தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 16, 2020

குரும்பூர், குட்டிக்கதை குருசாமி



01. மேடையில் பேசிக்கொண்டு இருந்தார் அரசியல்வாதி அரியநாயகம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்த அருட்கொடை இது எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை என்று சொன்னதைக் கேட்டு மக்கள் பலமாக கை தட்டினார்கள் கூடவே மேடையில் வீற்றிருந்த அரியநாயகத்தின் இரண்டாவது மனைவி மாதவியும் கை தட்டினாள்.

02. வீரமாகாளி கோயிலில் முந்தானை ஏந்திக்கொண்டு தாயே எம் புருசனை நீ மீட்டுக் கொடுத்துட்டா இந்த வருஷக் களரிக்கு உனக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கிறேன் ஆத்தா என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள் மங்களேஸ்வரி டாஸ்மாக் தகராறில் ரெண்டு பேர்களை வெட்டிக் கொன்று விட்டு சிறையில் இருக்கும் கணவன் காத்தமுத்துவுக்காக.

03. காதலுக்கு குறுக்கே நிற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பேன் கையில் கோடரியைத் தூக்கி காண்பித்து வீரவசனம் பேசினார் கிழட்டு நாயகன் வெல்டிங் ஸ்டார் வடுகநாத் கட் கட் என்று இயக்குனர் சொன்னதும் மேலாளர் மேகநாதன் ஓடிவந்து நாயகனின் காதில் ஓதினான் ஸார் நீங்க சொன்னபடியே உங்க மகளுக்கு லவ் லட்டர் கொடுத்தவனை நம்ம ஆளுங்க அடிச்சு தண்டவாளத்துல போட்டாங்களாம் என்றான்.

04. கொங்குமுடியும், இருளப்பனும் கொள்ளையடித்த நகைகளை மூன்றாக பிரித்து தங்களது பங்குகளை வீட்டில் கொடுத்து விட்டு மற்றொரு பங்கை நேர்த்திக்கடன் செலுத்த காட்டுக்குள் இருக்கும் காளி கோயிலுக்கு செல்லும் ஒத்தையடிப் பாதையில் நடந்து செல்லும் பொழுது இருளப்பனை பின்புறமாக கத்தியால் குத்தி கொன்று ஓடையில் தள்ளி விட்டு நகையை எடுத்துக் கொண்டு ஓடினான் கொங்குமுடி.

05. பீர் பாட்டிலை கையில் பிடித்து சிரித்துக் கொண்டு உங்கள் எனர்ஜிக்கு எப்பொழுதும் இதையே உபயோகிப்பீர் என்று சொல்லி விளம்பர ஸூட்டிங் முடிந்ததும் நிருபர்கள் கேட்ட இன்றைய இளைஞர்களுக்கு தங்களின் அறிவுரை ? என்ற முதல் கேள்விக்கு இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்வதே என் கடமை என்றான் கிரிக்கெட் வீரர் கிஷோர்.

06. நம்ம குடும்பம் முன்னேறாமல் போனதுக்கு இந்தக் குடிதான் காரணம் நான் திருந்திட்டேன் உன் தலைமேல் சத்தியம் சத்யா இனிமேல் நான் அந்த குடிகாரப்பய குமார்கூட சேர்ந்து கிட்டு குடிக்கவே மாட்டேன் என்று மனைவி சத்யகலாவின் தலையில் அடித்து ஆயிரமாவது முறையாக சத்தியம் செய்தான் குடிகாரன் குமரேசன்.

07. ஆத்தா தாயே என் தாலி என்றைக்கும் நிலைக்க நீதான் காக்க வேண்டும் என்று ஒரே ஷாட்டில் ஓகே செய்த கனிகாவை அடுத்த காபரே டான்ஸுக்கு தயாராகச் சொன்னார் இயக்குனர் இந்திரன் உடன் தாலியைக் கழட்டி விட்டு கட்டியிருந்த காஞ்சிபுரம் பட்டுப் புடவையை உருவி வீசி விட்டு ட்டூ பீஸுடன் நின்றாள் கனவுக்கன்னி கனிகா.

08. சாலையோர மரத்தடியில் உட்கார்ந்து கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து செங்கோடனிடம் கூடிய சீக்கிரம் உனக்கு மிகப்பெரிய கண்டம் இருக்கு அதிலிருந்து நீ தப்பிச்சுட்டா உன்னைப் பிடிச்ச ஏழரை நாட்டுச் சனியன் விலகிடும் என்று சொல்லிக் கொண்டு இருந்த சோசியர் சோனைமுத்துவை பிரேக் பிடிக்காத ஆட்டோ மோதி மரத்தோடு தள்ளி மண்டையை உடைத்தது.

09. நம்நாடு இப்பொழுது ராணுவத்துறையில் நவீன வளர்ச்சி பெற்றுள்ளது பெண்கள் இரவிலும் தனியாக நடமாட முடிகிறது அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான அரசாக இருக்கிறது என்று சர்வதேச அமைப்பு நமக்கு சான்றிதழ் அளித்திருப்பது நமக்கெல்லாம் பெருமையான விடயம் என்று குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து உரையாற்றினார் ஜனாதிபதி ஜனார்த்தனன்.

10. நான் திரும்பி வர்றது வரைக்கும் நீங்க இரண்டு பேரும் இந்த இடத்திலேயே விளையாடணும் நான் வரும் பொழுது உங்களுக்கு பொம்மை எல்லாம் வாங்கி வருவேன் கவனமாக இருங்க இப்ப மனுஷப்பயலுக நடமாட்டம் அதிகமாக இருக்கு என்று குழந்தைப் பேய்களுக்கு அக்கரையோடு சொல்லி விட்டு சென்றது தாய்ப்பேய் தாயம்மாள்.

சிவாதாமஸ்அலி-
அரியநாயகத்தோட இரண்டாவது பொண்டாட்டி பேரு மாதவியா... வேற பேரு கிடைக்கலையா... ?

75 கருத்துகள்:

  1. ///மேடையில் பேசிக்கொண்டு இருந்தார் அரசியல்வாதி அரியநாயகம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்த அருட்கொடை இது எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை என்று சொன்னதைக் கேட்டு மக்கள் பலமாக கை தட்டினார்கள் கூடவே மேடையில் வீற்றிருந்த அரியநாயகத்தின் இரண்டாவது மனைவி மாதவியும் கை தட்டினாள்.////
    ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கணவன் பேசுவதை கேட்டு ரசித்த மனைவியைக் கண்டு நக்கலாக சிரிக்கலாமா ?

      நீக்கு
  2. ///நான் திரும்பி வர்றது வரைக்கும் நீங்க இரண்டு பேரும் இந்த இடத்திலேயே விளையாடணும் நான் வரும் பொழுது உங்களுக்கு பொம்மை எல்லாம் வாங்கி வருவேன் கவனமாக இருங்க இப்ப மனுஷப்பயலுக நடமாட்டம் அதிகமாக இருக்கு என்று குழந்தைப் பேய்களுக்கு அக்கரையோடு சொல்லி விட்டு சென்றது தாய்ப்பேய் தாயம்மாள்.///
    ஹா ஹா ஹா அபாரக் கற்பனைகள் கில்லர்ஜி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா இப்பொழுது பேய்களின் வாழ்க்கை பாவமாகத்தான் இருக்கிறது மனிதர்களால்...

      நீக்கு
  3. இதைப் பார்த்ததும் நினைவுக்கு வரும் கவிதை ஒன்று..

    “பல லட்சங்கள்
    வாங்கி - அன்று
    திருமணம்
    முடித்தவர் - இன்று
    மேடை மேடையாக
    ஏறி முழங்குகிறார்
    சீதனத்தை
    ஒழிப்பேன் என
    ஏனெனில் அவர்
    மூன்று பெண்களின்
    தந்தையாம்”..

    பதிலளிநீக்கு
  4. ஹாஹா :) அரியநாயகம்  வெல்டிங் ஸ்டார் :) ஹாஹா ரசித்தேன் எனக்கு ரொம்ப புடிச்சது தாய்ப்பேய் தாயம்மாள் தான் ..பேய்க்கே  பேய்க்காட்டிட்டாங்களே மனுஷங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேய்க்கே பேய்க்காட்டிட்டாங்களே//

      ஆமாவுல மனுஷங்களாச்சே...

      நீக்கு
  5. ரசித்தேன் அனைத்தையும்.

    பதிலளிநீக்கு
  6. கனிகா என்று நிஜமாகவே ஒரு நடிகை உண்டு தெரியுமோ? ஃபைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி
      இந்த சமாச்சாரமெல்லாம் எனக்கு உண்மையிலேயே தெரியாது.

      தயவு செய்து கனிகாவிடம் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    உங்களது அபார கற்பனைகள் அனைத்தையுமே மிகவும் ரசித்தேன்.ஆனால் ஒவ்வொன்றும் உண்மைகளேயே தொகுத்த விதமாக அமைந்துள்ளது. பெயர்களை பொருத்தமாக தேர்ந்தெடுத்த விதங்களும் அருமை.

    உபதேசங்கள் ஊருக்கு சொல்வது எளிது. தனக்கு என்றுமே தன் நியாயங்கள் மட்டுந்தான் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.

    கொள்ளையடித்ததை மூன்று பங்கு வைக்கும் போதே இப்படியொரு நிலை வரும் என்பதை அந்த கொள்ளையர்களின் நல்ல மனது எச்சரிக்கவில்லையா ? ஹா. ஹா.

    சோசியர் சோனைமுத்துவின் நிலைமை கடைசியில் பாவம் இப்படியா ஆக வேண்டும்.கூடவே இருந்த அந்த கிளியும் சற்று தன் கிளிப்பேச்சினால் சொல்லாமல் விட்டு விட்டதே.. ! ஹா ஹா

    பேய்க்கே மனிதர்களிடம் நம்பிக்கை இல்லை. தங்கள் குணத்தை விட மனித மனங்களைப் பற்றி நன்றாக அளந்து வைத்திருக்கிறது. அத்தனையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை முழுமையாக அலசி கருத்துரை இட்டமைக்கு நன்றி.

      பாவம் அந்தக்கிளியின் எதிர்காலம் எப்படியோ ?

      பேய்களை ஒழிக்க இப்பொழுது மந்திரவாதிகள் பெருகி விட்டார்களே... ஆகவே இந்நிலை போலும்.

      நீக்கு
  8. அனைத்தும் அட்டகாசம் கில்லர்ஜி.....

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு கதை.
    மிக நன்றாக இருந்தது.
    ஸ்டார் அரிவாளும் , தாய்ப் பேயும் சூப்பர்.
    எப்படித்தான் யோசிப்பீர்களோ அன்பு தேவகோட்டை ஜி.
    மனம் நிறை வாழ்த்துக்கள்.மீண்டும் மீண்டும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா
      தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  10. அனைத்தும் அருமை
    சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு அருமை.

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் சிறப்பாக இருக்கிறது கில்லர்ஜி. மைக்ரோ கதைகள்...

    பதிலளிநீக்கு
  12. தாய் பேய் சொல்வதும் அருமை. மனிதர்களை கண்டு பேயும் பயப்பட்ம் காலமாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ காலமாற்றத்தில் இதுவும் ஒன்றே... மீண்டும் நன்றி.

      நீக்கு
  13. குட்டிக் கதைகள் அருமை கில்லர்ஜி.... அனைத்தையும் ரசித்தேன்.

    எல்லாக் கதைகளிலும் முரணை நல்லா சுட்டிக் காண்பித்துள்ளீர்கள்.

    நானும் நினைத்துக்கொள்வேன்.. திருடன், சில மருத்துவர்கள் இவங்களும் கடவுள்ட வேண்டிக்குவாங்க. ஒருத்தன் திருட நிறைய இளிச்சவாயங்கள் மாட்டணும் என்றும் அடுத்தவன், நிறையபேர் நோயாளியா ஆகணும் என்றும் (தனிப்பட்ட கிளினிக் வைத்திருப்பவர்கள். மற்ற மருத்துவர்கள் அல்ல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      எங்கும் முரணே முன்னுதாரனமாக இருக்கிறது.

      திருடர்கள் காளி கோவிலில் பூஜை செய்து விட்டு தொழிலுக்கு போவது முறையா ?

      நீக்கு
    2. "தொழில்'னு அதைச் சொல்லிட்டீங்களே... அப்புறம் என்ன...இறைவனைத் தொழுதுட்டு தொழிலுக்குச் செல்றாங்கன்னு வச்சுக்கிட வேண்டியதுதான். ஹி ஹி ஹி

      நீக்கு
    3. ஹா.. ஹா.. ஆமாவுல...

      நீக்கு
  14. இவர்கள்தானே இன்று பெரும்பான்மையினர்? இவர்கள் திருந்துவது எப்படி? எப்போது?

    கவலைப்பட வைக்கிறது உங்களின் இந்தக் கருத்தாழம் மிக்க பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் இங்கு நகைப்பதைவிட கவலை கொள்வதே முன்னிலை வகிக்கிறது.

      எல்லாம் காலத்தின் கோலம்.

      நீக்கு
  15. நாட்டில் பெருகி வரும் மூட நம்பிக்கைகளை, உங்கள் பாணியில் நன்றாக வெளுத்து வாங்கி உள்ளீர்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      இதுதானே நடைமுறை உண்மையாக இருக்கிறது நன்றி ஜி

      நீக்கு
  16. சமூக அவலங்களை குட்டிக் கதைதளில் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள். பெயர்களுக்கு பின்னால் வில்லங்கம் இருக்கிறதோ தெரியாது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றிகள் பல! பெயரில் வில்லங்கம் ஹா.. ஹா..

      நீக்கு
  17. தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    தங்கள் பதிவு - எமது திரட்டியில்: வலை ஓலை

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் நண்பரே நான் குறிச்சொல் இணைத்தே வெளியிடுகிறேன்.

    தற்சமயம் கணினி இல்லை அடுத்த மாதம்தான் அந்த வாய்ப்பு கிட்டும்.

    அலைபேசியில்தான் பதிவிடுகிறேன்.
    தொடர்வோம் நட்பில் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. என்னுடைய மொட்டை தலையை உறவினர்கள் நன்றாக தடவுகிறார்கள் என்று புலம்பிவிட்டு மைத்துனர் வந்ததைக் கண்டவுடன் "என்ன மச்சான் நீங்களே வந்துட்டீங்க? நான் இப்பதான் ATM போய் எடுத்து வந்தேன்" என்று கொடுத்தார் கொடைவள்ளல் கில்லெர்ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது குட்டிக்கதை ஸூப்பர் ஆனால் கில்லர்ஜி என்ற அழகான பெயரை இப்படி கொலை செய்வது தெய்வகுற்றமாகி விடும் என்று அச்சமாக இருக்கிறது.

      வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  20. ஒவ்வொன்றும் அருமை..
    உங்களால் மட்டுமே இந்த மாதிரி
    செய்வதற்கு முடியும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  21. ரசித்தேன்
    கொரோனா காலம் எச்சரிக்கையாக இருங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமே...
      தங்களது நலமும் பேணவும் நன்றி

      நீக்கு
  22. எல்லாமே நன்றாக உள்ளன. அதிலும் தாய்ப் பேய் குட்டிப் பேய்களுக்குச் சொல்லும் அறிவுரை! கனிகா என்னும் பெயரில் ஒரு நடிகை இருந்தார். ஏதோ ஒரு படத்தில் அவர் டெல்லி கணேஷின் பெண்ணாக காயத்ரி என்னும் பெயரில் வருவார். மாதவன் அந்தப் படத்தின் கதாநாயகன். ஆனால் இவர் மாதவனைக் கல்யாணமெல்லாம் செய்துக்க மாட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கனிகாவின் ஜாதகமே தங்களிடம் இருக்கிறதே...
      ஹூம் நானெல்லாம் வேஸ்ட்.

      நீக்கு
    2. நீங்க வேறே கில்லர்ஜி, இதெல்லாம் குழந்தைகள் இருக்கையில் பார்த்தவை! எத்தனையோ காலம் ஆச்சு. இப்போல்லாம் செய்தி கேட்கக் கூடத் தொலைக்காட்சியில் உட்காருவது இல்லை. குழந்தைகள் பார்ப்பாங்களே! அப்போப் பார்த்தது.

      நீக்கு
    3. இருந்தாலும் ஸ்ரீராம்ஜி, நீங்களெல்லாம் இவர்களின் சரித்திரம் தெரிஞ்சு வச்சு இருக்கீங்க!

      நீக்கு
  23. இரண்டாவது ரொம்பப் பிடிச்சது. ஏனெனில் பெரும்பாலோர் தவறை எல்லாம் செய்துவிட்டுப் பின்னர் சாமி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால் சரியாயிடும் என்றோ அம்மனுக்கோ, இறைவனுக்கோ அபிஷேஹங்கள், காணிக்கைகள் எனக் கொடுத்துட்டாலோ சரியாகி விடும் என்றும் நினைக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே டாஸ்மாக்கில் குடித்து விட்டு தகராறு செய்து கொலையில் முடிந்தவனுக்கு பிரார்த்தனையொரு கேடு.

      நீக்கு
  24. சில, பல வருடங்கள் முன்னர் நடந்த கதை. தெரிந்த ஒருத்தர் தன் மருமகளைப் பாடாய்ப் படுத்துவார். ஆனால் அது தெரியாவண்ணம் மாரியம்மன் கோயிலுக்குப் போய் அம்மனிடம் உருகோ உருகுனு உருகுவார். வருபவர்களைச் சிநேகிதம் பண்ணிக் கொண்டு மருமகளிடம் தான் கஷ்டப்படுவதாகச் சொல்லி நடிப்பார். பின்னர் மாரியம்மனுக்கு அபிஷேஹத்துக்குப் பால், அன்னதானத்துக்கூ அரிசி என வாங்கிக் கொடுப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேடிக்கை மனிதர்கள் நம்நாட்டில் அதிகமே என்ன செய்வது ?

      வருகைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  25. அத்தனைக் கதைகளையும் ரசித்தேன் கில்லர்ஜி! அட்டகாசம்.

    கடைசி கதைல பேய்னு சொன்னதாலோ என்னவோ ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பேய் அதிராவுக்கே பிடிச்சுருச்சாமே... அதாவது பேய்க்கதை'னு சொல்ல வந்தேன்.

      நீக்கு
  26. முதல் கதை ஹா ஹா ஹா

    இரண்டாவது பெரும்பாலோர் அப்படித்தான். தப்பு செஞ்சுட்டு கோயிலுக்கு பணம் கொடுத்தா அது சரியாகிடும்னு. குறிப்பா நம்ம அரசியல்வாதிகள் நெத்தில குங்குமம் விபூதி இல்லாம வரவே மாட்டாங்க கோயில் கோயிலா போய் கும்பிடுவாங்க...

    இதை வைச்சு இப்படிச் சின்ன கதிய ஒரு நொடிக் கதை எழுதிருக்கேன்...ஆனா இன்னும் வெளியிடலை அது பழுதான கணினில மாட்டிக்கிடுச்சு...அது போல தந்தையும் தாயும் முன்னெறி தெய்வம்னு தன் குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பிரபு தன் வயதான தந்தையை தன்னந்தனியாக ஊரில்/முதியோர் இல்லத்தில் வைத்திருந்தான்.

    பெற்றோரை தன்னோடு அல்லது அருகில் கூட வைச்சுக்காம ஆனால் அவங்க இறந்ததும் காரியம் மட்டும் செய்வது இப்படி சின்ன சின்ன தாக எழுதி வைத்திருக்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உயிரோடு இருக்கும்போது பெற்றோருக்கு ரசம் வச்சு சோறு போடமாட்டான். இறந்த பிறகு கறிச்சோறு போடுவான் உறவுகளுக்கு...

      நீக்கு
  27. எல்லாமே சூப்பர் கில்லர்ஜி. மிகவும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கலக்கல் தொடர்க தோழர்

    பதிலளிநீக்கு
  29. சுவையான செய்திகளைச் சொல்லும்
    அருமையான தகவற் திரட்டு

    பதிலளிநீக்கு
  30. முன்னுக்கு பின் முரண் என்பது இது தானோ?
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்படித்தான் எல்லோருக்கும் பின்னே வருவதா ?

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  31. அனைத்தும் அருமை. இந்த குட்டி கதைகளை படிக்கும்போது ‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கும் எனக்கும் இல்லை.’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பதிவை இரசித்தேன். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  32. முன்னுக்கு பின் முரணான கதைகள் அனைத்துமே அருமை. மிகவும் ரசித்தது கடைசி பேய் கதை.

    பதிலளிநீக்கு
  33. இது நல்ல கருத்தாக்க பதிவு.கிளியின் சீட்டால் ஏழரை சனி இதோடு போய்விடும் என்று சொன்ன ஜோசியர் சோனைமுத்துவுக்கு ப்ரேக் இல்லாத ஆட்டோவால் மண்டை உடைவதை கிலி ஜோசியம் பார்த்தவன் உணரவில்லை.இதை தெளிய வைப்பதுதான் இப்போதைய தேவை.இது நடக்காவிடில் மக்கள் அனைவரும் ஜோசியம் மனநிலைக்கு மாரவெண்டியதுதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  34. தாய்பேய் தாயம்மா குழந்தை பேய்களுக்கு அறிவுரை சொன்னது காலத்தின் கட்டாயம் ... இல்லையென்றால் இந்த மனுசபயலுக குழந்தை பேய்களின் முகத்திலேயே துப்பி வச்சுடப்போறானுங்க ..... அப்புறமா எல்லா பேய்களுக்கும் "கொரானா" பரவி கும்மி அடி ... குத்துவிளக்கு ஏத்துன்னு சொன்னா பாவம் அதுங்க "வத்திபெட்டி"க்கு எங்கதான் போகும் .. நீங்களே சொல்லுங்க .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  35. வருக நண்பரே
    தாயம்மாள் உலக விசயம் அறிந்தது போல அதனாலதான் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்லிப் போகுது.

    எதற்கும் அடுத்து நடனம் ஆட தயராஓம் நமசிவாய!

    பதிலளிநீக்கு
  36. உங்கள் சிந்தனையும், பதிவுகளும் வேற லெவல் ஜி. ஊரில் இருக்கும் அத்தனை முரண்பாடுகளையும் ஒரே பதிவில் சொல்லி விட்டீர்கள். சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் பதிவை இரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  37. நானும் அதே கேள்வியை கேட்கிறேன் நண்பரே. வேற பேரு கிடைக்கலியா . ஏன் மாதவி . :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. யாருக்கிட்டே கேட்கிறீங்க ? அரியநாயகத்திடமா ?

      நீக்கு