் மாறாக என்ன வாழ்க்கை இது எனநினைத்தால் வாழ்க்கை கடைசிவரை கசக்கும் மனம் தாழ்வுக்கே வழி கொடுக்கும் ஆகவே இன்று வருடப்பிறப்பு முதலாவது இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம்...

60 கருத்துகள்:

 1. கில்லர்ஜி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

  எல்லாவற்றையும் ஏற்கும் மனப்பக்குவம் வந்துவிட்டால் மகிழ்வுடன் வாழலாம் ஜி! நாம் கவலைப்படுவதால் எதுவும் நின்று விடப் பொவதில்லை. நடப்பது நடந்துதான் தீரும். ஆனால் நமது முயற்சியை கைவிடாமல் ஆனால் அதே சமயம் நல்லதை நினைத்து, நடக்கவில்லை என்றால் அடுத்த கட்டத்தை நோக்கி நல்ல சிந்தனைகளுடன் நகர்வோம்.

  இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் நல்லதை அளிக்கட்டும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இவ்வருடத்தின் முதல் கருத்துரையை முதலாவதாக வருகை தந்து பகிர்ந்தமைக்கு முதலில் நன்றி.

   தங்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 2. சிவதாமஸ் அலியும், ரீகல் சிவசம்போவும் என்னா வாழ்த்து சொல்ல வரலை....வன்மையாகக் கண்டிக்கிறோம்...

  அதுவும் ரீகல் காரர் புத்தாண்டுக்கு எங்க இருப்பார்னு தெரியும் சரி போனா போகட்டும் அப்படியாவது ஏதாவது தத்துப்பித்துனு தத்துவம் பேசுவார்னு பார்த்தா...ஹும்...கில்லர்ஜிதான் தத்துவம் சொல்லிருக்காரு...அவர்தான் சாம்பசிவமோ!!!! நான் அவனில்லைனு எல்லாம் சொல்லக் கூடாது ஆமாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரீகல் நியூஇயர் கொண்டாடிவிட்டு எங்கிட்டாவது ஊரணியோரம் கிடக்கும்.
   மற்றவர்கள் உகாண்டா போயிருப்பதாக கேள்வி

   நீக்கு
 3. இனிய ஹப்பி நியூ இயர் கில்லர்ஜி...
  முதல் பந்தியில் இரு சொற்கள் மாறி இணைந்து விட்டன திருத்துங்கோ...

  5 ஆவது வரியில்.//அதற்கு சாத்தியமே/// என்பது இடையில் நுழைந்து விட்டது.

  உண்மைதான், எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் வாழ்த்துகள்.
   பிறகு கணினியில் மாற்றுகிறேன் செல்லில் பார்த்தேன் குழறுபடிகளை ஆனால் எனது கணினியில் சரியாகவே இருக்கிறது. உங்களது கணினியும் எனது போலவே HPதானே...
   தகவலுக்கு நன்றி.

   நீக்கு
 4. புத்தாண்டு அனைவருக்கும் நன்மை தரட்டும் .உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் எமது வாழ்த்துகள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி எமது புத்தாண்டு வாழ்த்துகளும்...

   நீக்கு
 6. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 7. எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. நல்ல கருத்துகள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 9. கில்லர்ஜி, முதலில் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். மனதைப் பக்குவம் செய்து கொண்ட நீங்களே இப்படிச் சொல்லலாமா? எல்லாம் சரியாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு எமது நன்றிகள்

   நீக்கு
 10. பத்திகளில் வரிகள் மாறி மாறி வருகின்றன. அதைச் சரி செய்யுங்கள்! "அதற்கு சாத்தியமே இல்லை" என்பதும் இடம் மாறி வந்திருக்கு. முக்கியமாய் முதல் பத்தியில் சொற்கள் மாறி வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  நலமா? உங்களுக்கும், குடும்பத்தினருக்கும புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  தங்கள் பதிவில் சொன்னதனைத்தும் உண்மை! மிக அருமை. நல்லதொரு பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
  இதற்கு சற்றுமுன் ஒரு பதிலுரை தந்தேன். அதை காணாததால் மீண்டும் வருகை.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் இதற்குமுன் கருத்துரை வரவில்லையே....

   நீக்கு
 12. நல்ல கருத்து மழை கில்லர்ஜி.
  இனிய ஆங்கிலப்புத்தாண்டு ஐ க்கூட‌
  ஆங்கிலத்தை தனியே பார்க்காமல்
  இனிய புத்தாண்டு என்றெல்லாம்
  வாசலில் கோலம் போடுகிறோம்.
  நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம்.
  கணியன் பூங்குன்றன்
  ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பால்
  இருந்தாலும்
  நம் தமிழ் இதயத்தில் தான்
  அவர் ஓலைச்சுவடிகளை
  விட்டுப்போயிருக்கிறார்.

  யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
  சாந்துணையும் கல்லாத வாறு.

  அதனால்
  உங்களுக்கு
  வெரி வெரி ஹேப்பி நியூ இயர்!

  அன்புடன் ருத்ரா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா

   நீக்கு
 13. புத்தம்புதுமலராய்ப் புத்தாண்டு மலரட்டும். மணம் பரப்பட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிக்க நன்றி தங்களுக்கும் வாழ்த்துகள்

   நீக்கு
 14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் எமது வாழ்த்துகள்

   நீக்கு
 15. நண்பர் கில்லர்ஜிக்கு, எனது உளங்கனிந்த 2018 - ஆங்கிலப் புத்தாண்டு – நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றியோடு எமது வாழ்த்துகளும்...

   நீக்கு
 16. கில்லர்ஜி இந்த மனசாட்சிக்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா நான்றிந்தவரை எதையும் செய்து விட்டு மனசாட்சியைத் துணைக்கழைப்பார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா மனசாட்சிக்கு பயந்து வாழ்பவன் இறைவனைக் கண்டால் ? ? ? பயம் தேவையில்லை என்பது எமது கருத்து
   புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா

   நீக்கு
 17. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜி !

  பதிலளிநீக்கு
 18. 2018 பல வெற்றிகளைத் தருமென நம்புவோம்.
  எல்லோருக்கும்
  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நம்பிக்கையே வாழ்க்கை.
   தங்களுக்கும் வாழ்த்துகள்

   நீக்கு
 19. நல்ல கருத்துகள்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 20. எஸ் எல்லாம் கடந்து போகும் ....
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 21. புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 22. நல்லது அப்படியே நடப்போம்!

  பதிலளிநீக்கு
 23. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 24. நடப்பவை யாவும் இனி நல்லனவாகட்டும் அண்ணா ஜீ க்கு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 25. கில்லர்ஜி.. தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதோ விரைவில் பொங்கல் வருகிறது. (ஜல்லிக்கட்டு கலவரம் வருதான்னு தெரியலை).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வராவிட்டாலும் ஞாபகப்படுத்தி விடுவீர்கள் போலயே...

   நீக்கு
 26. வணக்கம் சகோதரரே!

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  உங்களின் இந்தப் பதிவு எனக்கு டாஷ்போர்டில் காண்பிக்கவில்லை.
  வந்து பார்த்து வாழ்த்தத் தாமதமாகிவிட்டது.. வருந்துகிறேன்...

  அருமை! இன்று எனது நாளை யாருடையதோ?..
  வாழ்ந்த வாழ்க்கை எனக்குக் கற்பித்ததும் இதுவே.
  மண்ணுக்குள் செல்லும்வரை மனதில் நான், எனது என்பவற்றை அறவே
  இல்லாதொழித்து வாழ்ந்தால் எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றமும் இல்லை.
  அது தரும் நிறைவிற்கு ஈடாக எதுவும் இல்லை!

  நல்லதை நினைப்போம்! நாலுபேருக்காயினும் நல்லதைச் செய்வோம்!

  வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்துகளும்...

   நீக்கு
 27. கருத்து இங்கும் காணாமல் போகிறதா?

  உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாமதத்திற்கு மன்னிக்க...
   கீழக்கரையில் மாமா மரண காரியத்தில் பிஸி.

   நீக்கு
 28. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஒருநாள் தாமதா வந்து வாழ்த்து சொல்றேன். பிகாஸ் ஐ ம் சோம்பேறி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 29. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...