தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 12, 2021

மதுரை கடலோரத்தில்...

ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு ?

நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு வருவோம்னு சொல்லி இருக்காருணே...

எந்தக்கடலை பட்டாணியா ? நிலக்கடலையா ?

? ? ?

0 * * * * * * * * * * 1


வருசைமுத்தை நம்ம முதலாளி வேலையை விட்டு போகச் சொல்லிட்டாராமே... ஏண்டா ?

ஆமாண்ணே குரு டிரைவரை வரச்சொல்லி விட்டதுக்கு ஸ்குரூ டிரைவரை எடுத்துட்டு போயிருக்கான்.

? ? ?

0 * * * * * * * * * * 2


முதலாளியம்மா மொக்கையனை வீட்டு வேலைக்கு வேண்டாம் மாட்டுக் கொட்டத்துலயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்களாமே ?

ஆமாண்ணே ஆனியன் வாங்கிட்டு வான்னு சொன்னதுக்கு  ஆணி எத்தனை இஞ்சுனு கேட்ருக்கான்.

? ? ?

0 * * * * * * * * * * 3 


ஏண்ணே நம்ம பிரதமர் கொரோனா காலத்துல வெளிநாடுகள் போகாமல் இந்தியாவுக்குள்ளேயே இருந்தாரே பொழுது எப்படிணே போக்கியிருப்பாரு  ?

அதான் நீயே சொல்லிட்டியே கொரோனா காலம்னு பிறகு எப்படி போவாரு ?

அப்படீனாக்கா அப்ப மட்டும் பொருளாதாரத்தை சரி செஞ்சது யாருணே ?

? ? ?

0 * * * * * * * * * * 4


ஏண்ணே ஓடும் பேருந்தில் ஏறாதேனு எழுதிப்போட்டு இருக்காங்களே... ஓடாத பேருந்தில் ஏறி பிரயோசனம் இல்லையேண்ணே இதுகூட தெரியாம எப்படிணே அரசாங்கத்தை நடத்துறாங்க ?

வாடா பிச்சுமணி உன்னைப்போல ஆளுதான்டா இதையெல்லாம் கேட்கணும்.

யாருட்டணே கேட்கணும் ?

நம்ம போக்குவரத்துதுறை அமைச்சரிடம்தான்.

செல்நம்பர் தாங்கணே உடனே கேட்ருவோம்.

? ? ?

0 * * * * * * * * * * 5


ஏண்ணே கைகாட்டியில நாத்தம்னு போட்டு இருக்குதே இப்படியும் ஊர் இருக்குதாணே ?

நாத்தமா... அப்படி ஊர் இருக்காதே... எங்கே பார்த்தே ?

நான் படிச்சேன் இங்கிலீஷ்ல போட்டு இருந்துச்சே...

உனக்கு தமிழே தகராறு இதிலே இங்கிலீஷா... சரி எழுதிக்காமி.

NATHAM இதாணே...

அட மூதேவி அது நத்தம்டா... தளிர் சுரேஷ் படிச்சா தேங்காயால உன்னை அடிப்பாரு... ஓடிரு... இதை நாதம்னு இனிமையாக படிச்சு இருக்ககூடாதா ?

? ? ?

0 * * * * * * * * * * 6

42 கருத்துகள்:

 1. நகைச்சுவை அருமை. படங்களைக் கோர்த்துவிட்டிருக்கலாமே

  பதிலளிநீக்கு
 2. ஏறாதே-ஓறாதே என வந்துள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பிழையை மாற்றி விட்டேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 3. சிரித்தேன்; ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சிரித்து ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 4. நல்ல நகைச்சுவை.
  கவண்டமணி, செந்தில் பேசினால் படத்தில் நன்றாக இருக்கும்.
  மதுரையில் ஒரு கடல் இல்லை ஏழு கடலை தன் மாமியாருக்கு என்று சோமசுந்தரர்
  அன்னை மீனாட்சியின் அன்னை பாண்டிமாதேவி காஞ்சன் மாலை தீர்த்தமாட சொக்கநாதர் எழுகடலையும் வரவழைத்து விட்டாரே முன்பே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இப்பதிவு புராணக்கதையை நினைவூட்டியது அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 5. நல்ல நகைச்சுவை. அனுபவித்துச் சிரித்தேன் அன்பு தேவகோட்டை ஜி.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா சித்தமைக்கு நன்றி.

   யூடியூப்பில் தங்களது பேட்டி முழுமையாக கேட்டேன் அருமை.

   கருத்துரை இட்டேன் மீண்டும் கண்டால் காணவில்லை.

   நீக்கு
 6. நல்ல நகைச்சுவை. அனைத்தும் ரசித்தேன் ஜி!

  பதிலளிநீக்கு
 7. நகைச்சுவையை ரசித்தேன் நண்பரே.
  அப்புறம் அது என்ன *********.
  கொஞ்சம் சொல்லுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதில் அர்த்தமில்லை வரிசைபடுத்துவதை சற்று நீட்டிக் காண்பித்தேன்.

   நீக்கு
 8. திரைப்பட உலகில் ஒரு செந்தில்! பதிவுலகில் ஒரு மங்குனி! அறிமுகப்படுத்திய கில்லர்ஜிக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலமா ?
   இன்று காலை உங்களை நினைத்தேன் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 9. அப்பா வீட்டிலே பண்ணையிலே மொக்கையன் என்பவர் தான் தலைமை வகித்து வந்திருக்கார். மதுரைக்கு அவர் வரும்போதெல்லாம் கொண்டு வரும் நிலக்கடலைக்காக நாங்க காத்திருப்போம். கூடவே சிறுமலைப் பழங்களும். அவரின் மீசையோடு விளையாடுவது எனக்கும்/தம்பிக்கும் பிடித்தது. :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா மொக்கையன் உங்களது சிறுவயது வாழ்க்கையில் இடம் பெற்றவரா ? மகிழ்ச்சி.

   நீக்கு
 10. ஆனியன்னு எனத் தமிழில் சொல்லாமல் வெங்காயம்னு செந்தமிழில் சொன்னால் புரிஞ்சிருக்காதோ? :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இப்பொழுது யார் முழுமையான தமிழில் பேசுகிறார்கள்.

   நீக்கு
 11. பிரதமர் அலுவலகம் கொரோனா காலத்திலும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறது. வெளிநாடு போவது ஊர் சுற்றிப் பார்க்கவா? ஒரு தரமாவது வெளிநாடு போய் என்னென்ன செய்தார்னு தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டு அறியுங்கள். பொருளாதாரம் அதிகம் சரியாத காரணத்தால் தான் தக்காளி இன்னமும் கிலோ பத்து ரூபாய், பதினைந்து ரூபாய்க்குக் கிடைத்து வருகிறது. வெங்காயம் 40 ரூபாய்க்குள் இருக்கு. பெட்ரோலைச் சுட்டிக்காட்டாதீங்க. மாநில அரசுகள் போடும் வரியை நீக்கினாலே பெட்ரோலின் விலை குறையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாநில அரசு மட்டும் வரியை நீக்கணும்... மத்திய அரசு கூடாது...

   உலக அளவில் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் விலை உமர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

   மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. கில்லர்ஜி, உங்க மேல் தப்பெல்லாம் இல்லை. வரி விகிதம் பற்றிய சரியான நடைமுறை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலை. எனக்குக் கிடைத்ததை எங்கேயோ வைச்சிருக்கேன் கணினியில் தான்! பின்னர் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். மாநில அரசின் வரி விகிதமும்/மத்திய அரசின் வரி விகிதமும் எப்படி எனப் புரிஞ்சுக்கலாம். இது மத்தியில் எந்த அரசு இருந்தாலும் நடப்பது தான். முன்னால் காங்கிரஸ் அரசு இருந்தப்போவும் எல்லா மாநில அரசுகளும் இப்படித்தான் வரி வசூலித்தன. ஒரு சில மாநிலங்கள் மட்டும் குறைத்தன. இப்போதும் சில மாநிலங்களில் குறைத்திருக்கிறார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டில் இலவசங்கள் அதிகம் என்பதால் இதில் வரும் வருவாயையும், டாஸ்மாக் மூலம் வரும் வருவாயையுமே அரசு நம்பி இருக்கிறது. ஆகவே அரசு குறைக்க வாய்ப்பில்லை.

   நீக்கு
  3. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே அதிகமான டோல்கேட் உள்ளது. இதன் குத்தகை காலம் 12 ஆண்டுகள் அகற்றப்படவில்லை மேலும் கூடிக்கொண்டே வருகிறது..

   உலகப்புகழ் பெற்ற தி கார்டியன்,  தி நியூயார்க் டைம்ஸ், தி ஆஸ்திரேலியன், ரேடியோ ஃப்ரான்ஸ் இண்டர்நேஷனல் பத்திரிக்கைகள் மோடியை விமர்சிக்கிறார்கள். ஒரு பிரதமரை ஆதாரமின்றி இப்படி சொல்ல முடியாது.

   என்னமோ போங்க கூடிய விரைவில் பெட்ரோல் 150 ரூபாய் வரும் அப்பவும் அவருக்கு ஆதரவு சொல்வீங்க....

   மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
  4. ஹிஹிஹி, நல்ல நகைச்சுவை எனில் இதான் கில்லர்ஜி! நான் யாருக்கும் எப்போதும் ஆதரவு இல்லை. அதோடு நீங்க அதிகமாக் கேட்பது ஒரு சார்பு தொலைக்காட்சிச் செய்திகளேனு நினைக்கிறேன். எல்லாவற்றையும் பாருங்க. இதே அம்பேரிக்காவிலேயே மோதியைப் பாராட்டுகிறவங்களும் இருக்காங்க. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் சொன்னதைக் கேட்டிருப்பீங்களே! எல்லோருக்குமே இப்படியும்/அப்படியுமாத் தான் சொல்ல முடியும். உண்மை என்னங்கறது கொஞ்சம் யோசிசாப் புரியும்.

   நீக்கு
  5. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல!

   நீக்கு
 12. டேய் ஏண்டா என் பேரை கொல்லர்ஜீ ன்னு எழுதுறே?
  அண்ணே நீங்கதானே கில் ன்னா கொல் என்று அர்த்தம் என்று சொன்னீங்க. கொன்னுட்டீங்க 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நீங்களும் கொண்ணுட்டீங்க...

   நீக்கு
  2. ஆஹா!! இது 16 அடி!!! ஜெகே அண்ணா!!! ரசித்தேன்

   கீதா

   நீக்கு
 13. கில்லர்ஜி செம நல்லா ரசித்து சிரித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  அனைத்தும் உங்கள் பாணியில் நகைச்சுவையோடு அருமையாக உள்ளது. படித்து சிரித்து ரசித்தேன்.தொடருங்கள் உங்கள் சிந்தனை சிரிப்பு பதிவுகளை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து சிரித்து பாராட்டியமைக்கு நன்றி.

   நீக்கு
 15. ஜோக்ஸ் தொகுப்பு .ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 16. கில்லர்ஜியின் எழுத்து ஒரு சாராருக்குப் பிடிக்காது அதுவும்மோடியைபற்றி குறை கூறினால்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. வாங்க ஐயா நன்றி

   நீக்கு
  2. முற்றிலும் தவறான ஒரு சார்புடைய கண்ணோட்டம். நான் யாரைப்பற்றியும் உயர்த்திக் கூறவும் இல்லை/ யாரையும் குறை கூறவும் இல்லை. இங்கே நடக்கும் பிரசாரங்களைத் தான் கண்டித்திருக்கிறேன். தடுப்பு ஊசிகளே மத்திய அரசு கொடுக்கவில்லை என்றார்கள். அவங்க சொன்னதுக்கு ஒரு நாள் முன்னாடியே மத்திய அரசுத் தொகுப்பிலிருந்து தடுப்பு ஊசிகள் வந்திருக்கின்றன என்பதைத் தொலைக்காட்சிச் செய்திகளே சொல்கின்றன. இது ஒரு உதாரணத்துக்கு மட்டுமே! இது போல் எத்தனையோ எடுத்துக் காட்ட முடியும். நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை.

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி.

   நீக்கு