தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சீர்காழி, சீக்காளி சீதாலட்சுமி



மீபத்தில் சீர்காழி போய் மூன்று தினங்கள் தங்கினேன் அப்பொழுது நானும் தொ.கா.நாடகம் பார்க்கும் துர்பாக்கிய நிலைப்பாடு வேறு வழியின்றி பார்த்தேன். அப்பொழுது அவளுக்கு, இவளும் இவளுக்கு அவனும், அவனுக்கு இவளும் என்ன உறவு முறை ? என்பதை வீட்டிலிருந்த எனது அப்பத்தாள் சீதாலட்சுமி எனக்கு மிகவும் பொருப்புணர்வோடு புளியைப்போட்டு விளக்கினார்கள்.

சீதாவுக்கு சொந்த கவலைகளை இதுவரை இறைவன் கொடுக்கவில்லை கூட்டுக் குடும்பத்தோடு பெயரன், கொள்ளுப்பெயரன், பெயர்த்திகளோடு குதூகலமான வாழ்க்கை. இருப்பினும் விதியின் வினை’’யாட்டு பொழுது முழுவதும் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்தே... அதில் வரும் குடும்ப பிரச்சனைகள் மோகனா மோகனோடு சேர்வாளா ? நாகசுரோன்மணி விநாயகமூர்த்தியை விவாஹரத்து செய்திடுவாளோ ? பூர்வீக நிலத்தை நீலமேகம் சுருட்டி விடுவானோ ? மேகலாவுக்கு டி.என்.டி டெஸ்டில் குட்டு உடைபட்டு விடுமோ ? இப்படியான கவலைகள் தொற்றி சீக்காளியாகி விட்டார் சீத்துக்குட்டி அதன் விளைவே இப்பதிவு.

மேலே புகைப்படத்திலிருக்கும் இவள் ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் கதைப்படி சுமார் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்து வயதுகள் உள்ள மூன்று எருமைகளுக்கு பாட்டியாம் அதாவது அம்மாவின் தாயார் இந்த மூதாட்டியின் அலங்காரத்தை பார்த்தீர்களா ? அதாவது பாட்டியாக இருந்தாலும் தன்னை தலை நரைத்த கிழவியாக காட்டிக் கொள்ளக்கூடாது. இப்படி தைரியமாக நாடகம் போடும் இவர்களை பாராட்டத்தான் வேண்டும். தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும்கூட கேனத்தனமாக நினைக்கலாம் என்பது இவர்களது நம்பிக்கை.

இதே நாடகத்தில் இவள் என்ன செய்கிறாள் தெரியுமா ? இந்தக் கிழவியின் மகள் தனது மருமகளை வீட்டை விட்டு துறத்திவிட நினைத்து பல விதமான இடையூறுகளை செய்கிறாள். (மகன் வாழவேண்டும் என்ற சிந்தனையே வராதோ) மருமகளும் எல்லாவற்றையும் வெற்றிகரமாக கடந்து போகிறாள் (கதாசிரியர் உதவி செய்வார் போல) பிறகு மாமியார் திட்டம் தீட்டுகிறாள் எப்படி ? மருமகளை கொலைப்பழியில் மாட்டி விட்டால் அவள் சிறைக்கு போய் விடுவாள் பிறகு நாம் நிம்மதியாக வாழலாம் என்று (ஒருவேளை இத்தோடு சீரியல் முடிந்து விடும் அட்வான்ஸ் வாங்கிய அடுத்த சீரியலுக்கு நடிக்க போயிடலாம் என்று கணக்கு போட்டு இருப்பாளோ)
சரி கொலைப்பழியில் மாட்டிவிட வேண்டுமென்றால் யாராவது செத்து தொலைய வேண்டுமே யாரைக் கொல்வது ? வேறு யார் மகனைத்தான் கொல்லவேண்டும் அவன் உறங்கும்போது தலையணையை மூஞ்சியில் வைத்து அமுக்கி கொன்று விட்டால் மருமகள்தான் கொன்றாள் என்று சிரிப்பு போலீஸ் மன்னிக்கவும் சீரியல் போலீஸிடம் சொன்னால் அவர்கள் வந்து கைது செய்து கொண்டு போய் விடுவார்கள். (பாவம் அவர்களும் இயக்குனர் சொன்னபடிதானே கேட்டாக வேண்டும் இல்லையெனில் தயாரிப்பாளரிடம் சம்பளம் பெறமுடியாது இவர்களும் துணை நடிகர்கள்தானே உண்மையான போலீஸாக இருந்தாலும் சட்டம் பேசலாம்)

இந்தச் செயலுக்கு மேலே இருக்கின்றானே கிழட்டு முண்டம் இவளும் உடந்தை. இப்படியும் ஒரு பாட்டி எனக்கு இருந்தால் கோடரியை எடுத்து ஒரேபோடு தாத்தா வெயிட்டிங் ஃபார் யூ என்று அனுப்பி வைத்து இருப்பேன். எவ்வளவு கீழ்த்தரமாக இந்தச் சீரியல்காரங்கே சமூகத்தை சீரழிச்சுக்கிட்டு இருக்காங்கே பார்த்தீர்களா ? இதில் வேதனை என்னவென்றால் இந்த தலைமுறை யுவதிகளும்கூட இதில் வீழ்ந்து கிடப்பதுதான் அடுத்த தலைமுறைகளாவது இதை தலைமுழுகும் என்ற நம்பிக்கையோடு நான் இவைகளை கடந்து செல்கிறேன்.

Chivas Regal சிவசம்போ-
அந்தக் கிழட்டு முண்டமும் இயக்குனர் பேச்சைக் கேட்டு நடப்பது தயாரிப்பாளர் போடும் துட்டுக்குத்தானே...

63 கருத்துகள்:

  1. நாடகத்திற்கு விளம்பரம் செய்யும் போதே கேட்க பிடிக்க மாட்டேன் என்கிறது.
    இதை தொடர்ந்து பார்த்தால்.

    நான் நாடகமே பார்ப்பது இல்லை, பழைய சினிமா, பழைய பாடல்கள் , புது சினிமா நன்றாக இருந்தால் தொலைக்காட்சியில் பார்ப்பேன்.

    பொழுது போக்கு என்று சொல்லிக் கொண்டு இப்படி கதை எழுதுபவர்களை, அதை தயாரிப்பவர்களை என்ன சொல்வது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ என்றோ ஓர்நாள் பார்த்த எனக்கே இப்படி இருக்கிறதே வருடக்கணக்கில் எப்படித்தான் பெண்கள் பார்க்கிறார்கள் ?

      நீக்கு
  2. சூப்பரா இருந்தது உங்களுடைய சீரியல் விமர்சனம். இவங்களுக்கெல்லாம் எவ்வளவு கீழ்தரமான கற்பனை பார்த்தீர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

      நீக்கு
  3. சீரியல் கதையில் ஒன்றி விட்டீர்கள் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயய்யோ கொஞ்சநேரம் பார்த்ததுக்காக என்னை இந்தக் கணக்கில் சேர்த்து விட்டீர்களே ஐயா.

      இதற்கு என்னை நாலு வார்த்தை திட்டி இருக்கலாமே...

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நானும் தொடர் சீரியல் பார்ப்பதில்லை. வீட்டில் டி. வி யின் பயன்பாடு எனக்கு நிறையவே கம்மிதான். சீரியல் படு பயங்கரமாக இருக்கிறதே..! நீங்கள் எப்படியோ விடாது பார்த்து தெரிந்து கொண்டு கதை மொத்தத்தையும் சொல்லி விட்டீர்களே...! ஹா. ஹா. ஹா.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் விடாது பார்த்தேனா ? சாதாரணமாக நான் டிவியே பார்ப்பதில்லை இதில் சீரியலா ? அதுவும் மொத்த கதையும் சொன்னேனா ? சிவ சிவா...

      நீக்கு
  5. சீத்துக்குட்டி...  ஹா...   ஹா...  ஹா...    

    இது மாதிரி மக்கள் மனங்களைக்கேகெடுக்கும் சீரியல்களைத் தடை செய்ய அல்லது சென்சார் செய்ய ஒரு அமைப்பு இல்லையே...    இருந்தால் மட்டும் என்ன?  அவர்கள் கடமையைச் சரியாகச் செய்துவிடுவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி சென்சார் போர்டு இருக்கு... ஆனா இல்லை.

      பணம் கொடுத்தால் எதுவும் நடத்தலாம் இந்தியாவில்.

      நான் ஆட்சிக்கு வந்தால் ???
      இந்தக் கலாச்சாரக்கொலையாளிகள் அனைவருமே தூக்குத்தண்டனைதான்...

      நீக்கு
    2. ஒரு வாரத்துக்கு முன்னால் சன் தொலைக்காட்சிக்கு இந்த மாதிரி கீழ்த்தரமா சீரியல் வெளியிட்டதற்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிச்சதைப் படிச்சிருப்பீங்கதானே (சீரியலின் ஓரிரு நாட்களின் காட்சியமைப்புக்காக).

      நீக்கு
    3. அபராதம் மட்டும் போதுமா ? சேனலை சீல் வைக்க வேண்டும் அப்பொழுதுதான் வேறு எவனும் மீண்டும் செய்ய மாட்டான்.

      நீக்கு
  6. நான் சீரியலே பார்ப்பதில்லை என்று என் கொள்ளுப்பாட்டிக்கு அவர் சாகற சமயத்தில் சத்தியம் செய்து கொடுத்திருக்கேன்.  எனவே பார்க்க மாட்டேன்!  ஆகவே நீங்கள் கொடுத்திருக்கும் கதைச்சுருக்கத்தையும் படிக்க மாட்டேன்!!!! 


    படத்தில் இருப்பவர் சுகுமாரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மட்டும் என்ன சீரியல் பார்ப்பவனா... இல்லையே.

      கொள்ளுப்பாட்டிக்கு செய்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இருக்கும் உங்களைவிட, எனக்கு நானே கட்டுப்பாடாய் சீரியல் பார்க்காமல் இருக்கும் நான் தியாகி இல்லையா ?

      சுகுமாரியா... எனக்கு புதிய நடிகை எல்லாம் தெரியாது ஜி நான் ஆர்யமாலா கண்ணாம்பாள் லிஸ்ட்.

      நீக்கு
    2. சுகுமாரி இன்னமும் உயிரோடு இருக்காரா என்ன? எப்போவோ செத்துப் போன நினைவு! இது வேறே யாரோ! சுகுமாரி பத்மினியின் உறவு கில்லர்ஜி! புது நடிகை அல்ல. மிகப் பழம்பெரும் நடிகை. சோ நாடகங்களில் அதிகம் நடித்திருப்பார்.

      நீக்கு
    3. வாங்க சுகுமாரியையே நான் புதிய நடிகை என்கிறேன் என்றால் நான் எந்தக் காலத்து சினிமாவை ரசிப்பவன் என்பதை புரிந்து கொள்க! (சுகுமாரியை எனக்கு தெரியும் ஹி.. ஹி)

      நீக்கு
    4. சுகுமாரி கேரள நடிகை. நிறைய நாடகங்கள் நடிச்சுருக்காங்க. வேட்டைக்காரன் (விஜய்) படத்துல ஸ்ரீராமோட அம்மாவா (ஐயையோ... அனுஷ்காவோட அம்மாவா) வருவாங்க.

      அவங்களை நான் அக்டோபர் 2012ல் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் பார்த்தேன் (பசங்களை போட்டோ எடுக்கும்போது பின்னால் இருந்தார்.. நான் பேசவில்லை). சில வருடங்களுக்குப் பிறகு சென்னையில்(னு நினைக்கிறேன்) கிச்சனில் தீப்பிடித்து இறந்தார்னு படித்தேன். ரொம்ப நல்லா நடிக்கறவங்க.

      நீக்கு
    5. சுகுமாரி சிறந்த குணசித்திர நடிகையே... இறந்தது தெரியும்.

      அனுஷ்கா என்று எழுதினால் ஸ்ரீராம் என்ற எழுத்தும் இடம் பெற்றே தீரணும் என்பது விதிமுறை போலும்.

      நீக்கு
    6. படத்தில் இருப்பவர் திருமதி கௌசல்யா செந்தாமரை. மறைந்த பிரபல குணச்சித்திர நடிகர் திரு செந்தாமரையின் மனைவி.

      நீக்கு
    7. அப்படியா ? இது எனக்கு புதிய விடயம். மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  7. சீரியலில் வந்த கதையை எழுதியிருக்கிறீர்களா? நான் தொலைக்காட்சி சீரியல்கள் எதுவும் பார்த்ததில்லை. கடைசியா தொடர்ந்து தொலைக்காட்சியில் 5 நாட்கள் பார்த்த சீரியல் சித்தி மட்டும்தான் (அந்த சீரியல் ஆரம்பமான புதிதில் 4 நாட்கள், முடியும் தறுவாயில் 8 நாட்கள் பார்த்திருப்பேன் என்று ஞாபகம்).

    இந்த சீரியல்களைப் பார்க்கிறவங்க வீட்டுக்குள்ளேயே (நீங்க எழுதின கதையைப் பார்த்தால்) அவநம்பிக்கை, பாலிடிக்ஸ், ஒவ்வொருத்தருக்கும் பிடிக்காம போவது என்று குடும்ப உறவுகளைச் சிதைக்கிறாங்க போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      நிச்சயமாக இவர்கள் குடும்ப உறவுகளை (இருப்பதே ஒன்றிரண்டு கூட்டுக் குடும்பம்தான்) சீரழிக்கின்றார்கள் தவறான எல்லா செயல்களையும் செய்து யோசனையை கொடுக்கின்றார்கள்.

      இதன் பாதிப்பு அவர்களது குடும்பத்துக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்.

      நீக்கு
  8. ஸ்ரீராம், சுகுமாரிலாம் பகவான் கிட்டப் போயாச்சு இல்லையோ. இது வேற பயங்கரி.

    சீரியல் பார்க்கும் பெண்கள்,பிக் பாஸ் பார்ப்பவர்கள்
    எல்லாருமே நம் அனுதாபத்துக்குரியவர்கள். மாற்று மருந்து கொடுக்கணும்.
    அன்பி தேவ கோட்டைஜி இந்தக் கொடுமையைப் பார்க்காமல் சினிமா ஏதாவது போயிருக்கலாம். என்ன ஒரு அபத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது வேற பயங்கரி.//

      பயங்கரி!  ஹா... ஹா... ஹா...நல்ல வார்த்தைப் பிரயோகம்மா...

      நீக்கு
    2. வாங்க அம்மா...
      //சீரியல் பார்ப்பவர்கள் அனுதாபத்துக்குறியவர்கள்//

      ஹா.. ஹா.. ஐயோ பாவம்.

      நான் தியேட்டருக்கு போய் இருபத்து ஐந்து வருடங்களாகி விட்டது அம்மா.

      நீக்கு
  9. சீரியலை நல்லா சுருக்கமா இண்டெரெஸ்டிங்கா சொல்லியிருக்கீங்க. என்னைக் கேட்டால் உங்க திறமைய இந்த சீரியல் இயக்குநர்கள் பயன்படுத்திக்கிட்டு, இதுபோல பல சீரியல்கள் வருவதற்கு உதவியா இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே இது ஏன் ?
      நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு...

      நீக்கு
    2. துரை செல்வராஜு சாரை இன்னும் காணோம். அதனால அவர் சார்புல சிந்திச்சு ஏதேனும் சொல்லலாம்னுட்டு......ஹா ஹா

      நீக்கு
    3. அதானே குவைத் மன்னரை எந்த பதிவிலும் காண முடியவில்லையே...

      நீக்கு
  10. ஹாஹாஹா, உங்கள் விமரிசனத்தைப் படிச்சுட்டு ஆவலுடன் யாரானும் அந்த சீரியலைப் பார்க்காமல் இருக்கணும். நல்லா எழுதி இருக்கீங்க! நான் தொலைக்காட்சிப் பக்கம் போவது எப்போவானும் பொதிகை, மக்கள் பார்க்கத் தான். இங்கே அது இரண்டுமே வராது. எப்போவானும் பாலிமர் செய்தி பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      மக்கள் தொலைக்காட்சி சத்தமில்லாமல் தமிழை வாழவைக்கின்றார்கள் என்பதே உண்மை.

      நீக்கு
  11. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜி:).. இது என்ன புதுப் பழக்கம், காலையில் போஸ்ட் போட்டு அதிராவை லாஸ்ட்டா வர வைப்பது:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை முதலில் வரக்கூடாது என்று யார் சொன்னது ?

      நீக்கு
    2. உங்களை காலையில் போஸ்ட் போடச்சொல்லி யார் சொன்னது ?


      ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஊஉ ஹா ஹா ஹா மீ 1500 மீட்டரில் 2 வதா வந்தேனாக்கும்:)

      நீக்கு
    3. எப்ப வந்தால் என்ன ? பதிவுக்கு வந்தீங்கள்ல அது போதும்.

      நீக்கு
  12. ///குதூகலமான வாழ்க்கை. இருப்பினும் விதியின் வினை’’யாட்டு பொழுது முழுவதும் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்தே...////
    ஹா ஹா ஹா உங்களுக்குப் பொறாமை:)
    நாடகம் பார்ப்பதென்பதென்ன கொலைக் குற்றமா? நானும் பார்ப்பதில்லை... நேரம் கிடைப்பது குறைவு ஆனா அதுக்காக பார்ப்பது ஒன்றும் தப்பென சொல்ல மாட்டேன்... அவர்களுக்குப் பிடிச்சிருக்கு பார்க்கிறாங்க பார்க்கட்டுமே:)...
    ச்ச்ச்ச்ச்ச்சும்ம குறை சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ பொழுது போக்கிற்காக பார்த்து விட்டு அதை மறந்து விடவேண்டும் எந்த நேரமும் அதைப்பற்றியே சிந்தித்து கவலைப்பட்டு கொண்டு இருந்தால் ?

      சீத்துகுட்டிக்கு மூன்று கிட்னியும் கவலைப்பட்டே சட்னியாகி விட்டது.

      நாளைக்கு சீத்துவுக்கு ஒன்னு கிடக்க ஒன்னு நடந்தால் ??? நீங்களா பொருப்பு ?

      நீக்கு
    2. ////பொழுது போக்கிற்காக பார்த்து விட்டு அதை மறந்து விடவேண்டும் எந்த நேரமும் அதைப்பற்றியே சிந்தித்து கவலைப்பட்டு கொண்டு இருந்தால் ?////

      ஹா ஹா ஹா ஹையோ இது 100 வீதம் உண்மை:)... இவர்களை என்ன பண்ணலாம்?:)

      நீக்கு
    3. சேனல்களை மூடி விடுவோமா ?

      நீக்கு
    4. இல்ல கில்லர்ஜி, அவர்கள் தொழிலுக்காக செய்கிறார்கள் அதை தடுக்க முடியாது.. நமக்கும் எப்பவாவது ஒரு றிலாக்ஸ்க்கு தேவைப்படுமெல்லோ:)...

      பார்த்துப்போட்டுப் போகாமல், அதை வச்சுக் கவலைப்படுவோரைத்தான் தேம்ஸ்ல தள்ளோணும்:)..

      நீக்கு
    5. சீத்துக்குட்டிக்கு நிறைய எதிரி இருக்காங்க போலயே...

      நீக்கு
  13. அது அவர்களின் தொழில்தானே... செய்யும் தொழிலே தெய்வம் எல்லோ:)...
    ஹா ஹா ஹா இதுக்கு மேலயும் நான் இங்கிருந்தால் என்னை நியூயோர்க் ஊரணியில:) தள்ளிப்போடுவீங்க:)... மீ எஸ்கேப்ப்ப்ப்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வமா ?
      நீங்க ஜேம்ஸ் ஊரணிக்கு போனாலும் தள்ளிவிட ஏஞ்சல் ரெடியாக நிற்பாங்க!

      நீக்கு
    2. அவவை மிரட்டி வச்சிருக்கிறேன்:).. அதனால எனக்குக் கிட்ட வரமாட்டா:).. அவ்ளோ பயம்:)

      நீக்கு
    3. நீங்க வேலை செய்யிறதே... ட்ரம்செட் அங்கிளிடமெல்லோ... பயந்துதானே ஆகணும்.

      நீக்கு
  14. சம்போ மகாதேவா!...

    வல்லியம்மா சொன்ன மாதிரி அந்தப் பயங்கரிகளை எல்லாம் போட்டு கலங்கடிக்காதீர்கள்...

    புரட்டாசி மாதம்... அதனால் மதியம் 3 மணியளவில் அறைக்கு வந்து சமையல் முடித்து விட்டு இணையத்துக்கு வந்தால் அது தமிழகத்து சீரியல்கள் மாதிரி இழுத்துக்கிட்டுக் கிடக்கிறது..

    ஒருவாரமாகப் பதிவு போடவில்லை...

    ஆனாலும் நண்பர்களின் தளங்களுக்குச் சென்று வருகிறேனே!...

    சீரியல் பார்த்துக் கொளம்பியதில் தங்களுக்கு ஏதேனும் மந்திரிக்க வேணுமா?...

    ஓவாப்பட்டி உடுக்கையடி உலக நாதன் இப்போதெல்லாம் ரொம்பப் பிசியாக இருக்கிறாராம்!...

    கேபிள் இணைப்பைப் புடுங்கிப் போட்டால் மாதாந்திரம் பல நூறு ரூபாய்கள் மிச்சமாகும்...

    மனநல வைத்தியரிடம் போவதிலிருந்தும் தப்பிக்கலாம்...

    இதெல்லாத்தையும் சொன்னால் பைத்தியக்காரன்..ன்னு சொல்லுவாங்கே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வாங்க ஜி
      உண்மைதான் சீரியல் மூன்று தினங்கள் பார்த்ததில் ஒரு "மாதிரியாகத்தான்" இருக்கு.

      கேபிள்காரன் முன்னூறு திர்ஹாம்ஸ் வாங்கிடுறான்.

      தங்களது பதிவை போட்டு விடுங்க ஜி

      நீக்கு
  15. இன்றைக்கு ஒரு தொலைக்காட்சியில் வரும் தொடர்களைப் பார்த்தால் மற்ற தொலைக்காட்சியில் உள்ள தொடர்களைப் பார்க்க வேண்டியதில்லை. பழி வாங்குதல், ஆட்களை /குழந்தைகளை கடத்துவது, கொலை செய்ய ஆட்களை ஏவிவிடுவது , குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குவது, போன்றவைகள் இல்லாத தொடர்கள் இல்லை, நேர்மறையான கருத்து கொண்ட தொடர்கள் வருவதே இல்லை எனலாம். எனவே இவைகளைப் பார்த்து சீர்காழியில் உள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் சீக்காளி ஆவது நிச்சயம்.

    அடுத்த தலைமுறையாவது மாறும் என்ற தங்களின் நம்பிக்கையில் நானும் உடன்படுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிகவும் அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள்.

      வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. ஏதோ நம்பிக்கையில்தானே நாம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே இதுவே அனைவரது எண்ணமும்...

      நீக்கு
  17. நானும் தொ.கா.தொடர்கள் பார்ப்பதில்லை. பார்க்காததால் இழப்பேதும் இல்லை என்பது உங்களின் இந்தப் பதிவின் மூலம் உறுதியானது. நன்றி நண்பரே.

    நேற்று வெளியூர்ப் பயணத்தில் இருந்தேன். வருகை தாமதம் ஆனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      இரண்டு தினம் பார்த்ததிலேயே நமக்கு இவ்வளவு கோபம் வருகிறதே... காலம் முழுவதும் பார்த்தால் ??? நானும் சீக்காளியாக வேண்டியதுதானோ...
      வருகைக்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  18. எல்லாம் காசு..பணம் துட்டுக்குத்தான் இத்தனை எழவும் நண்பரே!....நல்லவேளை தொலைக்காட்சி பார்ப்பதையே..விட்டுவிட்டேன்....

    பதிலளிநீக்கு
  19. தொலைக்காட்சி நாடகங்களா?
    பலர் அதனைப் பார்த்து
    பைத்தியமாவதோட
    தற்கொலையும் செய்து கொள்கிறார்களே!

    பதிலளிநீக்கு
  20. கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த சீரியலுக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா!!!!!!!!!!!!!!!!!!!!ஹிஹிஹிஹி...

    வீட்டுப் பிரச்சனைகளை விட சீரியல் பிரச்சனைகளுக்குத்தான் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு தீர்வுகள் யோசிக்கறாங்க..சீரியல்ல வர மாமியாரை திட்டுவாங்க மரும்களைக் கொடுமைப்படுத்தறதா...ஆனா இவங்களே அதை இவங்க வீட்டுல செய்வாங்க...அதே போலத்தன மருமகள்களும்...ஹா ஹா ஹா .அப்படியான மக்களைப் பார்த்திருக்கேன்...இல்லைனா சீரியல் நிகழ்வுகளைத் தன் வீட்டோடு ஒப்பிட்டுப் பார்த்துக்குவாங்க...

    முதல்ல சீத்துக் குட்டிய காப்பாத்துங்க ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இதுகூட விளம்பரமாகிடுச்சா ?
      என்னை வைத்து பல கோடி வருமானம் ஆகிடுச்சா...?

      சீத்துகுட்டி ஐசியூவில் இருக்கிறதாக சொல்லி சீரியல் தயாரிப்பாளரிடம் ஒரு அமௌண்ட் வாங்கிடலாமோ...?

      நீக்கு
  21. சீரியல்கள்... நான் தொலைக்காட்சியைப் பார்ப்பதே இல்லை கில்லர்ஜி! என்னிடம் இருந்ததையும் வேறு ஒருவருக்குக் கொடுத்தே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஊருக்கு வரும்போதும் பார்ப்பதே இல்லை.

    தமிழகத்தில் இருந்ததால் இணையம் பக்கமே வர இயலவில்லை. தில்லி திரும்பியதும் தான் ஒவ்வொரு பக்கமாக வந்து படிக்கிறேன். தாமதமான வருகைக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. கடைசியில் அந்த மாமி தன் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினாரா என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே ... முடிவு தெரியாமல் மூச்சு முட்டுகிறது... ஒரே படபடப்பாக இருக்கிறது ... சீக்கிரம் சொல்லுங்கோ...

    பதிலளிநீக்கு