தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 13, 2021

கிளியூர், கிளீனர் கிளிஞ்சான்

 

ணக்கம் காரமடையண்ணே... நல்லா இருக்கீங்களா ? 
வாடாத்தம்பி கிளிஞ்சான்... நல்லா இருக்கேன்டா. இன்னைக்கு லாரிக்கு போகலையா ?
 
இல்லைண்ணே... இன்னைக்கு விடுமுறை சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களைத் தேடி வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்

திரைப்படத்து கதைக்கும், தொலைக்காட்சி நாடக கதைக்கும் வித்தியாசம் என்னண்ணே ?
திரைப்படத்துல இரண்டரை மணி நேரத்துல மூன்று தலைமுறைகளுக்கு திருமணம் நடந்து குழந்தைகள் பிறப்பதை காண்பிப்பாங்க, தொலைக்காட்சி நாடக கதையில ஒரு குழந்தை ஜனித்து, பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து பள்ளியில் சேர்க்கும்வரை ஐந்து வருடத்துக்கு இழுத்து காண்பிப்பாங்க.
 
ஏண்ணே நம்ம உலக்கை நாயகன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் சிறந்த பாதையில் வழி நடத்துவாராண்ணே ? 
ஆமாடா உனக்கு இதிலென்ன சந்தேகம் ?
 
அப்படீனாக்கா நாமலும் அவரையும், கௌதமியும் போல லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்தால் பிரச்சனை வராதுனு சொல்றீங்களா ?
? ? ?
 
ரசினிஆந்து ஆட்சிக்கு வந்தால் எப்படிணே இருக்கும் ?
ஏண்டா அவருதான் பறந்து, பறந்து அடிச்சே ஊழலை ஒழிச்சுருவாருடா...
 
அப்படீனாக்கா நாம துணிந்து நகராட்சி கட்டிடங்கள்ல மனைவி பெயரில் வாடகைக்கு எடுக்கலாம்னு சொல்றீங்க... ?
எதுக்குடா நகராட்சி கட்டிடம் ?
 
நாமலும் வாடகை கொடுக்காமல் இழுத்தடிக்கலாம்ல...
? ? ?
 
ஏண்ணே திருமணம் ஆனதும், தனக்கு தாலி கட்டிய கணவருடைய குலதெய்வம்தானே பெண்களுக்கும் ?
ஆமாடா இதிலென்ன சந்தேகம் உனக்கு ?
 
அப்படீனாக்கா வனிதா விஜயகுமாருக்கு குலதெய்வம் எதுணே ? 
? ? ?
 
அண்ணே காதுல தேன் வந்து பாய்ந்தது போல் இனித்தது அப்படினு சொல்றாங்களே... வாயில தேன் பாய்ந்தால்தானே இனிக்கும் காதுல பாய்ந்தால் எறும்புதானே மொய்க்கும் பின்னே எப்படிணே இனிக்கும் ?
? ? ?
 
என்னண்ணே பதிலே சொல்ல மாட்றீங்க... ? 
? ? ?
 
ChivasRegal சிவசம்போ-
பதில் சொல்லுறது மாதிரியாடா... கேள்வி கேட்குறீங்க ? தறுத்திணியத்துக்கு கேக்குறீங்களேடா... அதிரடி அதிராவே அரண்டு போயிடுவாங்க போலயே...

30 கருத்துகள்:

  1. கிளிஞ்சான் கேள்விகளில் காரமடையான் கிழிஞ்சான்!  அவன் வேலைக்கே போயிருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அதானே இப்படியா கேட்பாங்கே... ?

      நீக்கு
  2. நல்ல நகைச்சுவை! ஆனாலும் எல்லாமும் ரசிக்க முடியலை!

    பதிலளிநீக்கு
  3. குரும்பூர் குப்புசாமி குதித்து கும்மாளம் போடுறார் உங்கள் கேள்விகளில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஹா.. ஹா.. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சார்.
    கிளீனர் கிளிஞ்சான் சந்தேகங்கள் கலகலப்பாக இருக்கிறது.
    அரசியல் வாடையும் நிறைய அடிப்பதால் அதை சுவாரசியமான அடைமொழிகளோடு இன்னும் கலாய்த்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே காரமடையண்ணே பதில் சொல்றது மாதிரியா கேள்வி கேட்கிறான் கிளிஞ்சான் ?

      நீக்கு
  5. ரொம்ப அவெட்டேட்ட் பதிவாக இருக்கே... வனிதா விஜயகுமார் இவரைக் கழற்றி விட்டாச்சு... இன்னொருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் செய்தி வந்தாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஐந்தாவது ரவுண்டு வந்துருச்சா ? வாழ்க வளமுடன்...

      நீக்கு
  6. காலைலயே எழுதணும்னு நினைத்தேன்...இப்போ உள்ள அரசியல்வாதிகள் யாராவது யோக்கியமாக இருக்காங்களா? நடிகர்களைப் பற்றிச் சொல்லும் குறைகளைவிட மிக அதிகமாக இவங்கள்டதானே இருக்கு. இல்லைனா மக்கள் ஏன் அவங்களுக்கு வாக்களிக்கலாம்னு நினைக்கறாங்க? இருக்கற பயலுக எவனும் யோக்கியம் கிடையாது, அதனால புதுசா யாரேனும் வந்தால் அவனாவது நல்லது செய்வானான்னு பார்க்கிறாங்க.

    நீங்க ரசினி, உலக்கை இவங்கமேல சொன்ன குறைகளைப்போல ஆயிரம் மடங்கு நம்ம ஊர் அரசியல்வாதிகள்ட இருக்கு இல்லையா? (இணை துணை வச்சிக்கிட்டு, பெற்ற குழந்தையை தன்னுடைய குழந்தை இல்லை தன் மனைவியோட குழந்தை என்று சட்டசபைல சொன்னவரு கருணாநிதி. வயதானவரோட கோடிக்கணக்கான ரூபாய் உடைய பங்களாவை அமுக்கிக்கிட்டு, 1 கோடிதான் கொடுப்பேன் என்று துரத்தி விட்டவர் உதயநிதி. மாநகராட்சி இடத்தை ஆட்டையப்போட்டுக்கிட்டு கோபாலபுரம் வீட்டைப் பெரிதாக்கினவர்.. இவங்களையெல்லாம் பார்க்கும்போது, புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் வரவேற்பு கொடுக்கத்தானே செய்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நமது மக்களுக்கு ஊழல் செய்பவர்களைத்தான் பிடிக்கிறது என்ன செய்வது ?

      மக்கள் மனதில் நல்ல சிந்தனைகள் வராதவரை நமக்கு வாழ்வில் ஏற்றமில்லை.

      அப்பழுகற்ற மனிதர் திரு. தா. பாண்டியன் அவர்களைவிட, டி. டி. தினகரனுக்கே மக்கள் மதிப்பளிக்கின்றனரே...

      நீக்கு
  7. காசுக்குக் கை நீட்டும் மக்கள் திருந்தாதவரை, சலிக்காமல் சங்கு ஊதினாலும் பலன் கிடைக்காது கில்லர்ஜி.

    \\அதிரடி அதிராவே அரண்டு போயிடுவாங்க போலயே//...அதிரா அதிரடியாக உங்களுக்குப் 'பதிலடி' கொடுப்பார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான். அதிரா வந்தால் பயமாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. கிளீனர் கிளிஞ்சான் கேள்விகளுக்கு அந்த காரமடையான் அண்ணனால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லையே? (அப்பா.. பெயரே பல்லை உடைக்கிறது. ஹா.ஹா.) இவர் கேள்விகளால் "கிழித்தெடுப்பவர்" .. அவர் அதற்கு தகுந்த பதில்களை சொல்லத் தெரியாத "காரமடையன்" போலும்..! ஹா.ஹா.ஹா. பெயர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதமே அலாதிதான். அந்த அண்ணனைப் போல எனக்கும் அரசியல் அவ்வளவாக புரியாது. கே. பதில்களை (அண்ணன் பதில் எங்கே சொன்னார்? அதனால் கேள்விகளை மட்டும்..) ரசித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் வருகைக்கும் விரிவாக ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி.

      நீக்கு
  9. என்னமா கேள்வி கேட்கிறாரே கிளீனர் கிளிஞ்சான் - பதில் சொல்ல முடியாம திணறிட்டார் காரமடையான்!

    பதிலளிநீக்கு
  10. ஒரு அக்மார்க் கில்லர்ஜி பதிவு சில கெள்விகளூக்கு பதிலே இல்லையோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா காரமடையானுக்கு பதில் தெரியாது போலும்...

      நீக்கு
  11. காரமடை கோயம்புத்தூர் அருகே உள்ளது. கிளியனூர் உங்கள் கற்பனையோ? எப்படியாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது.
    அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சில ஆய்வுப்பணிகள் காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் வர இயலவில்லை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே கிளியூர் சாலைக்கிராமம், இளையான்குடி அருகில் உள்ள ஊர்தான்.

      நீக்கு
  12. எனக்கும் அதே சந்“தேகம்... காதுல தேன் பாய்ந்தால் ......பதில் தெரியாட்டி.. பரவாயில்லை.. கேள்வி கேட்காமல் இருக்கக்கூடாது..புர்ச்சி தலைவரு ஒரு பாட்டுல சொல்லியிருக்காரு....ஏன்? என்ற கேள்வி? கேட்காமல் வாழ்க்கையில்லன்னு......அப்புறம்.....அந்த அதிரடி..ஆதிரா...அவுகளே! அரண்டு போயிடுவாங்களா...????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்களுக்கும் இதே சந்தேகம் இருக்கிறதா ?

      நீக்கு