இதைக்கண்டு
வெட்கப்பட வேண்டியவர்கள் யார் ? ஆட்சியாளர்களா ? இல்லை, வாக்களித்த மக்கள்தான்
வெட்கபடல் வேண்டும் நமக்குத்தான் ஐந்து ஆண்டு கழித்தும்கூட சூடு, சொரணை
வருவதில்லையே அப்புறம் எப்படி ? வெட்கப்படமுடியும் காரணம்,
நமக்கு மறதி கூடுதலாகி விட்டது அன்றாட வாழ்வில் நம் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு
பள்ளி சென்று வருகிறார்கள் எந்த ஒரு அரசியல்வாதிகளாவது இதில் பயணம்
செய்திருக்கிறார்களா ? இல்லையே ஏன் ?
ஒருவேளை ''படியில் பயணம் நொடியில் மரணம்'' என்பதால் படியே வேண்டாமென முடிவு செய்து விட்டார்களோ ? மானிடா, எத்தனை
பிரச்சனைகளுக்கு கூடுகிறாய் ஏன் இது நமது பிரச்சனை இல்லையா ?
திரைப்படத்துறையினர் வீடு இல்லாமல்
கஷ்டப்படுகிறார்கள் என்பதால் அரசாங்கம் வீடு கட்டி கொடுப்பதற்கு ஒன்றுகூடி ஆதரவு
கொடுக்கிறாய்.
நானாட, நாயாட என தமிழ்க்கலாச்சாரத்தை
கட்டிக்காத்து, குஷ்சு புஸ்சுவென்று கலகலவென மாமேன், மச்சான் எனபேசும் நீதிபதிகள்
சொன்ன காரணத்திற்காக இளைய தலைமுறையினருக்கு SMS கொடுத்து
ஊக்கு விற்கிறாய்.
சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ
திரைப்படநடிகர்கள் அவர்களிடம் பணமில்லாததால் கிரிக்கெட் நடத்தி வசூல் செய்கிறார்கள்
அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியாதென்றாலும் நல்லகாரியம் என்பதால் நீயும்
ஒருநாள் வேலையை கெடுத்து மூன்று நாள் சம்பளத்தை கொடுத்து கொளுத்தும் வெயிலில்
நின்று டிக்கெட்டு எடுத்து சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிரிக்கெட்
பார்க்கிறாய்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கிறாய்,
மூலை முடுக்குகளிலிருந்து மூடச்சொல்லி குரல் கொடுக்கிறாய் அது யார் பணத்தில்
கட்டியது ? மக்கள் பணமல்லவா ? நமக்கு உண்மையிலேயே
பொருப்புணர்வு இருந்திருந்தால் ? தொடக்கத்திலேயே தடுத்திருக்க வேண்டுமே
இல்லையே என்ன காரணம் ? இதனால் மக்கள் உயிருக்கு
ஆபத்து என்றால் அது
ஏற்றுக் கொள்ளக்கூடியதா ? நிச்சயமாக இல்லை.
எனெனில் சென்னையின்
இதயப்பகுதி கல்ப்பாக்கத்தில் அணுமின் நிலையத்தை வைத்து நாம் பாதுகாத்து வருகிறோமே
அது எப்படி ? எத்தனை உன்னதமான
அரசியல்வாதிகள் சென்னையில் வாழ்கிறார்கள் அவர்களின் நலனைப்பற்றி அவர்களுக்கு
அக்கறை இருக்காதா ?
அணுமின் நிலையம் பாதுகாப்பு உறுதியாக உள்ளதால்தானே அடுத்தஏழாவது தலைமுறைக்கும் தேவையென கோடி கோடியாக
சம்பாரித்து SWISS BANKல், போட்டு பாதுகாத்து
வைக்கிறார்கள் இது ஏன் மக்களுக்கு
விளங்குவது இல்லை ?
கில்லர்ஜி நல்ல சொல்லியிருக்கீங்க, புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
பதிலளிநீக்குஎவ்வளவுதான் சொல்வது ? எத்தனை பேர்தான் சொல்வது ?
நீக்குபடிக்கட்டுகளில்லாத பஸ்!
பதிலளிநீக்குஅடப்பாவிகளா!
வாருங்கள் நண்பரே.... யாரைச்சொல்கிறீர்கள் ? என்னைப்பொருத்தவரை மக்கள்தான்.
நீக்குகில்லர்ஜி !!
பதிலளிநீக்குதமிழகத்தில், மக்கள் அப்பாவி ஏமாளிகள். அரசியவாதிகள் அயோக்யத் திருடர்கள். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால் அயோக்யத் தனம் செய்கிறார்களா, இல்லை அவர்கள் திருடர்களாக இருப்பதால் எது கிடைத்தாலும் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டுவிட்டு வாய் பொத்தி நிற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டு விட்டார்களா என்று கேட்டால் பதில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா? கதை தான்.
சுதந்திரத்திற்குப் பின்னர் காமராஜர், பக்தவத்சலம் போன்றோர் கையில் ஆட்சி இருந்த வரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அண்ணா துரை வந்த பின்னர் வழி தவறிப் போக ஆரம்பித்தது. அண்ணா என்று ஊர் பூராவும் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவரால் தமிழகத்துக்கோ நம் நாட்டுக்கோ என்ன பயன் என்று இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் அவருடைய வழிதோன்றல்கள் அத்தனையும் தமிழகத்தை கற்பழித்து குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி விட்டார்கள் என்றே சொல்வேன்.
சாராயம் விற்பது, பசுமை/விவசாய நலிவு, அணு விலைகள், மீத்தேன், கெயில் வாயுகுழாய் பதிப்பு இது அத்தனை நடந்த போதும் ரெண்டு 'கலகங்களும்' கல்லூளி மங்கன்களாக வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர, அது குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதையோ, போராட்டைத்தை நடத்துவதையோ ஒருபோதும் செய்யவில்லை. தற்போதும் இரண்டு புறமும் வழுவான வழக்குகள் உள்ளன, மத்திய அரசு சொல்வதைப் போல கேட்டு மக்களை கொலை செய்து, வாழ்வாதாரத்தை அழைத்து தெருவில் நிறுத்தாவிட்டால் அவர்கள் மேலுள்ள வழக்கை வலுவாக்கி உள்ளே தள்ளுவோம் என மிரட்டுவார்கள். இரண்டு தனி மனிதர்களில் சுய நலத்துக்காக 6 கோடி மக்கள் சின்னாபின்னமாகப் போகிறார்கள். மக்களாட்சி தமிழகத்து ஏற்ப்பட்ட சாபக்கேடு என்றே நான் சொல்லுவேன்............
நண்பரே ஒரு பதிவு போடும் அளவு கருத்துரை போட்டு தங்களது ஆதங்கத்தை கொட்டி விட்டீர்களே....
நீக்குநல்லாச் சொன்னிங்க... சூடு, சொரனை இருந்திருந்தால்... வெட்கமும் மானமும் தானாக வந்துவிடுமெ.... நண்பரே.....
பதிலளிநீக்குஆமாம், தாங்கள் சொல்வதும் உண்மையே...
நீக்குபுரிய வேண்டிய நமக்கெல்லாம் இது புரியவே புரியாது...
பதிலளிநீக்குநாமெல்லாம் இன்னும் மானாட மயிலாடக்களையும்...
என்னம்மா இப்படிப் பண்ணுறீங்களேம்மா என அடுத்தவன் வீட்டு சமாச்சாரங்களை அனுபவித்து பார்ப்பதையும் விடாமல் தொடருபவர்கள்...
நீங்க என்ன சொன்னாலும் எங்களுக்கு எருமை மாட்டு மேல பேஞ்ச மழைதான்... போங்க... இன்னும் சொல்லணுமின்னா... நாங்க எல்லாம் செம்மறி ஆட்டுக்கூட்டம்....
நல்ல பகிர்வு அண்ணா...
இன்னும் எத்தனை ? காலம் நண்பரே....
நீக்குஎக்ஸலண்ட் ஜெயதேவ்தாஸ்... நான் சொல்ல நினைத்த எதையும் பாக்கி வெக்காமல் சொல்லிட்டீங்க. அதை வழிமொழிஞ்சுட்டு S ஆகறேன் கில்லர்G!
பதிலளிநீக்குஆகமொத்தம் செலவு இல்லாமல் ஓசிக்கருத்துரை அப்படித்தானே வாத்தியாரே....
நீக்குவெட்கப் படுவதால் என்ன ஆகப் போகிறது ஜி. மறதி என்பது நமக்குக் கிடைத்த வரம்
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா என்றுதான் தீர்வு ?
நீக்குநல்ல உள்குத்து
பதிலளிநீக்குசொல்லிப் போனவிதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கண்டிப்பாக தொடர்கிறேன்....
நீக்குtha.ma 5
பதிலளிநீக்குநன்றி
நீக்குகில்லர்ஜீ அவர்களுக்கு வணக்கம்
பதிலளிநீக்குபடியில்லா பேருந்து - மக்கள் பயணம் - போக்குவரத்து அமைச்சர் ????
சிரிப்போம் சிந்திப்போம். (இலவச பயணமாக இருக்குமோ)
விடை சொல்லமுடியாத அல்லது கேற்க தகுதியை இழந்த மக்கள் (ஓட்டுக்கு பணம் பெற்ற பெருமைக்குரிய வர்கள் மட்டுமே) அதிகமாக இருக்கும்போது நமக்கு பரிதாபமே மிஞ்சும்.
உங்கள் சமுக அக்கறை உயரதுக்கு மேல் உயரம்.
நாம் (மக்கள்) திருந்தினாலே பல கொடுமைக்கு வழி கிடைக்கும். நன்றி
sattia vingadassamy
தங்களின் முதல் வருகைக்கு வணக்கம்
நீக்குஎனது சமூக அக்கரை கிடக்கட்டும், என்றுதான் மாற்று சிந்தனைக்கு வருவது ? இன்று தொடங்கினால்தானே நாளைய நமது சந்ததிகளாவது வாழும்.
நண்பா!
பதிலளிநீக்குஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருங்க!
உங்களது சங்கொலியின் சங்கீதம்
இங்கீதம் தெரியாத மனிதர்களுக்கு
புரியவே புரியாது!
ஏனெனில்,
குவார்ட்டர் குடுத்து, கோழி பிரியாணி பொட்டலம் தந்து
கூட்டத்தைக் கூட்டி காட்டும் (கும்மாளமிடும்) குடிமகன்கள் இருக்கும் வரை
சமுதாயத்தில் நாம் ஆடும் ஆட்டம் உள்ளே வெளியேதான்.
பூனைக்கு மணி கட்டி விட்டீர்கள்!
வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
வாருங்கள் நண்பரே, என்னைப்பொருத்தவரை எனது கோபம் ஏமாற்றுபவனைவிட, ஏமாறுபவன் மீதுதான்.
நீக்குஅன்புள்ள ஜி,
பதிலளிநீக்குஅக்கரையில் இருந்து இக்கரைபற்றி அக்கறையுடன் அய்ந்தாண்டு வெட்கப்பட வேண்டியதைச் செய்யததைச் சுட்டிக்காட்டியது... தங்களின் சுரணை...இங்கு சுடட்டும்...அதன் வெப்பத்தில் விழிக்கட்டும் மக்கள்!
நன்றி.
நான் என்றுமே பொதுநலவாதிதான் மணவையாரே...
நீக்குஅப்புறம் பேசலாம். +1 முடிச்சாச்சு.
பதிலளிநீக்கு+1 முடிச்சாச்சு, +2 க்கு வாங்க,
நீக்குபடிக்கட்டு இல்லாத பஸ், கூறை இல்லாத பஸ்! எல்லாம் தமிழகத்தில் உண்டு! இதையும் சகித்துகொண்டு ஓட்டுக்கு பணம் வாங்கி டாஸ்மாக்கில் அதை திருப்பிக் கொடுத்து வாழ்ந்து கொண்டிருப்பதில்தான் தமிழனின் சாமர்த்தியம் இருக்கிறது! சில பேருந்துகள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஓடுகின்றன! அதை இயக்கும் ஓட்டுனர்களின் நிலைமை பரிதாபம்! சிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஅதென்ன ? நண்பரே.... சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ஓடும் பேரூந்துகள்.
நீக்குஇங்கு மொய் விலக்கப்பட்டது.
பதிலளிநீக்குஅதனால தைரியமா வரலாம்.
வாங்க நண்பா....
நீக்குபடிக்கட்டே இல்லாமல் பஸ்ஸா
பதிலளிநீக்குகொடுமை நண்பரே
தம +1
கொடுமைதான் நண்பரே.... பள்ளிக்குப்போகும் பெண் குழந்தைகள் எப்படி ? ஏறமுடியும்.
நீக்குஜெயதேவ் சொல்லியிருப்பது அருமை வழி மொழிகின்றோம். ஆனால் முதல் வரியைத் தவிர....தமிழக மக்கள் அப்பவிகள், ஏமாளிகள் என்பதை . எல்லோருக்குமே தெரியும் காமராசர் ஆட்சி பற்றியும் தெரியும். அதன் பிறகு சின்னாபின்னமானதும், ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு ஆட்சியிலும் மக்கள் ஏமாற்றப்படுவது தெரியும். ஆனாலும், படித்தவர்களும் கூட ஓரளவிற்கு இதையெல்லாம் தெரிந்திருந்தும் ஓட்டுப் போடத்தானே செய்கின்றார்கள் கண்ணை மூடிக்கொண்டு? எவராவது கேள்வி எழுப்புகின்றனரா? நீங்கள் எங்களுக்கு நன்மை செய்யவில்லை அதனால் நாங்கள் ஓட்டு போட மாட்டோம் என்று எல்லொரும் ஒட்டுமொத்தமாக எதிர்த்தால் புரட்சி வெடித்து நல்லது நடக்காமல் போகுமா என்ன? அட்லீஸ்ட் கொஞ்சம் பயந்தாவது அரசியல்வாதிகள் ஆட்சி புரிவார்கள் இல்லையா...மக்கள் சக்தி பெரிது தானே? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதுதானே?
பதிலளிநீக்குமிகச்சரியாக சொல்லி இருக்கிறார் நண்பரே...
நீக்குமக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்.
பதிலளிநீக்குஇதில் மானமுள்ளவனும் தலைகுனிய வேண்டியுள்ளதே....
நீக்குபத்திரிகைகள்,புத்தகங்கள் படிப்பதாலும், தொலைக்காட்சி செய்திகள் கேட்பதாலும்(உங்க நாட்டு) நடப்புக்கள் தெரியும். உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் உணர்ந்து திருந்தவேண்டியவங்க திருந்தினாலதான்.
பதிலளிநீக்குஎன்றுதான் ? திருந்துவது சகோ
நீக்குஇது ஒன்னும் விளங்காது ஜி...
பதிலளிநீக்குவிளங்காது என்பதால் விளங்குபவனும் கஷ்டப்படவேண்டி இருக்கிறதே...
நீக்குபடிக்கட்டு இல்லேன்னா என்ன, பஸ் விடுறாங்களே அது போதாதா? என்பார்கள் நம் மக்கள். அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பதிலளிநீக்கு”ஆறு மனமே ஆறு...அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?
தாங்கள் சொல்வதுபோல் சொல்பவன்தான் நிறைய இகுக்கிறான் நண்பரே...
நீக்குபொதுத் துறை மீது மக்களுக்கு விரக்தி ஏற்படச் செய்து ,போக்குவரத்தை தனிமார்மயமாக்கும் அரசின் மறைமுகச் சதி !
பதிலளிநீக்குத ம 11
ஒருவேளை நீங்கள் சொல்வது போல்தான் இருக்குமோ....
நீக்குஆயிரம் பதிவுகள் போட்டாலும் நம்மை திருத்த முடியாது.....
பதிலளிநீக்குஎப்ப தேர்தல் வரும் எவன் என்ன கொடுப்பான் என்பதாகவே மக்கள் மனம் மாறிவிட்டது.
அந்த மக்களால்தான் எல்லா மக்களுக்கும் வேதனை.
நீக்குஎதுக்கு திருந்தோணும்!?..
பதிலளிநீக்குதிருந்தி என்ன ஆகப் போகுதுங்கோ!?..
எரியற கொள்ளில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி - ன்னு கில்லர் ஜி சொல்லி விட்டால் - நான் ஒரு நல்ல பதில் தருகின்றேன்!?...
முடியாது, கண்டிப்பாக முடியாது ஜி
நீக்குஅந்த கொள்ளிக்கட்டையிலே மண்ணெண்னை ஊற்றினாலும்சரி, நெய் ஊற்றினாலும்சரி, சொல்லவே முடியாது ஜி.
அப்போ - நான் ஒரு நல்ல பதில் சொல்ல வழியே இல்லையா!?..
நீக்குஒரு ரக்ஷ இல்லை ஜி
நீக்குநல்லாத்தான் சொல்லி இருக்கின்றீங்க கில்லர்ஜீ
பதிலளிநீக்குகேட்கத்தான் ஆள் இல்லை நண்பா....
நீக்குஉங்கள் கண்களுக்கு மட்டும் எப்படி இவை தென்படுகின்றன. தங்களின் சமூகப் பிரக்ஞை போற்றத்தக்கவேண்டியதாகும். ஜனநாயகம் என்ற பெயரில் நாம் எதிர்கொள்ளும் அவலங்களில் இவை போன்றனவும் உண்டு. இதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.
பதிலளிநீக்குஎனது தேடுதலில் கிடைத்தது முனைவரே... இதபோல் இன்னும் நிறைய இருக்கின்றது இந்தப்பதிவை எழுதுவதற்க்கு ''கரு'' கொடுப்பதே இந்த வகையான புகைப்படங்கள்தானே....
நீக்கு
பதிலளிநீக்குஅரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். படிக்கட்டு இல்லாத அந்த பஸ்ஸை பயன்படுத்த அந்த பஸ் தொழிலாளர்கள் எப்படி சம்மதிக்கிறார்கள்? அவர்களுக்கும் சமூக அக்கறை உண்டு அல்லவா? அந்த பஸ் ஓடும் பகுதியில் ஒருவர் கூடவா எதிர்ப்பு காட்டவில்லை? ஆச்சரியமாக இருக்கிறது.
த.ம.13
எதிர்ப்பு காட்டக்கூடிவன் பலசாலியாக இருக்கவேண்டும் அவனும் ஆளுங்கட்சி பின்னே எப்படி கேட்பான்.
நீக்குபடிக்கட்டு இல்லாதா பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் சூராதி சூரர்கள். படிக்கட்டு இல்லா பஸ்ஸையும் போக்குவரத்தில் அனுமதித்தூ இருப்பவர்கள் வில்லாதி வில்லன்கள்.
பதிலளிநீக்குஇதை எழுதிப்போபவ ன் கோமாளியோ...
நீக்குகோமாளி அல்ல...நண்பரே...யதார்த்தவாதி...........!!!!!!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
சரியான ஊமக்குத்து இதுவா.... ஜி.... சொல்லி முடித்த விதம் நன்று. த.ம 14
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இது ஊமைக்குத்து என்றால் அது எனக்கும்தானே....
நீக்குதொலை நோக்குப் பார்வையை தொலைத்து விட்டார்கள் .இப்போதைக்கு என்ன லாபமோ அதையே அரசியல் வாதிகளும் ஏன் மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் . என்னவோ நாம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள் நண்பரே...
நீக்குஇதேமாதிரி சிலமுறை அஅரசுப்பேருந்துகளில் நானும் பயணித்திருக்கிறேன் . என் பள்ளிகாலங்களில் , படிக்கட்டு கழண்டு இதேநிலையில் வரும் பேருந்தில் , ஏறுவதற்குச்சென்று கவிழ்ந்தடித்து மண்ணைக்கவ்வியவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் . .அதைத்தொடர்ந்த தங்களின் கருத்துகள் சிறப்பானவை எனினும் , இதெல்லாம் நடக்குமா என்பது மேற்கில் உதிக்கும் சூரியனைப்போன்றதுதான் .
பதிலளிநீக்குபேரறிஞர் அண்ணா ஒரு இலக்கியவாதி . தமிழில் நிலவும் பிரச்சனைகளை அவர் சீர்செய்வதற்குள்ளே , அவர் உடல்நிலை சீர்கெட ஆரம்பித்திருந்து . பேசும் அளவிற்கு செயல் இல்லை . ஆனால் எம்.ஜி.ஆர் இந்த விஷயத்தில் குறைகூற முடியாது .
முன்பெல்லாம் எவன் நல்லவன் என்றுபார்த்து ஓட்டு போட வேண்டி இருந்தது . இப்போதோ , எந்த அயோக்கியன் கொஞ்சம் நல்லவன் என்று தேடிப்பிடித்து போடவேண்டியதாய் இருக்கிறது .
தம+
உண்மைதான் அயோக்கியனில் நல்ல அயோக்கியன் அருமையாக சொன்னீர்கள்.
நீக்குபடிக்கட்டுகளையே...காணோமே....!!! என்ன கொடுமை...சரவணா....
பதிலளிநீக்குவீட்டுல நாலு கட்டைக்காணோம்ணா அவர்கள் பதறுவார்கள்....? இதற்கு....? ம்கூம்...
தம 15
கொடுமைதான் கேட்க நாதியில்லையே.....
நீக்குபடிகட்டு இல்லா பஸ்ஸைப்பார்த்து பகீர் என்கிறது. படி இருக்கும் போதே வயதானவர்கள் ஏற கஷ்டப்படுகிறார்கள் , படியும் இல்லையென்றால் எப்படி ஏறுவது? அவ் ஊர் மக்கள் பொறுமைசாலிகள் போலும்.
பதிலளிநீக்குஇவர்கள் பொறுமைசாலிகள் அல்ல ஏமாளிகள்.
நீக்குபடிக்கட்டு இல்லா பேருந்து...... :((((
பதிலளிநீக்குத.ம. +1
வாசலாவது இருக்கே....
நீக்குஅய்யா gee, எல்லாம் சரி இதற்கு எல்லாம் போக்குவரத்து துறை அமைச்சர் வரனுமா? ஏன் நாம் நாம் என்றால் அந்த கோட்டத்து தலைவர் அவர் கீழ் உள்ளவர்கள் ஓட்டுநர் நடத்துநர் இப்படி சரி செய்யலாமே. நீட்டிக்கொண்டு இருந்த ஆனி துணி மாட்டி தடுக்கி விழ நேர்ந்த நான் அடுத்து செய்தது கல் எடுத்து ஆனியை தட்டியது. முடிந்தது வேலை. கோட்டத்தில் உள்ளவர்கள் அலட்சியம், கோட்டையில் இல்லை. நமக்கு பொறுப்பு வேண்டும். நாம் மாற வேண்டும். நான் மாற வேண்டும்.ஆனாலும் தங்கள் கோபம் இப்படியா? பாவம் அவர்கள்.
பதிலளிநீக்குயார் பாவம் ? கோட்டத்தில் உள்ளவர்களா ? இல்லை கோட்டையில் இருப்பவர்களா ? இல்லை ஓட்டுப்போட்டு ஏமாந்து கேட்பதற்க்கு வக்கின்றி நிற்க்கும் அந்த தொகுதி மக்களா ?
நீக்கு