தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 25, 2021

குனிந்து நில் தோழா...

ணக்கம் நண்பர்களே... ஒரு நாட்டின் குடியரசு தலைவர் என்பது அந்நாட்டின் முதல் குடிமகன் இல்லையா... அப்படியென்றால் அவரது மதிப்பு எவ்வளவு உயர்வானது. இவ்வுலகின் வல்லரசு நாடான அமெரிக்க அதிபரின் பதவி எல்லாவற்றையும்விட மிகப்பெரியது இல்லையா ?
 
இங்கு தனக்கு முன் நிற்பது தனது நாட்டின் முன்னாள் அதிபர் என்று தெரிந்திருந்தும் அங்கிருக்கும் தேர்தல் பணியாளர் எழுந்து நிற்கவில்லை, அவர் மட்டுமல்ல அங்கு நிற்கும் அனைத்து பெண்களுமே அவரை ஒரு வேட்பாளராகத்தான் பார்க்கின்றார்களே தவிர அதற்கு மேல் துளியளவும் உயர்வாக நினைக்கவேயில்லை. இவர்களின் சரீரத்திலும் குருதிதானே ஓடுகிறது. அதனால்தான் இங்கு ஆட்சி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து நடக்கின்றது.
 
இதோ இரண்டாவது படத்தில் பாருங்கள் ஒரு நடிகையின் வரவுக்காக இவர்கள் எல்லோருமே முதுகை வளைத்து நிற்கின்றார்கள். இவர்கள் நம்மை ஆளும் மந்திரிகளாம் சொல்வதற்கு வெட்கமாக இல்லை. உலகத்திலேயே மிகவும் கீழ்த்தரமான அரசியல்வாதிகள் வாழ்வது இந்தியாவில் தமிழகத்தில்தான் என்ற கணக்கெடுப்பு எத்தனை சரியானது.
 
இதிலொரு வேடிக்கை என்ன தெரியுமா  ?  இதே முடுமைகள் தனியாக ஏதாவது கூட்டம் நடத்த போவார்கள் அங்கு இவர்தான் தலைமையாளர். அங்கு இவர்களின் காலில் விழுந்து ஆசி பெற பல முடுதாறுகள் ச்சே மக்கள் பணி செய்வதற்கு அடுத்தவன் காலில் விழ வேண்டிய அவசியமென்ன  ?  இப்படியே போனால் அடுத்தடுத்து பிறக்கும் இவர்களது வாரிசுகளுக்கும் இதே அடிமைப்புத்திதானே வரும். வீரம் விலைபோய் விடாதா  ?  இவனுகளுக்கு வீரவாள் மற்றும் கேடயங்கள் கொடுப்பதை பார்க்கும்போது அந்த வாளால் இவர்களை வெட்டினால் என்ன  ?  என்றுதான் நல்ல தமிழனுக்கு தோன்றும்.
 

சிவாதாமஸ்அலி-
முட்டாளுங்க ஓட்டு முடுமைகளையே சேரும்.
 
சாம்பசிவம்-
துட்டுக்கு ஓட்டுப் போட்டவங்களைத்தானே திட்டணும் இவனுங்க இறக்கிய பணத்தை எடுக்க வேண்டாமா ?
 
ChivasRegal சிவசம்போ-
இந்த ஆளுங்க இப்படியே மக்களை குழப்பி விட்டு நம்ம சமாச்சாரத்தை மூட வச்சுருவானுங்க போலயே... ?

 
காணொளி

33 கருத்துகள்:

  1. காலில் விழுவது காலை வருவது அடிமைகளின் குணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் தமிழகம் முன்மாதரியாக இருக்கிறது

      நீக்கு
    2. வருக தமிழரே ஆம் தமிழகம் முன்னணியே...

      நீக்கு
  2. தமிழ்நாட்டை அடகு வைத்து விட்டார்களே அடிமைகள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    உங்கள் ஆதங்கம் பதிவில் அழகாக புரிகிறது. ஆனால் அரசியல் எந்த இடத்திலும் புரியாத ஒரு புதிர்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டுதான்.

      நீக்கு
  4. தமிழ்நாட்டுல இரண்டு கட்சிகள்தாம் உண்டு. அதில் ஒன்று அடிமைகள். இன்னொரு கட்சி குடும்ப கொத்தடிமைகள். அவ்ளோதான். மக்களின் தரம் அதலபாதாளத்தில் இருப்பதால் நம் தலைவர்களும் நம்மைப் போலத்தான் இருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் மக்களின் தரம் சிறந்தது (நம்மைவிட). அதனால் அங்கு தலைவர்கள் நம்மைவிட பெட்டராக இருக்கின்றனர். அவ்ளோதான் விஷயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே சரியான உண்மையை சொன்னீர்கள் நண்பரே

      நீக்கு
  5. அங்கு அமர்ந்திருப்பவர் 'இங்கிருந்தே முழங்காலிடு என்பதுபோல கைசைகை செய்வதும்...   காலில் விழ, சற்றே பின்னோக்கி நகர்ந்து இடம்பண்ணிக்கொண்டு அங்கிருந்து முழங்காலில் நகர்ந்து வருவதும்,   விசுவாசத்துக்கு பாராட்டாக முதுகில் தட்டிக் கொடுக்கப்படுவதும்.....
    நல்ல காணொளி.  முன்பே பலமுறை பார்த்துச் சிரித்த காணொளி.

    பதிலளிநீக்கு
  6. வேதனை தான். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  7. ஹையோ, ஹையோ, இப்படி அவமானங்களை அடைந்தாவது பதவி சுகம் தேவையா?

    பதிலளிநீக்கு
  8. நம் தமிழ் நாட்டின் கேவலக் கொடுமையை நினைத்து மிக வேதனை.

    இந்த ஊரில் பழைய தலைவருக்குப் பாதுகாப்பு உண்டு.
    ஓரிரண்டு ஓட்டை டப்பாக்களைத் தவிர
    மற்றவர்கள் கௌரவமானவர்கள்.

    மக்களும் தங்கள் தரத்தைத் தாழ்த்தி விடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா மக்கள் தங்களது தரத்தை உணர்ந்தால் வாழ்வில் ஏற்றமே...

      நீக்கு
  9. பதிவின் தலைப்பும், லேபிளும் மிக அருமை.
    காணொளி பார்த்தேன். அதெல்லாம் மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதானே மக்கள் மறந்து விட்டு ஓட்டு போடத்தானே போகிறார்கள்.

      நீக்கு
  10. அந்தப் படத்தைப் பார்த்தால், கோயிலில் கயிறைப்பிடிச்சுத் தேர் இழுப்பதைப்போலவெல்லோ இருக்குது:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஆமாம் அப்படித்தான் இருக்கிறது.

      நீக்கு
  11. தமிழ்நாடு அனைத்தையும் சகிக்கிறதே. வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை.

      நீக்கு
  12. இம்மாதிரியானஅரசியல் வியாதிகள் இருக்கும் வரை உங்களூக்குஎழுத விஷயங்களுக்கு பஞ்சமெ இருக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஹா.. ஹா.. எல்லா வகை பதிவுகளும் எழுத சமுகத்தில் வழியுண்டு ஐயா.

      நீக்கு

  13. ஒரு நல்லவரின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி தேவை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே மிகச்சரியான வார்த்தை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபரைத்தான்.

      அவர் சர்வாதிகாரமாய் நடந்தாலும் நாட்டை நல்வழிப் படுத்தி விட்டார்.

      நீக்கு
  14. தமிழகத்து அறிவாளிகளால் நான் வெட்கி தலை குனிந்துதான் நிற்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இவர்களும் குனிந்துதான் நிற்கிறார்கள் வெட்கமில்லையே...

      நீக்கு