வியாழன், செப்டம்பர் 23, 2021

எண்ணிக்கை ஒன்று

ட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா ? ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவரொட்டி ஒட்டி இருக்கின்றார்கள் கூமுட்டைகள். இவர்களை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோருக்கு இவர்கள் கொடுக்கும் பரிசு இதுதானா ? 

இந்த நிலைக்கு தமிழக பிள்ளைகள் போவதற்கு காரணகர்த்தா இவர்களது தந்தையேயின்றி வேறு யாராக இருக்க முடியும் ? ஆம் இவர்களின் அப்பாக்கள் ஏதாவது கட்சியில் இருந்து கொண்டு தலைவன் வாழ்க என்று கோஷமிடுவதால்தான்... தங்களது பிள்ளைகள் இவ்வழியில் செல்வதை கவனிக்கும்...
 
றிவும்,
ற்றலும்
ல்லாது
ர்த்து
ணர்வுகள்
சிப் போகிறது
ன்பதை
டுகள் சொல்வதில்
யம்
ன்றுமில்லையென
ங்கி முழங்குகிறாள்
வைப்பாட்டி.
 
அரசியல்வாதிகளும் இவைகளை தடுக்கும் சட்டங்களை இயற்றுவதில்லை. இந்த மாதிரியான கூமுட்டைகளால்தான் எல்லாக் கூத்தாடியும் அரசியலுக்கு வரணும்னு ஆசைப்படுகிறான்.
 

சமீபத்தில் இவன் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த மகிழுந்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரி கட்டுவதற்கு வழியில்லாதவன் போல நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறான். திரைப்படத்தில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்று வசனம் பேசுவான் இதையும் நம்பி கை தட்டும் விசிலடிச்சான் குஞ்சுகள் தமிழகத்தில் ஏராளம். இவன் உயிர் துறந்ததால் கூத்தாடி விஜய்க்கு ஏதும் நஷ்டம் வரப்போகிறதா ? இப்படம் வெளியாகாமல் போனால் இதன் தயாரிப்பாளர்தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வரலாம். தனது மகனின் படத்தை வெளியிட மறுக்கின்றார்களே... என்று திரு. எஸ். ஏ. சந்திரசேகரோ... அல்லது திருமதி. ஷோபா சந்திரசேகரோ... தற்கொலை செய்யவில்லையே... இதை இறந்த அந்த கூமுட்டை உணரவில்லை, உயிரோடு திரியும் மற்ற கூமுட்டைகள் இவனது பிணத்தை பார்த்த பிறகாவது உணர்வதில்லையே ஏன் ? இவனுகளுக்கு ஆன்மா மேலத்தெரு சாந்தியை வேறு அடையணுமாமே...
 
இவனுகளுக்கு சாவுமணி அடிக்க அடோல்ப் ஹிட்லர் போன்ற ஓர் சர்வாதிகாரி வரவேண்டும் அவனது கையில் அதிகாரம் வந்து இந்த வகையான கூமுட்டை கூட்டங்களை பிலிப்பைன்ஸ் அதிபர் திரு. பெனிக்னோ அக்கீனோ (Mr. Benigno Aquino) போல் போதைப்பொருள் கடத்தியவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளி இரண்டே மாதங்களில் நாட்டில் உள்ள அனைத்து ரௌடிகளையும் சரணடைய வைத்தது போல் சுடவேண்டும் அங்கு இதை பிலிப்பைன்ஸ் மக்களும் எதிர்க்கவில்லை காரணம் நாடு சுத்தமாகியது.
 
சிவாதாமஸ்அலி -
இவரு சொல்றது தவறாக இருந்தாலும் கடைசி வழி இதுதான் போலயே... ?
 
ChavasRegal சிவசம்போ-
அடுத்து நமக்கும் இப்படி ஆப்பு வைக்கிற ஐடியா கொடுப்பாரோ... ?

34 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ஆமாம் ஜி கிராமங்களிலும் இளைஞர்கள் இப்படித்தான்.

   நீக்கு
 2. ஹிந்தியாவின் ஹிட்லரை மறந்து விட்டீர்கள் ஜி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த ஹிட்லர் வேறு பாதை ஜி சரித்திரத்தில் இடம் பெறும்.

   நீக்கு
 3. நடிகர்கள் வாங்கும் சம்பள ஒப்பீடு பற்றி வாட்ஸாப்பில் வந்த தகவல் ஒன்றினை அனுப்பி இருக்கிறேன் பாருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்‌ஜி படித்த பிறகு எனக்கு மயக்கம் வருகின்றது... தமிழினத்தின் மயக்கம் கண்டு....

   நீக்கு
 4. நடிகர்களைக் கொண்டாடும்/கும்பிட்டு வணங்கும் மனோநிலை இக்கால இளைஞர்களுக்கு எப்போது தான் மாறுமோ? உண்மையான நிகழ்வை எப்போப் புரிஞ்சுக்கப் போறாங்களோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தாமதம் தவறில்லைதான் ஆனால் சந்ததிகளாக தொடரலாமா ?

   நீக்கு
 5. இவங்க திரைப்படங்களில் நடிப்பதைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் அரசியலுக்கு வந்தால் செய்வார்கள் என நம்பும் ஓர் ஆட்டுமந்தைக் கூட்டமே இருப்பதால் விரைவில் இவர்களின் இந்த வெறி அடங்காது.

  பதிலளிநீக்கு
 6. எண்ணிக்கை 'ஒன்று'... நூறு, ஆயிரம், பல்லாயிரம் என்று ஆகட்டும். அப்புறம் ஹிட்லர்கள் தேவைப்படமாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  எண்ணிக்கை ஒன்று... எனத் தொடங்கி, நினைத்தாலே பதட்டமாக வருத்தமாக உள்ளது. இப்படியான கொடுமை நிலை மாற வேண்டும். எப்போது என்றுதான் தெரியவில்லை. மற்ற தகவல்களுக்கும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 8. சுவரொட்டி வருத்தம் தருகிறது.

  இப்படி சிலர் நண்பர்களுடன் சேர்ந்து தங்கள் பெற்றேர்களை நினைக்க தவறி விடுகிறார்கள்.
  அவர்கள் பெரிதாக நினைக்கும் தலைவன் நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.

  அவரே வரி கட்ட தவறினால் என்ன செய்வது!


  ஒழுக்கமான பெற்றோர்கள், அன்பும் பாசமும், கருணையும் உடைய பெற்றோர்களுக்கு வழி மாறி போகும் பிள்ளைகள் இருக்கிறார்கள். சமூகத்திற்கும் பொறுப்பும், கடமை இருக்கிறது. சுற்றம், நட்பு, சமூகம் இவற்றால் குழந்தைகள் மனதில் நல்லதும் , கெட்டதும் படியும்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இவர்களின் வாழ்க்கைக்கு இந்த சமூகமும் காரணமே...

   நீக்கு
  2. கில்லர்ஜி சமூகம் காரணம் என்றாலும் அடிப்படை வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. பெரும்பாலும் சமூகம் என்பது பதின்ம வயதுகளில்தான் நுழைகிறது

   கீதா

   நீக்கு
  3. ஆம் பெற்றோர்களும் முக்கிய காரணமே...

   நீக்கு
 9. கில்லர்ஜி இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. போட்டும் ஜி...இதுக்கு நாம வருத்தப்பட்டு என்ன ஆவப் போகுது. இன்னும் போணும்னு நினைக்கறவங்க எல்லாம் போட்டும். இருந்தா பெற்றோருக்குக் குடும்பத்துக்கு அப்புறம் தன்னைச் சுத்தி இருக்கறவங்களுக்கு நல்லது செய்யணும் அப்படிச் செய்யாம இந்த மாதிரி அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் பின்னாடி சுத்தி கேடு கெட்டு அலைபவர்களின் எண்ணிக்கைக் குறைவதால் நாட்டிற்கு சமுதாயத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை.

  நான் கலைகளுக்கு எதிரானவள் அல்ல என்றாலும் நாட்டின் அறிவு ஜீவிகள், இராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சிகள் கிடைக்காத மரியாதை அங்கீகாரம் இப்படியானவர்களுக்குக் கிடைப்பதின் எண்ணிக்கை குறையட்டும்....வருத்தப்பட்டு ஆகப் போவது ஒன்றுமில்லை...

  அரசியல், முதல்வர் என்று கனவு கண்டு திரைப்படங்களில் வசனம் பேசும் ஹீரோக்கள் சுத்த ஹம்பக் போலிகள்.

  நல்ல பெற்றோர், குடும்பச் சூழல் இல்லாமை, பதின்ம வயதுகளில் திசை மாறும் இளைஞர்கள் யுவதிகள்என்று எத்தனையோ காரணங்கள்.

  ஏழைகள் என்று சொல்லிக் காசு வாங்குகிறார்கள் அவர்கள் வீட்டில் சுவர்களில் நடிகர்கள் படமும், டிவி யும், ஆண்ட்ராய்ட் மொபைலும் இருக்கிறதே இது எப்படி? வீட்டில் நல்ல உதாரணங்களாக இல்லை என்றால் சினிமா சீரியல் என்று இருந்தால் குழந்தைகளுக்கு என்ன மாதிரி புத்தி போகும்? படிப்பில், நல்ல சிந்தனைகள் என்று மனம் செல்லுமா? பள்ளிகளும் கல்லூரிகளும் நல்லதாக இல்லையே...அப்புறம் எப்படி?

  எனவே சுயபுத்தி இல்லாததுகளின் எண்ணிக்கை குறைவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை நாம் வருந்திக் கொதிப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை கில்லர்ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நிச்சயமாக எனது கருத்து என்றுமே இதுதான்.

   //இவர்கள் வாழ்வதைவிட மடிவதே நன்று//

   தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 10. சுவரொட்டி வருத்தம் அளிக்கிறது.

  நல்ல குடும்பச் சூழலும், சமுதாயச் சூழலும் இருந்தால் நல்லது நடக்கும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள் பல!

   நீக்கு
 11. கலிகாலத்தில் இப்படி கூத்தாடிகளை நம்பி போய்க் கொண்டிருந்தால் நாம் உருப்படுவோமா நண்பரே...??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உருப்படுவோம் என்ற எண்ணமும் இருக்கிறதா ? எனக்கு இல்லை.

   நீக்கு
 12. //உயிர் துறந்த// - இந்தப் பிச்சைக்காரங்களுக்கு விளம்பரம் வேறயா? ஏற்கனவே ஆறு அப்பாவிகளை பலிகடாவாக்கி கட்சி ஆரம்பித்தவன், யாரை எதுத்துக் கட்சி ஆரம்பித்தானோ அவர் காலில் விழுந்துகிடக்கிறான்.

  காருக்கு வரி 10 லட்சம் என்று நினைவு. இவனுவளுக்கு வெளிநாட்டுக் கார்தான் வேணும், ஆனால் வரி கட்டமாட்டானுங்க. இவனுக்கும் தனுஷ் சூர்யாவுக்கும் கோர்ட் சூடு வைத்தது (வார்த்தைகளால்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே என்ன செய்வது தமிழனின் மூளை வளர்ச்சி இவ்வளவுதான்.

   தங்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 13. என்ன ஒரு கொடுமை ஜி:(
  இன்னுமா இந்த மாதிரி நடக்கிறது.

  கோடிகளில் புரளும் ஒருவருக்காக
  ஒரு இளைஞர் உயிர் துறப்பதா.
  நம்பவே முடியவில்லை. அறிவு
  எங்கே போகிறது!!!
  சரியான அழுத்தமான பதிவு.
  ஒருவரையாவது போய் அடைந்தால் நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 14. வெறியர்கள் இருக்குவரை...இஐவ தொடரும் நண்பரே!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...