தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

முகம் மறைத்து...



எனது கடந்த
காலத்தில் அறியாத
வயதில் நான் செய்த
சிறிய தவறுகள்
அவ்வப்போது எனது
நினைவுக்கு வந்து
என்னை முகம் மறைத்து
மனம் கூசச் செய்கிறது.

43 கருத்துகள்:

  1. அறியாமல் செய்த தவறுகளை பற்றி கவலைப்பட தேவையில்லை .அதோட நல்ல நினைவுகளை மட்டும் அசைபோடுவது நல்லது தீயவற்றை அங்கேயே அக்காலத்திலேயே விட்டுட்டு போய்டணும்னு சொல்றாங்க மென்டல் ஹெல்த் எக்ஸ்பெர்ட்ஸ் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடி அதிராவை முந்தினா நேற்று?.. சே..சே ஒரு கொஞ்ச நேரம் மனிசர் வெளியில போய் வர முடியுதா.. அதுக்குள்ள முந்திடுகினமே:))..

      கில்லர்ஜி இன்று மெளன விரதமாம்.. ஒரு வார்த்தைக்கு மேல் பதில் ஜொள்ள மாட்டாராம்ம்:)).. இது அந்த ஆஞ்சிவரத்து அம்மாள் மேல ஜத்தியம் பண்ணியிருக்கிறாராம்:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பு மீ ரொம்ப நல்ல பொண்ணு.

      நீக்கு
    2. ஹலோ செல்வழி மறுமொழி சொல்வது கடினம். அதை புரிந்து கொல்'ளவும்.

      மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நீங்களும் நெல்லைத்தமிழனைப்போல பயணத்தில் இருக்கிறீங்கள் எனத் தெரிஞ்சுதான் வம்பிழுக்கிறேன்ன்ன்:)).. இப்போ நாங்க எப்பூடித் தனகினாலும்:), உங்களால அதுக்கு அதிகம் பதில் ஜொள்ளி ஜண்டைப்பிடிக்க முடியாதெல்லோ நம்மோடு ஹா ஹா ஹா:))

      நீக்கு
    4. ம்..ம்.. சிங்கத்துக்கு ஜலதோஷம் பிடிச்சா எலிகூட பிரேக் ஸ்டெப் போடுமாம் அப்படித்தான் இருக்கு நெல்லையாரின் நிலைமை.

      நீக்கு
    5. எனக்கொரு டவுட்டூஊ கில்லர்ஜி:)... அது நெல்லையாரின் நிலைமையா இல்ல :).. தேவகோட்டை நியூயோர்க்காரரின் நிலைமையோ?:) ஹா ஹா ஹா

      நீக்கு
    6. இன்னா தலீவிறே...எப்படி 8எக்கீரீங்கோ ...

      நீக்கு
    7. யாரு... தாஜுதீனா ?

      நீக்கு
    8. //எனக்கொரு டவுட்டூஊ//

      அதான் நெல்லையார் என்று சொல்லி விட்டேனே...?

      நீக்கு
  2. அவ்வ்வ் இது கவிதையா !!  nice

    பதிலளிநீக்கு
  3. இம்முறை நான் 1ஸ்ட்டூஊ இல்ல 1ஸ்ட்டூ இல்ல.....:))).

    எதுக்கு இப்போ திடீரென சின்ன வயசுத் தவறை நினைத்து கூச்சப்படுறீங்க கில்லர்ஜி:).... பெரிய வயசில செய்த தவறுக்கே கூச்சப்படாத காலம் இக்காலம் ஹா ஹா ஹா.

    இது கன்னிக் கவிதை முயற்சியோ.... எதுவாயினும் நன்றாகத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் உண்டு இந்தப் பழக்கம்.  அறியாத வயது என்றில்லை, எத்தனை வயதானாலும் எப்படிப் பேச வேண்டும் என்பதில் நாம் தவறிவிடும் நேரம் இருக்கும்...   அந்தச் சமயங்களை நினைத்து அவ்வப்போது நாக்கைக் கடித்துக் கொள்வதுண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் தலையில் குட்டிக் கொள்வதுண்டு. (யாரும் காணாமல்)

      நீக்கு
  5. அறியாத வயதில் செய்த தவறுகள் - மறந்து விடுவது நல்லது! தெரிந்தே செய்த தவறுக்குத் தான் அதிகம் வருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. சின்ன வயசிலேயே பெரிய தவறு செய்யுறவங்களும் இருக்காங்க. செய்வது சின்னத் தவறா, பெரிய தவறான்னு யோசிக்கிற மனப்பக்குவம்கூட இல்லாதவங்களும் இருக்காங்க. தவறு செய்யாம வாழணும்கிற எண்ணம் இருந்தால் போதும் கில்லர்ஜி.

    இந்த எட்டு வரிக் கவிதை நீங்க எத்தனை நல்லவர்ங்கிறதைக் காட்டுது.

    போற்றுதலுக்கு உரியவர் நீங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.
    நிகழ்காலத்தில் வாழுங்கள்.
    வீட்டிற்கு வரபோகும் இளந்தளிர்களுடன்(பேரன்கள், பேத்திகள்)எப்படி மகிழ்ந்து இருக்கலாம் என்று கற்பனை செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. இன்று வாட்ஸப் செய்தி
    //நமக்கு நிகழும் அனைத்தும் இறைவனால் நிர்ணையிக்கப்பட்டதே!
    நல்லதாக நடந்தால் அது அதிசயம்
    கெட்டதாக நடந்தால் அது அனுபவம்.//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்புதமான கருத்து.
      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. சுருக்கமான ஆனால் உண்மையான கவிதை வரிகள்! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா புகைப்படத்தை கண்டதும் தோன்றிய வார்த்தைகள் ஐயா.

      நீக்கு
  10. எல்லா தவறுகளும் ஒரு பாடம் தானே ...

    சிறுவயது என்ன பெரியவர்கள் ஆனால் என்ன ....

    பதிலளிநீக்கு
  11. தவறுகள் மன்னிக்கப்படும். ஏனெனில் அவை அறியாத வயதில் தெரியாமல் செய்தவை. அதற்காக இப்போது கூச்சப்படவேண்டாம். கவிதை அருமை! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. அன்பு தேவகோட்டை ஜி,
    தவறுகளும், தப்புகளும் இல்லாத பருவம் ஏது.
    அறியா வயதில் தெரியாமல் செய்யும்
    எந்தக் காரியமும் மன்னிக்கப் படும்.
    தெரிந்து வளர்ந்த பிறகு தவறு செய்பவர்களே
    இப்போது அதிகம்.

    நல்ல கவிதை மா.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அருமையான கவிதை..உண்மையான வரிகள். ரசித்தேன்.

    அறியாமல் செய்த தவறை எப்போது தவறாக உணர்ந்து வருந்தி நினைக்கிறோமோ அப்போதே அந்த தவறுகள் நம்மை விட்டு தூசி துடைத்த சுத்தமான கண்ணாடியாக பளீரென்று நம் இயல்பான முகத்தை வெளிக்காட்டியபடி விலகிச் சென்று விடுகிறது என நான் நினைக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கவிதை வரிகளை ரசித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வாங்க ஜி புகைப்படத்தால் வந்த கவிதையே...

      நீக்கு
  15. ரொம்பதான் துணிச்சல் உங்களுக்கு. படத்தைப் பார்த்ததும் பாரதிராஜா திரைப்பட ஸ்டில்போல இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  16. தவறி போய் செய்த தவறு தானே நண்பரே. விடுங்கள்.
    தப்பி , தவறி அதை நீங்கள் மீண்டும் செய்யாமல் இருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  17. தெரிந்து எந்தத் தப்பும் செய்ய மாட்டோம். சிறுவயது என்றாலே அறியாவயது தானே! அப்போ நிகழும் தவறுகளுக்கு நாம் பொறுப்பாக மாட்டோம். ஆனாலும் விபரம் தெரிந்த பின்னர் மனம் கூசத்தான் செய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு