தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 10, 2019

I like Indian People


ஞ்சித் இன்னும் திருமணம் ஆகாதவன் காரணம் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாதவன் இரண்டு அக்காள் மூன்று அண்ணன்களோடு பிறந்தவன் எல்லோருக்கும் திருமணம் முடிந்து விட்டது வீட்டில் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் கோயிலுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் நல்ல ஜாலியான பேர்வழி அப்பா இறந்து விட்டார் அம்மா பாரம்பரிய திருநெல்வேலி வீட்டில் இருக்கின்றார் அம்மாவுக்கு தேவையான பணத்தை செலவுக்கு அனுப்பி விடுவான் வருடத்துக்கு ஒருமுறை மே மாதம் சரியாக பள்ளி விடுமுறையில் நாட்டுக்கு வந்து விடுவான் குடும்பத்து அனைத்து பிள்ளைகளும் வந்து விடவும் வீடு ரணகளப்படும் அவனது அம்மா சத்தம் போட்டு அடக்கி வைத்தாலும் உள்ளுக்குள் பெயரன்-பெயர்த்திகளின் சேட்டைகளை ரசிப்பார் ரசிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே... எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் இதோ கணவருக்கு கிடைக்க வில்லையே

பிறந்த ஆறு பிள்ளைகளில் மூத்தவளுக்கு மட்டும்தானே திருமணம் செய்து பார்த்தார் கண்டிப்பதிலும் ஒரு அளவு இருக்கும் காரணம் அடுத்த மாதம் எல்லாக் குழந்தைகளும் அவரவர் ஊர்களுக்கு சென்று விடும் தனது கடைசி மகனும் மொக்காசியா சென்று விடுவான் பிறகு வீடு வெறிச்சோடி கிடக்கும் கடல் போன்ற இந்த வீட்டில் தான் மட்டுமே சமைத்து தான் மட்டுமே சாப்பிட்டு தான் மட்டுமே உறங்கி எப்படியோ காலம் ஓடுகின்றது இரண்டு பெயர்த்திகளின் திருமணத்தையும் பார்த்து இதோ கடந்த மாதம் கொள்ளுப் பெயரனையும் கண்டு விட்டோம் நாம் கண் மூடுவதற்குள் ரஞ்சித்துக்கு கல்யாணம் செய்து விட்டால் நிம்மதியாக போய் விடலாம் அது மட்டுமே அம்மாவின் ஏக்கம்.

மொக்காசியா நாட்டில் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் நல்ல சம்பளம் வேலை விசயமாக அடிக்கடி பல நாடுகளுக்கு பறப்பான் அதில் அவனுக்கென்று இரண்டு நாட்கள் சொந்த விடுமுறையும் எடுத்து விடுவது அவனது வழக்கம் காரணம் ஊர் சுற்றுவது அவனுக்கு பிடித்தமானதே ஃபோட்டோ எடுப்பதும் அவனது ஹாபி இப்படி ஒருமுறை மெல்லேந்தியா நாட்டுக்கு போயிருந்த பொழுது அந்த கம்பெனியின் மேனேஜிங் டைரக்டராக இருக்கும் ஃபுல்ஸி கைட்லி ரஞ்சித்துக்கு பழக்கமானாள் இந்த கம்பெனியிலிருந்து ஆர்டர் நிறைய கிடைத்தது எல்லாமுறையும் ட்ரெயினிங் கொடுக்க ரஞ்சித்தையே அனுப்பி வையுங்கள் என்று மொக்காசியாவுக்கு மெயில் வரும் கம்பெனியும் ரஞ்சித் போனால் காரியம் நடக்கும் என்பதை புரிந்து அவனையே அனுப்பி வைத்தது காரணம் கம்பெனிக்கு பிஸினஸ் முக்கியம் இவனுக்கும் மெல்லேந்தியா என்றாலே மனம் மிதக்க ஆரம்பித்து விடும் கம்பெனி வேலைகள் முடிந்ததும் ஃபுல்ஸியே இவனை காரில் அழைத்துப் போய் சுற்றிக்காட்டுவாள் அவளது கம்பெனி செலவிலேயே உயர்ரக ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தாள் சகஜமாக பழகுவாள் தான் கம்பெனியின் M.D என்ற பேதமில்லை அவளிடம் ஆனால் ஒருமுறைகூட அவளது வீட்டுக்கு அழைத்துப் போனதில்லை குடும்பத்தைப்பற்றி விசாரித்தால் சிறிய புன்னகையோடு நிறுத்திக் கொள்வாள் கம்பெனியில் விசாரித்த வகையில் அவளைப்பற்றி யாரும் வெளியில் பேசக்கூடாது என்பதை மட்டும் அறிய முடிந்தது முயற்சித்தும் கிடைப்பது இயலாத காரியமாக இருந்தது ஃபுல்ஸி கைட்லி கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாள் சட்டென பார்க்கும் பொழுது நம்மூர் களையெடுக்கும் நாட்டுக்கட்டை மாதிரி இருப்பாள்.

அவள் அடிக்கடி சொல்வது I like Indian People அதுவும் ரஞ்சித்திடம் சொல்லும் பொழுது அந்தப் பார்வையே விரசமாக இருக்கும் அவள் சிரிக்கும் பொழுது பார்த்தால் தே.தி.மு.க.கொடி ஞாபகத்திற்கு வரும் காரணம் பற்கள் மஞ்சள் கலராகவும், உதடுகளில் சிவப்பு நிறமாகவும் முகம் முழுவதுமே நிலக்கரி நிறமாகவும் விழி மட்டும் வெள்ளை நிறமாகவும் இருக்கும் ஏதோ தெரியவில்லை ரஞ்சித்துக்கு இவளிடம் ஒரு மயக்கம் இருந்தது இவ்வளவு கருப்பாக இருக்கின்றாளே இவள் மட்டுமா கருப்பு ? இந்த நாட்டு மக்கள் எல்லோரும் கருப்புதானே இவளிடம் நம் காதலைச் சொல்லலாமா ? இவளுக்கும் நம்மீது காதல்தானே... அதனால்தானே வழிகின்றாள் இவளுடைய நிலைக்கு நம்மிடம் மட்டும் குழைவதற்கு காரணம் நமது வீட்டில் சொன்னால் சம்மதிப்பார்களா ? அம்மா சம்மதிப்பார்கள் காரணம் இப்பொழுதாவது சம்மதித்தானே.... என்று ஆனால் அண்ணிகள் இவளது புகைப்படத்தை காண்பித்தாலே கிண்டல் செய்வார்களே... எத்தனை அழகான பெண்களை நமக்காக பார்த்து வைத்தார்கள் நாம் சம்மதிக்க வில்லையே இப்பொழுது இவளை மட்டும் எனக்கு பிடிக்க காரணமென்ன ? பூர்வ ஜென்ம பந்தமோ ? சரி முதலில் ஃபுல்ஸியிடம் சம்மதம் கேட்டு விடுவோம் பிறகு மெதுவாக பெரிய அண்ணியிடம் சொல்லலாம்.


மறுநாள் நேராக ஃபுல்ஸி கைட்லியிடம் போனான் உன்னிடம் கொஞ்சம் ஃபர்ஸனலாக பேசணும் சரி பேசு சட்டென I Love You என்றான் அதைக் கேட்டதும் வழக்கம் போலவே தே.தி.மு.க.கொடியைக் காண்பித்த ஃபுல்ஸி கைட்லி எதை வைத்து என்னை விரும்புகின்றாய் ? உன்னை எனக்குப் பிடிச்சுருக்கு ப்ரெஷ்டிஸ் பார்க்காமல் என்னோடு பழகுவது பிடித்து இருக்கின்றது சரி இன்னும் இரண்டு மாதம் கழித்து ஜூனில் நீ வரும்போது சொல்கிறேன் நீ இங்கு ஒரு மாதம் தங்க வேண்டியது வரும் விசா மற்ற விசயங்களை உனது கம்பெனியிடம் நான் பேசுகின்றேன் என்றாள் இவனும் சந்தோஷமாக மறுநாள் மொகாச்சியா திரும்பினான் அதற்குள் பெரிய அண்ணியிடம் மேலோட்டமாக பேசி வைத்தான் இரண்டு மாதம் எப்பொழுது போகுமோ என்று காத்திருக்க அந்த நாளும் வந்தது மேலாளர் அழைத்தார் மிஸ்டர். ரஞ்சித் மெல்லேந்தியா ஆஃப்டன் கம்பெனிக்கு போகணும் இந்தமுறை ஒரு மாதம் அங்கு தங்கி ட்ரெயினிங் கொடுக்கணுமாம் M.D. ஃபுல்ஸி கைட்லி மெயில் அனுப்பி இருக்காங்க இன்னும் ஒரு வாரத்தில் நீங்க கிளம்பணும் தயாரா இருங்க.
OK Sir

மனம் நிறைய மகிழ்ச்சியாய் புறப்பட்டான் ரஞ்சித் கடந்த இரண்டு மாதத்தில் பெரிய அண்ணியிடம் போனில் காஞ்சிபுரம் பட்டுப்புடவை ஒன்றை வாங்கி அனுப்பச் சொல்ல புடவையும் கூடவே அல்வா 2 Kg வந்து சேர்ந்தது Mellendian Airlines ரஞ்சித்தோடு மேகத்தை கிழித்துக்கொண்டு பறந்தது செக்கிங் முடிந்து வெளியே வர விமான நிலையத்தில் ஃபுல்ஸி கைட்லி காத்திருந்தாள் வழக்கமாக டிரைவர் வந்திருப்பார் இந்தமுறை அவளே நேரடியாக வந்தது ரஞ்சித்துக்கு இன்ப அதிர்ச்சி அதைவிட ஆனந்த அதிர்ச்சி என்னவென்றால் ? கைகொடுத்து Welcome to Mellendia என்று குலுக்கியதோடு ‘’பச்சக்’’ என்ற சப்தம் புரிந்ததா ?

நேராக ஸ்டார் ஹோட்டல் அங்கு டின்னரை முடித்து விட்டு நாளை காலை வருகிறேன் என்று சொல்லி விட்டு போனாள் ரஞ்சித்துக்கு இருப்புக் கொள்ளமுடியவில்லை வழக்கத்தைவிட இன்று ஃபுல்ஸி அழகாக தெரிந்தாள் தூக்கம் வரவில்லை பால்கனியில் நின்று நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தான் நட்சத்திரங்கள் ஒரே நேராக இல்லாத காரணத்தால் எண்ணுவதில் சிரமமாக இருக்க உள்ளே போய் படுத்தான்.

மறுநாள் 8.00 am டாண் என்று வந்து நின்றாள்.
குத்மார்னிங் மிஸ்தர். ரண்ஸிட்
குட்மார்னிங் ஃபுல்ஸி

இருவரும் கீழே ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டார்கள் அடுத்து ரிசப்ஷன் சென்று அறையை காலி செய்ய..
ஏன் ?
இல்லை இனி வேறு இடத்தில் தங்க நான் ஏற்பாடு செய்திருக்கேன்.

ரஞ்சித்துக்கு மனமெல்லாம் பட்டாம்பூச்சி பறந்தது ஆஹா அவளது வீட்டில் தங்க வைக்கப் போகின்றாள் மாமா அத்தையை காணப் போகின்றோம் தனது பெட்டியை எடுத்துக் கொண்டான் காரை கிளப்பினாள் ஃபுல்ஸி கைட்லி நகரத்தின் பிரமாண்டமான கட்டிடம் முன்பு போய் நிற்க... ஒரு தடியன் வந்து காரைத் திறந்து விட்டான் ஃபுல்ஸி இறங்க ரஞ்சித்தும் இறங்கினான் மேலே இருந்த பெயரைப் படித்தான் PLENDING HOSPITALS இங்கு எதற்கு ? ஒருவேளை மாமாவோ அத்தையோ சுகமில்லாமல் இருக்கின்றார்களோ ? சட்டென ரஞ்சித்தின் கையைப் பிடித்து அழைத்துப் போனாள் தடியன் காரை எடுத்துக் கொண்டு போனான்.

ஹாய் டோக்டர் பேக்வென்ஜி ஹி இஸ் மிஸ்தர். ரண்ஸிட்
அவள் டாக்-கிடம் அறிமுகப்படுத்த அவரும் கை கொடுத்து.

ஹாய் மிஸ்தர். ரண்ஸிட் ஹவ்வார் யூ
ஃபைன் தாங்க்ஸ் டாக்டர்.

பிறகு மெல்லேந்தியா மொழியில் டாக் & ஃபுல்ஸி கைட்லி பேசினார்கள் ரஞ்சித்துக்கு ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டு இருக்க..
ஓகே மிஸ்தர். ரண்ஸிட் ப்ளீஸ் ட்டூ கம் வித் மீ
வேர் ?

ஃபுல்ஸி அவனது கையைப் பிடிக்க அந்த மென்மையான ஸ்பரிசத்தை தொட்டதும் ரஞ்சித்துக்கு வாய் திறக்க முடியவில்லை டாக் முன்னே போக இருவரும் பின் தொடர அவர் நேராக போய் ஒரு அறையைத் திறந்து பிறகு அதனுள் இருந்த அந்த பிரமாண்டமான ஹாலை திறந்தார் அங்கே ஒரு அனஸ்தேசியா டாக்டரும், நான்கு நர்ஸ்சுகளும், பழைய நடிகர் ஜஸ்டினின் கொழுந்தியாள் மகன் போலவே இரண்டு தடியர்களும் நிற்க அவர்களைக் கண்டதும் அடிவயிற்றைக் கலக்கியது குழம்பிய ரஞ்சித் கேட்டான்.

தொடரும்...

114 கருத்துகள்:

 1. முதலா சைனை வைச்சிட்டு அப்புறம் போஸ்டுக்கு போறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏதோ றம்ப் அங்கிளின் சைன் போலவே ஒரு நினைப்பூஊஊஊ சைனாம் சைன் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...
   கில்லர்ஜி ச்ச்சும்மா மடமச எண்டு பார்த்துக்கொண்டிருக்காமல் நீங்களும் பொயிங்குங்கோ:)...

   நீக்கு
  2. என்னை பொயிங்க தெரியாத அப்பாவியாக வளர்த்து விட்டார்களே...

   நீக்கு
  3. ஹையோ இந்தப் பதில் பார்த்து மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன் என்னை ஆரும் ஆயிரம் பொற்காசு தந்தாலும், தடுத்திடாதீங்கோ:))),,

   நீக்கு
  4. அந்த ஜேம்ஸ் ஊரணியை பிளாட் போட்டு விற்றால்தான் உங்க பிரச்சனை தீரும்.
   இப்பவே இரண்டு அரசியல்வாதிகளை லண்டனுக்கு அனுப்பி வைக்கிறேன்.

   நீக்கு
  5. ஹலோ மியாவ் :) முதல்ல வந்ததுக்கு ஒரு அடையாளம் வைக்கணுமில்ல :) அதான் ..நீங்க வந்துட்டு போன பிளாக்கே ஒரு பக்கம் சரியும் அது பார்த்து கில்லர்ஜீ புரிஞ்சிப்பார் :)

   நீக்கு
  6. ஜேம்ஸ் ஊரணி ப்ரீஸ் ஆகியிருக்கு ரெண்டு நாளில் டெம்பெறச்சர் குறைஞ்சி ஐஸ் ஆடும் அப்போ குதிங்க மியாவ்

   கில்லர்ஜீ லண்டனில்லை ஸ்கொட்லாந்துக்கு அனுப்பவும் :)

   நீக்கு
  7. ///அந்த ஜேம்ஸ் ஊரணியை பிளாட் போட்டு விற்றால்தான் உங்க பிரச்சனை தீரும்.///

   ஹா ஹா ஹா...

   இல்ல அஞ்சு தேம்ஸ் இருப்பது லண்டனில்தானே... அதுக்குத்தான் ஆள் அனுப்பப்போறாராம்:)..
   அதுக்கு செலவழிக்கும் காசை அதிராவுக்கு அனுப்பினால், மீ குதிக்காமல் மட்டின் ரோல் வாங்கிச் சாப்பிடுவேனெல்லோ கர்ர்ர்ர்ர்ர்:).

   நீக்கு
  8. பதிவுலகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் ஜேம்ஸ் ஊரணியை ப்ளாட் போட்டே தீரணும்.

   நீக்கு
  9. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
 2. ஆஆஆஆ மீ த 1ச்ட்டூ இல்ல இல்ல எனக்கு நல்லாவே தெரியும்:)...

  பதிலளிநீக்கு
 3. ///I like Indian People///

  அவ்வ்வ்வ்வ் அதிரா இந்தியன் இல்லயே:) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படீனாக்கா... தலைப்பை மாற்றி ஸ்ரீலங்கா என்று வைக்கலாமோ....?

   நீக்கு
  2. என் அமுதசுரபி பெயரைப் பார்த்த பின்புமா இப்பூடிக் கேட்டிட்டீங்க கில்லர்ஜி :), கொமாப் போட்டு அதிரா நாட்டையும் சொல்லியிருக்கலாம் அந்தக்கா:).. ஹா ஹா

   நீக்கு
  3. அக்கா யாரு... ஃபுல்ஸி கைட்லியா ?

   நீக்கு
  4. Yeah..... yeah... 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

   நீக்கு
 4. மொக்கசியா மெல்லேந்தியா ??? உகாண்டா மொழியோ ??
  அவ்வ் ஃபுல்சியா நலலவரா கெட்டவரா ???
  சகோ எனக்கு தேமுதிக கொடி எப்படி இருக்கும்னே தெரியாதே நானா எப்படி கண்டிபிடிக்கிறது :)
  ஜஸ்டின் யார் ? ஜஸ்டின் கொழுந்தியாள் யார் ? ..ஒருவேளை சினிமாறிவியல் நான் படி க்காத பாடமோ :)
  இப்போ என்னாச்சுன்னு படபடன்னு இருக்கு அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ மொக்காசியா தெரியாமலா இருக்கீங்க ? நல்லவேளை இதை அதிரடி அதிரா படிக்கவில்லை.
   தே.தி.மு.க.கொடி கருப்பு வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பாக இருக்கும்.
   ஜஸ்டினை தெரியாதவரா நீங்கள் ? நல்லவேளை இதை அதிரடி அதிரா படிக்கவில்லை.
   காத்திருப்புக்கு நன்றி

   நீக்கு
  2. ஹா ஹா படிச்சும் புரியாததால் ஜம்ப் ஆனேன்ன்ன்ன்:).. பேசாமல் போனாலும் வால்ல பிடிச்சு இழுக்கினமே கர்ர்ர்ர்ர்:)..
   இப்போ கேக்கிறேன் ஜஸ்டினு ஆரூஉ? கொழுந்தியார் எங்க உகண்டாவிலயோ இருக்கிறா?:)

   நீக்கு
  3. ஜஸ்டின் பழைய எம்ஜார் படங்களில் சண்டைக்காட்சிகளில் வரும் நடிகர்.
   அவர் மகள்கூட இப்போது கசா'நாயகியாக நடிக்கிறார் பெயர் ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு தெரியும்.

   நீக்கு
  4. பார்த்திங்களா :) நானா சொல்லலை :) நானாவது 40 மார்க் எடுத்து சினிமா அரசியலில் பாஸ் பண்ணுவேன் பூனைக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் :) ஜஸ்டின் யார்னு கொஸ்டின் போட்டுருக்கு பாருங்க

   நீக்கு
  5. ஆஆ !! ஸ்ரீராமுக்கு தெரிஞ்ச கதாநாயகியா ?? அப்போ இன்னும் வெள்ளிக்கிழமைல வர்லியே :))

   நீக்கு
  6. ஜஸ்டின் - கொஸ்டின் அடடே ஸூப்பர்.

   நீக்கு
  7. ஹா ஹா ஹா இப்பவும் நான் ஶ்ரீராமையும் கசா:)நாயகிகளையும் நினைச்சேன்ன்ன், அகத்தியர்போல சிரிச்சேன்ன்ன்ன்:)

   நீக்கு
  8. ஸ்ரீராம்ஜியை கசா'நாயகியோடு இணைப்பது ஏன் ?

   நீக்கு
  9. அது அவர் மச்சக்காரர்:) என்பதால:).. உங்களுக்கு எதுக்கு கில்லர்ஜி புகை வருது?:) ஹா ஹா ஹா ஹையோ மீக்கு இண்டைக்கு என்னமோ ஆச்சூ:))

   நீக்கு
  10. ஆஆஅ கில்லர்ஜி உங்களுக்கு சினிமா விஷயங்கள் விரல் நுனில போல எம்ஜார் கூட சண்டை போட்ட ஆளோட பொண்ணு...இப்ப கதாநாயகியா?!!! ஆஆஆஆஆ ஆரு அது...

   கீதா

   நீக்கு
  11. எனக்கு எதற்கு புகை வரணும் ? எங்களுக்குள் பகை மூட்டி விடாதீர்கள்.

   நீக்கு
  12. அந்தப்பொண்ணு பெயர் நினைவில் இல்லை ஸ்ரீராம்ஜி சட்டென சொல்வார்.

   நீக்கு
 5. ரஞ்சித்தைப் பார்க்க கில்லர்ஜியில் சாயலாக இருக்குதே:)....
  ஓ ஹொச்பிட்டலில் இருப்பது...” அவராகத்தான்” இருக்கும்... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் எதற்கு ஹோஸ்ப்பிட்டலில் இருக்கணும் ? ஆனாலும் உங்களுக்கு இப்படி எல்லாம் எண்ணம் வரக்கூடாது.

   நீக்கு
  2. ஹையோ உங்களுக்கும் ஓவர் ஆசை கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்:)
   நான் சொன்னது... ஹொஸ்பிட்டலில் இருப்பது Fullsee:) அக்காட ஆத்துக்காரர்:)... இது தெரியாம ரஞ்சித் கனவில மிதக்கிறார்:)...

   ஹா ஹா ஹா அதிரா முடிவைச் சொல்லிட்டேன் என்று டக்குப் பக்கென ரஞ்சித்துக்கு Fullsee அக்காவுடன் டாலி:) கட்டி விட்டாலும் விட்டிடுவீங்க நீங்க:) கர்ர்ர்ர்ர்ர்ர் வெயிட் அண்ட் சீ யாஆஆஆ:)..

   நீக்கு
  3. ஃபுல்ஸிக்கு அக்கா கிடையாதே அவங்க அப்பா-அம்மா தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை ஃபுல்ஸி கைட்லி மட்டுமே...

   நீக்கு
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 7654329

   நீக்கு
 6. ஆஹா செம சுவாரஸ்யமான கதை.... சரியான இடத்தில் தொடரும் போட்டு இன்னும் சுவாரஸ்யமாக காத்திருக்ஜ வைத்து இருக்கீங்க ஜி.

  அடுத்த பகுதியை படிக்க ஆவலுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நானும் எப்பத்தான் எழுதிப்பழகுவது ? தங்களது ஆவல் எமது வெற்றி

   நீக்கு
 7. // அவள் சிரிக்கும்போது பார்த்தால் தி மு தி க கொடி ஞாபகத்துக்கு வரும் //

  ஹா... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஶ்ரீராம் எதுக்கு இப்போ அகத்தியர்போல் சிரிக்கிறார்?:)

   நீக்கு
  2. அதிராவுக்கு அகத்தியரை தெரியுது, ஜஸ்டினை தெரியவில்லையாம்... எப்பூடி ?

   நீக்கு
  3. இப்போ சமீபத்து பதிவில் அகத்தியர் பற்றி பூனைக்கு டியூஷன் எடுத்தேன் இல்லைன்னா பூஸாருக்கு அகத்தியர் தொல்காப்பியர் இளங்கோ அடிகள் எல்லாரும் ஒண்ணுதான் :)

   நீக்கு
  4. ஓஹோ... இப்படித்தான் ஞானி ஆனதா ?

   நீக்கு
  5. ஶ் ஶ் ஶ் ஶ் ஶ் அது யாரது என் தவத்தைக் கலைக்க முயற்சி பண்ணுவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

   அது அஞ்சுவின் குட்டி மகள் கேட்ட கேள்வி நேக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்ச்ச்ச்ச்ச்:) ஹா ஹா ஹா... அகத்தியரும் இப்படித்தானே சிரிச்சிருப்பார்ர்ர்:)..

   நீக்கு
  6. அகத்தியர் சிரிக்வே மாட்டார். எங்க ஊர்க்காரரைப்பற்றி எனக்கு தெரியாதா ?

   நீக்கு
  7. இல்லியே :) அப்போ சீர்காழி அங்கிள் அகத்தியர் படத்தில் சிரிச்சாரே .குமரிலருந்து மேலோகம் வரைக்கும் கேட்டுச்சே

   நீக்கு
  8. அது டப்பிங் வாய்ஸ்.

   நீக்கு
  9. டப்பிங் வொயிஸ் கில்லர்ஜியுடையதோ?:)

   நீக்கு
  10. ஹா.. ஹா.. ஹா.. சொல்லமாட்டேன்.

   நீக்கு
 8. அருமை, அருமை. என்ன ஆகுமோ என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  //பழைய நடிகர் ஜஸ்டின் அவர்களின் கொழுந்தியாள் போலவே//

  ஹா... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிராவ் இவர் அடிக்கடி ஹாஹாஹா னு 3 டைம்ஸ் சிரிக்கிறார் என்னனு கேளுங்க கொஞ்சம்

   நீக்கு
  2. அதுவா அஞ்சு ... அது அவர் குஷியாக இருக்கிறார் என அர்த்தமாம் ஹா ஹா ஹா:).. ஹையோ ஹையோ:)..

   நீக்கு
 9. வாங்க ஸ்ரீராம்ஜி எனக்கு அந்தக்கலரில்தான் தெரிந்தது
  மன்னிக்கவும் ஜஸ்டின் அல்ல அவரது கொழுந்தியாள் மகன் போலவே...

  பதிலளிநீக்கு
 10. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி!!!

  ஹா ஹா ஹா தே திமுக கொடி பார்த்து சிரித்து...நல்ல காலம் நம்ம பல்லு அந்தக் கலர் இல்லைனு ஒருசந்தோஷம்..!!!!

  சூப்பரா எழுதிருக்கீங்க கில்லர்ஜி!!!! கொஞ்சம் புரியுது என்ன ஆகப் போகுதுன்னு...சரி நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலுடன்..

  கூடவே விவேக்கின் காமெடி ஒன்றும் நினைவுக்கு வந்தது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது ரசிப்புக்கு நன்றி.
   விவேக் நகைச்சுவையை சொல்லி இருக்கலாமே...

   நீக்கு
  2. இருங்க சொல்லுறேன் அது எந்தப் படம் என்பதெல்லாம் தெரியாது...

   விவ்வேக்கை என்னவோ சொல்லி கூட்டிட்டுப் போய் கிட்னி எடுத்துருவாங்கனு நினைக்கிறேன்...அவர் புலம்புவார்....வசனம் எல்லாம் சரியாக நினைவில்லை...ஸீன் மட்டுமே....

   கீதா

   நீக்கு
  3. ஆம் நானும் பார்த்து இருக்கிறேன்

   நீக்கு
 11. மொக்கேசியாவுல பொக்கேஷியா கிடைக்குமானு பார்த்து சொல்லுங்க..!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூக்கடைதானே... நிறைய இருக்குதாம்.

   நீக்கு
  2. கீதா அந்த ப்க்ஜக்:) சத்தத்துக்கும் பதில் சொல்லச் சொல்லுங்கோ கில்லர்ஜியை... பப்பி தண்ணி குடிப்பதைப்போல இல்ல???:) ஹா ஹா

   நீக்கு
  3. அவ்வ்வ்வ்வ்வ் ????

   நீக்கு
  4. haaahaaaaaaaaaa :) ரஞ்சித் மரண பயத்தில் இருக்கார் :) இப்போ பச்சக் சத்தமா முக்கியம்

   நீக்கு
  5. பச்சக்கின் பின்னணி பின்னால் புரியும்.

   நீக்கு
  6. அதிரா அதே அதே அதே பச்சக்!!!!

   ஆனால் அதிரா எனக்கு அந்த பச்சக்கில் ஏதோ விஷமம் இருப்பதாகப் பட்டது நெத்து கேட்க நினைத்து விட்டுருச்சு வேறு ஒன்றில் பிஸியாக இருந்ததால்...

   கில்லர்ஜியே சொல்லிட்டார் பாருங்க பின்னால் தெரியும்ன்னு

   அந்த மெல்லந்தி லேடி வெள்ளந்தி இல்ல.னு மட்டும் புரியுது...

   கீதா

   நீக்கு
  7. மெல்லந்தி + வெள்ளந்தி ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர்

   நீக்கு
 12. ஏடாகூடமாக முடிக்காமல் இருந்தால் சரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா யாரு கண்டா...?
   எல்லாம் விதியின் வழி

   நீக்கு
  2. ஹா ஹா ஹா புதுவருடத்தில ஜி எம்பி ஐயா ரொம்ப மாறிட்டார்ர்:).. பொஸிடிவ்வா பேசுறார்ர்.. பயப்பிடிறார்ர்ர்....

   நீக்கு
  3. மாற்றமென்பது உங்கள் கணிப்பில்தான் நான் அப்படியேதான் இருக்கிறேன் பயம் கிலோ என்ன விலை அதிரா

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ஜி எம் பி ஐயா ஜோக் பண்றார். மாற்றம் என்பதையும் நம் உடம்பின் வளர்ச்சியையும் நம்மால் என்றுமே கண்டுபிடிக்க முடியாது, மற்றவர்களால் மட்டும்தான் முடியும்:)....
   நாம் நினைப்போம் நாம் அப்படியேதான் இருக்கிறோம் என ஆனா நம்மை அவதானிப்பவர்களுக்கு மட்டுமே மாற்றம் புரியும்:)...

   நீக்கு
 13. வாசகர்களுக்கும் அடிவயிற்றைக் கலக்கிறது...!

  பதிலளிநீக்கு
 14. இப்படியா இடம் பொருள் ஏவல் தெரியாம தொடரும் போடுவீங்க?! நாங்கலாம் மண்டைய பிச்சுக்கிட்டு உங்கள மாதிரி ஆகனுமா?!

  பதிலளிநீக்கு
 15. ஏங்க இப்படி பண்றீங்க .நாளைக்கே இரண்டாம் பாகம் வெளியிடுங்களேன்

  பதிலளிநீக்கு
 16. இன்னும் கொஞ்டம் தனகலாமே என நெ தமிழனின் கொமெண்ட்டையும் தேடினேன் ஆளை இன்னும் காணம்:).. ச்சோ மீ ரன்னிங்... ஶ்ரீராம் க்கு குட் மோனிங் சொல்லோணும்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாரம்பரிய திருநெல்வேலி கதை ஆகவே தாமதமாகத்தான் வருவார்.

   நீக்கு
 17. ஹாஹாஹா, ஒரு மாதிரி முடிவு என்னனு புரிஞ்சு போச்சு! பாவம் ரஞ்சித்! நல்லா மாட்டிக் கொண்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு மனுஷன் மாட்டிக்கொண்டது உங்களுக்கு சிரிப்பு வருதா ?
   அதுவும் ரஞ்சித் நெல்லைக்காரர், இப்போ நெல்லைத்தமிழர் சண்டைக்கு வரப்போறார்...

   எனக்கு ஒன்னும் தெரியாது நெல்லையா ?
   திருச்சியா ?
   வேடிக்கை பார்ப்பதே எமது வேலை

   நீக்கு
  2. நெல்லைக்காரர் எப்படித் தப்பிக்கப் போறார்னு பார்க்க ஆவலோடு காத்திருக்கேன். இஃகி, இஃகி!

   நீக்கு
  3. பார்ப்போம் இருட்டுக்கடை அல்வா கொடுக்கிறாரா ? என்பதை...

   நீக்கு
  4. அப்படியும் ஐடியா இருக்கிறதா

   நீக்கு
  5. இருங்கலாம் ஐயா பொருத்திருந்து பார்ப்போம்.

   நீக்கு
  6. இதுலருந்தே தெரியலையா நெல்லைக்காரங்க அப்பாவினு!! ஆனா அப்பாவின்னு போட்டுக்கறவங்கள சொல்லலையாக்கும் மீ!!!

   கீதா

   நீக்கு
  7. அதிராவை காலை வாறுவது போலிருக்கிறதே...

   நீக்கு
 18. இண்டியன் கிட்னி தான் நல்லாருக்கும் .. அப்புடி..ன்னு யாரோ சொல்லிக்கினுருக்காங்கோ!....

  அதுக்குத்தான்
  ரஞ்ஜிட்டை பலிகடா மாதிரி உள்ளாற தள்ளிக்கினு போயிருக்காணுவோ!..

  அப்பிடின்னு பட்சி சொல்லிச்சு!...

  நித்திக்கே ஒரு ரஞ்சி கிடைச்சிருக்கிறப்போ..

  இந்த ரஞ்சிட்க்கு ஒரு மஞ்சி
  கெடைக்காமயா போயிருக்கும்!..

  இருக்குறதை உட்டுப்போட்டு
  பறக்குறதுக்கு ஆசைப்பட்டா...
  இந்தக் கெதி தான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அம்மா பேச்சை கேட்டு அன்றைக்கே மாமன் மகள் குஞ்சரத்தை கட்டியிருந்தால் இந்த நிலை வருமா ?

   நீக்கு
 19. தே.மு.தி.க கோடி என்ன நிறம் என்று நான் யோசிப்பதற்குள் நல்ல வேலை நீங்களே விளக்கி விட்டீர்கள்.
  எப்படி முடியும் என்று யூகித்து விட்டேன். என்னடா இது இரெண்டு பேர்கள் யூகித்து விட்டார்களே என்று மாற்றி விடாமல் இருந்தால் சரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக இதை யாரும் யூகித்து சொல்லமுடியாது என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை.

   மேடம், நான் மாற்றவில்லை பதிவு தற்போது நிலுவையில்தான் இருக்கிறது திட்டமிட்ட தேதிக்கு தாணியங்கியாக வெளிவரும்.

   நீக்கு
 20. ஒரு சின்ன சந்தேகம், ஐ லைக் இந்தியன்ஸ் என்று தலைப்பு, கீழே உங்கள் படம். நீங்கள் என்ன இந்தியர்களின் பிரதிநிதியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "ஒரு குவளை சோறுக்கு ஒரு சோறு பதம்" என்று சொல்வதில்லையா ? அதைப்போல் நினைக்கலாமே...

   நீக்கு
 21. நானும் சகோ துரைசெல்வராஜூ அவர்கள் சொன்னது போல் தான் நினைக்கிறேன்.
  ரஞ்சித் என்ன கேட்டார் என்பதை அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
 22. அன்பு தேவகோட்டையாரே அவசரத்துல ஏதும் முடிவிக்கு வந்துறாதீக. மனோரமா குரலில் எடுத்துக் கொள்ளவும். நிஜமாவே கதி கலங்குது. ஓ ஒரு வேளை எயிட்ஸ்
  நோய் இருக்கான்னு டெஸ்ட் செய்யறாங்களோ.

  பாவம் ரஞ்சித்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா மருத்துவரிடமிருந்து தகவல் வரட்டும் அதுவரை பொறுமை காப்போம்.

   நீக்கு
 23. விறுவிறு நடை பாராட்டுகள் தொடரும் போட்டு காக்க வைத்து விட்டீர்களே

  பதிலளிநீக்கு
 24. நானும்தான் கருப்பாக இருக்கிறேன்...ஆனால் புல்ஸி மாதிர கலையாக இல்லாமல இருக்கிறேன் நண்பரே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாலும் கிளைகள் தொடுக்காமல் விட்டு விட்டீர்களே நண்பரே

   நீக்கு
 25. கில்லர்ஜி மிக நன்றாக கதை எழுதுகின்றீர்கள். நகைச்சுவையுடனும் இருக்கிறது. முதலில் தேதிமுக புரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது. சிரித்துவிட்டேன்.

  அந்த பச்சக் பப்ளிக் ப்ளேஸ் என்றால் இந்நேரம் சமூகவலைத்தளங்களில் வைரலாக வந்திருக்கனுமே!

  இப்படி சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்களே. அடுத்தது எப்ப வரும் விவேக் என்ன ஆனார் ஏதோ அவருக்கு வேண்டாதது நிகழ இருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது.

  தொடர்கிறோம்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூகவலைத்தலங்களை மெல்லேந்தியா அரசு கட்டுக்கோப்புடன் வைத்து இருக்கிறது ஆகவே இதையெல்லாம் பார்க்க முடியாது.

   விவேக்கா... ரண்ஸிட்தானே...?
   எல்லாம் கணினியில் எழுதுபவன் செயல்.

   நீக்கு
 26. எந்த திசையில் எங்களை அழைத்துச் செல்கின்றீர்கள் என்றே புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களுக்கு, தற்போது மெல்லேந்தியாவில்தான் இருக்கிறோம்.

   நீக்கு
 27. வணக்கம் சகோதரரே

  நல்ல சுவாரஸ்யமான கதை. மிகவும் அழகாக தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் நகர்த்தி சென்று இருக்கிறீர்கள். முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். நேற்று என்னால் வலை உலா வர இயலவில்லை. அதனால் இன்று தாமதமாக வந்து நிதானமாக படித்து கருத்திடுகிறேன். ஆனால், கதையின் முடிவை இன்று இரவு 12 மணி வரை நான் தூங்காமல் விழித்திருந்தால், தாமதிக்காமல் படித்து விடலாம் எனவும் நம்புகிறேன். இல்லையா? கணினியில் எழுதுபவரால் ரஞ்சித்தின் நிலை தறிகெட்டு போகாமல், நல்லபடியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.( ஏனெனில் நானும் நெல்லை.) ஹா ஹா. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா வாங்க சகோ நீங்களும் நெல்லையா ? அதுதான் உள்ளூர்க்காரர் என்ற பாசமோ...

   எல்லாம் கணினியில் எழுதியபடிதானே நடக்கும்.

   தங்களது காத்திருப்புக்கு நன்றி.

   நீக்கு
 28. தொடரும் போட்டதுனால படிக்காம இருந்தேன். நல்லா சஸ்பென்சா எழுதியிருக்கீங்க.

  முன்கின் தெரியாத ஊரிலா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தொடரும் போட்டதால் படிக்காமல் இருந்தேன் என்பது முறையா ?

   நானும் எப்பொழுதுதான் எழுதிப்பழகுவது ?

   முன்பின் தெரியாத ஊர் மட்டுமல்ல! தெரியாத நாடு. உங்கள் ஊர் ரஞ்சித்துக்கு இது தேவையா ?

   நீக்கு
  2. கில்லர்ஜி... இப்போப் பாருங்க.. அடுத்த பகுதி எப்போப் போடுவீங்கன்னு பார்த்துக்கிட்டே இருக்கணும். அப்புறம் மறந்துவிட்ட முன்பகுதியை திரும்பப் படிக்கணும்.

   சஸ்பென்ஸ் படங்கள்மாதிரி கிளைமாக்ஸ் சப்னு இருந்ததுனா அது அடுத்த பிராப்ளம்.....

   நீக்கு
  3. அதற்காக எனக்கும் க்ரைம் எழுத்தாளர் மாதிரி வரணும்னு நப்பாசை இருக்காதா ?

   நீக்கு
 29. சமீப காலமாக 110 விமர்சனங்கள் என்பதனைப் பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக வியப்பாக உள்ளது. உங்கள் புகைப்படம் காவல்துறையின் உயரதிகாரி போலவே இருக்கின்றது. சாலையில் நின்று கையைக் காட்டினால் பலரும் பயந்து விடுவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஜி.

   நீக்கு
 30. ஃபுல்சி கைட்லி உண்மைக் கதாபாத்திரமா? புதிர்! ஹாஸ்பிட்டலில் நின்று விடுகிறது. சஸ்பென்ஸ் முடிச்சு அவிழக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நாட்டின் பெயர்கள்கூட கற்பனையே...

   நீக்கு