திங்கள், ஏப்ரல் 09, 2018

One Day in Oman

2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம்.

 நண்பரது குடும்பம்நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங்கு குடும்பத்துடன் இருக்கிறார் அவர்களைக் காண்பதற்காக போனோம் U.A.E எல்லையில் நுழைவாயிலில் பாஸ்போர்ட்டில் விசா அடித்து காருக்கும் இன்சூரண்ஸ் அடித்துக்கொண்டு கிளம்பினோம்

பொதுவாக அரபு நாடுகளில் நாடு விட்டு நாடு விருந்தாளிடி போகும்போது போவோரின் நடைமுறை விசாவில் உள்ள பொச்ஷிசன் பார்ப்பார்கள் லேர்களுக்கு அனுமதி இல்லை காரணம் அவர்கள் போனால் அந்த நாட்டில் எங்காவது ஒளிந்து கொண்டு வேலை செய்து விடுவார்கள் என்ற அச்சம் எனது நண்பரோ கம்பெனி ஓனர், நான் அரசாங்கத்தில் வேலை செய்பவன் நாங்கள் இருவரும் அந்த வேலையை செய்ய வேண்டிய அவசியமற்றவர்கள் ஆகவே எங்களுக்கு அனுமதி உண்டு இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நிறைய பேருக்கு இந்த விபரம் தெரியாமல் எல்லையில் போய் திருப்பி விடப்படுகிறார்கள்

ஒருநாள் முழுவதும் ஊரைச்சுற்றினோம் பல இடங்களையும் பார்க்கும் பொழுது விளங்கியது நிறையத் தமிழ்த் திரைப்படங்கள் இங்குதான் ஸூட்டிங் நடந்திருக்கின்றது என்பது போகும் இடமெல்லாம் ஒமான் அரேபியர்கள் பலரும்  என்னை அதியசமாகப் பார்த்தார்கள் காரணம் மீசை மிகப்பெரிய மாலுக்குப் போனோம் அனைவருமே எந்த நாடென்று கேட்டார்கள் பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பி எடுக்க, என்னுடன் வந்த இரண்டு குடும்பத்தார்களும் சிரிக்க, எனக்கு சங்கடமாக போய் விட்டது நண்பர் வேறு நான் டோக்கன் கொடுக்கிறேன் தலைக்கு பத்து ரியால் என்று மேற்கொண்டு சூடேற்றி விட்டார் சுமார் ஐம்பது பேராவது புகைப்படங்கள் எடுத்திருப்பார்கள் U.A.Eயில் பலமுறை இந்த மாதிரி நடந்திருந்தாலும் அன்று ஏனோ கூடுதலாகப்பட்டது அந்நாட்டில் U.A.E போல் பில்டிங்குகள் உயரமாக இல்லை என்றாலும் ரசிக்கக்கூடிய பாறை மலைகள் அழகு, பீச் இடங்கள் அழகு, ‘’ஹரிதாஸ் கடை’’ இது மிகவும் பிரபலம் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

எல்லாம் முடிந்து இரவு 11.00 மணிக்கு U.A.E நோக்கி திரும்பினோம் காரை நான்தான் ஓட்டி வந்தேன் அவுட்டோரில் கேமராக்கள் இல்லாத இடங்களில்160 K.M வேகத்தில் முதல் ட்ராக்கில் ஓட்டி வந்தேன் வழி கொடு என்று சொல்லும் லைட்டை அடித்துக்கொண்டே விரட்டி வந்தேன் ஒரு இடத்தில் ஒருவன் வழி கொடுத்து விட்டு பின்னால் வந்து போட்டான் பாருங்கள் ஜிகினாலைட் வந்தவன் போலீஸ் சிஐடி (அவ்வ்வ்வ்வ்வ்)
 உள்ளே நுழைந்து மறுபுறம் செல்லும் படகு படகில் போகும்போது எடுத்தேன்
 நானும்,  மருமகள் பர்ஹானாவும்...


 யூ.ஏ.ஈ. மன்னர். ஷேக் கலீஃபாஹ் ஸாயித் பின் சுல்த்தான் அல் நஹ்யான்
 

 நானும். நண்பரும்... நண்பரின் சகலையும் நானும்...
 அரபு நாட்டில் இப்படியொரு கடையா ?


 யூ.ஏ.ஈ. எல்லையில்...

ஒரு ஓரமாய் நிறுத்தினேன் பின்னால் நிறுத்தி விட்டு வந்த அரபி உடையணிந்தவர்
நான் போலீஸ் சிஐடி
தனது ஐடியை என்னிடம் காண்பித்து விட்டு
லைசென்ஸ் எடு
கொடுத்தவுடன் வாங்கிப் பார்த்து விட்டு
ஏன்.. இப்படி லைட் போட்டு வர்றே ?
நாங்க எமராத் காரில் சகோதரியும், குழந்தைகளும், இருக்காங்க நாளைக்கு இந்தியா போகணும் அதனாலதான் வேகமாப் போறோம்,
என்னை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு காருக்குப்போய் பெண்ணும், குழந்தைகளும் இருப்பது, காரின் நம்பரைப் பிளேட்டைப் பார்த்து உண்மையென அறிந்து விட்டு...
சரி வேகமாப்போ தப்பில்லை இப்படி பக்கத்தில் வந்து லைட் போட்டால் என்னைக்கண்டு சரி இதே பெண்களாக இருந்தால் பயந்து போய் எதிலாவது மோதி இருப்பார்கள்
சாரி
அனைவரது பாஸ்போர்ட்டையும் செக் செய்தபின்
நீ வேறு நாட்டிலிருந்து வந்ததால் சும்மா விட்டேன் இல்லை என்றால் அபராதம் எழுதியிருப்பேன்
நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம். ஒருவேளை காரில் சகோதரியும், குழந்தைகளும், இல்லாமல் நானும், நண்பரும் மட்டுமிருந்தால் கண்டிப்பாக அபராதம் எழுதி தீட்டியிருப்பார் பிறகு நான் அலைந்து லைசென்ஸ் வாங்குவதற்குள் லைசென்ஸே வேண்டாம் என்ற நிலைக்கு ஆகிவிடுவேன் ஆனாலும் மறுவருடம் கார் ரினுவலுக்கு போகும்போது பிடிபடும் இல்லையெனில் நான் எத்தனை வருடம் கழித்து கேன்ஷலில் வந்தாலும் ஏர்ப்போட்டில் பிடிபட்டு வட்டியோடு அபராதம் கட்டப்படுவேன் காரணம் அனைத்தும் கணினி வழி, தவறு செய்தவன் தப்பிக்க 99 % வழியில்லை. நண்பருடைய ப்ளாட் இருந்த பில்டிங்

 சட்டென சாலையைக் கடந்த அரேபியக் கிறுக்கன்


 ஒமான் நாட்டின் மிகப்பெரிய பள்ளி வரும் வழியில்

 லூலூவில் மகளுக்கு நினைவாக கடிகாரம் வாங்கினேன்

 நண்பர் வேலை நிகழ்த்திக் கொண்டிருந்த பில்டிங்
கொசு’’று
ஒருவேளை அபராதம் கட்டப் பணம் இல்லையெனில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் வேலை கொடுத்து அபராதப் பணமும், டிக்கெட் பணமும் வரும்வரை உழைத்து அதன் பிறகு மீண்டும் அந்த நாட்டிற்கு விசா கிடைக்காதவாறு நமது பாஸ்போர்ட் விடயங்கள் குறிக்கப்பட்டு ஊருக்கு விடுதலைக் கைதியாக அனுப்பி வைக்கப்படும்.

66 கருத்துகள்:

 1. படங்கள் அத்தனையும் அழகு.அதுவும் கடலில் அந்தப் பாறை...நடுவில் போட் அழகு....

  கீதா

  பதிலளிநீக்கு
 2. படங்கள் மிக மிக அழகு. அதுவும் கடல் பயணப் படங்கள். ஆனால் படகு என் கண்ணில் படவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி இது முழுக்க, முழுக்க காணொளி எடுக்கும் கேமராவிலிருந்து எடுத்த படங்களே...

   மேலும் இதில் பல படங்கள் காணொளியை நிறுத்தி அதிலிருந்து எடுத்த படங்களே...

   நீக்கு
  2. ஸ்ரீராம் என் கண்ணிலும் படகு படவில்லை...நான் சொல்லியிருந்தது இவர்கள் சென்ற படகு...அது முன்னரான வரியுடன் ஹிஹிஹிஹி

   ஜி உங்கள் கேமரா காணொளி கேமரா என்றாலும் என்ன படங்கள் அழகு அவ்வளவே...என் கேமராவும் சாதாரணம் தான். இத்தனைக்கும் லென்ஸ் எரர் வேறு இருந்தது. அப்புறம் இப்போது போயே போச்....மொபைல் காமேரா அத்தனை பிக்ஸல் இல்லை..அதனால் இப்போது படம் எடுப்பது இல்லை..

   கீதா

   நீக்கு
  3. நான் படகு செல்லும்வழி என்று சொல்லி இருக்கவேண்டும்.
   இந்த கேமரா தற்போது 'டெத்' ஆகி கிடக்கிறது 'ஸோனி வீடியோ கேமரா' அடிக்கடி DEWA கூட்டம் நடத்துவதால் எனது சொந்த செலவில் வாங்கியது.

   நீக்கு
 3. கேமிரா இல்லாத இடத்தில் வேகமாகப் போகலாம் என்றால் யாராவது பார்த்தால்தான் தப்பு பண்ணாமலிருக்க வேண்டுமா? அங்கு போலீஸ்காரர்களிடம் மனிதாபிமானமும் நியாயமும் இருக்கிறது என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் செய்தது தவறே சட்டப்படி அபராதம் இடவேண்டும் அவருக்கு மனிதாபிமானம் உள்ளதால் தப்பித்தேன்.

   நீக்கு
 4. படங்கள் ரொம்பவே ஜோர். எந்த வருடம் போன பயணம் இது?

  பதிலளிநீக்கு
 5. பயணமும் அனுபவமும் நன்று. நல்ல வேளை தப்பித்தீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. மலை முகட்டில் நண்பர்கள் இருக்கும் படமும் ரொம்ப அழகாக இருக்கிறது...

  அந்தக் குதிரை சிலைகள்...லுல்லு மால் அங்கு போல் இங்கு எர்ணாகுளத்திலும் இருக்கு. ரொம்பவே பெரிய மால்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இவை சாதாரன காணொளி கேமராதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. மஸ்கட்டுக்கு மனுஷன் போவானா? ஒரு பெண்கள் கூட அங்கு இல்லை போல இருக்கே? இப்படிப்பட்ட வறட்சியான நகரமா அது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பலநாட்டு பெண்களை கண்டேன் தமிழரே புகைப்படம் எடுத்த தர்மஅடி வாங்க நான் இஷ்டப்படவில்லை.

   நீக்கு
  2. ட்றுத்துக்கு நயந்தாரா போதாது போல இருக்கே.. சொறி நயந்தாரா ஸிஸ்டர்[ட்றுத்தின் முறையில்:)]

   நீக்கு
 8. படங்களும் பகிர்வும் அருமை அருமை

  பதிலளிநீக்கு
 9. உங்கள் பதிவுகளில் மிக அதிகமாக புகைப்படங்களைக் கொண்ட பதிவு என்று நினைக்கிறேன். நீங்கள் ரசித்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டபோது நாங்களும் உடன் வந்திருக்கக்கூடாதோ என்ற எண்ணம் ஏற்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கணிப்பு சரியே...
   விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 10. படங்க்களுடன் பயண அனுபவம் அருமை.
  குட்டி மருமகள் படம் முன்பு வேறு பதிவில் பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மைதான் பல பதிவுகளில் மருமகளை பார்த்து இருப்பீர்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. ஓமான் மீது ஓர் உணர்வுபூர்வமான பிணைப்பு உண்டு. எங்களை வாழ வைத்து உயர்த்திய ஊரல்லவா அது. மீண்டும் எங்களை அங்கு அழைத்து சென்றதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் நீங்கள் மறக்ககூடாத நாடுதான் என்பது நான் அறிந்ததே.... வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. சுவாரஸ்யமான செய்திகளுடனும் அழகிய படங்களுடனும் ஒரு பயணக் கட்டுரையைத் தந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 13. நான் சில முறைகள் சென்ற இடங்களை (ஹரிதாஸ் கடை தவிர) பதிவின் மூலம் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தேன். நான் எப்போதும், செல்லும் ஊரில் சரவணபவன் இருந்தால் அங்குதான் சாப்பிடுவேன் (சில வருடங்களாக தரம் காலி)

  நீங்கள் ஸ்பீட் லிமிட் தாண்டி வண்டி ஓட்டியது எனக்கு ஆச்சர்யமா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது நினைவுகளை மீட்டியது அறிந்து மகிழ்ச்சி

   அங்கும் ஸ்பீட் லிமிட் 140 கி.மீ.தான் ஆனாலும் நாட்டைக் கடந்து அவுட்டோர் என்றதால் வேகமாக போனேன்.

   நான் ஜெர்மனியில் அன்லிமிட் ஏரியாவில் 200 கி.மீ. ஐத் தொட்டு ஓட்டியவன் காணொளியே உண்டு

   நீக்கு
  2. கில்லர்ஜி.. நான் கேம்ரில 120கூட தொட்டதில்லை. என்னால 200லாம் கற்பனைகூட பண்ணமுடியாது.

   நீக்கு
  3. நான் ரெண்டேகார் எடுத்தேன் புதிய பென்ஸ் சாலையில் வழுக்கி கொண்டு பறந்தது வாழ்வில் அதுதான் முதல்முறை அத்தனை வேகம்.

   மீண்டும் இனி அமையாது.
   மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. அனைத்து படங்களும் அருமை ஜி...

  அங்குள்ள சட்டதிட்டங்கள் மிகவும் மெச்சத்தக்கவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சட்டங்கள் இந்தியாவுக்கு வேண்டும் ஜி

   நீக்கு
 15. அம்பதோ, நூறோ கொடுத்தா கண்டுக்காம நம்ம நாட்டுல விட்டுற்ர மாதிரி அங்கெல்லாம் விடமாட்டாங்களா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் மேற்கொண்டு கேஸ் போட்டு உள்ளே தள்ளுறதுக்கா ?

   நீக்கு
 16. ஆஹா இம்முறை ஓமான் ட்ரிப் படங்களா.. போனதடவை போஸ்ட் சுருங்கி விடமைக்காக இம்முறை அதையும் சேர்த்துப் பெரீய போஸ்ட்...

  ஓமான் முச்லிம் நாடுபோல இருக்காதாம்.. வெளி மேற்கத்தைய நாடுகள்போலதான் உடைகள் எல்லாம் அணிவார்களாம் என இங்கு என்னோடு ஒரு ஓமான் நாட்டு boy கொலீஜ் இல் படித்தபோது சொன்னார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நல்ல சுற்றுலா ஸ்தலம் உள்ள நாடுதான்.

   முண்டைக்கன்னி மாரியம்மன், முனியய்யா கோவில்கள்தான் இல்லை.

   நீக்கு
 17. பொலீசில் மாட்டியும் தப்பி விட்டீங்களே..:), அந்த மீசையைப் பார்த்துத்தான் விட்டிருப்பார்களோ என்னமோ:))...

  பதிலளிநீக்கு
 18. பதில்கள்
  1. ஆமா புத்தர் நாடு சைவப்படங்கள். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. 2008ம் ஆண்டு துபாய் சென்றிருந்தோம் மஸ்கட்டில் உறவுகளும் நண்பர்களும் இருந்தும் ஏனோ போகவில்லை மகன் அழைத்துப்போகவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   துபாயிலிருந்தே... பார்டரில் ஏழு நாட்கள் விசாவில்கூட போய் வந்திருக்கலாம் ஐயா.

   நீக்கு
 20. இங்கும் 120 தான் லிமிட் ஆனா 140-145 வரை ஓடியிருக்கிறோம்:) அதுக்கு மேல் போனதில்லை... 200 இல் போய் தப்பியது தம்பிரான் புண்ணியம்தேன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு வேகமாக ஓட்டியது தவறென்று இப்பொழுது புரிகிறது.

   சில விடயங்கள் புரிவதற்கு கால அவகாசங்கள் தேவைதான்.

   நீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  விரிவான விளக்கங்களுடன் அழகிய படங்களுடன் அருமையான பயணம். கடல் பயணம், பாறைகளின் அழகு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சென்றவிடங்களை சுவையாக விவரித்து எழுதியது நாங்களும் உடன் பயணப்பட்ட திருப்தியை தந்தது. மகிழ்ச்சியான பயணம். படங்கள் அருமை நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இரசித்து படித்து விரிவாக கருத்துரை இட்டமைக்கு நன்றி.

   நீக்கு
 22. கில்லர்ஜி படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.

  அங்கெல்லாம் கொஞ்சம் ஸ்பீட் லிமிட் தாண்டினாலே உடனே பின்னாடி போலீஸ் வந்துவிடுவார்கள் என்று கேட்டதுண்டு. நீங்கள் நல்ல காலம் ஃபைன் எல்லாம் இல்லாமல் தப்பித்தீர்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நாடு விட்டு நாடு கடந்து எல்லைக்கு வெளியே என்றதால் வேகமாக போனேன் மேலும் கார் அப்படி "ஸெவ்ரோலெட் இரோயல்"

   நீக்கு
 23. ஓமான் பயண அனுபவங்கள் பதிவு புகைப்படங்கள் சிறப்பாயிருந்தன. நன்றி.

  பதிலளிநீக்கு
 24. எல்லாப் படங்களும் தகவல்களும் அறியாதவை. முக்கியமாய் ஹரிதாஸ் கடை என்பதெல்லாம் கேள்வியே படாதவை! அந்தக் கடையில் விற்கும் பொருட்களும் ஆச்சரியத்தை ஊட்டின. நல்லதொரு பகிர்வு. தெரியாத பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ?
   கடையில் உள்ள பொருட்களை கண்டு அரபு நாட்டில் வாழும் எனக்கே ஆச்சர்யமாக இருந்தபோது உங்களுக்கு இருக்காதா ?

   இஸ்லாமிய நாடுகளிலேயே மாறுபட்டது OMAN

   நீக்கு
 25. இங்கே பாறைகள் இயற்கையாகப் பிளந்திருப்பதும் நடுவில் படகுகள் செல்வதும் போல் ராமேஸ்வரத்திலும் கப்பல்கள் போய் வருவது நினைவில் வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் பாம்பன் பாலத்தைதானே சொல்கின்றீர்கள்.

   நீக்கு
 26. அருமை.. அருமை...

  ஆனாலும்
  அதென்ன இந்தியாவா!?....

  தப்பு செய்தவனெல்லாம் தப்பி ஓடுவதற்கு?...

  வாழ்க ஓமன்...
  வளர்க அன்பு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களின் வரவு கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 27. உங்கள் உதவியால் மஸ்கட்பை சுற்றிப்பார்த்தேன். படங்கள் அருமை. பாராட்டுகள். எப்போதூம் என்ன அவசரம் இருந்தாலும் வேகம் விவேகமல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வேகத்தை நான் எல்லா நேரங்களிலும் உபயோகப்படுத்துவதில்லை. தற்போது அதையும் நிறுத்திக்கொண்டேன்.

   நீக்கு
 28. படங்கள் எல்லாம் அழகு .
  நடுக்கடலில் பாறை இடைவெளியை பார்க்க அட்டகாசம் .

  லண்டனில் பல ஹரிதாஸ் வகை கடைகள் கணேஷா ,கணபதி இப்படி இருக்கு .பெயர் பலகை கூட தமிழில் .
  அப்பறம் படங்களில் ஒரு சிக்னேச்சர் வாட்டர்மார்க் வைங்க இல்லேனா படங்களை சுட்ருவாங்க கூகிள் வழியா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கும், ஆலோசனைக்கும் நன்றி.

   கண்டிப்பாக செய்கிறேன்.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...