தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 18, 2021

சீரியல் சீராழிகள்

 

வணக்கம் நட்பூக்களே... கொரோனா காலத்தில் நானும் தொலைக்காட்சி நாடகத்தை பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்த லட்சணத்தில் இதற்கு LOCKDOWN SPECIAL என்ற பெயர் வேறு. நெஞ்சு பொறுக்குதில்லையே... என்று பாரதி பாடியது இப்படி எல்லாம் நாடக காட்சிகளை அமைப்பார்கள் என்று தெரிந்துதானோ... கீழே 26 நொடிகள் மட்டுமே உள்ள காணொளியை காணுங்கள். இதில் கணவனும், மனைவியும் பேசிக்கொள்கிறார்கள். கணவனை அவன் என்றும், போடா, வாடா, என்றும் சொல்லும் மனைவியை கணவன் போங்க, வாங்க என்று பேசுகிறான். இதில் கணவனை செல்லமாக லூசு என்றும் சொல்கிறாள்.

இந்த கலாச்சார மாற்றம் எங்கிருந்து புறப்பட்டது. இவர்கள் பேசும் விசயம் புனிதமானதே ஆனால் இவர்கள் சொல்லிய விதம் விபச்சாரம் போலவே இருக்கிறது. இன்றைய விவாஹரத்துகள் பெறுகி வருவதின் தொடக்கமே... இவ்வகையான சமூகத்தை சீரழிக்கும் சீரியல்களே... தணிக்கை குழு என்ற ஒன்று இருக்கிறது. அவர்களும் பணம் கிடைத்தால் எதையும் அனுமதித்து விடும் நிலைப்பாடே... இதில் தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிப்பதில் சன் தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளி விட்டான்  ஜீ தமிழ் தொ.கா.காரன். தமிழை இவர்கள் முன்னிருத்துவதே அதை சீரழிப்பதற்கே...
 
இந்த மட்ட ரகமான கதைகளை, காட்சிகளை எழுபதுவன், எடுத்தவன் இவர்கள் எல்லோருமே தமிழர்கள்தானே... ? இவர்களுக்கு தமிழ்க் கலாச்சாரம் தெரியாதா ? அல்லது தமிழன் என்ற அடையாளத்தில், தமிழ் மொழியில் பேசும் வகையில் ஊடுருவலுக்குள் ஜனித்த ஜடங்களா ? பணம் மனித வாழ்வாதாரத்துக்கு மிக மிக அவசியமே... இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதற்காக தனது கலாச்சாரத்தை சீரழிப்பவன் சகோதரனின் சரீரத்தை தின்பவனுக்கு ஒப்பானவன்.
 
இந்த இழிவை சகித்துக் கொண்டு இல்லை இரசித்துக் கொண்டு இருப்பதின் முன்னோடிகள் பெண்களே... இதன் விரிவான வளர்ச்சியின் வீழ்ச்சியை புரிந்து கொள்ளும் அறிவாற்றல் பெண்களுக்கு இல்லை என்பதே உண்மை. இதில் பெண்கள் எல்லாவற்றிலும் முன்னேறி விட்டார்கள் என்ற பீற்றல் வேறு. உங்களது அறிவாற்றலை இவைகளில், அரசியல்வாதிகளை தேர்ந்து எடுப்பதில் காட்டலாமே... நாம் நினைத்தால் ஒரேநாளில் இந்த சீரியல் சீராழியர்கள் அனைவரையும் பொட்டியை கட்டிவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம். அவர்களும் மாற்று வாழ்க்கையை தேடிக் கொள்வார்கள்.
 
நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை நாம் அனைவருமே மறந்து விட்டோம். ஒழுக்கம், அன்பு, பாசம், மரியாதை, நன்னடத்தை, இவைகளை கற்றுக் கொடுக்கவில்லை. எல்லோருமே பணமே பிரதானம் என்று ஓடிக்கொண்டு இருப்பதால். குழந்தைகளின் பாசம் இல்லாமல் போய் விட்டது. இதன் எதிரொளி புற்றீசல் போலவே தெருவெங்கும் முதியோர் இல்லங்கள். இலவசம் இல்லை. தரம் வாரியாக இன்று இவைகள் வியாபாரத்திற்கு அடிக்கோல் நாட்டி விட்டன... நானும்கூட அயல்தேசத்தில் வெகுகாலமாக வாழ்ந்தது பணத்துக்காக மட்டுமல்ல, எனது குழந்தைகளுக்கு ஏதாவது ஓர் தவறான வழியில்கூட சித்தி வந்து விடக்கூடாது என்ற முதன்மையான காரணத்துக்காகத்தான்.
 
இன்று அந்த பிரிவையே காரணம் காட்டி என்னை எனது குழந்தைகள் குற்றவாளி ஆக்கி விட்டனர். எப்பொழுதுமே தவறு செய்யாமலே தண்டனையும் பெறும் பாக்கியசாலி நான். என்னைப்போல் இவ்வுலகில் எத்தனை சகோதரர்கள் வாழ்கின்றார்களோ... எனது குழந்தைகளுக்கு எதையுமே போதிக்காமல் காலத்தை கடத்தி விட்டு, இன்று நல்ல சிந்தனைகளை, செயல்களை மட்டுமே எதிர்பார்ப்பது எனது தவறுதான். நமது குடும்ப வாழ்வின் செயலுக்கும், சமூகத்துக்கும் என்றுமே தொடர்புச் சங்கிலி இருந்து கொண்டே இருக்கும்.
 
நான் எனக்காகத்தான் வாழ்கிறேன் என்று ஒதுங்கி விடவே முடியாது. நாம் அழகாக, நேர்த்தியாக, பதினான்கு லட்ச ரூபாயில் விலை உயர்வாக உடை உடுத்துவது சமூகத்தின் பார்வைக்காகத்தான். எனக்கு சமூகத்தைப்பற்றி கவலையில்லை. நான் எனக்காகத்தான் வாழ்கிறேன் என்று ஒருவன் சொல்வானானால் அவன் கோவணத்தை கட்டிக்கொண்டு நடக்க முடியுமா ?
 
காணொளி

54 கருத்துகள்:

  1. நல்லவேளை, இதெல்லாம் நான் பார்ப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நான் மட்டும் தினமும் 23 சீரியலுமா பார்க்கிறேன் ?

      நீக்கு
    2. ஹா.ஹா.ஹா. கணக்காக சொல்லி விட்டீர்களே...

      நீக்கு
    3. நான் குருட்டடியாக சொன்னது உண்மையா ?

      நீக்கு
  2. \\என்னைப் போலவே இந்த உலகில் எத்தனை சகோதரர்கள் வாழ்கிறார்களோ...//

    நிறைய...நிறைய...நிறையவே!

    "ஆறு மனமே ஆறு..."

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    டி.வி சீரியல்களைப் பற்றிய விரிவான அலசல். நானும் ஒரு பத்து வருடங்களுக்கு மேலாக எந்த சீரியலும் பார்க்கவில்லை. அதற்கு முன் ஒன்றிரண்டுக்கு அடிமையாகி இருந்தேன். பார்ப்பவர்கள் ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொண்டு விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாம் நம் மனதுதான் காரணம். காணொளி பிறகு காண்கிறேன்.

    உங்களின் மன உறுதி எப்போதுமே பிரமிக்க வைக்கிறது. குற்றம் சொல்கிறவர்கள் என்றுமே சொல்வார்கள். கவலைப் படாதீர்கள். இறைவன் துணையிருப்பான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ கடந்த இருபது வருடங்களுக்கு முன்பே நான் சீரியலுக்கு எதிரானவன்.

      தங்களது ஆறுதலுக்கு நன்றி.

      நீக்கு
  4. நான் டிவி பார்ப்பதே இல்லை கில்லர்ஜி. என்னிடம் டி.வி. இல்லவும் இல்லை! அதை ஒழித்து வருடங்கள் ஆகிவிட்டன! பெரும்பாலும் இந்த சீரியல்கள் எல்லாமே கலாச்சார சீர்கேடுகள் மட்டுமே பரப்புகின்றன. அதைப் பார்க்க ஆரம்பித்து விட்டால் உலகத்தையே மறந்து விடும் மனிதர்கள் - அவர்கள் பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி! ஹிந்தி மொழியில் வரும் சீரியல்களை தமிழ் “படுத்து”கிறார்கள் என்பதால் கேவலமாகவே இருக்கலாம்! ஜுனூன் தமிழ் என்று ஆரம்பித்த காலத்திலேயே இந்த சீர்கேடுகள் தொடங்கிவிட்டன. பல வருடங்களாகவே இந்தக் கூத்து தானே நடக்கிறது. சினிமா, தொலைக்காட்சி மோகம் நம் மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை இழக்கச் செய்கிறது இவை அனைத்துமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      உண்மை மக்களுக்கு விழிப்புணர்வு என்பது அழிந்து கொண்டு வருகிறது.

      நாம் ஏமாந்து கொண்டே ஊடகங்களை குற்றம் சொல்வதும் தவறுதான். தம்பி சீமான் சொல்வதுபோல் என்றாவது மக்களின் மனதில் மாற்றம் வரும் என்று நம்புவோம்.

      நீக்கு
  5. இந்தப்பக்கம் நான் செல்வதேயில்லை. ஆதலால் இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்த்து வேதனை அடையும் நிலையை அடையவில்லை.
    பலவற்றை பெருமை என நினைத்துக்கொண்டு நல்லவற்றைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள் இப்போதைய இளம் தலைமுறையினரில் பலர். நினைக்கவே வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே தங்களது கருத்து நூறு சதவீதம் உண்மையே...

      தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. எங்கள் வீட்டில் இவ்வாறு அடிமையாகவில்லை என்பதில் மகிழ்ச்சியே...

    உங்களின் நேர்மை என்றும் நன்மை தரும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதுவே நன்று, வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. சீரியல்கள் பார்ப்பதை விட நேரில் நடப்பது இன்னும் வேதனை
    தரும்.
    பக்கத்து வீட்டுக் கிழவியை நோகடிக்கும்
    ஒரு இளைஞன்,
    உன்னை யார் அந்த நாளில் தியாகம் செய்யச் சொன்னார்கள்?

    நீ இல்லாவிட்டால் நாங்கள் பிழைத்திருக்க மாட்டோமா?
    என்றெல்லாம் கேட்கிறான்.
    அதனால் அப்பவும் துன்பப் பட்டேன்
    இப்பவும் அதே என்று வருத்தப் படுகிறாள்.இன்னும்
    வேலை செய்து தன்னைக் காப்பாற்றிக் ஒண்டு வரும் அந்தப்
    பெண்மணிக்குத் தேவை இரண்டு நல்ல வார்த்தைகள்.

    நான் தமிழ்த் தொலைக்காட்சி பார்த்தே நாளாகிறது.
    அதுவரையில் நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்.
    நல்ல காலம் வரட்டும் அன்பு தேவ கோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இன்றைய தலைமுறைக்கு பாசம், நேசம் தெரியவில்லை.

      இச்சூழலில் ஊடகங்களும் தவறான வழிப்போக்கை பறைசாற்றுவது வேதனையான விடயமே...

      இன்னைய இளைஞன் நாமும் நாளைய கிழவன் என்பதை மறக்கிறான்.

      என்ன செய்வது நாம் விதைப்பதையே அறுவடை செய்யணும்.

      வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  8. தொலைக்காட்சி பக்கமே திரும்புவதில்லை நண்பரே

    பதிலளிநீக்கு
  9. கணவனை "வாடா!போடா!" என அழைக்கும் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது இயக்குநரிகளின் பிதாமகர் என அழைக்கப்படுபவர் தான்! அவர் தான் குடும்ப உறவின் முக்கியத்துவத்தையும், அதன் புனிதத்தையும் பல வகைகளிலும் கொச்சைப்படுத்தி எடுத்துவிட்டுத் தான் திறமையாளன், சாதனையாளன் என்னும் பெயரை வாங்கிக் கொண்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      யார் அந்த பிதாமகர் எனக்கு விளங்கவில்லையே... மணிரத்தினமா ?

      நீக்கு
    2. ஹாஹாஹா  அக்காவுக்கு அந்த டைரடக்கர் மேல் எவ்ளோ கோவம் :)

      நீக்கு
    3. கில்லர்ஜி, ஏஞ்சல் கண்டு பிடிச்சுட்டாங்க போல! உங்களுக்குத் தெரியலை. இயக்குநர் திலகம் எனப் பெயர் வாங்கியவர் தான். கே.பாலசந்தர்! :(

      நீக்கு
    4. @கீதா சாம்பசிவம் - உங்க நல்ல நேரம் மணிரத்னம் படங்களைப் பார்க்கலை. கில்லர்ஜி சரியா சொல்லியிருக்கார். பாலசந்தர் கோடு போட்டால் இவர் ரோடு போடுவார். நாளைக்கு பெண்ணுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதால் இன்று திருமணம் செய்துகொள்வது போன்ற புரட்சிகர வழிமுறைகளுக்குச் சொந்தக்கார்ர் அவர்.

      நீக்கு
    5. மணிரத்னம் படங்கள் ஒன்றிரண்டு தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். என்ன வசனம் என்பது எழுதியவருக்கும், மணி ரத்னத்துக்கும் மட்டுமே தெரியும். அந்த அளவுக்கு மோசம்.

      நீக்கு
    6. @கீதா சாம்பசிவம் - ஐயோ நான் பாலசந்தரை நினைத்து விட்டு விட்டேன். காரணம் அவரை "இயக்குனர் திலகம்" என்ற பட்டத்துக்காரர் ஆயிற்றே என்று.

      இந்தக் குறைகளை திரு. நெல்லையார் அவர்கள் சொல்வது போல மணி ரத்தினத்துக்கே பொருந்தும்.

      வீட்டுக்கு தெரியாமல் தாலி கட்டி வாழ்வது போன்ற காட்சிகளை கொண்டு வந்து சமூகத்தை சீரழித்த மூதேவிகளில் அவரும் முன்னோடியே...

      நீக்கு
    7. மணிரத்னம் "ரோஜா" படம் எடுத்த வரைக்கும் சாதாரணமாக தேசத்தின் உண்மையான குடிமகனாகவே இருந்தார். பின்னாட்களில் பணமும் அதைத் தொடர்ந்து அவர் கடைப்பிடித்த/பிடிக்கும் சில கொள்கைகள் அவரைத் தடம் புரளச் செய்து விட்டது. அவங்க குடும்பமே இப்போ அனைவருமே மாறிவிட்டார்கள்.

      நீக்கு
    8. ஆனாலும் பிதாமகர் தான் அனைவருக்கும் முன்னோடி. மணிரத்னத்துக்கும் சேர்த்து!

      நீக்கு
    9. ம்... ஏற்கிறேன அவரே உறவுகளை கொச்சை படுத்தி விட்டார் நாம் எடுத்தால் ஓடாதா ? என்ற எண்ணமாக இருக்கலாம்.

      நீக்கு
  10. இந்த மாதிரி தொலைக்காட்சி தொடர்களை பார்த்து மனம் நொந்து போவது இல்லை ஜி.
    நல்ல பாடல்கள், நல்ல நிகழ்ச்சிகள் நிறைய இருக்கிறது. அவற்றைப் பார்த்து அதை விமர்சனம் செய்யுங்கள் நீங்கள் அதை அழகாய் சொன்னால் மற்றவர்கள் அதை பார்ப்பார்கள் ஜி.

    உங்கள் குழந்தைகள் உங்களை புரிந்து கொண்டு உங்களுடன் இணைந்து வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ "மக்கள் தொலைக்காட்சி" தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்தி நல்ல நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் யார் பார்க்கின்றார்கள் ?

      தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோ.

      நீக்கு
  11. உங்கள் குழந்தைகளை அதிகாலையில் ஒவ்வொருவராக மன கண்ணில் கொண்டு வந்து வாழ்க வளமுடன் என்று தினம் வாழ்த்துங்கள். நேரம் கிடைக்கும் போது மகனை 25 முறை, மகளை 25 முறை வாழ்த்துங்கள்.
    அவர்கள் உங்களுடன் மகிழ்வாய் பேசுவதாக கற்பனை செய்யுங்கள். என்னை என் அன்பை புரிந்து கொள்வார்கள் என்னிடம் அன்பும், பரிவும் கொள்வார்கள் என்று சொல்லி கொண்டே இருங்கள்.
    கண்டிப்பாய் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்வாய் இருக்கும் காலம் விரைவில் வரும்.
    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொன்னதை எனது குழந்தைகளுக்காக இனி தினமும் பிரார்திப்பேன்.

      மீள் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  12. நான் தொலைக்காட்சி சீரியல்களை முன்பு பலவருஷங்கள் முன்பு பார்த்திருக்கேன் .அப்போ பிளாக் ஏதும் இல்லாத நாட்கள் .பிறகு 2012 லருந்து சாட்டிலைட் தமிழ் கனெக்ஷன் வராம போச்சு .இப்பவும் சில நேரம் நாடகங்கள் பார்ப்பதுண்டு அப்பப்போ காரணம் நம்ம ஊரு வாழ்ந்த இடம் சாலை  லேட்டஸ்ட் புடவை சல்வார் டிசைன் எல்லாம் இப்போ எப்படி இருக்குன்னு பார்க்கத்தான் .மற்றபடி வெறும் எதிர்மறை நெகட்டிவ் எண்ணங்களை தூண்டுபவற்றை தவிர்த்திடுவேன் .இப்போ யூ டியூப் தொலைக்காட்சியில் செய்தி சானல்கள் போகுது .வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் நம்மால் பின்னோக்கி போக முடியாதது என்பது கசப்பான உண்மை .அதனால் அதனை அதன்போக்கில் செல்லவிடுங்கள் .எதையும் நம்மால் சிலருக்கு  புரிய வைக்க முடியாதது .அதனால் கோபம்கொள்ளவும் வேண்டாம் .நாம் நாமாக இருப்போம் அன்பைமட்டும் பரப்பிக்கொண்டும்  நல்லவற்றை செய்துகொண்டும்  .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஏஞ்சல் கலாச்சாரத்தை மறக்காமல் நினைவில் கொள்வதே சிறப்பான விசயம்.

      ஆம் இறுதிவரை அன்பை விதைப்போம்.

      நீக்கு
  13. தொலைக்காட்சித் தொடர் - ஓரிரு வாரங்கள் சித்தி சீரியல் ஆரம்பித்தபோது பார்த்தது. என்றுமே சீரியல்கள் பக்கம் ஒதுங்குவதில்லை. சீரியல்களுக்கு இணையாக செய்திச் சேனல்களும் மோசமானவற்றை மட்டுமே அலசுவதால் நெட் ஜியோ அனிமல் பிளானட் போன்றவை தவிர எதையுமே பார்ப்பதில்லை.(எங்க வீட்டிலும்)

    தொலைக்காட்சி இல்லைனா நமக்கு நிறைய நேரம் கிடைப்பதை உணரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தொலைக்காட்சி வரவுக்குப்பின் அலைபேசியின் வரவால் நாம் மனிதர்கள் முகம் பார்த்து பேசுவதை மறந்து விட்டோம்.

      நீக்கு
    2. சரியான பாயின்டைப் பிடித்துவிட்டீர்கள். உண்மைதான். இன்னும் மணமேடையில் மணப்பெண், பிள்ளை, செல்கோன் வைத்து நோண்டிக்கொண்டிருக்கவில்லை. மற்றபடி எல்லோருமே வெட்டியாக வாட்சன் பார்த்து உறவுகளைத் தவலைக்கிறோம். இது காலத்தின் கசப்பான உண்மை. இந்தச் சனியனைக் கைகழுவணும்.

      இன்னொன்று, கோவிலுக்குள் நடக்கும் திருவிழாவிலும் கடவுளை மனதார வேண்டாமல் காணொளி போட்டோ எடுக்கும் வியாதி. (நினைவுக்காக ஓரிரண்டு எடுப்பதைச் சொல்லவில்லை)

      நீக்கு
    3. நேற்றுக் கோயிலில் நடந்த நிகழ்ச்சிகள்! மனம் வெதும்பிப் போய்விட்டோம். :(

      நீக்கு
    4. இன்றைய திருமண நிகழ்வுகளை கலாச்சாரம் தெரிந்தவர்கள் பார்த்துக் கொண்டு உட்கார முடியாது கோபம்தான் வருகிறது.

      நீக்கு
  14. //பிரிவைக் காரணம் காட்டி குழந்தைகள்//- இதைப்பற்றிலாம் நாம அலட்டிக்கக்கூடாது. நம்மைப் பொறுத்தவரை எது சரியோ அதனைச் செய்துகொண்டு போய்க்கிட்டே இருக்கணும். சின்னப் பசங்களுக்கு என்ன தெரியும்? அவங்க உண்மையைப் புரிஞ்சுக்கிட்டு நம்மைப் பற்றி பெருமையா நினைக்க ஆரம்பிக்கும்போது நாம இருக்க மாட்டோம். அப்புறம் எதுக்கு அலட்டிக்கணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே நம்மை புரிந்து கொள்ளும்போது இருங்க மாட்டோம் இதுதானே பலரது வாழ்விலும் நிகழ்ந்து இருக்கிறது.

      கசப்புதான் ஆனால் உண்மையே...

      நீக்கு
    2. இன்னொன்று கில்லர்ஜி... நாம் எடுக்கிற ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு விளைவு இருக்கும் (பாஸிடிவ் மற்றும் நெகடிவ்). இதை என் வாழ்வில் நான் கண்டிருக்கிறேன். 6 வருடங்களுக்கு மேல் (முக்கியமான 6 வருடங்கள்) அவர்கள் என்னுடன் இல்லாதபோதும், நான் எப்படி மேனேஜ் செய்கிறேன் என்பதும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும் அனேகமா தினமும் காணொளில பகிர்ந்துகொள்வோம்.

      இருந்தாலும், ஒருவேளை, அப்போதே நானும் இந்தியா திரும்பியிருந்தால்.... என்றெல்லாம் மனதில் கேள்விகள் எழும். அதற்கெல்லாம் எங்கே விடை தேடுவது?

      இதற்கு முன்பு எழுதினேனா என்று தெரியவில்லை. எனக்கு வீடு உதவி செய்வதற்காக வந்தவர், என்னிடம், தன் பையன் பைக் (+1) வாங்கித் தராவிட்டால் தற்கொலை பண்ணிக்கோள்வேன் என்று அவன் அம்மாவை மிரட்டுகிறான். நானோ சாதாரண பணியில் இருக்கிறேன். என் கஷ்டம் அவனுக்குத் தெரியவில்லை என்றார். நான் அவனிடம், நீங்க அவன் பயமுறுத்துவதைப் பற்றி ஏன் கவலைப்படணும், போகணும் என்று விதி இருந்தால் போகத்தான் செய்வான், ஆனால் பயந்துகொண்டு பைக் வாங்கிக் கொடுத்தால் அது இன்னும் என்ன என்ன பிரச்சனைகளைக் கொண்டுவரும் என்று யோசிங்க என்றேன்.

      இங்க இருப்பவர்களுக்கு அங்கு வேலை செய்பவர்களின் கஷ்டம் தெரியாது. நான் கடைசி வரை என் சம்பளம் குறைந்த அளவு (நான் வாங்கியதில் பத்தில் ஒரு பகுதி) சொல்லித்தான் வளர்த்தேன். இப்போவும் பசங்க, நான் கஞ்சம் என்பார்கள் (ஹாஹா). இல்லைடா... நான் சிக்கனம் என்பேன்.

      நீக்கு
    3. ஆம் நண்பரே இன்று பலரது வீட்டிலும் பசங்க இந்த வார்த்தையை உபயோகப்படுத்தி மிரட்டிக் கொண்டே வாழ்கிறார்கள்.

      என்னை மிரட்டி வரவழைத்த எனது மகன் இன்று அங்கு போய் சிறிய சம்பளத்தில் மாட்டிக் கொண்டு என்னை மீட்டெடுங்கள் என்கிறான்.

      உதவிக்காக மட்டுமே என்னை பயன் படுத்துகிறான். என்ன செய்வது ?

      விதிப்படியே அனைத்தும் நிகழ்கிறது இதை யாரும் மறுக்க முடியாது.

      நீக்கு
    4. உங்கள் பாசம்/அல்லது கோழைத்தனம் மிரட்டலுக்குப் பயப்பட்டு வரச் சொல்லிவிட்டதே! இப்போவும் அதே நடக்கும்! :( குழந்தைகளைச் சின்ன வயசில் இருந்தே தன்னம்பிக்கையுடன் வளர்த்திருக்க வேண்டுமே! நீங்கள் அவர்களுடன் சேர்ந்து இல்லை என்பதால் அது ஓர் குறையாக ஆகிவிட்டது!

      நீக்கு
    5. நான் அவர்களுடன் இல்லாததற்கு முக்கிய காரணம் மறுமணம் செய்து விடக்கூடாது என்ற பிடிவாதம்.

      நீக்கு
  15. நேரம் கடத்துவதற்காக சீரியல்கள் பொழ்துபோக்கு.அளவோடு இருந்தால் பாதகமில்லை. வீட்டில் வயதானவர்களுக்கு பேசுவதற்கு ஆள் இல்லாத நிஅலையில் இது வரப் பிரசாதம். ஆனால் பலர் சீரியல் பார்ப்பதில்லை அந்த நேரத்தையும் அதைத் தாண்டியும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்.சீரியல்களை மோசமான விஷமத்தனங்கள் பகிரப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆம் சீரியல்களில் விசமத்தனங்களைத் தவிர வேறொன்றுமில்லை.

      நீக்கு
  16. நம் வீட்டில் டிவியே இல்லை. சீரியல் எலலம் ரொம்பவே அலர்ஜி. நான் செல்லும் இடம்களில் யாரேனும் பார்த்துக் கொண்டிருந்தாலும் நகர்ந்து விடுவேன் அந்த இடத்தை விட்டு.

    தேவையானவற்றை யுட்யூபில் எப்போது முடிகிறதோ அப்போது பார்ப்பது வழக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நலமா ?
      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  17. நான் மற்றும் என் குடும்ததினர்கள் யாரும் சீரியல் பார்க்க அனுமதி இல்லை. இதை நாங்கள் முதல் நாளில் இருந்தே கடைப்டிக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  18. சீரியல் பார்க்க வழியேதுமில்லை.....நண்பரே!!

    பதிலளிநீக்கு