தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 20, 2019

தியாகங்கள்


தியாகங்கள் இங்கு ஆராதிக்கப்படுவதில்லை
மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது.

தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை
மாறாக எழுதிக் கொடுக்கப்படுகிறது.

சாபங்கள் இங்கு பலிக்கப்படுவதில்லை
மாறாக பாவங்களாக பிரதிபலிக்கிறது.

மனக்காயங்கள் இங்கு ஆற்றப்படுவதில்லை
மாறாக மேலும் விரிவாக மாற்றப்படுகிறது.

வாக்குகள் இங்கு வழங்கப்படுவதில்லை
மாறாக இருபது ரூபாயால் வாங்கப்படுகிறது.

தமிழ்மொழி இங்கு ஒலிக்கப்படுவதில்லை
மாறாக பிறமொழியால் பழிக்கப்படுகிறது. 

சில திருமணங்கள் இங்கு அமையப்படுவதில்லை
மாறாக கருமனங்களால் அமைக்கப்படுகிறது.

விவாஹரத்துகள் இங்கு குறைக்கப்படுவதில்லை
மாறாக நாகரீக மோகத்தால் பெறுக்கப்படுகிறது.

குழந்தை பிறப்பு இங்கு பிரம்மனால் நிறுத்தப்படுவதில்லை
மாறாக மருத்துவரால் திருத்தப்படுகிறது.

உறவுகள் சொல் பேசி இங்கு உரசப்படுவதில்லை
மாறாக செல்பேசியால் விரிசல் படுத்தப்படுகிறது.

முதியோர் இல்லங்கள் இங்கு கலைக்க முயல்வதில்லை
மாறாக நிலைக்க வைக்கப்படுகிறது.

அதர்மம்  இங்கு பணத்தால் அடங்கி போவதில்லை
மாறாக தர்மம் பணத்தால் ஒடுங்கி போகிறது.

சட்டங்கள் வலியவர்களால் இங்கு மதிக்கப்படுவதில்லை
மாறாக நலிந்தவர்களை மிதிக்க வைக்கப்படுகிறது.

நீதிகள் இங்கு நிலைபடுவதில்லை
மாறாக நிதியால் நிர்மானிக்கப்படுகிறது.

உணவுகள் இங்கு உருவாக்கப்படுவதில்லை
மாறாக உருக்குலைக்கப்படுகிறது.

உணர்ச்சிகள் இங்கு துளிர்ப்பதில்லை
மாறாக மருத்துவத்தால் அழிக்கப்படுகிறது.

உண்மைகள் இங்கு பேசப்படுவதில்லை
மாறாக பொய்களால் மாசுபடுத்தப்படுகிறது.

அன்பு, பாசம் இங்கு வளர்க்கப்படுவதில்லை
மாறாக காகிதப்பணத்தால் வழுக்கப்படுகிறது.

சில மரணங்கள் இங்கு நிகழ்வதில்லை
மாறாக பணத்தால் நிகழ்த்தப்படுகிறது.

கல்வியறிவு இங்கு போதிக்கப்படுவதில்லை
மாறாக நற்குணங்கள் பாதிக்கப்படுகிறது.

கலாச்சாரங்கள் இங்கு நிலைக்கபடுவதில்லை
மாறாக கலாச்சார கொலையாளிகளால் கலைக்கப்படுகிறது.

பயணம் இங்கு பலருக்கும் பயன்படுவதில்லை
மாறாக உயிர்ப் பணயம் வைக்கப்படுகிறது.

ஊடகங்கள் இங்கு மக்களுக்கு ஊக்கமளிக்கவில்லை
மாறாக தன் வளர்ச்சிக்காக ஊழல்களை ஊட்டுவிக்கிறது.

திரைப்படங்கள் இங்கு நல்லதை சொல்வதில்லை
மாறாக நாளும் வதை செய்யப்படுகிறது.

கிரிக்கெட்டால் இங்கு பயனில்லை
மாறாக கிறுக்கர்கள் உருவாக்கப்படுகிறது.

அரசியல்வாதிகளால் இங்கு அரசு நடத்தப்படுவதில்லை
மாறாக ஆண்டுகள் கடத்தப்படுகிறது.

இதை கில்லர்ஜியாகிய நான் இங்கு புதைத்து வைக்கவில்லை,
நாளைய சந்ததிகளின் விழிப்புணர்வுக்காக... விதைத்து வைக்கிறேன்.

Chivas Regal சிவசம்போ-
மேலேயுள்ளது இங்கு எழுதி வைக்கவில்லை, மாறாக தட்டச்சு செய்யப்படுகிறது.

சாம்பசிவம்-
இதோ முடிவில் உண்மையே வெளியாகி உள்ளது. சத்யமேவ ஜயதே

70 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரியும் உண்மையை சொல்லி செல்லுகின்றன. அருமை கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. கனநாளைக்குப் பிறகு சிறீ சிவசம்போ அங்கிளைக் கண்டதில் மகிழ்ச்சி:)...

    பதிலளிநீக்கு
  3. விதைப்பு நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் அருமை சகோ . .நாளைய சந்ததிகளின் விழிப்புணர்வுக்காக விதைத்தவை அனைத்தும் சூப்பர்ப் .சாம்பசிவம் சிவசம்போவின் அண்ணனா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரசித்தமைக்கு நன்றி

      சிவசம்போவின் கொழுந்தியாளை சாம்பசிவம் மைத்துனர் சிவாதாமஸ்அலிக்கு கொடுப்பதாக செவிவழிச்செய்தி.

      மேலும் விபரங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.அதிரா அவர்களுக்கே தெரியும்.

      நீக்கு
  5. கிரிக்கெட் :))) ஹாஹாஹா .நல்லவேளை எப்பவுமே என்னை இந்த விளையாட்டு ஈர்த்ததில்லை .டென்னிஸ் பற்றி கால்பந்து பற்றி ஏதாச்சும் வைச்சிருக்கீங்களா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான டென்டிஸ்ட்களுக்கு டென்னிஸ் பிடித்தமான விளையாட்டு என்று சொல்வார்கள்.

      நீக்கு
  6. உறவுகளும் செல்பேசியும் பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை .ஒரு செக்கண்டில் சண்டை உருவாகிடுது சண்டை உருவாக்கிடுது செல்போன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் செல்பேசி பல பிரச்சனைகளுக்கு தொடக்கமாக உள்ளது.

      நீக்கு
  7. வணக்கம் கில்லர்ஜி...அனைத்தும் அருமை. ஒவ்வொரு வரியும்!

    அத்தனையும் சொல்லிட்டுக் கடைசியில் சொல்லியிருக்கீங்க பாருங்க புதைத்து வைக்கவில்லை விதைத்து வைக்கிறேன் என்று...மிக மிக அருமை. விதைத்தவை நாளை கண்டிப்பாக ஆலமரமாகி விழுதுகளைப் பரப்பி நிலையாக நிற்கும் என்று நம்புவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக விதைக்க வேண்டியது நமது கடமை. பலன் அடுத்த சந்ததிகளுக்கு கிடைக்கட்டுமே...

      நீக்கு
  8. எல்லாமே அருமை. முதியோர் இல்லங்கள் நல்ல பிசினஸ் என்றானபின் அவற்றை யார் கலைக்க முற்படுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் எல்லாம் பணமே பிரதானமாகி விட்டதே...

      நீக்கு
  9. படத்தில் உட்கார்ந்திருப்பது அனுஷ் மாதிரி தெரிவது என் ப்ரமையா? பிரேமையா?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்//

      என்று திருச்சிகாரவுங்க சொல்லிடப் போறாங்க... இஃகி... இஃகி...

      நீக்கு
    2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!!!!

      நீக்கு
    3. ஸ்ரீராம்... அந்தப் பெண் கைல 'பிரபாஸ்' மாதிரி எழுதியிருக்கே... அதைவைத்தா சொன்னீர்கள்?

      நீக்கு
  10. உண்மைகள் இங்கு பேசப்படுவதில்லை ; மாறாக பொய்களால் மாசுபடுத்தப்படுகிறது.

    உண்மை. இது நான் மிக மிக மிக மிக மிக மிக ரசித்த வரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சியாக இருக்கிறது தங்களது கருத்துரை கண்டு.

      நீக்கு
  11. ஒவ்வொரு வரியும் எழுதி வைக்கப்படவில்லை
    மாறாக செதுக்கி வைக்க பட்டிருக்கின்றன கில்லர்ஜி. Killer Performance.

    பதிலளிநீக்கு
  12. சில மரணங்களை நிகழ்த்துவது பணத்தால் என்பதைவிட மாசுபட்ட மனத்தால் என்றும் கூறலாம்.

    பதிலளிநீக்கு
  13. விதைத்தவை விருட்சங்களாகட்டும்...

    நல்ல பகிர்வு கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  14. அக்கினிச் சுடர்கள் இங்கே அணைக்கப்படுவதில்லை..
    மாறாக கில்லர் ஜி அவர்களால்
    ஏற்றப்படுகின்றன....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது செம்மையான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  15. விதைக்கப்பட்ட அனைத்தும் அருமை.
    விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புவோம்.
    நம்பிக்கைதானே வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  16. செல்பேசியால் உறவுகள், நட்புகள் விரிசல் ஏற்படுவது உண்மைதான்.
    முதியோர் இல்லங்கள் காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.
    திருவிழாக்கள், கூட்டமாய் உள்ள சுற்றுலா தளங்களில் விட்டு விட்டு செல்லும் முதியோர் எண்ணிக்கை அதிகமாகி வ்ருகிறது. அவர்களை பாதுகாக்க சேவை மனபான்மை உள்ள முதியோர் இல்லம் தேவை.
    வெளி நாட்டில் இடு போன்ற ஆதரவற்ற முதியோர்களை அரசாங்கம் கவனித்து கொள்கிறது.

    பணம் உள்ளவர்களுக்கு, குழந்தைகள் இருந்தும் கவனித்துக் கொள்ள முடியா சூழ்நிலையில் உள்ள்வர்களுக்கு, பிள்ளை இல்லாதவர்கள் ஆனால் பண்ம இருக்கிறது என்பவர்களுக்கும் பாதுகாப்புக்கு பணம் கொடுத்து வசதியாக வாழும் முதியோர் இல்லம் தேவைபடுகிறது.

    காலம் உறவுகளை கூட நம்ப முடியாகாலமாகி வருகிறது.
    நேற்று தொலைக்காட்சி செய்தி:- வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்து வீடு காட்டிய அம்மாவை கொன்று நகைகளுடன் ஓட்டம்.

    யாரைத்தான் நம்புவது ?

    ஊடக்ங்கள் இதை போன்ற செய்திகளை முன்னிலை படுத்தி இப்படியும் செய்யலாம் என்று கற்றுக் கொடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவாக அலசி எழுதிய கருத்துரைக்கு நன்றி சகோ.

      மனிதநேயம் மறைந்து வருகிறது வேறென்ன சொல்வது ?

      நீக்கு
  17. எதுகை மோனை (உங்களுடைய தனித்துவம்) இன்றி கருத்துக்களை மட்டும் தெளிவாய் கூறி சிந்திக்கவும் வைத்தது. தேர்தல் அறிவிப்போ இவ்வாறு எழுத (தட்டச்சு செய்ய) வைத்தது? இதை மனக்கு(மு)றள் என்று கூறலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      இதற்கான எனது உண்மையான பதிலை சொல்கிறேன்.

      இதன் தலைப்பு தியாகங்கள், முதல் கு(மு)றளே தியாகத்தைப் பற்றித்தான் சொல்லி இருக்கிறேன்.

      இரண்டு தினங்கள் முன்பு வீட்டில் மனக்கசப்பு எனது தியாகங்கள் உதாசீனப்படுத்தப்பட்டது.

      அந்த வேதனையை எழுத ஆரம்பித்தேன் பத்தே நிமிடத்தில் குடும்பத்து விடயம் மட்டுமின்றி அன்பு, சமூகம், நீதி, மொழி, உணவு, கல்வி, ஓட்டு, திரைப்பம், அரசியல் எல்லாமே இணைந்து விட்டது இதுதான் நடந்த உண்மை.

      தேர்தல் வருகிறது ஆம் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் இனி அரசியல் பதிவும் எழுத வேண்டுமே...

      விரைவில் உங்களுக்காக...

      நீக்கு
  18. யதார்த்தத்தைப் பேசும்போது அது நமக்கெல்லாம் புலம்பலாகவே தெரிவது வேதனைதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  19. நெருப்பு வரிகள் இவை - பலரது
    நெஞ்சைச் சுட்டுக் கொள்ள வேண்டும்!

    பதிலளிநீக்கு
  20. எத்தனை உண்மைகள்... அருமை ஜி... அசந்து விட்டேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சில உண்மைகளை பொதுவில் சொன்னால்தான் அதன் பொருள் விளங்குகிறது.

      நீக்கு
  21. நாட்டை நினைத்து ரொம்பவே கவலைப்படுறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டுப்புலியை வீட்டில் வைத்தாலும்
      கறியும், சோறும் ஆக்கி வைத்தாலும்
      குரங்கு கையில் மாலையை கொடுத்து
      கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும்
      மாறாதய்யா மாறாது மனமும், குணமும் மாறாது...

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு.. எத்தனை அருமையான அர்த்தமுள்ள வரிகள். ஒவ்வொன்றையும் ரசித்தேன்.தங்கள் கற்பனை மிக அபாரம். தங்களுக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்.

    இங்கு செதுக்கிய பொன் மொழிகள் ஒவ்வொன்றும் காலங்காலமாய் அனைவருக்கும் பயனுள்ளதாய் மின்னும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை இரசித்து ஆத்மார்த்தமாய் படித்து கருத்துரை பதிந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  23. //கிரிக்கெட்டால் பயனில்லை// - நீங்க என்னவோ இப்படிச் சொல்றீங்க. ஆனா ஐபிஎல்லுக்கு டிக்கெட் கொடுக்கற இடத்துல போலீஸ்காரரிடம் லத்தி அடி வாங்கிக்கிட்டு ரெண்டு நாளா கியூல டிக்கெட்டுக்கு நின்னுக்கிட்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே பயன் என்றால் லத்திஅடி வாங்கியதா ?

      இந்த மூடர்கள்தான் பின்நாளில் தொண்டர்கள் என்ற கூட்டுக்குள் சிறைபட்டு வாழ்கின்றனர்.

      நீக்கு
  24. //திரைப்படங்கள் நல்லதைச் சொல்வதில்லை// - நல்ல சீரியல்களெல்லாம் காத்தாடுகின்றனவாம். அண்ணி கற்பழிப்பு, கணவன் நிறைய திருமணங்கள் செய்வது என்று ஏடாகூடமான உறவுகள் உள்ள சீரியல்கள்தாம் டிஆர்பி ரேடிங்கில் சக்கைப்போடு போடுகிறதாம். நீங்க சொல்றதை, உங்க தெருவுல உள்ளவங்களே ஒத்துக்கொள்வார்களான்னு தெரியலை (அதுக்காக நீங்க சொன்னது தவறல்ல. ஆனால் மக்கள் மாறிட்டாங்க)

    நீங்க சொல்லியிருப்பது பெரும்பாலும் உண்மைதான் கில்லர்ஜி.... ஆனா மக்கள்தானே இதற்கெல்லாம் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே திண்டுக்கல் ஜியின் பதிவுக்கு தாங்கள் சொல்லி இருந்த கருத்துரை இங்கும் பொருந்தும்.

      மக்கள் இன்னும் எவ்வளவு காலம் மாக்களாக இருப்பார்களோ...

      நீக்கு
  25. அத்தனையும் அருமை உண்மையும் கூட.

    ரசித்தோம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  26. மாறாக சிவசம்போ சொல்வதுதான் உண்மை என்று படுகிறது...............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சரியாகத்தான் சொல்வார் நண்பரே

      நீக்கு
  27. 21ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவர் மீண்டும் பிறந்து வந்து விட்டார்.
    இரண்டு வரிக் கவிதைகளுக்காகவும், மாற்றி யோசிக்கும் திறனுக்காகவும் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஏதோ ஊமைக்குத்து போல தெரிகிறதே...

      நீக்கு
    2. உண்மையை சொன்னால் இப்படித்தான்...
      நிறைய ஊமைக்குத்து வாங்கியிருப்பீங்க போல...

      நீக்கு
  28. எல்லா வரிகளுமே அருமை! எதைப் பாராட்ட! வாழ்த்துகள்!
    எப்போது வாழ்க்கை இயந்திரகதியில் நடத்தத் தொடங்கிவிட்டோமோ அப்போதே அனைத்தையும் தொலைத்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  29. தியாகம் எப்போதும் மதிக்கப் படுவதில்லை. என்னவோ அவனுக்கு முடிந்தது செய்தான். அவளுக்குச் செய்ய வேண்டிய கடமை செய்தாள். இல்லாவிட்டால் நாங்களே பிழைத்திருப்போம். பல குடும்பக் குமுறல்.

    நிறைய செய்திகள் நீங்கள் தந்திருப்பது. அனைத்தும் உண்மைதான்.
    மனம் சுட்டு விடும். நெருப்பு அதன் மேல் வைக்கப் படுவதற்கு முன்பே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  30. தியாகம் என்றால் என்ன எனப் புரியாதவர்கள் தங்களைத் தாங்களே "தியாகி" பட்டம் சூட்டிக்கொண்டு மகிழும் உலகம் இது! நீங்கள் சொல்லி இருப்பதில் எதை மறுப்பது? எல்லாமே சரி தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு