தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 28, 2021

தேன்காய்


      01. ஃபேன் ஓடும்
பேன் ஓடுமா ?
 
02. மீன் நீந்தும்
மான் நீந்துமா ?
 
03. பூனை தாவும்
யானை தாவுமா ?

04. கிளி பேசும்
எலி பேசுமா ? 

05. குடை பிடிக்கலாம்
பீடை பிடிக்கலாமா ?
 
06. கரும்பை கடிக்கலாம்
இரும்பை கடிக்கலாமா ?

07. தோசை சுடலாம்
போஸை சுடலாமா ?
 
08. முத்தம் கொடுக்கலாம்
சத்தம் கொடுக்கலாமா ?
 
09. சாமியார் ஆடலாம்
மாமியார் ஆடலாமா ?
 
10. தாயம் போடலாம்
காயம் படலாமா ?
 
11. கணவன் தொடலாம்
கள்வன் தொடலாமா ?
 
12. மாடியில் நிற்கலாம்
மடியில் நிற்கலாமா ?
 
13. மேடையில் படுக்கலாம்
பாடையில் படுக்கலாமா ?
 
14. புளியை சாப்பிடலாம்
புலியை சாப்பிடலாமா ?
 
15. மனைவி தொடலாம்
மாணவி தொடலாமா ?
 
16. கன்னியை விரும்பலாம்
அண்ணியை விரும்பலாமா ?
 
17. பிணத்தை எரிக்கலாம்
பணத்தை எரிக்கலாமா ?
 
18. மகன் பிறக்கலாம்
மகான் பிறக்கலாமா ?

19. கல்வி பயிலலாம்
கலவி பயிலலாமா ?
 
20. விமானம் பறக்கலாம்
மானம் பறக்கலாமா ?
 
21. ஆட்சி மாறலாம்
ஆச்சி மாறலாமா ?
 
22. தாத்தா ஆகலாம்
தாதா ஆகலாமா ?
 
23. நாய் வளர்க்கலாம்
பேய் வளர்க்கலாமா ?
 
24. தேங்காய் இனிக்கும்
தேன்காய் இனிக்குமா ?

41 கருத்துகள்:

 1. தேன்காய் அனுப்புங்க ஜி...
  கசந்தாலும் கட்டுப்படும் தானே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கசப்பு தான் ஆனாலும் பயன்தான். வாங்கி அனுப்புகிறேன்.

   நீக்கு
 2. சத்தமின்றி முத்தம் கொடுக்கச் சொல்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே கமல்ஹாசன் எனக்கு சொல்லி தந்தது.

   நீக்கு
 3. பேனா? பேணா?


  ரசித்தேன், சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எனக்கும் இந்த ஐயம் இருந்தது நன்றி.

   நீக்கு
  2. 'பேன்' என்பதே சரி(சகோ கீதா சாம்பசிவம் சுட்டிக்காட்டியுள்ளார்).

   24 கேள்விகளுமே மனம்விட்டுச் சிரிக்க வைத்தன!

   நீக்கு
  3. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. தேன்காய் என்பது சர்க்கரை குறையப் பயன்படுத்தும் ஒன்று. அதன் தோலை உரித்து உள்ளே உள்ள பருப்பைச் சின்னத்துண்டுகளாக்கி மென்று சாப்பிடணும். கசப்பாக இருக்கும். :))) நாங்கள் வரவழைத்துச் சாப்பிட்டோம். அதைப் பற்றித் தான் பதிவுனு நினைச்சு வந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆம் கசப்பானது தான் ஆனால் பெயரில் "தேன்" இஃகி, இஃகி' இஃகி.

   நீக்கு
 5. எல்லாம் சரி, பேனைப் பேண் என்றது தான் கண்களை உறுத்துது! இஃகி,இஃகி,இஃகி,இஃகி! நல்ல கற்பனை வளம், சரியானபடி பயன்படுத்தவும் செய்வதால் மிளிர்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேன் உறுத்தல் தானே செய்யும்.

   மாற்றி விட்டேன் நன்றி.

   நீக்கு
 6. என்ன மாதிரியெல்லாம் சந்தேகம் உங்களுக்கு? எங்களுக்கு ஒரு சுவையான பதிவு கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 7. நன்றாக இருக்கிறது.

  தேன்காய் இப்போதுதான் கேள்வி படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உங்களுக்கு இதுவரை தெரியாதா ? ஆச்சரியமாக இருக்கிறது.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. பொருத்தமான வாக்கியங்களை வைத்து தங்கள் ஒருவரால்தான் இப்படி திறம்பட யோசிக்க முடியும். கற்பனை வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக ரசிக்கும்படி உள்ளது. ரசித்தேன். பாராட்டுக்கள்.

  தேன்காய் நானும் கேள்விப்பட்டதில்லை. தங்களால்தான் இன்று அறிகிறேன். கசப்புக்கு எதிர்பதமாக அதற்கு பெயர் வைத்திருப்பது பொருத்தம்தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல...

   நீக்கு
 9. அனைத்தும் அருமை கில்லர்ஜி

  மான் நீந்தும் அது ஒரு மணி நேரத்திற்கு 13-15 மைல் துரரத்திற்கு நீந்தும் தன்மைஉடையது கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. சுலபமா கேற்விகள் எழுப்பிடறீங்க. அதுக்கு பதில் எங்க கண்டுபிடிக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே உங்களுக்கு தெரியாததா ? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 11. அனைத்தும் ரசித்தேன் சிரித்தேன் கில்லர்ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 12. தேன்காய் என்றதைப் பார்த்ததும் நாம சாப்பிடறதாச்சே உள்ளே வெள்ளைப் பருப்பு செம கசக்கும்..நான் இனிமையானவளாச்சே ஸோ கசப்பு...ஆனா கில்லர்ஜி கண்டிப்பா அது பத்தி எழுதியிருக்க சான்ஸ் இல்லை இது ஏதாச்சும் வேற தான்னு

  நல்லாருக்கு கில்லர்ஜி பலதும் ரசித்தேன்.

  அது சரி மான் நீந்தும்

  கர்ர்ர் ஏன் மாமியார் ஆடக் கூடாது!!! ஏன் கூடாதுன்னு கேக்கறேன்! ச்சே ஸ்காட்லாந்து ஆளு இல்லை கட்சி சேர்க்க...இங்க அக்காஸ் மாமியார் என்றாலும் ஹூம் யாருமே கேக்கலை!!! ஏன மகான் பிறக்கக் கூடாதுங்கேன்...!!!!!

  எலிகள் அல்ட்ராசோனிக் ஃப்ரீக்வென்சில பேசிக்கும்...அதுவும் வளமான மொழில!!! ஆனா என்ன மனுஷனுக்குக் கேக்காது அந்த ஃப்ரீக்வென்ஸி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தேன்காய் இன்று பலரும் சாப்பிடும் வாழ்க்கைச்சூழல்...

   பலர் வீட்டில் மருமகள்தான் ஆடுகிறார்களாம்.

   எலி மட்டுமா ? எல்லா உயிரினங்களும் பேசத்தானே செய்கிறது.

   நீக்கு
  2. ஒரு சாக்லேட் விளம்பரத்தில் கோபமாய் இருக்கும் மாமியாருக்கு காட்ஃபரீஸ்(?) சாக்லேட் கொடுத்து மருமகள் சமாதானம் செய்வாள். அந்தச் சாக்லேட்டை ரசித்த மாமியார் தெருவில் வந்து கொண்டிருக்கும் "பராத்" (மாப்பிள்ளை அழைப்பு) ஊர்வலத்தின் முன்னால் நின்று ஆட ஆரம்பிப்பார். கூடவே மருமகளும். இப்போதெல்லாம் இது அதிகம் வருவதில்லை.

   நீக்கு
  3. ஆம் நானும் பார்த்து இருக்கிறேன்.

   நீக்கு
 13. அருமையான கேள்விகள். சரியான
  பதில்கள்.

  தமிழ் உங்களிடம் அருமையாக வளைந்து கொடுக்கிறது.
  மீனும் மானும் நீந்தி
  பார்த்திருக்கிறேன்.

  மாமியார் ஆடிய நாட்கள் பழங்காலம்:)
  சுவையான பதிவுக்கு மிக நன்றி அன்பு தேவ கோட்டைஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா ஆம் மாமியார் ஆடிய காலங்கள் மலையேறி விட்டது.

   நீக்கு
 14. தேன் காய் கேள்விப்பட்டதே இல்லை.
  தேன் மிட்டாய் என்று நினைத்துக் கனவு காண ஆரம்பித்துவிட்டேன்.

  பாவக்காயே பிடிக்கிறது இப்போது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தேன்காய் தெரியாது என்பது ஆச்சர்யமே...

   வருகைக்கு நன்றி அம்மா.

   நீக்கு
 15. ரசித்தேன் ருசித்தேன்
  https://vannasiraku.blogspot.com/2019/11/blog-post_18.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கு வந்தனம் நண்பரே...

   நீக்கு
 16. எனக்கு காதுதான் கேட்கவில்லை மற்றபடி எல்....லாம் ஓகே!! நண்பரே!

  பதிலளிநீக்கு