தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 24, 2020

வண்ணம் கொண்ட கொரோனாவே...


வணக்கம் நட்பூக்களே...
கொரோனா இந்திய மக்களை வீட்டுச் சிறையில் வைத்து தனிமைபடுத்தி இருந்தபோது நானும் தனிமை படுத்தப்பட்டேன் என்னவொன்று இரட்டை ஆயுள் தண்டனை என்பார்களே அதனைப்போல் எனக்கு மட்டும் இரட்டை தனிமைச்சிறை முன்னதாகவே குடும்பம் என்னை தனிமை படுத்தி விட்டது தொடர்ந்து கொரோனாவும் தனது பங்கை நடைமுறைப்படுத்தி விட்டது. தேவகோட்டை பெரிய வீட்டில் நான் மட்டுமே கணினியும் இல்லை, தொல்லைக்காட்சி பெட்டியும் இல்லை, அலைபேசியும் கீழே விழுந்து தனது முகத்தை கோரப்படுத்திக் கொண்டது ஆகவே இணையமும் பிரச்சனையாகி அலைபேசி செத்துச் செத்து பிழைக்கும். பிறருடைய பதிவை படித்து வேகமாக கருத்துரை எழுதி வெளியிடும்போது அலைபேசி அணைந்து விடும் பிறகு மீண்டும் எழுதுவேன் ஆகவே சிறிய கருத்துரையாகவே இருக்கும்.

இந்த தனிமையில் அலைபேசி நோட்புக்கில் (மெமோ) சில பதிவுகளை எழுதினேன் அதில் ஒன்றுதான் இந்த ‘’வண்ணம் கொண்ட வெண்ணிலவே’’ என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் கீழே உண்மையான பாடலின் யூட்டியூப் இணைப்பும் தந்துள்ளேன். எனக்கு மீகவும் பிடித்த பாடலிது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இசையமைத்து பாடியிருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் இடம் பெற்ற திரைப்படம் சிகரம்.
வஞ்சம் கொண்ட கொரோனாவே
வையகம் விட்டு போவாயே
மண்ணில் எங்கும் பிஞ்சு உள்ளம்
உன்னை  கெஞ்சி கேட்கின்றோம்

பக்கத்தில் நீயும் வந்தால் துக்கத்தில் நானிருப்பேன்
தூக்கத்தை நான் இழந்து ஏக்கத்தில் தவித்திருப்பேன்
நீயும் எம்மை தவிர்த்து விட்டால் சேயும்தன்னை துளிர்த்திடுமே
தேவையில்லை உன் உறவு தேய்ந்து போவாய் கொரோனாவே

வஞ்சம் கொண்ட கொரோனாவே
வையகம் விட்டு போவாயே
மண்ணில் எங்கும் பிஞ்சு உள்ளம்
உன்னை  கெஞ்சி கேட்கின்றோம்

நல்ல வார்த்தை சொல்வதற்கு நாட்டிலே மனிதர் இல்லை
நாடு விட்டு நாடு போனால் நாங்கள் போக பாதையில்லை
தள்ளித் தள்ளி நீயும் போனால் துள்ளிச் செல்லும் மானைப்போல
சொல்லிச் சொல்லி வாழ்த்திடுவோம் மனங்களால் மகிழ்ந்திடுவோம்

வஞ்சம் கொண்ட கொரோனாவே
வையகம் விட்டு போவாயே
மண்ணில் எங்கும் பிஞ்சு உள்ளம்
உன்னை  கெஞ்சி கேட்கின்றோம்

சைனா நாட்டு சைத்தானே சைலண்டாய் போயி விடு
கைலாசம் நீயும் போனால் நித்தியுன்னை அணைத்திடுவார்
ரஞ்சிதாவை நீயும் கொஞ்சம் கொஞ்சி விடு சைக்கோவே
வஞ்சகத்தை தீர்த்துக் கொண்டு வையகத்தை வாழவிடு

வஞ்சம் கொண்ட கொரோனாவே
வையகம் விட்டு போவாயே
மண்ணில் எங்கும் பிஞ்சு உள்ளம்
உன்னை  கெஞ்சி கேட்கின்றோம்

இதோ பாடலின் யூட்டியூப் இணைப்பு

ChivasRegal சிவசம்போ-
வையகத்தை காப்பாற்ற நித்தியும், ரஞ்சியும்தான் பலி ஆகணுமா ? 

74 கருத்துகள்:

  1. கொரோனாவினை விரட்ட இப்படி ஒரு பாட்டு! நன்றாக இருக்கிறது ஜி. பாராட்டுகள்.

    இந்தச் சூழல் விரைவில் சரியாகவேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும். விரைவில் சூழல் சரியாகும் என்று நம்பிக்கை கொள்வோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உலகம் நலம் பெறவேண்டும் இதுவே அனைவரின் விருப்பம்.

      நீக்கு
  2. கில்ல்ர்ஜி தலைப்பு பார்த்ததுமே வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல்தான் நினைவுக்கு வந்தது..

    மிகவும் பிடித்த பாடல்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மேற்கண்ட பாடலை தினம் பத்து முறை கூறி வருபவர்களுக்கு கொரோனா
    நோய் வராது என்கிற வாக்கியத்தை சேர்க்க மறந்து விடீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாட்ஸ்-ஆப்பில் போட்டு விடலாம் போலயே... நல்ல யோசனை.

      நீக்கு
  4. நித்திதான் நம் எல்லோரையும்விட புத்திசாலி. தனித் தீவுக்கே கொரோனா பாதிக்காத அளவு சென்றுவிட்டார்.

    பாடல் நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகலை எப்போதுமே முன்ஜாக்கிரதை முனியசாமிதான்.

      நீக்கு
  5. ஒரிஜினல் வரிக்கு ஏற்ப உங்க பாட்டு வரிகள் நல்லாருக்கு ஜி.

    நான் பாடிப் பார்த்தேன்

    தலைப்புப் பார்த்ததும் அடுத்த வரி எனக்குத் தோன்றியது எம்மை விட்டுப் போவாயோ? என்று அடுத்தடுத்து வரிகள் வந்தன ஹா ஹா ஹா ஹா

    நல்லாருக்கு ஜி

    விரைவில் இந்த நிலை மாற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பை நான் //வஞ்சம் கொண்ட கொரோனாவே...// என்று கொடுக்காமல் //வண்ணம் கொண்ட கொரோனாவே...// என்று கொடுத்ததற்கும் காரணம் உண்டு.

      எல்லோரும் நலம் பெறட்டும்.

      நீக்கு
    2. கீதா சொல்லாத ஒரு விடயத்தை நான் சொல்கிறேன்.  இந்தப் பாடல் மாண்ட் ராகம்!

      நீக்கு
    3. அப்படியா ? எனது மைண்ட்லயும் தோணுச்சு.

      நீக்கு
  6. உங்களுக்கு நன்றாகப் பாடலும் எழுத வருகிறது கில்லர்ஜி. வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்படி கண்ணேறு படுவதால்தான் யாருமே திரைப்படத்துக்கு பாடல் எழுத அழைக்கவில்லையோ...

      நீக்கு
  7. கீதா எழுதியது போல் நானும் அப்பாடலையே நினைத்துக்கொண்டேன். எனக்கு மிகமிக பிடித்த பாடல்.
    நீங்கள் சூப்பரா எழுதியிருக்கிறீங்க அண்ணா ஜீ. எல்லாம் விரைவில் சரியாகும், பழையநிலைமைக்கு நாடு திரும்பும். நம்பிக்கையுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்கும் மிகவும் பிடித்த பாடல்தான். தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. இசையமைத்து பாடி, யு டியூபில்,வெளியிடுங்க. கூடவே தொடர்ந்து இந்த பாடலை தினம் ஒளிபரப்பினால் கொராணா  உங்களை அண்டாது என்று ஒரு விளம்பரமும் செய்யுங்கள். சும்மா 10 லக்ஷம் டவுன்லோடு கிடைக்கும்.
     இந்த ஐடியா மோடிக்கு கிடைக்கவில்லையே!
    சந்தடி சாக்கில தனிமைக்கு கைலாசத்தில் இருக்கிற ரஞ்சிதாவும் வேண்டுமோ? முடியாது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா, விளக்கு புடிச்சது, கை தட்டியது போக புதிய யோசனைகளுக்கு ஆயிரம் பொற்காசுகள் மோடி அரசு தருவதாக இரகசிய தகவல் வந்தது ஆகவே முயன்றேன்.

      நான் ரஞ்சிதாவை கேட்டேனா ? அபாண்டமாக சொல்லாதீர்கள் பதிவை மீண்டும் படியுங்கள் ஐயா.

      நீக்கு
  9. சிகரம் படத்தில் வரும் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அந்த மேட்டில் நீங்கள் எழுதியிருக்கும் பாடலையும் ரசித்தேன். தனிமையை திறமையாகவே சமாளித்திருக்கிறீர்கள். உங்களின் மன உறுதியை பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் இப்பாடல் அனைவருக்கும் பிடிக்கும் தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  10. யார் யாரிடம் என்னென்ன திறமைகள் நல்ல ரசனை உங்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக் கூடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா என்ன செய்வது ? நானும் ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேந்திரக்குமார் இவர்கள் பிரபலம் ஆகத் தொடங்கிய காலத்திலிருந்துதான் எழுதுகிறேன். நேரம்கூடி வரவில்லையே...

      ஆடி போயி ஆவணி வந்தால் டாப் கியருல வரருவேனாம் சோலந்தூர், சோசியர் சோனைமுத்து சொன்னார்.

      நீக்கு
  11. பெரிய வீட்டில் தனியாக....   படிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.   தொலைகாட்சி, அலைபேசி இல்லாததும் கொடுமைதான்.

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.  பாடல் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.  வையகம் என்று சொல்லாமல் வையம் என்றே சொல்லலாமே...   அர்த்தமும் மாறாது சாந்தமும் கெடாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      காலம் ஒருநாள் கை கூடும் அது
      கனவாய் போனால் மனம் வாடும்.

      வையகம் என்பதுதானே உலகம் வையம் என்றும் சொல்லலாமா... ?

      நீக்கு
    2. அன்பு தேவகோட்டைஜி,
      தனிமைப் படுத்தப் பட்டாலும் எங்களுக்குப்
      பாடல் கிடைத்தது.
      மிக அருமை.
      வையம் விட்டுப் போய்விடு என்று கூட
      அமைக்கலாம்.
      தாங்கள் நலமாக இருக்க வேண்டும்.
      தொலைக்காட்சி இல்லையா ஏன்.
      நல்ல பாடல்கள் கேட்டு அமைதி பெறவும்.

      சென்னைக்கு இடம் மாறிவிடுங்கள். எல்லா நண்பர்களும் அங்கே
      இருக்கிறார்கள்.
      வாழ்க நலமுடன்.

      நீக்கு
    3. வாங்க அம்மா தங்களது விளக்கத்திற்கு நன்றி. சென்னைக்குள் இப்பொழுது நுழைவதும், வெளியேறுவதும் நடக்காத செயல் அம்மா.

      நீக்கு
  13. அருமையான பாட்டு ஜி...

    நீங்கள் எழுதியதையும் பாடிப் பார்த்தேன்... அருமை...

    பதிலளிநீக்கு
  14. அருமை..நித்திக்கிட்ட தள்ளும் ஐடியா அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  15. கவிதை நன்றாக இருக்கிறது.
    தனிமை மாறும் , பெரிய வீட்டில் பேத்தி ஓடி விளையாட வருவாள்.

    இறை யருளால் இந்த நிலைமை மாற வேண்டும். எல்லோரும் குடும்பத்தினர்களுடன் மகிழ்வாய் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாக்கு பலிக்கட்டும்.
      உலக மக்கள் நலம் பெறட்டும்.
      பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. எஸ் பி பியின் பாடலுக்கு பொருத்மாக மிகப் பிரமாதமாக மறு பாடல் எழுதியிருக்கிறீர்கள். நானும் உங்கள் பாடலை அந்த மெட்டிலேயே பாடிப் பார்த்தேன். அருமை..

    தனிமைச்சிறை வாழ்வு அதுவும் யாருமில்லாத பெரிய வீட்டில் மிகவும் கஸ்டமானதுதான் விரைவில் தங்கள் பேரக்குழந்தைகள் தங்கள் வீடு வந்து சத்தமிட்டு, ஆரவார ஒலிகள் எழுப்பி தங்கள் சிறை வாழ்வை போக்கி குதூகுலபடுத்த வேண்டுமென ஆண்டவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும், எனக்கான பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  17. கொரோனா கேளு கேளு கேளு
    கில்லர்ஜி பாடிய கவிதை கேளு
    கொல்லும் தொழிலைக் கைவிட்டு
    நல்ல பிள்ளையாய் ஓடிவிடு
    சொல்லாமல் நீயும் ஓடிவிடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மலையூர் மம்பட்டியான் பாடல் போலவே இருக்கிறது.

      நீக்கு
    2. மலையூர் மம்பட்டியான் படம் பார்த்ததுண்டு. பாடல் எதுவும் நினைவில் இல்லை. மனதில் பட்டதை எழுதினேன்.

      அது கிடக்கட்டும்,
      குடும்பத்தார் விலகியிருப்பதால் மட்டுமல்ல, கூடவே இருந்தாலும் மனத்தளவில் தனியாக வாழும் நிலை பலருக்கு உண்டு.

      அதை மறந்து எழுதுதல், வாசித்தல் என்று நேரத்தைச் செலவிடலாம்.

      நல்லதே நடக்கும்.

      நீக்கு
    3. வருக நண்பரே தங்களது ஆறுதல் வார்த்தைக்கு நன்றி.

      நீக்கு
  18. இப்படியெல்லாம் கொரனாவுக்கு பாட்டு எழுதிக் காட்டினால் - இன்னும் கொஞ்சம் எழுதுங்க ராசாவே..ன்னு உட்கார்ந்து கொள்ளாதா!..

    அடுத்த பாட்டு காரசாரமா இருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இனி விரட்டி எழுதிடுவோம் நன்றி ஜி

      நீக்கு
  19. நித்தியும் ரஞ்சியும் எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும்...

    அவரவர் பாடு அவரவர்க்கு... அவர்களால் நமக்கு என்ன கஷ்டம்?...

    பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே..ன்னு
    மகாகவி பாடியிருக்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது ஜி ஆமா இப்போ அவுகளைப் பற்றிய தகவலே வருவதில்லையே... ஏன் ?

      நீக்கு
  20. கொரோனாவிற்கு தமிழ்த்தெரிந்தால் இந்த பாட்டு கேட்டு தலை தெறிக்க ஓடிவிடும். அருமையான பாடல் வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கொரோனாவுக்கு உலக மொழிகள் அனைத்தும் தெரியுமாமே...

      நீக்கு
    2. அப்படி இருந்தும் இன்னும் ஏன் ஓடவில்லை? ஒருவேளை காது கேட்காதோ?இன்னும் ஒருமுறை உரக்க பாடி பாருங்கள்.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. எஸ்.பி.பி.யை பாடச் சொல்லுவோம்.

      நீக்கு
  21. கொரோனாவிற்கான உங்கள் பாடல் அருமையாக இருக்கிறது. சிகரம்? யார் நடித்தது? நீங்கள் சொல்லும் பாடலை எல்லாம் நான் கேட்டதாக நினைவில் இல்லை. யூ ட்யூபிலும் போய்ப் பார்த்துவிட்டேன். எஸ்.பி.பி மட்டும் தான் வரார். பாடலையும் கேட்டேன். முன்னர் கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அந்தப் பாடலின் வரிகளுக்குப் பொருத்தமாக நீங்கள் எழுதி உள்ளதால், ஆழ்ந்து அனுபவித்து ரசித்துக் கேட்ட பாடல் அது என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை ரசித்தமைக்கு நன்றி.
      இப்படத்தில் நடித்தது எஸ்.பி.பி. ராதா, சார்லி இசைக்கான படம். இசையமைத்தது எஸ்.பி.பி.

      சுட்டி தருகிறேன்.

      நீக்கு
    2. பெரிய வீட்டில் தனிமையில் இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு மனம் வருந்தினேன். அதை முன்னர் கவனிக்கவில்லை. இப்போதே கவனித்தேன். விரைவில் பேத்தி வந்து தளர்நடையால், மழலை மொழியால் உங்களை மகிழ்விக்கப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    3. தங்களது பிரார்த்தனைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  22. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.பாராட்டுகள்! கோரனாவை நித்தியின் கைலாசத்திற்கு போகச்சொன்ன வரிகளை மிகவும் இரசித்தேன். தொடரட்டும் உங்கள் கவிதைகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      நித்தி சகல சுகங்களையும் தவறான வழியில் அனுபவித்தவர் அகவே கைலாசம் போகட்டும்.

      நீக்கு
  23. பாடல் சிறப்பு சார்.
    இதோ நேத்து தர்னா செய்த மத்தியப்பிரதேசம் முதல்வருக்கும் கொரானா வந்துவிட்டதாம்.
    அணைவரும் சரி ஆகி உலகம் சீக்கிரம் நிம்மதி அடையும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாக்கு நிகழட்டும், வருகைக்கு நன்றி.

      நீக்கு
  24. அருமையான பாட்டு
    கவிஞருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  25. வஞ்சம் கொண்ட கரோனா.... கெஞ்சினால் போய்விடுமா..கவிஞரே..???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அது பலபேரு சோலியை முடித்து விட்டுத்தான் போகும்.

      நீக்கு
    2. அ....அ.. மோ.....இத்யாதி போன்றவர்களின் சோலிய..முடிக்க முாட்டேன்குதே..??கவிஞரே!!

      நீக்கு
    3. உங்களது ஆசை நிறைவேற வியாழக்கிழமை தெட்சிணைமூர்த்திக்கு விரதம் இருங்கள் நண்பரே...

      நீக்கு
  26. கவிதை ஒரு நல்ல முயற்சி. ஆனாலும் ஒரு நல்ல பாடலை கொரோனாவுக்கு தந்து விட்டதில் வருத்தமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கொரோனாவை விரட்டுவதற்குதானே...
      தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  27. மேட்டுக்கு பாட்டு அழகாக எழுதி விட்டீர்கள் நண்பரே. பொருத்தமாய் உள்ளது.
    விரைவில் (உங்களுக்கு )ஆசை இருந்தால் திரையில் முயலலாம்.
    அப்புறம் இந்த பாடல் அப்படியே
    "அன்னை மேரி உன்னை யன்றி ஆறுதலை யார் தருவார் " மாதிரியே உள்ளதே.
    ஒரு வேளை..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
      அன்னை மேரி பாடலா... ? இது புதுசா இருக்கிறதே...

      நீக்கு
  28. நேரம் கிடைத்தால் இரு பாடல்களையும் உன்னிப்பாக கேட்டு சொல்லுங்களேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நீங்கள் சொல்லும் பாடல் எனக்கு தெரியவில்லை. இணைப்பிருந்தால் அனுப்புங்களேன்.

      நீக்கு
    2. ஆம் நண்பரே இந்தப் பாடலின் மெட்டும் பொருத்தமாக இருக்கிறது. இணைப்பு தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  29. ரீமிக்ஸ் முயற்சி சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  30. வஞ்சம் கொண்ட கொரோனாவே
    நெஞ்சம் முட்ட மூக்காலே
    நுழைந்து சாகடிப்பியோ?

    பதிலளிநீக்கு
  31. கொரொனாவை விரட்ட துள்ளித் துள்ளி ஓசை எழுப்பும் பாடல். யார்தான் உலகத்தில் நிலைத்து இருக்கிறார்கள் கொரொனா கூடப் போய் விடும். உலகத்தை ஒன்றிணைத்த ஒரு விடயம் இதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் உண்மைதான் வருகைக்கு நன்றி.

      நீக்கு