தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 01, 2020

ஆறுதல் மொழிகள் ஆறு



   கொலைவெறி எழுத்தாளர் கொங்குமுடி மரணத்துக்கு அஞ்சாதவர் சிறந்த கவிஞரும்கூட அவரது மனைவியிடம் உணவு வேண்டும் என்பதைக்கூட கவிதை நடையில் சொல்லியே கேட்பார் மனைவி மங்குனியோ எல்லாம் விதி என்று வாழ்வைக் கழித்துக் கொண்டு இருக்கிறாள். இந்தச் சூழலில் அவரது நண்பர் சாபக்கேடு சாவக்கட்டி பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி சின்னா பின்னமாகி மாஞ்சாக்காடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறார். அவரால் தற்சமயம் பார்க்கவும், கேட்கவும் மட்டுமே இயலும் அவரைக் காணச்சென்ற கொங்குமுடி அரளிப் பூச்செண்டு வாங்கிக் கொண்டு சென்றவர்.

சற்று நேரம் அமைதியாக பேசாதிருந்தவர் நண்பரைத் தோளில் தட்டிக் கொடுத்து எனதருமை நண்பா சாவக்கட்டி சாவின் வாயைக் கட்டிவிடு இதோ உனக்காகவே நான் எழுதிய கவிதை படிக்கின்றேன் கேள். என்றதும் சாவக்கட்டியின் மனைவி அறையை விட்டு வெளியேறினார் உடன் தொடர்ந்து படித்தார் கொலைவெறி எழுத்தாளர் கொங்குமுடி..

மரணம் நம்மைத் தழுவும் பொழுது நாம்
அதை அணைத்துக் ‘’கொல்ல’’வேண்டும்.

மரணம் நெருங்கும் பொழுது விலகி விடும்
விலகும் பொழுது நெருங்கித் தொடும்.

காலன் வருவதைக் கண்டால்
மரணஅடி கொடுக்க முயற்சி.

மரணத்தின் தருவாயிலாவது
மனிதத்தை நேசித்துப்பார்.

உன்னுடைய மரணம் பிறருக்கு
சந்தோஷத்தை கொடுக்க கூடாது.

மரணமென கண்டு சலிக்காதே
சரணமென நினைத்து சந்தோஷி

ஆறுதல் மொழிகள் ஆறு தந்தவர் சென்று வருகிறேன் சாவக்கட்டி சாவையே நீ என்னிடம் காட்டிக்கொடு நாளை வருகிறேன் என்றவர் வெளியேறினார்.

மறுதினம் சாவக்கட்டி வீட்டில் கிடஇருந்தார் வீட்டு வாசலில் நாற்காலிகளில் ஆண்களும், உள்ளே பெண்களுமாக உறவினர்கள் உட்கார்ந்து இருந்தனர்... ஏனோ தெரியவில்லை சப்தம் மட்டும் கேட்டது இப்படி....


டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...
டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...
டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...
டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...
டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...
டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...
டண்ட ணக்கும்... டணக்கும் ணக்கும்...

Chivas Regal சிவசம்போ-
நாட்டுல நல்ல வார்த்தைக்கு பஞ்சமாக போச்சே... ?

காணொளி

51 கருத்துகள்:

  1. ஆறுதல் மொழிகள் ஆறும் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  2. மனைவியிடம் உணவு கேட்பதைக் கூடக் கவிதை நடையில் கேட்பார் நு கவிதை சாம்பிளுக்கு ஒன்னு சொல்லாம விட்டுவிட்டீங்களே கில்லர்ஜி!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாவம் சாபக்கேடு சாவக்கட்டி உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காரு உங்களுக்கு உணவுக்கவிதை கேட்குதா ?

      நீக்கு
  3. ரீகல் சிவசம்போ சொல்லுவதை அப்படியே ஹா ஹா ஹா ஹா

    பின்ன நண்பரைப் பார்க்கப் போறப்ப அரளிப் பூச்சென்டு.

    ஆறுதல் மொழிகள் ஆறு நல்லாருக்கு ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொங்குமுடிக்கு புத்தி லட்சணம் இவ்வளவுதான் போல... கொலைவெறி எழுத்தாளராயிற்றே...

      நீக்கு
  4. கொலைவெறி கொங்குமுடி
    சாபக்கேடு சாவக்கட்டி
    மாஞ்சாக்காடு மருத்துவமனை

    எப்படி ஜி இப்படியெல்லாம்...? ஹா... ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எல்லாம் மேலே இருக்காங்களே பெரீய்ய்ய்ய மனிதர்கள் அவர்களுக்கானது...

      அவர் நினைத்தால் சிறை.
      இல்லையேல் விடுதலை
      இல்லையெனில் சிறையே வீடு

      நீக்கு
  5. இந்த படுக்கைல துண்டை அழகா வச்சிருப்பது நான் எடுத்த புகைப்படம்னா. எப்படி உங்களுக்குக் கிடைத்தது?

    அது சரி..உங்களை கவிஞர் ஆக்கியதில் (கொலைவெறி கவிஞர் ஆக்கியதில்) நம்ம பிரதமர் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு போலிருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது நீங்கள் எடுத்த படமா ? மகிழ்ச்சி.
      நீங்க திருச்சிக்காரவுங்களோட சண்டையை மூட்டி விடாதீங்க... கேள்வி கேட்கணும் என்றால் கொலைவெறி கொங்குமுடியை பார்க்கவும்.

      நீக்கு
  6. எடுக்கும் படங்களில்[காணொலி உட்பட] புதுமை. எடுத்தாளும் சொற்களில் புதுமை. சூட்டும் பெயர்களில் புதுமை. சுடச்சுடப் பதிவுகள் எழுதுவதில் புதுமை. ‘புதுமை விரும்பி’ கில்லர்ஜியின் வலைப்பதிவுப் பணி என்னைப் பெரிதும் மகிழ்விக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பாராட்டுதல் கண்டு மகிழ்ச்சி

      ஆனால் இலவுப்பதிவுக்கு வந்து மகிழ்விக்கிறது என்பது நல்லாவேயில்லை ஹா... ஹா... ஹா...

      நீக்கு
  7. எங்கிருந்து சார் இப்படிலாம் வார்த்தை பிடிக்கிறீங்க. அருமையா இருக்கு. கீதா மேடம் கேட்டதுதான் எனக்கும் தோனியது. உணவுக் கவிதை சொல்லாம விட்டுட்டீங்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனுஷன் நொம்பலத்துல இருக்கும்போது இலவு வீட்டில் உணவு கேட்கப்படாது.

      நீக்கு
  8. கொங்குமுடி எழுதிய ஆறுதல் கவிதை நன்றாக இருக்கிறது.

    காணொளி நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வருகைக்கும், கவிதையை இரசித்தமைக்கும் நன்றி

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கொலைவெறி கொங்குமுடி எழுத்தையும் மிஞ்சியது.. "விபத்து ஒன்றில் சின்னா பின்னமாகி, மாஞ்சாகாடு மருத்துவமனையில், இருக்கும் கேட்கவும் பார்க்கவும் மட்டுமே முடிந்த சாபக்கேடு சாவக்கட்டி.." அப்பப்பா..! விசித்திரமான பெயர்கள் அனைத்தையும் இப்படி உங்கள் ஒருவரால்தான் தரமுடியும். ஹா. ஹா. ஹா. ரசித்தேன்.

    அந்த கவிதையை அவர்(சாவக்கட்டி) மனைவி கேட்கக் கூடாதா? ஏன் உடனே வெளியேற வேண்டும்?"உனக்காகவே எழுதியது" என்று கொங்குமுடி சொன்னதை சூட்சுமமாக புரிந்து கொண்டாரோ ? ஹா. ஹா. ஹா. மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

    அவர் எழுதிய ஆறுதல் கவிதை அழகாகவே உள்ளது. படுக்கையில் துண்டை வைத்து எடுத்திருக்கும் படம் வித்தியாசத்துடன் நன்றாக உள்ளது.

    காணொளியும் கண்டேன். நன்றாக உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில், மனிதர்களே இல்லாத இலவு பாடல் மட்டுமா? (இலவா.. இழவா எது சரி?)

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பதிவை இரசித்து படித்தமைக்கு நன்றி, அவரது மனைவி முன்பே அனுபவப்'பட்டு' இருப்பார் ஆகவே வெளியேறி விட்டார் போல...

      கவிதையை இரசித்தமைக்கு மிக்க நன்றி.
      இலவு என்பதுதான் சரி

      நீக்கு
  10. ஆறுதல் கவிதை அருமை. எத்தனுக்கு எத்தன் எப்பொழுதுமே உண்டு.
    எத்தனுக்குப் பெண்பால் என்ன என்று தெரியவில்லை.

    பார்க்கலாம் தமிழகத்தின் விதியை.
    உங்கள் எழுத்தின் உண்மை அதிரவைக்கிறது அன்பு தேவகோட்டைஜி.
    காணொளி ஏதோ ஆளில்லாத புறனகர் போல இருக்கிறதே.
    காரைக்குடி நினைவுகள். செம்மண் பூமி.
    சமயத்துக்கேற்ற பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா எத்தனுக்கு பெண்பால் எத்தி.

      இது கரூர் மாவட்டம் அரண்மனைக்கிளி படம் எடுத்த பங்களா இங்குதான் இருக்கிறது.

      வருகைக்கு நன்றி அம்மா
      கடந்த பதிவு "கண்ணகி" படிக்கவில்லையே...

      நீக்கு
  11. எதிலெதிலோ பிழைத்தவர் கவிதையில் விழுந்து விட்டார்! அறம் பாடிவிட்டாரோ கவிஞர்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அறம் பாடவில்லை, அறுத்து பாடி விட்டார் போல...

      நீக்கு
  12. ஆறு மனமே... ஆறு .... இந்த கில்லர்ஜீ கட்டளை ஆறு....!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  13. மரணத்தின் தருவாயிலாவது மனிதத்தை நேசித்துப்பார். -அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  14. இக்கருத்துரைக்கு அன்பு கூர்ந்து மன்னிக்கவும்...

    கடைசி நிமிடத்தில் மனிதத்தை நேசித்து ஆகப் போவது ஒன்றுமேயில்லை...

    இதுவரைக்கும் இல்லாத தொய்வு
    உங்களது புது மொழிகளில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி வாங்க, மன்னிப்பு எதற்கு ?

      நான் எதிர்வாதம் செய்யவில்லை சமீபத்திய நிகழ்வு உலகமே யாருக்கு என்று மரணமோ... என்று அஞ்சி வாழும் காலகட்டமிது.

      இந்த நிலையில் வலிமையானவன் நலிந்து விட்டான் என்பதால் அவனுடையதை அபகறிக்க நினைக்கலாமா ?

      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  15. இண்ட பதிவில் எதனோடவோ பாதிப்பு தெரிகிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா எங்காவது ஓர் மூலையில் இதன் தொடர்பு இருக்கும்.
      மேபி ஆர் மேநாட்பி

      நீக்கு
  16. அது சரி. கவிதைகளாலேயே கொன்று விடுகிறார்கள் சிலர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இவருக்கு கொற்கவிஞர் பட்டம் கொடுக்கலாமோ...

      நீக்கு
  17. மரணத்தை அணைத்து கொல்லவேண்டும் .. சரி, கொரோனாவை என்ன செய்யலாம்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்டு பயமுறுத்தக்கூடாது.

      நீக்கு
  18. என்னவோ தெரியலை கில்லர்ஜி, என்னால் இந்தப் பதிவை ரசிக்க முடியலை! அதிலும் அந்தக் காணொளி ஒப்பாரி! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. பதிவில் நவரசமும் வேண்டும் என்பதே எனது கொல்'கை
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  19. ஆருதல் மொழிகள் அருமை. கொலைவெறி எழுத்தாளர் கொங்குமுடிமேல கொலவெறில இருக்கேன். மாஞ்சா காடு மறுத்துவமனை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நமக்கு எதற்கு வஞ்சம் ? அவரது மனைவி மங்குனியே ஒருநாள் தலையணையை வைத்து அமுக்கி கொல்லப் போவதாக ரகசிய தகவல் வந்தது.

      வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  20. ஆறுதலும், தேறுதலும் இயல்புதான்.

    பதிலளிநீக்கு
  21. போஸ்ட்டுக்கும் சசிகலா ஆன்ரிக்கும் ஏதும் ஜம்பந்தம் இருக்கோ கில்லர்ஜி:)) அழகாக கவிதை எழுதி அர்ப்பணிச்சிருக்கிறீங்கள்:).

    ஹோட்டேல் டவலில் செய்த உருவம் சூப்பர்.

    வீடியோ. உண்மையாகவோ இது செத்தவீட்டில் நடக்குதோ.. நான் ஏதொ கோயில் பஜனை போலும் என நினைச்சேன்... அடக் கடவுளே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா
      அதை உங்கள் ஆன்ட்டியிடமே கேளுங்கள், கவிதையை பாராட்டியமைக்கு நன்றி.

      அந்த புகைப்படம் திரு. நெல்லைத்தமிழன் அவர்களுடையது. காணொளி ஆம் நான்தான் எடுத்தேன்.

      நீக்கு
  22. ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    பதிலளிநீக்கு
  23. ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. புதுமையாக யோசிப்பதில் உங்களை அடித்துக் கொள்ள முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை அடித்துக் கொல்ல முடியாதா ?

      நீக்கு
    2. ஆச்சர்யம்...    பானு அக்காவின் கமெண்ட் படித்ததும் இந்த பதிலை நான் எதிர்பார்த்தேன்!!

      நீக்கு
  24. கவிதை அருமை. பாராட்டுகள்! துக்க வீட்டில் ஒப்பாரி வைப்பதை ஒலி பெருக்கி மூலம் தெரிவிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானும் முதன்முறையாக கண்டேன். அது கரூர் மாவட்டம்.

      நீக்கு