தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 17, 2019

மூஸாலி கோயில் (4)

முந்தைய பகுதிக்கு கீழே வரிசைப்படி சொடுக்குக...

குலவி பாடி முடிந்ததும் மேலும் சில சடங்குகள் நடந்தது திடீரென தலைவன் சொன்னான்...
ஃபயர் மிசாளு வருங்கா.... முஹி...
சொன்னதுதான் தாமதம் ஒருவன் வலையத்தில் தீ வைத்தான்.


அய்யய்யோ நம்மை சுட்டுத்திங்கப் போறாங்களோ... சிவமணிக்கு உயிரே நின்று விடும்போல் இருந்தது அலறக்கூட ஜீவன் இல்லாதது போல தொண்டை வறண்டு விட்டது தீயின் ஜூவாலைகள் சிறிதாக அனலை கக்கியது மேலும் கொட்டுச்சத்தமும் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு ஒலித்தது இவனது அலறலைக் கேட்க ஒரு நாதியும் இல்லாமல் எல்லோரும் ஆடிக்கொண்டு இருந்தார்கள் சிவமணியின் மனம் தவசியைப் பற்றியே நினைத்தது அவன் வருவானா ? இரவேசி மலையில் புதையல் இருக்கிறது அதை எடுத்து வந்தால் நாம் செல்வந்தனாகி விடலாம் என்று ஆசை காட்டினானே... உழைக்காமல் வாழ ஆசைப்பட்டதால்தானே எனக்கு இந்த கதி சைத்தான்களுக்கு இரையாகப் போகும் என்னை காப்பாற்று இறைவா ஆயிமாயிரம் வேண்டுதல்கள்.

திடீரென கொட்டுச்சத்தங்கள் நின்று விட்டன என்ன நடக்கப்போகுதோ தன்னைச்சுற்றி நறுமணப்புகை வந்து கொண்டு இருந்ததால் கண்ணுக்கு ஒன்றும் தென்படவில்லை சிறிது நாழிகையில் மெதுவாக காட்சிகள் முதலில் அவன் கண்ணில் பட்டது இதென்ன ? சிங்க முகத்தில் பலி பீடமோ ? அதற்கு பக்கவாட்டில் ஊன்றிய சிறிய கட்டையில் தலையை சாய்த்து வைத்து ஒன்று படுத்திருந்தது ஆடா... நாயா ? இப்பொழுது பலியாகப்போவது நானா ? இல்லை அதுவா... அதென்ன... மூன்று கால்கள் தன் வாழ்நாளில் பார்த்திடாத வகைகள் எல்லாம் காணும்படி ஆகிவிட்டதே... இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் பதில் ? சட்டென சிந்தனையைக் கலைத்தது தலைவனின் குரல்


மூஸாஹூ லூமாங்சீ.....

குரல் கேட்டதும் பக்கத்திலிருக்கும் கோட்டைக்கு எல்லோருடைய கண்களும் திரும்பியது வரிசையாக வாயில்கள் எதிலிருந்து எது வரப்போகிறதோ ? அதற்காகவே சிறப்பான கொட்டுச் சத்தங்கள் மீண்டும் ஒலித்தது இறைவா இந்த நொடியே எனக்கு மரணத்தை தந்து விடு என்னை ஏன் ? இப்படி சித்ரவதை செய்கிறாய் சிவமணிக்கு நொடிகள் யுகங்களாக போனது போலிருந்தது அந்தக்கோட்டையின் வாயிலில் இருந்து அந்த உருவம் வரும் சமயம் சட்டென வெள்ளை உடையணிந்த சீடர்கள் சிவமணியை சுற்றி எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீரை ஊற்றி அணைக்க மீண்டும் புகை மண்டலத்தின் ஊடே அந்த திசையை நோக்கினான் சரியாக தெரியவில்லை எனினும் அந்த உருவம் அவனை நோக்கியே வந்தது சுற்றியிருந்த கூட்டம் கோரஷாக கத்தியது..
.

ஸூராஹ்... மாஹா ஸீவாஞ்சூ...
ஸூராஹ்... மாஹா ஸீவாஞ்சூ...
ஸூராஹ்... மாஹா ஸீவாஞ்சூ...

சிவமணியின் மனம் முழுவதும் திக் திக் திக்

தொடரும்....

44 கருத்துகள்:

  1. இஞ்ச் இஞ்ச்சாக பீதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பஞ்ச் பஞ்சாக பறக்க கடவது.

      நீக்கு
    2. இது என்ன? ஶ்ரீராம் இங்கே மட்டும் இன்னிக்கு எப்படி வந்தார்???????????????????

      நீக்கு
    3. எல்லாம் அத்தி வரதரின் செயல்தான்...

      நீக்கு
  2. ஆஆஆஆ நோஓஓஓஓ இஞ் பஞ் எல்லாம் என்னை மூஞ் க்கு தள்ளிவிட்டதே கர்ர்ர்ர்ர்ர்:)... மூணாவதாகிட்டனே என சொல்ல வந்தேன்:).
    நித்திரை கொள்ளாமல் எதுக்கு ஜாமத்திலே குதிச்சார் ஶ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா நலம்தானே ?
      வலையுலகம் வரவேற்கிறது தங்களை...

      உண்மையில் ஸ்ரீராம்ஜி இன்றுதான் நடுநிசியில் வந்து இருக்கிறார்.

      நீக்கு
    2. பயணத்தில் இருப்பதால் சாத்தியமானது!

      நீக்கு
    3. பயணம் சிறக்க வாழ்த்துகள் ஜி

      நீக்கு
  3. கிர்லஜி இப்போ மர்மக் கதை எழுத்தாசிரியராகிட்டாரோ... நைட்டில் படிக்கப் பயம்ம்ம்ம்மாக் கிடக்கூஊ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமா இருக்கா ?
      உங்களைப் பார்த்து நான்தேன் பயப்புடுதேன்.

      நீக்கு
    2. எனக்குப் பகலில் படிக்கவே பயமா இருக்கு. மர்மக் கதை கில்லர்ஜிக்குக் கைவந்த கலை[இது வெறும் புகழ்ச்சியல்ல].

      நீக்கு
    3. நண்பரின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
    4. பார்த்தீங்களோ கில்லர்ஜி.. அறிவுப்பசிஜி க்கே பயம் வந்திருக்கு..

      நீக்கு
    5. அவரு நள்ளிரவில் ஜேம்ஸ் ஊரணிப்பக்கம் போகமாட்டாராமே...

      நீக்கு
  4. ஒன்றும் சொல்வதற்கில்லை....
    என்ன்வோ நடக்கிறது....

    பதிலளிநீக்கு
  5. கில்லர்ஜி அங்கிட்டு இப்ப வர ஆளு தவசிமணிதானே...

    அரபு மொழில வசனம் வைத்திருக்கீங்க போல!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவமணியா... யாரு கண்டா ?
      நானும் உங்களைப்போல்தான்.

      இதுவொரு மொழியே அல்ல! கற்பனை வார்த்தைகளே...

      நீக்கு
  6. கில்லர்ஜி, இது தொடர் என்பதை இதைப் பார்த்ததும் தான் புரிந்தது. முந்தைய பதிவுகளையும் வாசித்துவிட்டேன். இப்படியான திகில் கதைகளையும் கற்பனையில் எழுதுகின்றீர்களே. வாழ்த்துகள். அவர்கள் பேசும் மொழி ஏதோ ஒரு மொழியை நினைவுபடுத்துகிறது. ஆப்பிரிக்க மொழியோ? உங்களுக்குப் பல மொழிகள் தெரியுமே அதனால் இந்தக் கேள்வி.

    இத்தனை நாள் வர இயலவில்லை. பல தளங்கள் பதிவுகள் இனிதான் வாசிக்க வேண்டும். இது இரவு வெளியானதால் வாசிக்க முடிந்தது. ஒவ்வொரு தளமாகச் சென்று வாசிக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை முதலில் இருந்து படிக்கவும்.
      இது உகாண்டா மொழியாக இருக்குமோ... வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. திகில் கூடிக்கிட்டே போகுது.. தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. பெட்ரோலை குடித்தது போல் இருக்கு ஜி...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. லிட்டருக்கு 80 ரூபாய் லாபந்தேன்.

      நீக்கு
  9. எனக்குத் திக் திக் னு எல்லாம் இல்லை. ஙேஏஏஏஏஏ என விழிக்கிறேன். என்ன தான் செய்யப் போறாங்களாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரு கண்டா ?
      சுட்டுத் திங்கப்போறாய்ங்களோ...?

      நீக்கு
  10. ஒரு வேளை வரப்போவதுதவசியோ கற்பன எப்படி வேண்டுமானாலும்விரியலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது கூற்றும் நன்றாகத்தான் இருக்கு ஐயா.

      நீக்கு
  11. என்னவோ நடக்குது! மர்மாய் இருக்குது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மர்மத்தொடரில் மர்மம் இருப்பதே அழகு.

      நீக்கு
  12. பாதாள பைரவி படம் பார்க்காத குறையை
    இந்தக் கதை மூலம் தீர்த்து விட்டீர்கள்.

    ஜிம்பக் ஜிம்பக ஜிம்பா பாட்டு ஒன்றுதான் பாக்கி.
    தேவகோட்டைஜி.
    கற்பனைகள் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    கதை மிகவும் பயங்கரமாக நகர்கிறது. புரியாத மொழிகளில் பாட்டும் கும்மியுமாக காட்டுவாசிகளின் எண்ணங்களை புரிந்து கொள்ளாத நிலையில் இப்படி எத்தனை நாள் சிவமணி தவிக்கப் போகிறாரோ?. (நாங்களும்தான்) அவருக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறதேயென அவரை விட எங்களுக்குத்தான் அதிக பயங்கள் வருகின்றன. அந்த மூணுகால் அதிசயமிருகம் எங்கிருந்து வந்து அங்கு படுத்துக் கொண்டது? அதை பார்த்தாலே பக் பக் என்ற பயம் வருகிறது.

    என்னவோ சகோதரி அதிரா வந்த வேளையாவது எல்லாம் நல்லபடியாக நடந்து, புதையல்கள் கிடைத்தால் சரிதான் என (நமக்கல்ல.) மூஸாலி கோவிலுக்குச் இருக்கும் தெய்வத்தை (என்ன தெய்வம் என்று தெரியவில்லை) வேண்டிக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை மிகவும் ரசித்து படித்து இருக்கின்றீர்கள் மகிழ்ச்சி.

      இவ்வளவு காலமாக வராத அதிரா இப்பொழுது வந்து இருப்பது புதையலை லவட்டிக் கொண்டு போவதற்குத்தான் இருக்குமோ... என்ற ஐயமும் நமக்கு வருவது இயல்புதான்.

      நீக்கு
  14. ஆமாம் நண்பரே இந்த படங்களும் ,இது போன்ற மொழியும் உங்களுக்கு எங்கிருந்து தான் கிடைக்கிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எத்தனை உகாண்டா மொழிப்படங்கள் பார்க்கிறோம் அதன் வசனத்தை மொழி பெயர்க்க வேண்டியதுதான்.

      நீக்கு
  15. பழைய தமிழ்படம் மாதிரியே..இருக்கிறதே..!! எதுக்கும் கேட்டு வைப்போம்.. பின்னாடிக்கு உதவும்...????

    பதிலளிநீக்கு
  16. ஆடா, நாயா என்று எனக்கும் சந்தேகம் வந்து விட்டது சிவமணிக்கு வந்தது போல்! மூன்று கால் வேறு!
    தலை நாய்த்தலை. உடல் ஆடு. பட தேர்வுகள் பயம் காட்டுது.
    முதல்படம் வெட்டிய மரத்தில் கூந்தல் முளைத்து பயம் காட்டுகிறது.
    வெள்ளை உடை சீடர்கள் தீயை அணைத்து விட்டதால் சிவமணிக்கு இனி பயம் இல்லை என்று நினைக்கிறேன் கோரஸ் பாடல் அருமை.

    சனிக்கிழமை உறவினர் வருகையால் வர முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      ஆடா, நாயா என்பது எனக்கும் பிடிபடவில்லை.

      சிவமணி நலமுடன் வீடு திரும்ப பிராராத்திப்போம்.

      நீக்கு
  17. மூன்று கால் மிருகம்... :( இங்கே எங்கள் பகுதியில் ஒரு நாய் மூன்று கால்களுடன் நடமாடுகிறது... அந்த நாயைப் பார்க்கும் போது இனிமேல் உங்கள் மூஸாலி கதை மிருக உருவம் நினைவுக்கு வரப் போகிறது!

    இதோ அடுத்த பகுதிக்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      எனது கதையில் வருவது போல் டெல்லியில் நிகழ்கிறதா ?

      நீக்கு