தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 16, 2021

வடைமாலை

 

வீட்டிலிருந்து கேபிள் கணெக்ஷன் கொடுக்கும் கணேசன் வேலையில்லாமல் தனது மனைவியோடு ஒரண்டை இழுத்தபோது...
 
ஏண்டி கோமலம் திங்கிறதுக்கு ஏதாவது கொடேன்.
ஒங்க வாயில வசம்பை வச்சு தேய்க்க....
 
எதுக்குடி இப்படி கோபப்படுறே.... ?
ஒழுங்கா கோமளம் அப்படினு சொல்லத் தெரியாதா ?
 
இப்ப அதான் முக்கியமாப் போச்சா ? ரெண்டு நாளா நாக்கு ஒழுங்கா வழிக்கலை அதான் எழுத்து மாறிடுச்சு.
ஒங்களுக்கு என்னைக்கும் இப்படித்தானே வருது...
 
சரி.. சரி விடத்தா... கடிக்க என்ன வச்சு இருக்கே... ?
ம்... பாக்கு வெட்டி இருக்குது எடுத்து வரவா ?
 
ஏண்டி அதக்கடிச்சா நாக்கை வெட்டிடாதா ?
அப்படியாவது வெட்டித் தொலைக்கட்டும் இந்த கருமம் புடிச்ச வார்த்தையை கேட்காமல் இருப்பேன்.
 
என்னடி கோமா... இதுக்குப் போயி மச்சானை கோவிக்கிறே... ?
அதென்ன... கோமா ?  நானென்ன... கட்டில்ல விழுந்தா கெடக்குறேன் ?
 
இல்லடி எனக்கு இந்த ல ள ழ நாக்குக்கு பிரச்சனையா இருக்கு,
அதுக்கு நாக்கையே வெட்டி விடுங்களேன் எந்தப் பிரச்சனையும் வராது.
 
சரிடி மூணாவது எழுத்தை விட்டுப்புட்டு கோமம் அப்படினு கூப்பிடவா ?
ய்யேன் கோமயம்னு கூப்பிடுங்களேன்...
 
உனக்கு புடிச்சா அப்படியே கூப்பிடுறேன்...
இஞ்சே பாருங்க அடுப்படிய விட்டுப் போயிடுங்க, கையில கரண்டி வச்சுருக்கேன். 
 
சரி உழுந்த வடை சுட்டியே.. மச்சானுக்கு சட்னியோட ரெண்டு வச்சு கொடேன்.
அதெல்லாம் இப்பத் தரமுடியாது ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி. சாமி கும்பிடணும்.
 
அப்ப அந்த கொண்டக்கடலை, கொழுக்கட்டையாவது கொடு.
அதெல்லாம் புள்ளையாருக்கு படைக்கணும். எச்சி பண்ணக்கூடாது.
 
நானும் புள்ளையாருதான்... எம் பேரு கணேசன் எனக்கு வச்சுப் படையேன் இங்கே பாரு தொந்தி கூட இருக்கு...
அவருக்கு தும்பிக்கை இருக்குமே... ?
 
ஏண்டி எனக்கு தும்பிக்கை இருந்தா.. ஒங்க அப்பா கோணவாயன் எனக்கு உன்னை கட்டிக் கொடுத்து இருப்பாரா ?
இஞ்சே பாருங்க எங்க அப்பாவைப்பத்தி பேசுனீங்க...
 
இனிப்பு பொங்கல் வச்சு இருக்கே சாப்பிடவா ?
இருங்க வீட்டு அம்மனுக்கு படைக்கணும் எச்சி பண்ணிடாதீங்க..
 
என்னடி மச்சானை எதையுமே திங்க விடமாட்றே... ?
மச்சான் பொல்லாத மச்சான் போயி தண்ணியக் குடிச்சுட்டு உட்காருங்க...
 
ஏண்டி நீயே தண்ணி போடச் சொல்றே... அப்புறம் என்னைத்தானா திட்டுறே ?
நான் குடிக்கச் சொன்னது வீட்டுல இருக்கிற பானைத் தண்ணிய..
 
இதென்ன பாணக்கம் குடிக்கட்டுமா ?
அது முனியய்யா கோவில்ல காவடி எடுத்து வர்றவங்களுக்கு கொடுக்கிறதுக்கு தொடாம போயி டிவியை பாத்துக்கிட்டு உட்காருங்க..
 
டிவிலயும் சமையலைதான்டி காட்டுறாங்கே... வீட்டுல சமைச்சது போதாதுனு காட்டுல வச்சு ஆறுமுகம் சமையல்னு செஞ்சு காட்டுறாங்கே...
வேற ஏதாவது நாடகம் பாக்க வேண்டியதானே... ?
 
நாடகம் பாக்கவா... அதெல்லாம் ஒன்னைப்போல தெள்ளுமணிக்குத்தான் சரியா வரும்.
தெள்ளுமணி சொல்லும் போது ஒழுக்கமா தெளிவா பேசுற நாக்கு, கோமம் சொல்லும்போது வராதோ... ?
 
அடாடா சரிதேன் விடேன்டி... நாடகம் பாக்க புடிக்கலைனு சொன்னதுக்கா... மாடி வீட்லருந்த புள்ளத்தாச்சிக்கு வயித்து வலிச்சு ஆசுப்பத்ரிக்கு கூட்டிட்டுப் போறதுக்கு ஒரு வாரமா காட்டுறாய்ங்களே... பாவம் அவளுக்கு இடுப்பு வலிக்காதா ? இதெல்லாம் பாக்க எனக்கு பொறுமை இல்லடி.
இப்ப காஞ்சமாடு நாடகம் போடுவாங்கே பாருங்க நல்லாயிருக்கும்.
 
ஆமாடி மச்சான் வயித்த காயப்போட்டுட்டு காஞ்சமாட்ட பாக்கச் சொல்றே வெளங்கிடும்.
மொதல்ல தொடாமல் தள்ளி நில்லுங்க கோயிலுக்கு போகணும்.
 
சரி இதென்ன மாவு பெசஞ்சு வச்சுருக்கே... ?
அது அம்மனுக்கு நேத்திக்கடன் மாவெளக்கு ஏத்தணும் கை வைக்காதீங்க...
 
என்ன நேத்திக்கடன் வச்சு இருக்கே ?
எல்லாம் நல்ல நேர்த்திக்கடன்தான் புள்ள உண்டாகுறதுக்கு...
 
ஏண்டி இம்புட்டு ஆசை வச்சுக்கிட்டுதான் மச்சானை இந்த வெரட்டு வெரட்டுறியா ?
அடச்சீ... இப்படியொரு நெனைப்பு இருக்கோ... மகளுக்கு இன்னும் ஒரு புழு பூச்சி வக்கலையேனு தொட்டிச்சி அம்மனுக்கு மாவெளக்கு நேர்த்திக்கடன் வச்சா... ஆளைப்பாருங்க... புள்ளை இல்லாத வீட்ல கெழவன் துள்ளிக் குதிச்சானாம்.
 
ஏண்டி மகளுக்கு கல்யாணம் ஆகி ஆறுமாசம்தானடி ஆச்சு அதுக்குள்ளே எதுக்கு நேர்த்திக்கடனெல்லாம்....
நாறவாய வச்சுக்கிட்டு சும்மா இருங்க... கோயிலு வெசயத்துல இப்படி பேசக்கூடாதுனு எத்தனை தடவை சொல்றது ?
 
ஏண்டி ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துறியே... எத்தனை வடை ?
நூத்தி எட்டு, எதுக்கு கேக்குறீங்க ?
 
நூத்தி எட்டு போக மிச்சத்தை கொடேன்.
அவருக்கு சாத்திட்டு வந்த பிறகுதான் திங்கணும். அதுவரை எடுக்காதீங்க...
 
நீ கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்கு எட்டு மணியாயிடுமே... அதுவரை நான் காத்து இருக்கணுமா ?
ஆஞ்சநேயருக்கு சாத்துறதுக்கு முன்னாலே ஒங்களுக்கு சாத்துறது மாதிரி நடக்காதீங்க சொல்லிட்டேன்.
 
ச்சே என்னாங்கடி ஒங்க நாயம் உசுரோட பசிக்கிற புருசனுக்கு கொடுக்காமல் திங்காத, சாப்பிட கேக்காத செலைக்கு கொண்டு போயி படைக்கிறியடி... ஒன்னைப்போல ஆளுக்குத்தான் பசிபரமசிவம் ஐயா கிழிச்சு எழுதுறாரு...
என்ன அங்கே மொணங்கலு...?
 
ஒன்னுமில்லை நாமக்கல்லுக்கு போறேன் நாமம் போட்டுக்கிற...
அதையாவது செய்ங்க அப்படியாவது பெருமாளு நல்ல புத்தியை கொடுக்கட்டும்.
 
மனதுக்குள் புழுங்கிக் கொண்டு கூன் தொலைக்காட்சியை போட்டு விட்டு சோபாவில் சாய்ந்த கணேசனுக்கு திரை காட்டியது... ஆதியின் அடுக்களை
 
ChavasRegal சிவசம்போ-
இந்த கோ’’மலப்பிரச்சனை முப்பது வருசமாக இருக்கும் போலயே...
 


காணொளி

39 கருத்துகள்:

  1. ஹாஹாஹாஹா! அது சரி, எல்லா உம்மாச்சிங்களுக்கும் ஒரே நாளில் விதம் விதமான நேர்த்திக்கடன்களுக்கான பிரசாதங்களா? அதுவும் அத்தனையும் கோமளம் செய்தது! வாய் கொஞ்சம் அதிகமாத் தெரிஞ்சாலும் அந்தக் கோமளத்தின் சாமர்த்தியம் வியக்க வைக்குதே! இஃகி,இஃகி,இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்ங சுலபமாக சொல்லிடுவங்க இந்த வாய் இல்லாட்டினா முப்பது வருசமா கணேசனோட குப்பை கொட்டி இருக்க முடியுமா ?

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நல்ல நகைச்சுவை பதிவு. காலையில் எழுந்தவுடன் மனம் விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள். இடையிடையே எதார்த்தமாக வந்து விழுந்த வார்த்தைகளை மிகவும் ரசித்துப் படித்தேன் பதிவுக்கு பொருத்தமான காணொளியும் கண்டு ரசித்தேன். அங்கும் இறுதியில் நகைச்சுவை. உங்கள் திறமையான எழுத்துக்களுக்கு பாராட்டுகள் சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ காலையில் சிரித்து மகிழ்ந்தமை அறிந்து மகிழ்ச்சி.

      காணொளி கண்டு ரசித்து, பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  3. ஒரே நாளில் இவ்வளவு நேர்த்திக்கடனா என்று கேள்வியைத் தூக்கிக்கொண்டு வந்தால் கீதா அக்காவும் அதே கேள்வியைக் கேட்டு இருக்கிறார்கள்!  ஒரு பச்சை மிளகாயைக் கடிச்சுக்கிட்டு பழைய சோற்றைத் தின்னும் சுவை இதிலெல்லாம் வருமா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி
      கோமளம் வீட்டில் வருடம் முழுவதும் கோவில் பஜனைகள் நடக்கும். அவ்வளவு பக்திமான்.

      பாவம் கணேசன் நேரெதிர் தி.க. பெரியார் பெயரன் மாதிரித்தான் பேசுவாராம்...

      நீக்கு
  4. பல நாள் விரதம்னால கஷ்டப்பட்டதை ஒரே நாளில் சேர்த்து எழுதிட்டீங்க போல.

    எனக்கும் பொறுமை இருக்காது. கஷ்டப்பட்டுக் காத்திருப்பேன். (அதிலும் கிருஷ்ணஜெயந்தியின்போது... அப்போ இரவுத் தூக்கத்திலிருந்து எழுப்பித்தான் பிரசாதம் தருவாங்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஹா.. ஹா.. உங்களுக்கும் கணேசன் அனுபவம் இருக்கும் போலயே...

      நீக்கு
  5. நல்ல நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.
    காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. காலையிலேயே கலகலப்பு...
    காணொளியும் அழகு..

    பதிலளிநீக்கு
  7. ஹாஹா... எத்தனை எத்தனை விரதம்! இவ்வளவு சமையலும் ஒரே நாளிலா! ஆஹா...

    எங்கள் இல்லத்திலிருந்து ஒரு காணொளியும் இங்கே பகிர்ந்திருக்கிறீர்கள்! :) மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆமா, இல்ல! அதைச் சொல்ல மறந்திருக்கேன். சிரிப்பாய்ச் சிரிச்சேனா! மறந்துட்டேன். :))))))

      நீக்கு
    3. ஹா.. ஹா.. மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. பாவம் கணேசன்...

    தாய்லாந்தில் ஒரு மிஸஸ்-யை இன்று அறிந்தேன் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இதை வெளியே சொல்லிடாதீங்க... இரகசியம்.

      நீக்கு
  9. நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.
    மிகவும் ரசித்தேன்.
    எங்க போனார் நம்ம பசி பரமசிவம் அன்னாச்சி?
    படிக்கும்போது பூவெல்லாம் உன் வாசம் பட கோவை சரளா பாத்திரம் நினைவுதான் வந்துச்சு.
    படம் ஃபுள்ளா ஒரே விரதம், கடைசியில சின்னக்கலைவானர் நாக்குலயே அலகு குத்திப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாள் பூராவும் ,அடுத்த நாளும் சாமி மட்டும் சாப்பிட
      அம்மா செய்துட்டாங்களா.
      சிரிச்சு சிரித்து மகிழ்ந்தேன்.
      அம்மாடி இத்தனையும் செய்து கண்வனுக்குக்'
      கொடுக்காத மகராஜி:)
      பசியிலியே அவருக்கு மயக்கம் வந்திருக்குமே.
      நான் வடை செய்யும்போது
      முதல் இரண்டு ஈடை சாமி கண்ணில் காண்பித்துவிட்டு,
      இவருக்குக் கொடுத்து விடுவேன்.

      பொறுமையின் பூஷணமான கணவனுக்கு வாழ்த்துகள்.
      மிக நன்றி அன்பு தேவகோட்டைஜி.

      நீக்கு
    2. நண்பர் அரவிந்த் அவர்களின் வரவுக்கும், பதிவை விலாவாரியாக ரசித்து எழுதியமைக்கும் மிக்க நன்றி.

      நண்பர் திரு. பசி'பரமசிவம் அவர்கள் ஏதோ தாமதம் கண்டிப்பாக வருவார்கள்.

      நீக்கு
    3. வந்துட்டேன் கில்லர்ஜி, வந்துட்டேன்.

      நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை சாத்துறாங்கன்னு அதிகாலையிலேயே கோயிலுக்குப் போய்ட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன்.

      கூட்டமான கூட்டம். எல்லாம் வடைக்காகத்தான். நானும் அதுக்காகத்தான் போயிருந்தேன். கோயிலை நெருங்க முடியல. தெருமுனையிலேயே நின்னுட்டேன்.

      வடைப் பிரசாத வினியோகம் ஆரம்பமானதோ இல்லையோ, எனக்கு உனக்குன்னு முண்டியடிச்ச பக்தகோடிகளைத் தடியடி நடத்தித்தான் போலீஸ்காரங்க கட்டுப்படுத்தினாங்கன்னா பாருங்களேன்[1008 வடைக்கு 10008 பேர்!].

      வடை கிடைக்கலையேங்கிற வருத்தத்தோடு வீடு திரும்ப நினைச்சப்ப 'இந்தாங்க வடை'ன்னு என் முதுகுப் பக்கத்திலிருந்து யாரோ வடையை நீட்டினாங்க. திரும்பிப் பார்த்தா, என் வீட்டுக்காரி!

      "1008 வடையில் நம்ம பங்கு 108[கோமளம் பங்கு 108]. உங்களுக்குத்தான் சாமி பக்தி கிடையாதே. அதான் சொல்லல" என்றவர் மிச்சமிருந்த வடைப் பொட்டலத்துடன் எங்கள் வீடு நோக்கி நடந்தார்.

      ஆஞ்சநேயரின் எச்சில் பண்டமான அந்த உளுந்து வடையைத் தின்பதா வேண்டாமா என்ற யோசனையுடன் அவர் பின்னால் நடந்தேன்[இதுவும் கோமளம்-கணேசன் கதைதானுங்க!!!].

      "தாலி கட்டுன ஒரு[ஒன்னே ஒன்னுதான்] பெண்டாட்டியைத் திருத்த முடியல. ஊரூலகத்தைத் திருத்துறேன்னு சொல்லிட்டுத் திரியறாரு இந்தப் 'பசி'பரமசிவம்"னு யாரெல்லாமோ முணுமுணுக்கிறது கேட்குதே, அவங்கெல்லாம் யாரு கில்லர்ஜி?!

      நீக்கு
    4. வருக நண்பரே பதிவை வேறு கோணத்தில் கொண்டு வந்து குட்டிக்கதையை தந்து விட்டீர்கள்.

      வடை கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  10. மிஸஸ்.கில்லர்ஜி ரசித்தேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா
      பதிவை ரசித்தமை அறிந்து மகிழ்ச்சி.

      காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி அம்மா.

      நீக்கு
  11. கில்லர்ஜி நேற்றே கொமெண்ட்ஸ் போட்டேன் ஸ்கூல்ல இருந்து, இப்போ பார்த்தால் அது வரவில்லை கர்ர்ர்ர்ர்:)...
    நல்லவேளையாக இங்கு கோமளவல்லி என ஆரும் புளொக்கில் இல்லை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா அட இப்படியொரு சிக்கல் இருக்குதா... ?

      வேறு கமெண்ட்ஸ் வரவில்லையே...

      நீக்கு
  12. நகைசுவை இன்று வடை , கொழுக்கட்டை கொண்டை கடலையுடனும் கலகலப்புடனும். நூற்றியெட்டில் ஒன்றாவது கணேசனுக்கு கொடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ?

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  13. ஹாஹாஹா. இரண்டாம் கேள்வியை படித்த பின் தான் மீண்டும் முதல் கேள்வியை படித்து சிரிக்க துவங்கினேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உச்சரிப்பு பிழைதானே சண்டைக்கு அஸ்திவாரம்.

      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  14. அய்யோ...பாவம் கணேசன்.....இதுக்கு என்னய மாதிரி இருந்திருக்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே கணேசன் பெயர் வைத்தாலே இப்படித்தான் போலும்.

      நீக்கு
  15. வைரவருக்குத் தானே வடைமாலை!
    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே உண்மைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு