புதன், பிப்ரவரி 10, 2021

எனது விழியில் பூத்தது (3)


ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த மூன்றாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி

வாருங்கள் ரசிப்போம்...

கிராமத்தின் எல்லையில் அழகான கோயில்
(இடம்: இதம்பாடல்)

அனசும், பர்ஹானாவும் மலையின் உச்சியில்...
(இடம்: அல்அய்ன்)

எவன் தலையில் விழுந்தால் எங்களுக்கென்ன ?
(இடம்: கோயமுத்தூர்)

மூன்று மதத்துக்கும் வச்சான்ல ஆப்பு
(இடம்: மதுரை)

அழிந்து போன பாரம்பரியம் தெருவில்...
(இடம்: தேவகோட்டை)

 சிவன் சொத்து குலநாசம்
(இடம்: சேலம்)

சாலையில் லீலை செய்தால் அருவாள் வெட்டு
(இடம்: திருமங்கலம் சாலை)

மரண வீட்டுக்கு போனபோது...
(இடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்)

கிராமத்து காவல் தெய்வங்கள்
(இடம்: கோபாலபட்டணம்)

கோபுரங்களின் கலாச்சார மாற்றங்கள்
(இடம்: பரமக்குடி)

இடுகாட்டில் பிணம் அல்ல டாஸ்மாக்
(இடம்: சுக்காம்பட்டி)

வாடாத பயிர்களின் மீது வாடிய இயந்திரம்
(இடம்: புளியால்)

சாலையோரக் கோவில்கள்
(இடம்: சொக்கம்பட்டி)

மருது சகோதரர்கள் கட்டிய கோபுரம்
(இடம்: காளையார்கோவில்)

குலதெய்வக் கோவிலில் குடை பிடித்தபோது...
(இடம்: இதம்பாடல்)

புகையிரத நிலையம் வெளியே...
(இடம்: பரமக்குடி)

விண்ணைத் தொடும் ராட்டிணம்
(இடம்: அபுதாபி)

குளிப்பதற்காக விடுதியில்...
(இடம்: குளித்தலை)

மாலைக்கருக்கலில் ஓர் தினம்
(இடம்: இளையான்குடி)

பருத்திக் காட்டுக்குள் கில்லர்ஜி
(இடம்: கோபாலபட்டணம்)
   
நட்பூக்களே... ரசித்தீர்களா ? முந்தைய பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு

36 கருத்துகள்:

 1. வெவ்வேறு ஊர்களில் எடுக்கப்பட்ட பாடங்களைத் தகுத்த விதம் நன்று.  
  சிவன்சொத்து குலநாசம் சரி..  அங்கு கோவிலுக்கான அடையாளத்தையே காணோமே...
  காளையார்கோவில் கோவில் அழகு.  குலதெய்வம் கோவிலுக்கு வெளியே குடை அழகு.
  இடுகாட்டில் டாஸ்மாக் கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எடுக்கப்பட்ட பாடங்களைத் தகுத்த //

   படங்களைத் தொகுத்த விதம் என்று படிக்கவும்!

   நீக்கு
  2. அது கோவில் இல்லை ஜி குப்பைமேடு வருகைக்கு நன்றி.

   நீக்கு
 2. படங்கள் அழகாக இருக்கு. நீங்கள் சென்ற இடங்களையும் உங்கள் நினைவுக்காக எடுத்திருக்கிறீர்கள்.

  //சிவன் சொத்து//-படம் புரியலை. கிராமத்து காவல் தெய்வங்களை யாரும் காக்கவில்லையா? காளையார் கோவில் கோபுரம், பரமக்குடி ரயில் நிலையம் வெளியே உள்ள மரம், மாலைக்கருக்கல் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை ரசித்தமைக்கு நன்றி

   //சிவன் சொத்து//

   அதாவது மக்கள் சொத்து இப்படி குப்பையில் கிடக்கிறது என்று சொன்னேன் நண்பரே...

   நீக்கு
 3. எல்லாப் படங்களுமே நன்றாக வந்திருந்தாலும் சிவன் சொத்து அங்கே கோயிலைக்காணோம்னு கேட்கவந்தால் ஶ்ரீராமுக்கு பதில் சொல்லி இருக்கீங்க! மற்றவையும் நன்றாக இருக்கின்றன. "புளியால்" "இதம்பாடல்" போன்ற ஊர்ப்பெயர்களை இப்போத் தான் கேட்கிறேன்/படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஏற்கனவே இவ்வூர்கள் வந்து இருக்கிறதே... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. இத்தனை ஊர்கள், பெயர்களோடு உங்கள் கற்பனையும் கலந்து
  மிக அருமையான படங்கள் வந்திருக்கின்றன.
  நல்லதொரு தொகுப்பு அன்பு தேவ கோட்டைஜி.

  குளித்தலையில் குளித்தது அருமை.

  சிவன் சொத்து என்றதும் அது இடிபட்ட கோவிலோ என்று நினைத்தேன்.
  எங்கள் திருமங்கல ஐய்யனாரும்
  இங்கே வந்திருக்கிறார்.

  டிராக்டர் நடு வயலில் நிற்கிறதே!!!
  அலுப்பு சலிப்பில்லாமல் இந்தப் பதிவைக் கண்டு களிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. சலிப்பில்லாமல் பார்க்கலாம் என்று சொல்ல வந்தேன்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அனைத்துப் படங்களும் அருமையாகவும், அழகாகவும் எடுத்துள்ளீர்கள். அதைவிட அந்தந்த ஊர்களின் பெயர்களையும், சுருக்கமான வார்த்தைகளை பிரயோகித்து எழுதிய விமர்சனங்களும் மிகவும் அழகாக உள்ளது.

  இதில் எந்தப்படத்தை விமர்சிக்காமல் இருப்பதென்றே தெரியவில்லை. அந்தளவிற்கு சிறந்த புகைப்படங்களை எடுத்து புகைப்பட கலைஞராக பரிமளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  வாடாத இயந்திர படமும், புகையிரத நிலையம் வெளியே எடுத்த படமும், மாலைக் கருக்கலில் எடுத்த படமும் மனதை கவர்கிறது.

  பருத்திக் காட்டுக்குள் நீங்கள் பயணிக்கும் நிழற்படமும் நன்றாக உள்ளது. வாழ்த்துகள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 7. அனைத்து படங்களும் அழகு. பாராட்டுகள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 8. இந்த மாதிரி படங்களைத்தான் photo journalism என்று சொல்வார்கள்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 9. கண்களை மட்டுமல்லாமல் மனதையும் கவர்ந்த படங்கள்.

  புகையிரத, மாலைக் கருக்கல்,அரிவாள் வெட்டு படங்களை மிகவும் ரசித்தேன்.

  மரண வீடு...ஹ.ஹ..ஹ!

  பதிலளிநீக்கு
 10. அருமையான படங்கள். இன்னும் என்னென்ன திறமைகளை மறைத்து வைத்திருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 11. படங்கள் எல்லாம் அழகு.
  காளையார் கோவில் படம் , இளையான்குடி படங்கள் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 12. ஆஆஆ உங்கட திருநாமத்தை எதுக்குக் கில்லர்ஜி இதயம் நல்லெண்ணெயில பொரிச்செடுத்தீங்க?:)).. டவுட்டூஊஉ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா இதயம் நல்ல'எண்ணை சரீரத்துக்கு நல்லதாம்.

   நீக்கு
 13. படங்கள் அழகு, எதுக்கு இப்போ பருத்திக் காட்டுக்குள் என்றி குடுக்கிறீங்க?:)

  பதிலளிநீக்கு
 14. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு கதை உள்ளது போல் இருக்கிறது ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி படங்கள் (எனக்குள்) கதை சொல்வது உண்மைதான்.

   நீக்கு
 15. படங்கள் அருமை .. அதனினும் ஒவ்வொன்றுக்கும் சொல்லியிருக்கும் அர்த்தமும் பொருத்தமும் அருமை...

  பதிலளிநீக்கு
 16. படமும் கதை சொல்வதை உணர்ந்தேன்...

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...