தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 26, 2020

பழைய பஞ்சாங்கம்


   கோவை மாநகரம் நான் எனது ஸ்கூட்டியில் தண்ணீர் பந்தலார் தெருவில் போய்க் கொண்டு இருந்தேன் சட்டென ஒரு பெண்மணி கையை குறுக்கே காட்டி நிறுத்தச் சொல்லிட நமக்கு பயம் இல்லா விட்டாலும் பெண்ணைக் கண்டால் பென்ஸ் காரும் நிற்கும் என்று சொல்வார்களே ஸ்கூட்டி எம்மாத்திரம். இரண்டாவது நாம இரக்க குணம் வேறயா.... நான் தமிழக நல்லாட்சியின் ஆணையை மதித்து தலையில் கவசம் மாட்டி இருந்தேன். நான் நின்றதுதான் தாமதம் அவள் சட்டென பின்புறம் வந்து காலைத்தூக்கி இருபுறமும் போட்டுக் கொண்டு...

போங்க சார்
என்றாள் என்னாடா இது... இவளுக்கு முன்பின் தெரியாதவரின் வண்டியில் போகலாமா ? அதுவும் இப்படி இரண்டு புறமும் காலைப் போட்டுக் கொண்டு ? நான் ஆலோசனையிலேயே போகிறேன் அவள் ஏறிய இடத்திலிருந்து அதே சாலையில் ஒரு கி.மீ கடந்ததுதான் தாமதம்...
சார் நிறுத்துங்க..
நமக்கு பயம் இல்லா விட்டாலும் பாவம் பெண்மணி என்ற இரக்குகுணம் வேறா.... சட்டென நிறுத்தினேன் அவள் இறங்கி விட்டு...
ஓகே தாங்க் யூ

அடுத்த கட்டிடத்தை நோக்கி போனாள் ஏதோ அலுவலகத்தில் வேலை செய்கிறாள் போல... ஜீன்ஸ் பேண்ட் சர்ட் அதை வயிற்றில் முடிந்து கட்டி இருந்தால் தலையை விரித்து போட்டிருந்தாள், ஹேண்ட் பேக் தோளில் தொங்கியது காதில் கையிலிடும் வளையல் மாட்டியிருந்தாள். வயது முப்பதைக் கடந்து இருக்கலாம் சற்றே உடம்பு போட்டு இருந்தது. நிச்சயமாக கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையாவது இருந்திருக்க வேண்டுமென்று எனது பெண் மனம் அறியா உள் மனம் ஆருடம் ஜொள்ளியது.

சரி அவள் பாட்டுக்கு போய் விட்டாள் ஒருக்கால் பாரதி தேடிய புதுமைப்பெண் போலும் என்று நினைத்தாலும் எனது மனதில் அப்பொழுதுதான் தோன்றியது நம்ம சித்தப்புவை தேடி வந்து இருக்கிறோம் அவரு பாட்டுக்கு இந்தக்காட்சியை பார்த்து விட்டு யாரடாது ? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது ? சரி அவரிடமாவது பக்குவமாக சொல்லி விடலாம் அதிரா போன்றவர்கள் இதைப்பார்த்து புகைப்படம் எடுத்து வலைப்பூவில் மணம் வீசிட பதிவைப்போட்டு நம் மானத்தை வாங்கி விட்டால் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது. பிறகு சித்தப்பு வீட்டுக்கு வந்து தம்பியிடம் சொன்னேன் அதற்கு அவன் சொன்னான்...

இந்த ஊருல இதெல்லாம் சாதாரணம்ணே... அந்தப்புள்ளே மலையாளியா ?
தெரியலையே தம்பி நான் சரியா கவனிக்கலை.
இங்கே எல்லோரும் இப்படித்தான் நடந்து போறவங்க சும்மா போற வண்டியை நிறுத்தி போற வழியில் இறக்கி விடச்சொல்வாங்க... நாலு வீடு தாண்டினா அவங்க போற இடம் வந்துரும் ஆளாலும் நடக்குறதுக்கு அலுப்பு.
இதென்னப்பா முன்னேப்பின்னே தெரியாதவங்களோட வண்டியில் ஏறினால் அவன் அழுத்தி வண்டியை கிளப்பிட்டான்னா... ?
சந்தேகப்பட்டாள்னா... படக்குனு கண்ணைக் கட்டி நிப்பாட்டி நம்மளை மாட்டி விட்ருவாளுக தர்மஅடி கொடுக்கிறதுக்குனே... நிறையபேரு நடந்து போயிக்கிட்டு இருப்பாங்களே...
நம்மளையும் மாட்டி விட்ருவாளுங்களோ... ?
அபுதாபியில் இருந்துட்டும் இன்னும் பழைய பஞ்சாங்கமாகக்தான் இருக்கீங்கண்ணே...

கடைசியில் தவறே செய்யாத நான்தான் குற்றவாளியா ? எனக்கு இந்த விசயம் புதிதாகப் பட்டது அதன் பிறகுதான் கவனிக்க ஆரம்பித்தேன் சாலையில் போகும்போது பள்ளி சிறுவர்களிலிருந்து... பருவப்பெண் கிழவிகள்வரை ஏதோ திருவள்ளுவர் போக்குவரத்தில் வேலை செய்யும் அலுவலர் போலவே வித்தியாசமாக கைகளை காட்டி நிறுத்தி, அனுமதி கேட்பதெல்லாம் கிடையாது காலைத்தூக்கி மறுபுறம் போட்டு...
ம்... போகலாம் ரைட்
என்கிறார்கள். ஒருமுறை ஸ்கூட்டியில் மகனோடு போய்க்கொண்டு இருந்தேன் வழியில் ஒருவன் நிறுத்தச் சொல்ல நிறுத்தி...
என்ன ?  
லிப்ட் வேணும்...
எம்மகன் மடியில் உட்காருறீங்களா ?

அவனை முறைத்து விட்டு வண்டியை கிளப்பினேன் மகன் கேட்டான்.
எதுக்கு நிறுத்துறீங்க ?
உன்னையும் பார்த்த பிறகு கேட்கலாமா ?
இங்கே இப்படித்தான் நாம பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கணும்.

இந்த இளவயதிலேயே இரண்டு கி.மீ. தூரமாவது மக்கள் நடக்க அலுப்பு படுவதால்தான் மருத்துவமனைகள் நாடெங்கும் பரவி விட்டது எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் சோம்பல் இப்பொழுது மக்கள் நடப்பதை குறைத்து விட்டார்கள் நடக்க அலுப்பு பட்ட மேதாவிகள் வீட்டினுல் மின் விசிறியை போட்டுக் கொண்டு நடக்கும் இயந்திரத்தை ஓடவிட்டு அதில் ஓடுவது கேட்டால் நேரமில்லை அடே மதிகெட்டவர்களா...

கொரோனா போன்ற சறுக்கல்கள் வந்தது இயற்கையோடு இணைந்தது இறையின் செயலே விஞ்ஞானம் மனித வளர்ச்சிக்கு எப்பொழுதும் வீழ்ச்சியே... இந்த விஞ்ஞானத்தால் பெண்கள்தான் முழுமையாக பயன்பட்டு முழுமையாக பிரசவ காலத்தில் வேதனையை அனுபவிக்கின்றீர்கள்.

வாசல் தெளிப்பதற்கு தண்ணீர்ப் பூவாளி

கோலம் போடுவதற்கு துணி விரிப்பு 

நெல்லு அரைப்பதற்கு இயந்திரம்

அரிசி புடைப்பதற்கு இயந்திரம் 

துணிகள் துவைப்பதற்கு இயந்திரம்

அம்மி அரைப்பதற்கு இயந்திரம்

மாவு அரைப்பதற்கு இயந்திரம்

சோறு வடிப்பதற்கு அலுப்பு குக்கர் 

குனியாமல் மேசையில் சோறு

தரையில் படுக்காமல் மெத்தை 

சேலை உடுத்த அலுப்பு நைட்டி

கோலம் போடுவதற்கு இப்பொழுது இயந்திரம்

இதெற்கெல்லாம் தீர்வு வச்சான் மருத்துவ வியாபாரி சிசேரியன். வலி இல்லாமல் பிள்ளைளை பெற்று, அழகை இழக்க விரும்பாமல் புட்டிப்பால் கொடுத்து, இரத்த பந்தத்தை உணர்த்தாமல் வளர்ப்பதால்தான் இக்காலத்திலேயே பெற்றோர்களை பிள்ளைகள் மதியாமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர். அடுத்த சந்ததிகள் அதில்கூட சேர்க்க மாட்டார்கள். இந்த தொலைநோக்கு பார்வைகளை அரசாள்பவர்களும் கருதமாட்டார்கள். அவர்களை கருதிட வைக்கும் புத்திக்கூர்மை மக்களிடமும் இல்லை காரணம் துட்டுக்கு ஓட்டு இந்த நாட்டு கூட்டுக் குடும்ப கலாச்சாரம் அழிந்து இன்னும் நாசமாகும் என்பது உறுதி.


சிவாதாமஸ்அலி-
விஞ்ஞானம் வந்தது தவறில்லை வறம்புமீறி வளர்ந்ததே தவறு

சாம்பசிவம்-
புத்தி கெட்ட மாட்டுக்கு பாத்தி கட்டி பயனில்லைனு ஜிங்காமங்கா ஸ்வாமிகள் சும்மாவா சொன்னாரு ?

ChavasRegal சிவசம்போ-
ஹெல்மெட் போட்டதால மீசையை பார்க்கலை போல, அதான் ஏறிட்டா.... ?


காணொளி

64 கருத்துகள்:

  1. Future Generation - செம நகைச்சுவை. காலம் போகும் கோலம் இப்படி இருக்கு போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே எல்லாம் உங்களது மோடி, மற்றும் அதிமுகவின் புண்ணியம்தான்...

      நீக்கு
  2. கோலம் போடும் இயந்திரம் பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு. அது சரி..இந்த இயந்திரத்தைத் தூக்கி வைப்பது, கோலம் போட்டபின் எடுத்து வைப்பது, கோலம் நிரப்பி வைப்பது யாரு? அதுக்கும் ஒரு தானியங்கி இயந்திரம் (ரோபோ) கேட்காமல் இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... எனக்கும் இதே எண்ணங்கள்தான் ஓடியது நண்பரே...

      நீக்கு
  3. கோயமுத்தூரில் வண்டில ஏர்றவங்கள்லாம் பெண்கள்தானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் என்னிடம் லிப்ட் கேட்டவர்கள் எல்லாம் பெண்பால்தான்.

      நீக்கு
  4. முன் பின் தெரியாதவருக்கு என் வாகனத்தில் இடமில்லை நண்பரே. நீங்க என்னடான்னா நல்லது பண்றேன்னு இப்படி குற்றவாளியாக வந்து நிக்கறீங்களே.
    வாழ்கையே இயந்திரதனமாவுதுன்னு தான் உங்கள் காணொளி சொல்லுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் சொல்லி விட்டேனே... பெண்ணைக் கண்டால் பென்ஸ்'சே நிற்கும்போது எனது ஸ்கூட்டி எம்மாத்திரம்.. காணொளி கண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  5. பெண் என்றால் பேயும் (கில்லெர்ஜீயும்) இறங்கும். நீங்க ஹெல்மெட்டை கழட்டி மீசையை காட்டி காட்டியிருப்பீர்கள் ஆனால் அவர் வேற வண்டியை கை காட்டியிருப்பார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஆகவேதான் நான் கவசத்தை கழட்டவில்லை.
      வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  6. பெண் என்றால் கில்லர்ஜி மனமிரங்குவார் வீக்கர் செக்ஸ் என்பதாலா என்னியம் முன்பு ஸ்பைரோக்ராஃ என்றோரு கர்வி இருந்தது கியர்மாதிரி இருக்கும் ப்ளாஆஸ்டிக்கில் செய்தது ஒன்று பெரிது மற்ற்வை சிறியவை பெரியதில் சின்னதை ஒரு பென்சில் வைத்து உருட்டினால் உங்கள் கோலம் போல்டிசைன் வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வாங்க ஐயா கடந்த குறள் பதிவு படித்தீர்களா ? அந்தக்கருவி ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது உண்மைதான் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  7. இந்தக் கோலம் போடும் கருவியை ஏற்கெனவே முகநூலில் யாரோ பகிர்ந்து பார்த்தேன். இதைவிடக் கையால் போடுவது இன்னும் சீக்கிரம் ஆயிடும். யார் இதைத் தூக்கிக் கொண்டு வந்து போட வைப்பது! ஆனால் இப்போதெல்லாம் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் சோம்பல் என்பது என்னமோ உண்மை தான். ஆனால் முன்பின் தெரியாதவர்களிடம் வண்டியில் உடன் செல்ல அனுமதி கேட்பது என்பது! ரொம்பவே அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கோவையில் இது சர்வ சாதாரணமாக பிறருடைய வண்டியில் ஏறிப் போகின்றார்கள்.

      இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

      நீக்கு
  8. அனைத்தும் இயந்திரமாகி, மனித மனமும் அவ்வாறே மாற்றிக் கொண்டே வருகிறது...

    நம்ம தமிழ்க் கணினியனின் கோலசுரபி அறிவீர்கள் என்று நினைக்கிறேன்... இருந்தாலும் இணைப்பு :

    கோலசுரபி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் சுட்டிக்கு சென்றேன் நன்றி.

      நீக்கு
  9. ஆஹா சும்மா இருந்தவன் மனசுல ஆசையை கிளப்பிவிட்டுடாரே இந்த கில்லர்ஜி... இப்பவே கோயம்புத்தூர் போக ஆசை இந்த வயதிலும் வந்துடுச்சு.. ஆனால் என்ன சைக்கிள் கூட ஒட்டத் தெரியாதே நமக்கு. ஹும்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கோவையில் ஒரு வீடு வாங்கிடலாமா ?

      நீக்கு

  10. நான் உடல் உழைப்பிற்க்கோ அல்லது நடப்பதற்கோ என்றும் சோம்பேறிபட்டது இல்லை.. தினமும் 5 மைல் முதல் 6 மைல் வரை நடக்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நடப்பதற்கு அலுப்புபட மாட்டேன் நண்பரே...

      நீக்கு

  11. சரி கில்லர்ஜி பெண்னிற்கு உதவியது மற்றது எல்லாவாற்றையும் தெளிவாக எழுதிய நீங்கள் அந்த பெண் இறங்கியதும் உங்களை அணைத்து முத்தம் கொடுத்து நன்றி சொன்னதை மட்டும் எழுதாமல் விட்டது ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா உண்மைகளையும் சொல்வதற்கு இதென்ன "அவர்கள் உண்மைகள்" தளமா ?

      இது "கில்லர்ஜி தளம்" சில விசயங்கள் கிள்ளி எடுக்கப்படும்.

      நீக்கு
  12. ஆஆஆஆ !!!!!!!!!!!!!! இவ்ளோ விஷயம் நடந்திருக்கா இருங்க முதலில் இதை அதிரா கிட்ட சொல்லணும் :)))))))))) அவங்க பார்க்காம விட்ட பதிவை  நானேதான் பொறுப்பா காட்டணும் அவங்களுக்கு 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க அதிரா ஜேம்ஸ் ஊரணிக்கு வேலி அமைக்கிற வேலையா இருக்காங்களாமே...

      நீக்கு
    2. அஞ்சு நான் வந்துட்டேன்ன்ன்ன் பழைய பண்ணீர்:)) செள்ளமாக வந்துட்டேன்ன்:)).. வேலைக் களைப்பெனினும்.. கில்லர்ஜியின் ஸ்கூட்டரில ஒரு பெண்பிள்ளை ஏறியதைக் கேட்ட பின்பும், அதுவும் இரண்டு பக்கமும் கால் போட்டு இருந்ததெனெ தெளிவா வேற சொன்ன பின்பும்... வராமல் இருப்பேனோ:))

      நீக்கு
    3. அடடே அரசியல்வாதி மாதிரியே பேசுறீங்களே...

      நீக்கு
  13. ஹாஹாஹா ஜெனரேஷன் படம் கார்ட்டூன் சூப்பர் .ஆனாலும் இப்படி தெரியாதோரை நம்பி  வண்டியில் ஏற்றாதீங்க .உண்மையிலே கஷ்டப்படறவங்களுக்கு கூட உதவமுடியாத காலம் இது :( 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான் உதவிக்கு உபத்திரவம்தான் பரிசு.

      நீக்கு
  14. //தெரியலையே தம்பி நான் சரியா கவனிக்கலை.//

    ம்ஹூம்ம்... பின்னால ஏறி இருந்த பிள்ளைக்கு 30 வயசு தாண்டியிருக்குமாம், ஒரு குழந்தைக்கு எண்டாலும் தாயாக இருப்பாவாம் எண்டதெல்லாம் கூடவே இருந்து பார்த்த மாதிரி ஜொள்ளிட்டு.... பாசை மட்டும் எந்த ஊர்ப்பிள்ளை எனத் தெரியாதாம் தான் அதை எல்லாம் கவனிக்கல்லையாமே.... எவ்ளோ நல்லவர் பாருங்கோ:)).. ஹையோ இந்த நேரம் பார்த்து இந்த சிறீ சிவசம்போ அங்கிள் வேற மயக்கத்தில இருக்கிறார்போலும், இல்லை எனில் கரெக்ட்டாச் சொல்லியிருப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    அது உகண்டாவில இருந்து வந்த பிள்ளையாகத்தான் இருக்கும்:))

    ஒரு 90 வயசு ஆச்சி அல்லது அப்பு ஒருவர் ஓடி வந்து இப்பூடி ஏறி இருந்திருந்தால், கில்லர்ஜியின் இரக்க:) குணம் அந்நேரம் என்ன பண்ணியிருக்குமோ:)).... சே..சே.... பொயிங்க வைக்கிறாரே என்னை:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருபது வயது ஆச்சியை வண்டியில் ஏற்றிப் போனால் விழுந்து விட்டால் யாரு செலவு செய்வது ?

      அது உகாண்டா பெண்கனியா ?

      நீக்கு
    2. ஸோரி பெண்மணியா ?

      நீக்கு
  15. அல்லோ கில்லர்ஜி.. எதில வேணுமெண்டாலும் கை வைங்க.. ஆனா அதென்ன வலி இல்லாமல் பிள்ளை பெறுவது என ஈசியாகச் சொல்லிட்டீங்க.. இதைப்பார்த்திட்டும் நாங்கள் மகளிர் அணி பொயிங்காமல் இருப்பம் எண்ட நினைப்போ... தேம்ஸ்ல தள்ளிடுவோம் ஜாக்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:)).. ஒரு தடவை பிள்ளை பெற்றுப் பாருங்கோ அப்போ புரியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நேரமில்லை என பேசாமல் இருந்தால்ல் ... கண்டபடி கதைக்கினம் எல்லோரும்:)).. சே..சே... இதுக்குத்தான் அம்மம்மா அப்பவே ஜொண்ணா:)) ஒழுங்கா புளொக் பக்கம் எட்டிப்பாரு பிள்ளை என:)) நான் தான் கேட்கல்ல:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளை பெறுவது சுலபம் என்று எப்போ சொன்னேன் ?

      சுலபமாய் இருந்தால் நல்லது என்று சொன்னேன்.

      ஐயய்யோ ஸ்கோட்லாண்ட் மகளிர் மன்றத்தை உசுப்பி விட்றாதீங்க...

      நீக்கு
    2. அப்படியே தசவதாரம் கமல் மாதிரியே சொல்லி எஸ்கேப் ஆகுரிங்களே சார்?

      நீக்கு
    3. ஹா.. ஹா.. வருக நண்பரே வாக்கு தவறினால் நாக்கு போயிருமே...

      நீக்கு
  16. அதுசரி, அந்தக் கிளிப் ஆர்ட் படத்தில் இருப்பதில, எந்தப் படம்போல நீங்க ஏத்திக்கொண்டு போனனீங்க அந்தக்காவை:) என ஜொள்ளிடுங்கோ கில்லர்ஜி:))....

    கோலம் போடும் அழகோ அழகு.. இப்போ சனரைஸர் தெளிக்கவும்.. பூச்சிபோல ஒன்று கண்டு பிடித்திருக்கினம்.. பறந்துகொண்டே தெளிக்கிறது... இதை எல்லாம் விட்டுப்போட்டு நீங்க இன்னும் பழையபஞ்சாங்கமாகவே இருக்கிறீங்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. முதல்ல அந்த மீசையின் ஸ்டைலை மாத்திடுங்கோ அதனாலதான் போலும் அக்காமார் எல்லாம் லிவ்ட் கேட்கினம்.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:)) ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் Future Generation போலத்தான்...

      அந்தக்கருவி விவசாயத்திற்கு உள்ளதுதானே...

      மீசையாலதான் எல்லோருக்கும் பிரச்சனை வருது.

      நீக்கு
  17. வண்டி ஓட்டுவதை நிறுத்தி முப்பது வருடங்கள் ஆகி விட்டது.  எனவே இம்மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டதில்லை!!!  கோலம்போடும் இயந்திரம் சூப்பர்.  எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அதுதான் நல்லது மிஷின் அமேஷானில் தேடுங்கள்.

      நீக்கு
    2. அப்போ ஶ்ரீராம் வண்டி ஓட்டத் தொடங்கியது எத்தனை வயசிலயாம் என ஒருக்கால் கேட்டுச் சொள்ளுங்கோ:) கிள்ளர்ஜி:)...

      நீக்கு
    3. ஒரு வயதில் நடைவண்டி ஓட்டினா(ஸ்ரீ)ராம்

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். ஆரூடம் உண்மைதான். ஆனால் படிக்கும் போது இந்தக்கால மக்களின் சோம்பல்களை எண்ணி மனம் வருத்தமடைகிறது.மக்களின் செய்யும் பணிகள் எல்லாமே இயந்திரமயமாக ஆகி விட்டதினால், வாழ்க்கை சுழற்சியும் ஒவ்வொரு நாளும் இயந்திரமாக நகர்கிறது

    பிராயாணிக்கும் வேறுபாடு படங்கள் அருமை. காணொளி இதுபோல் கண்டதேயில்லை. ஆனால் கோலம் அழகாகத்தான் இருக்கிறது. இனி வீட்டுக்கு ஒரு இயந்திரம் இதுபோல் அனைவரும் விரைவில் வாங்கி விடுவார்கள். இது ஒருவேளை கோயமுத்தூர் தயாரிப்போ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இன்றைய மக்களின் உண்மைநிலை இதுதான்.

      அந்தப்படம் ரசனையாக வரைந்து இருக்ஙிறார்கள்.

      அந்த மிலின் கோவையில்கூட தயாரித்து இருக்கலாம்.

      தங்களின் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  19. அட்டகாசமான பதிவு...
    இப்படியெல்லாம் கொடுப்பதற்கு தங்களால் மட்டுமே இயலும்...

    பதிலளிநீக்கு
  20. கோலம் போடும் மிஷினை ஏற்கனவே ஒரு வீடியோவில் பார்த்திருக்கிறேன்...

    கும்மியடிக்கும் மிஷினும் வரப்போவதாக சொன்னாய்ங்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வரட்டும்.. வரட்டு... மிஷினை போட்டு விட்டு நாம தூங்கிடலாம்.

      நீக்கு
  21. வாழ்வே இயந்திர மயம்தான்

    பதிலளிநீக்கு
  22. பெண்ணைக் கண்டால் பென்ஸ் காரும் நிற்கும்...கில்லர்ஜிமொழியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  23. பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு வண்டி வேண்டும் என்று சொல்லும் பிள்ளைகள். கொஞ்ச தூரம் நடந்தாலே கால் வலிக்கிறது என்கிறார்கள்.

    வண்டிகளின் மாறுதல் படம் அருமை.
    இப்போது உள்ள புது வண்டிகளில் பின்னால் உட்கார்ந்து போவதைப்பார்க்கும் போது பயமாக இருக்கும்.

    கோலம் போதும் காணொளி முன்பு பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  24. கில்லர்ஜி அந்தப் பொண்ணு ஏறினதும் வண்டி ஓட்டுறதை விட்டு நிறையவே அளந்துருக்கீங்களே!!!!!! ஹா ஹா ஹா ஹா...

    ஒரு சிலர் அவங்களாகவே இஷ்டப்பட்டு சிசேரியன் செய்யச் சொல்லுறாங்க இல்லேனா நல்ல நாள் நட்சத்திரம் இவங்களாகவே முடிவு செய்து அதாவது பிள்ளை நல்ல நாள் நட்சத்திரத்துல பிறக்கணுமாம் பிள்ளை பெத்துக்கறாங்க!!! எப்படி இருக்கு பாருங்க... அதெப்படி இவங்க நாள் நட்சத்திரம் பார்த்து முடிவு செய்து பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் உண்மையான ஜாதகமா இருக்குமோ தெரியலை. அதுக்கு ஒரிஜினல் ஒன்னு எழுதியிருக்கும்ல?

    நானெல்லாம் யாருக்கும் லிஃப்ட் கொடுப்பது மிக மிக அபூர்வம். தெரிந்தவர்கள் என்றால் அதுவும் ஒல்லியாக இருந்தால் மட்டுமே ஹிஹிஹி எனக்கு வெயிட் பாலன்ஸ் செய்யனுமில்ல? அதுவும் இரு பக்கம் கால் போட்டு ஏறி உட்காரவங்கனா எனக்கு சௌகரியம். இதுல வெயிட்டா இருந்தாங்கனா அவங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா னு கேட்டு அவங்களை ஓட்டச் சொல்லிட்டு நான் பின்னாடி உட்கார்ந்துருவேன்!!!!!!

    பெஸ்ட் ந(ட)டைராஜா செர்வீஸ்தான்!

    கோலம் எல்லாம் கையால் போடுவதுதான் எளிது.

    அப்பப்ப விசிட்...அடிப்பேன் கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பதிவை ரசித்தமைக்கு நன்றி

      //அதெப்படி இவங்க நாள் நட்சத்திரம் பார்த்து முடிவு செய்து பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் உண்மையான ஜாதகமா இருக்குமோ தெரியலை//

      இக்கேள்வி என் மனதில் வெகுகாலமாக இருக்கிறது.

      நீக்கு
  25. ம்..ம்.ம்.. நடக்கட்டும்..... கேட்பது தவறு என்பதால்தான் கேட்காமல்.....அது என்னது கோலமா...அது..???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அலங்கோலம்.

      நீக்கு
    2. அலங்கோலம்தான் கோலமாக பீத்திகிட்டு திரியுதா...??.. பீத்திக்கிட்டு திரியட்டும்...

      நீக்கு
    3. ஆம் அதேதான் நண்பரே...

      நீக்கு
  26. உள்ளே வரலாமா கில்லர்ஜி சார், நீண்ட இடைவெளிக்குப் பின் அட்டகாசமான பதிவு என்னை வரவேற்கிறது. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  27. இப்படி வண்டி ஓட்டிகளிடம் லிஃப்ட் கேட்டு செல்லும் பழக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் உண்டு.  நீங்கள் முகக்கவசம் அணிந்திருந்ததால் இளைஞர் என்று நினைத்து கேட்டிருப்பார் ;) இப்போதைய தலைமுறையினருக்கு எல்லாவற்றிர்க்கும் சோம்பல்தான், குறிப்பாக நடப்பதற்கு ரொம்ப சோம்பல்! மிஷின் போட்டிருக்கும் கோலம்  அருமை! வேறு வேறு டிசைன்கள் மாற்றும் வசதி உண்டா?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது கருத்துரைக்கு நன்றி.

      //கோலம் அருமை வேறு வேறு டிசைன்கள் மாற்றும் வசதி உண்டா ?//

      நானா கம்பெனி வச்சு இருக்கேன் ?

      நீக்கு