தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 09, 2016

Dr. K 7


இந்தப்பதிவுக்கு முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால் பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.


 கதவு திறக்கப்பட்டதும் மூவரும் எழுந்து நின்றார்கள் சடையாண்டி சுற்றும் முற்றும் பார்த்தான் காரணம் இயற்கை சீற்றத்தின் முதல் இலக்கம் தமிழில் போ... போ... என்றும் ஆங்கிலத்தில் GO...  GO...  என்றும் சொன்னது எங்கு போவது ? அறையில் தண்ணீர் பானையைத் தவிற வேறொன்றும் இல்லையே.... உள்ளே அதே 6 பேரும் நுழைய...
இதுல யாருக்குடா வயித்துவலி... ? 
யாருக்கும் இல்லைங்க...
பின்னே எதுக்கு டாக்டர் ?
தெரியாமல் வந்துட்டோங்க.. இனிமேல் வரமாட்டோம்..
இங்கேயிருந்து.. உயிரோட போனாத்தானே... இனிமேல் வர...
ஹா...ஹா...ஹ்...ஹா...ஹா

ஆறு பேரும் ரிக்ஷாக்காரன் எஸ்.ஏ.அசோகனைப் போல் சிரிக்க... சடைக்கு வாட்டர் டாங்க் உடைந்து விட்டது....
திடீரென கீழே மங்களகரமான நிறத்தில் ஓட கூடவே கூவத்தின் மணம்...

டேய்.... என்னடா.. இவன் ச்சீ எந்திரிடா.. எருமை மாடு அறிவு இல்லை.
சடைக்கு பிடரியில் ஆடித் தள்ளுபடியில் ஒன்று கிடைத்தது..
டேய் கங்கு அந்தப்பானைத் தண்ணியை ஊத்தி விடுடா... கட்டருல ஓடட்டும் செவளை வெளியில சாக்கு கிடந்தால் எடுத்தாந்து போடு சீக்கிரம் இப்போ டாக்டர் வந்துடுவாரு.... சீக்கிரம், சீக்கிரம்...
செவளை சாக்கு எடுத்து வந்து தரையை காலால் துடைக்கும்போதே... சடையைப் பார்த்து.... இடது காலை கிழமேற்கு திசையில் தொண்ணூறு டிகிரியில் உயர்த்தி காண்பித்து... அப்படியே... விட்டேன்... ங்கொய்யாலே...
மற்ற இருவருக்கும் சர்வமும் அடங்கி விட்டது சில நொடிகளில் செல்பேசியில் அழைப்பு....

ஹலோ டாக்டர் K 7னை வரச்சொல்லுங்க.. ஓகே.
ஐந்து நிமிடம்... வெளியிலிருந்து சப்தம் கேட்டது... டக்..டக்...டக்.
டாக்டர் K 7 வந்தார் கூடவே 2 பேர் ஒருவன் கையில் கிட்டார் மாதிரி லெதர் பேக்.
வாங்க டாக்டர் இதோ சட்டை இல்லாமல் நிற்கிறானே.. இவன்தான் சடையாண்டி.
டாக்டர் அப்-ட்டூ-டௌண் சடையைப் பார்த்தவர் மூக்கைச் சுளித்தார்..
டாக்டர்.... இவன்.... வந்து...
டாக்டர் கையை காண்பித்தார் இவருக்கு தெரியாத வாசங்களா ? டாக்டர் திரும்பி பார்க்க இருவரில் ஒருவன் செல்லை எடுத்து யாரிடமோ மெதுவாக பேசினான்.... டாக்டர் K 7 மூவருக்கும் மையமாக நின்று கேட்டார்...

எதுக்காக டாக்டர் 7 மலையைப் பார்த்தீங்க ?
மூன்று பேரும் கோரஷாக சொன்னார்கள்.
மன்னிச்சுக்கங்க.. ஸார்.... இனிமேல் சத்தியமா வரமாட்டோம்...
நான் யாருனு தெரியுமா ?
டாக்டருங்க...
பேர் தெரியுமா ?
கே...கே...கே...கே... விக்கினான் மொக்கைராசு
டாக்டர் K 7 ன்டா.. முண்டம்...
சொன்ன வேகத்தில் காலைத்தூக்கி ஒரு மிதி கொடுத்தார் அம்மா அலறி கீழே விழுந்தவனை சட்டென தூக்கி நிறுத்தினர்... சடையிடம் திரும்பியவர்..
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமாடா ?
தெ...தெ...தெ..ரியாது..
டாக்டர் AK 47 ன்டா..
சொன்ன நொடியில் எங்கிருந்துதான் வந்ததோ... சடையாண்டியின் வாயில் விட்டு கடைந்தார்...

அவ்வ்வ்... அவ்வ்வ்.. சடையால் கத்தக்கூட முடியவில்லை மிஷின் கன்னின் முனை தொண்டைக் குழியில் முட்டி அழுத்த வலி உயிர் போனது கண்களில் மரணபயம் எந்த நொடியில் அழுத்துவானோ..... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சப்தம் கேட்டு திரும்பினார் ஒருவன் ஃபெர்ப்யூம் அடித்துக் கொண்டு இருக்க.. மந்தக்கட்டியின் முன் வர அவன் டாக்டரின் காலில் விழுவான் என்று தெரியுமோ... என்னவோ உடன் 2 பேர் தூக்கி நிறுத்தினர்
சாமி விட்டுருங்கய்யா..
AK 47 னை தூக்கி அவனது நெஞ்சுக்கு நேரே வைத்து குறி பார்க்க...
ஐயாயாயாயாயா......ஆ......ஆ.....ஆ....
திடீரென்று குபீரென கூவத்தை திறந்தது போல..
(ஹூம் ஹப்பா எழுதும் பொழுது எனக்கு பொறுக்க முடியாமல் வாந்தி வந்துருச்சு பின்னே Dr. K 7 எப்படி...)
டாக்டர் தனது வாழ்நாளில் முதன் முறையாக... இப்படியொரு... மிஷின் கன்னை கீழே போட்டு விட்டு வெளியே ஹாலுக்கு ஓடி வந்து கத்தினார்..
ஹூம் என்னாங்டா... அது...

கூட வந்த இரண்டு பேரும் கூடவே வெளியே வந்து விட்டனர் ஒருவன் AK 47 னை எடுத்து வந்திருந்தான்..
ஆறு பேரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்து விட
டாக்டர்... உள்ளே.. ஒருத்தன்...
டாக்டர் கை விரலால் பேசி விட்டு வெளியேற கூடவே மற்ற இருவரும்..
டேய் பாண்டி கதவைச்சாத்துடா... பண்டி நாத்தம் நாறுது... என்னத்தடா திண்ணாங்கே...
பிரியாணிதான்.. தல..
அது இப்பத்தானடா.. சாப்புட்டாங்கே.... இது போனவார சரக்கு.... ச்சே..
இப்ப என்ன செய்யிறது தல ? 
இருங்கடா.. ½ மணி நேரம் போகட்டும்.

உள்ளே மரணபயத்தின் காரணமாய் சடையாண்டிக்கும், மந்தக்கட்டிக்கும் நிகழ்ந்த கொடுமையை LIVEவாக கண்ட மொக்கைராசுக்கு இயற்கையின் சீற்றத்தின் காரணமாக இரண்டாம் இலக்கம் வெளியேறியதில் தன்நிலை மறந்து கிட்டத்தட்ட கோமா நிலையில் கிடக்க.. கொஞ்சம் நினைவுகளுடன் இருந்த சடையும், மந்தக்கட்டியும் இரு’’கைகளாலும் மூக்கை NO.. NO. மூஞ்சியை அடைத்துப் பிடித்துக்கொண்டு மூச்சுப்போக வழியில்லாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள் உள்ளே ஜன்னல்கூட கிடையாது இருந்த ஜன்னல் என்னவோ சடையாண்டி டவுசரில் பின்புறம் மட்டுமே அதுவும் இப்பொழுது தரையில் சிதறலாக.....

வெளியே ஆறு பேரும் ஹாலை விட்டு வெளியே திறந்த வெளியில் நின்று காற்று வாங்கிக் கொண்டு இருந்தார்கள் மூலையோரமாய், சோமனும், ராமனும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு நின்றார்கள்..

தொடரும்...

52 கருத்துகள்:

 1. உலக புத்தக கண்காட்சி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்... இடம் :- புதுதில்லி "பிரகதி மைதான்"..... தற்போது சிங்கப்பூர், மற்றும் மலேசிய பதிப்பாளர்கள் மற்றும் மலேசிய வாசகர் வட்ட நண்பர்களுடன்...... தேநீர் அருந்திக்கொண்டிருக்கிறேன் மாலை 4 மணி ... அன்புடன் கோகி. இன்று இரவு உங்களின் வலைப்பூ பக்கத்தில் உலவுவேன் .... மீண்டும் சந்திப்போம் நன்றி நட்புடன் -ரேடியோ-கோகி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் முதல் வருகைக்கு நன்றி
   புத்தக முடையை அள்ளிச்செல்ல வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு
 2. ஹாஹாஹா! டாக்டரோட அட்டகாசத்தையே அடக்கிட்டாங்க இலக்கம் இரண்டை வெளியேத்தி..?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே பாவம் கஷ்டப்படுறாங்கே நீங்க அசோகனைப்போல் சிரிக்கிறீங்களே நியாயமா ?

   நீக்கு
 3. எங்கள் அன்பு வர்ஷிதாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..

  அன்பின் உறவுகள் தொடர்வதாக!..

  பதிலளிநீக்கு
 4. ஆஹா...
  கே 7 அப்புறம் ஏகே 47ன்னா...
  ஹா...ஹா....
  ரசித்தேன்... சிரித்தேன் அண்ணா
  தமிழ் +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே இதுக்கு மேலே மிஷின் கன் இல்லையே...

   நீக்கு
 5. தொடரா? 'ரிக்‌ஷாக்காரன்' அசோகன் போல சிரித்தான்.. இந்த வரியை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்கள் 6 வது பதிவு கிலி கிளி கிழி படிக்கவில்லையே....

   நீக்கு
 6. என்ன இப்படியாகிப் போச்சு!..

  கொக்கி போட்டது உண்மைதான்!..
  (ஆனா - கொஞ்சம் ஆழமா போட்டுட்டோம் போல இருக்கு!?..)
  அதுக்காக சடையாண்டி வகையறாக்களுக்கு இந்த கதியா!..

  டெட்டால் வாங்கும் செலவே பெருஞ்செலவா இருக்கும் போல இருக்கு!..

  எதுக்கும் கொஞ்சம் பதமா பாத்து மிதிங்க!..
  இல்லேன்னா பய புள்ளைங்க அடங்க மாட்டானுங்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போல் இருக்கிறது தங்களது கருத்து.

   நீக்கு
 7. அதிகமான அலுவலகப்பணிகள் காரணமாக தளத்திற்குச் சற்று தாமதமாக வர நேர்ந்ததால் தொடரைத் தொடரத் தாமதமாகிவிட்டது. வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்புடன் தொடர் நன்றாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் பிழைப்பு பிறகு வலைப்பு
   முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 8. நாதாரிப் பசங்களை சுட்டுத் தள்ளாம போயிட்டாரே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மொக்கைராசுதான் வெளியே விரட்டி விட்டானே...

   நீக்கு
 9. K-7,
  6-முகம்,
  1 மாதிரி இல்ல இருக்கு?
  யாரை கொக்கி போட்டு மாட்டி விடுறீங்க,
  சொல்லுங்க G சொல்லுங்க! G
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா என்னைத்தான் கொக்கி போட்டு விட்டார் குவைத் ஜி

   நீக்கு
 10. சுவாரசியமாய் இருக்கிறது...தொடருங்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தாங்களும் தொடரவும் நன்றி

   நீக்கு
 11. தொடர் சிரிப்பா சிரிக்குது. படிக்கும் நாங்களும்தான்.
  நண்பரே வேலை, பயணம் போன்ற காரணங்களால் முன்புபோல் அடிக்கடி வலைப்பக்கம் வர முடியவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்னசெய்வது ? பிழைப்பு முக்கியம் இல்லையா ? நானும்கூட பலரது பதிவுக்கு உடனடியாக வரமுடியவில்லை காரணம் அலுவகத்துக்கு காலை 7.30 க்கு பஞ்சிங் செய்யவில்லை என்றால் சம்பளம் கிடையாதாம் இதையெல்லாம் மோடி அரசு கேட்காதா ?

   நீக்கு
 12. சிரித்தேன் சிரித்தேன்
  சிரித்துக்கொண்டே இருக்கிறேன்நண்பரே
  தொடருங்கள்
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே பதிவை தாங்கள் வழக்கத்தைவிட அதிகம் ரசித்ததுபோல் இருக்கின்றதே... சந்தோஷம் நன்றி

   நீக்கு
 13. நிலவரம் ஒரே கலவரமாய் இருக்கு, மீ அப்பீட்டு டாக்டர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே நடக்க வேண்டியது நடந்தே தீரும்

   நீக்கு

 14. நல்ல நகைச்சுவை பதிவு சகோ. பெங்களூருக்கு மகன் வீட்டுக்கு சென்ற படியால் கொஞ்ச நாட்களாக கணினி பக்கம் வரமுடியவில்லை. இனி தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நலமா ? தொடருங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. படித்தேன்!வர வர விளையாட்டு அதிகமாப் போச்சே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையே ஐயா வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. ஒரே அட்டகாசம்தான்...நண்பரே.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே ஏதோ முடிந்தது இவ்வளவுதான்.

   நீக்கு
 17. சோமனும் ராமனும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு இருக்க நானும் காத்துக்கொண்டிருக்கிறேன் மேலே என்ன நடந்தது என அறிய !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே காத்திருங்கள் விரைவில் விடை தெரியும்.

   நீக்கு
 18. அன்புள்ள ஜி,

  டாக்டர் கேசவனுக்கு வைத்தியம் பண்ணணும் போல இருக்கு...! மனுசன் ஆத்திரத்தை வேண்டுமானாலும் அடக்கிக் கொல்வார்...!

  த.ம.15

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மணவையாரே என்ன செய்வது இயற்கையின் நியதி இதுதானே.... வருகைக்கு நன்றி

   நீக்கு
 19. கடந்த முறை ஒரு திரட்டி குறித்த விவாதத்தில் உங்களின் விபத்தையும் எப்படி நீங்கள் அமீரகம் அடைந்து சிகிச்சை பெற்றீர் எனவும் பகிர்ந்தேன்...
  வியந்தது குழு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தோழரே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 20. அது சரி! இப்படியா கலவரம் நடக்கும்!!! இலக்கம் 2 னால்....ரிக்ஷாக்காரன் அசோகன்...ஹஹஹ மெய்யாலுமே அசோகன் சிரிப்பு அருமையா இருக்கும்..மறக்க முடியுமா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலவரம் பலவிதம் அதில் இது ஒருவிதம் வருகைக்கு நன்றி

   நீக்கு
 21. Doctor K7
  எப்படி
  Doctor AK47
  ஆனாரோ - அது
  நமக்கு வேண்டாம்...
  ஆனால்,
  தாங்கள் சொல்ல வந்த செய்தி
  மிக்க பயனுள்ள செய்தி!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 22. கே7
  ஏகே 47
  7மலை
  மா3
  எங்கே யிருந்து தான் இத்தனை ஐடியாவும் வருமோ? ரசித்த்தேன் சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐடியா எங்கிருந்து வரும் எனது மூளையின் மூலையிலிருந்தே வரும் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 23. ராமனும் சோமனும் மட்டுமா விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். நானும்தான் சிரித்து முடியல. k7 அருமையான கண்டுபிடிப்பு.நாங்க படிக்கும்காலம் நண்பிகள் பேசும்போது இப்படி சில கோட் வேர்ட்ஸ் பயன்படுத்துவோம்.ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சிரித்துக்கொண்டே இருங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 24. வணக்கம்
  ஜி

  ஏதோ ஒன்று நினைத்தேன்.. படித்த போது புரிந்து கொண்டேன்..வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு