தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 09, 2019

கெரகாட்டக்காரன்



வணக்கம் நட்பூக்களே கரகாட்டக்காரனின் மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்...

மடப்பயலே மக்குப்பயலே புத்தி சொல்றேன் கேளு
மறுபடியும் செருப்படிதான் வாங்கும் நாளு இந்த நாளு

மொத்த மொத்த முன்னாலே
மொத்தமா வருவாங்கே பின்னாலே

மொத்த மொத்த முன்னாலே
மொத்தமா வருவாங்கே பின்னாலே

பட்டு பட்டுனு விளாசி அடிச்சான் மூங்கில் கம்பு
அதை தடுத்து நிறுத்தத்தான் எனக்கு இல்லையடி தெம்பு

சட்டு சட்டுனு சாத்திப்புட்டான் சாராயக்கடை ஆளு
சமாச்சாரம் என்னனுந்தான் நீயும் வந்து கேளு

மடப்பயலே மக்குப்பயலே புத்தி சொல்றேன் கேளு
மறுபடியும் செருப்படிதான் வாங்கும் நாளு இந்த நாளு

கண்ணப்பனை கேள்வி கேட்டால்தானே
கன்னத்தைத்தான் பேத்திடுவான் வீணே

நடு சாமத்துல உன் வீட்டுக்கு வாறேன்
கதவை நீயும் சாத்திப்புட்டா வந்தவழி போறேன்

கோபாலபட்டணம் பாப்பா நீ கோபப்பட்டு பாத்தா
கோல்மாலு எனக்கு யப்பா தெரியாதடி ஆத்தா

இந்த அடியைத்தானே மறக்கமாட்டேன் நானே
இனி இந்தபக்கம் நானே வரமாட்டேன் வீணே

சாணியக் கரைச்சு ஊத்தணும் உனக்கு
சகுனி வந்து புடிச்சது எனக்கு

மடப்பயலே மக்குப்பயலே புத்தி சொல்றேன் கேளு
மறுபடியும் செருப்படிதான் வாங்கும் நாளு இந்த நாளு

சிவாதாமஸ்அலி-
இதுவும் நல்லாத்தான் இருக்குது...


இணைப்பு

52 கருத்துகள்:

  1. ///மடப்பயலே முட்டாப்பயலே ///
    ஆஆஆஆ ஆரைத் திட்டுறீங்க கில்லர்ஜி:)...
    ஹா ஹா ஹா என் ஆஷாபோஸ்லே குரலில்:), மாங்குயிலே மெட்டில் பாடிப்பார்த்தேன்:)... சினிமாவுக்கு அனுப்பச் சொல்லிச் சொல்லீனம் வீட்டில் ஹா ஹா ஹா மீக்கு ஷை ஷையா வருதே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடிப்பார்த்தேன் என்பது சரி அதென்ன ஆஷா போஸ்லே என்று பொய் சொல்வது ?

      நீக்கு
    2. உங்களுக்கெல்லாம் என் கொரலில்:)) பொர்ர்ர்ர்ராஆஆஆஆஆமை:)) கர்ர்ர்ர்ர்:)).. மங்கையஸ்காரும் கலந்திட்டார் தெரியுமோ இப்போ என் குரலில்:)) ஹையோ ஹையோ..:))

      நீக்கு
    3. பொறாமை கொல்"லக் கூடிய குரலா ?

      நீக்கு
  2. நடு ஜாமத்தில எதுக்கு அவுக வீட்டுக்குப் போறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. பகல்ல போனால் என்ன எனக் க்கேய்க்கிறார் சிறீ சிவசம்போ அங்கிள்:))..

    கொரகாட்டம்:) நல்லாத்தான் இருக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரகாட்டம் புக்கிங் செய்யத்தான் போனேன். சிவசம்போவிடம் சொல்லி விடுங்கள்.

      நீக்கு
  3. நைட்டுல உங்களை ஏதோ கிரகம் புடிச்சி ஆட்டி இருக்கு.. அதனால் இங்க நல்லாவே கெரகாட்டம் ஆடி இருக்கீங்க கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது நண்பரே

      நீக்கு
  4. இந்த பாட்டை அதிரா பாடிகிட்டே ஆடுகிற மாதிரி யோசிச்சு பார்த்தேன்... சிரிச்சு மாளலை...... உண்மையிலே அவங்க ஆடி இருந்தால் பூகம்பமே வந்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூகம்பம் தேவகோட்டை பக்கம் வராதவரை நல்லது.

      நீக்கு
    2. ட்றுத் இன்று லேட்ட்டூஊஊஊஊஉ அதுதான் புகைப்புகையாப் போகுது ஹா ஹா ஹா:))).. உங்களுக்கு இந்த இல்ல இல்ல் ஆடுத்த ஜென்மத்திலும் நயன் கிடைக்கமாட்டா:)) இது அந்த நயகரா மீது ஜத்தியம்:)) எங்கிட்டயேவா?:))

      நீக்கு
    3. நயாகரா பாவம் இல்லையா ?

      நீக்கு
  5. அம்மணி அதிரா அமெரிக்கா வந்ததை பற்றி எழுதிய பதிவில் என்னங்க அமெரிக்கா வரும் போது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்று கேட்டு கருத்துகள் இட்டேன் ஆனால் அந்த அம்மணி அதை வெளியிடாமல் மறைத்து விட்டார்கள் போல என்ன கோபமோ என் மேல்..... சரி அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று இங்கே சொல்லிவிட்டு அப்பாலாக்க ஒடிவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த தொடரில் எழுதுவாங்க போல...

      நீக்கு
    2. மீ ட்றுத்தில ரொம்ப கோபமா இருந்தேன்:).. கன நாளாக ஆளைக் காணமே என் பக்கம் என:)).. ஹையோ இக்கொமெண்ட் பார்த்ததும் தான் பறந்தடிச்சு ஓடினால் அது புளொக்கருக்குள்தான் வருது ட்றுத்தின் கொமெண்ட், ஏனையோருடையது மெயிலுக்கு வரும் என்பதால், மெயிலைப் பார்த்து பப்ளிஸ் பண்ணிப்போட்டு விட்டிடுறேன்... மன்னிச்சு....:))

      நீக்கு
    3. அதிரா நிறையவே பட்டங்கள் வாங்கியிருக்கார். ‘பட்டத்தரசி அதிரா’ என்று நான் ஒரு பட்டம் வழங்குகிறேன்.

      நீக்கு
    4. அடடே இதுவும் நல்லாயிருக்கு...

      நீக்கு
  6. ஆங்காங்கே கொஞ்சம் தட்டுது!  ஆணாலும் சுவை சொட்டுது!

    பதிலளிநீக்கு
  7. யாரைத் திட்டுகிறீர்கள் தேவகோட்டைஜி.
    பாட்டு நன்றாகத் தான் வந்திருக்கிறது.
    மெட்டுக்குப் பாட்டு கொஞ்சம் இடிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா நான் யாரையும் திட்டவில்லையே...

      நீக்கு
  8. நல்ல முயற்சி கில்லர்ஜி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. கரகாட்டக்காரன் பாடல் போல் பாடி பார்த்தேன். அந்த பாடல் சுட்டியும் கொடுத்து இருக்கிறீர்கள்.
    நிறைய திறமைகள் உங்களிடம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  10. எதனையும் விடுவதில்லை என்று நினைத்துள்ளீர்கள் போலுள்ளது. உங்களின் முயற்சி போற்றத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. கவிதையும் அருமை. கற்பனையும் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    உங்களுக்கு நல்ல கற்பனைத் திறன். உங்களிடம் மெட்டுக்கேற்ற பாடல்கள் இயற்றும் கற்பனை வளம் நிறைய உள்ளது. நானும் மாங்குயிலே மெட்டுடன், கரகாட்ட ஆடலை மனதுக்குள் கற்பனையாக ரசித்தபடி பாடிப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் இது யாருக்காக கட்டப் பட்ட வ.மா எனத் தெரியவில்லை. இருப்பினும் நல்ல கற்பனைக் கவிதைக்காக வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் கற்பனை வளங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை மிகவும் ரசித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  13. இருந்தாலும் தங்களுக்குள்ள திறமைக்கு இன்னும் நன்றாக ஆடி (எழுதி) இருக்கலாம்..

    கூட ஆடுறது யாருன்னு ஜொல்லலையே!...

    பதிலளிநீக்கு
  14. //சிவதாமஸ் அலி-
    இதுவும் நல்லாத்தான் இருக்கு//

    கில்லர்ஜி எதை எழுதினாலும் அது நல்லாத்தான் இருக்கும்!

    பதிலளிநீக்கு
  15. சப்தம் போட்டு பாடிப் பார்த்தேன். சிரித்துக் கொண்டே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் பாடியதை நினைத்துக் கொண்டே சிரித்தேன்.

      நீக்கு
  16. பாடிப் பார்த்தேன்...

    அசத்தல் ஜி...

    பதிலளிநீக்கு
  17. ஒரு காலத்தில் பல சினிமாப்பாடல்ளின் மெட்டில்பாடல்கள் எழுதுவது வழக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா அதை நான் மீண்டும் தொடங்கி வைக்கப்போகிறேன்.

      நீக்கு
  18. அழகான கற்பனை நண்பரே.
    உங்கள் உழைப்பு நன்கு வெளிப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. என்ன ஆச்சு திடீர்னு? இந்த ஆட்டம் ஆடி இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  20. இந்த பதிவின் சுட்டியும் வரவில்லை. உங்கள் விலாசத்தில் ஏதும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

    இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் இல்லை ஐயா வழக்கம் போலவே இருக்கிறது வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. அப்படியானால் ஃபீட்லி ஆண்டில்தான் பிரச்சினை போல. ரீஇன்ஸ்டால் செய்து பார்க்கவேண்டும்.

      நீக்கு
    3. நல்லது ஐயா சரி செய்யவும்.

      நீக்கு