தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 06, 2021

நஞ்சில் ஓர் பாளையம்

 

ணக்கம் நண்பர்களே... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
 
இதோ எனது பாடல்...
 
நடப்பதெல்லாம் கடந்து விட்டால்
கவலை ஏதுமில்லை
நடப்பதையே நினைத்து விட்டால்
குழப்பம் வருவதில்லை

தொடர்ந்த வழக்கு முடிப்பதில்லை
அரசு வழக்கத்திலே
குழப்பதிலே வைப்பதுதான்
நமது பழக்கத்திலே

நடப்பதெல்லாம் கடந்து விட்டால்
கவலை ஏதுமில்லை
நடப்பதையே நினைத்து விட்டால்
குழப்பம் வருவதில்லை

ஆயிரம் வழக்குகள் இருக்கும் இதில்
அரசியல் உள்நோக்கம் இழுக்கும்
யாரோ தொடர்வார் யாரோ முடிப்பார்
இருப்பதும், இழுப்பதும் புரியாது

தொடர்ந்தவர் இறப்பர் இருப்பவர் மறப்பர்
கணக்கு வழக்கு தெளிவுகள் தெளிவேது
நடப்பதெல்லாம் கடந்து விட்டால்
கவலை ஏதுமில்லை

இங்கே சிறைச்சாலை தொடங்கும்
அங்கே சிறை வாழ்க்கை முடியும்
எதுதான் தண்டனை எதுதான் அபராதம்
என்பது யாருக்கும் புரியாது

வெளியில் போனால் வழியில்
கண்ட புகைப்படம் வந்து விடும்
சிறை வாழ்வின் சூட்சுமம்
கண்டால் சுகங்கள் தெரிந்து விடும்

நடப்பதெல்லாம் கடந்து விட்டால்
கவலை ஏதுமில்லை
நடப்பதையே நினைத்து விட்டால்
குழப்பம் வருவதில்லை
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம் - 1962
படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்

இதோ கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=S43iTnij-I0
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

32 கருத்துகள்:

  1. ஆஹா! ஆ"ச்சி"ரியர் பிரமாதமாப் பாடல்கள் எழுதறாரே! உங்களுக்கு நிகர் நீங்களே தான்! :)))))

    பதிலளிநீக்கு
  2. திண்டுக்கல் லியோனி தான் இந்த மாதிரி பழைய பாடல்களை உல்டா பண்ணி பாடுவார். தற்போது அவர் தற்போது பாடநூல் கழக தலைவர் ஆகிவிட்டதால் அவர் இடத்தை நீங்கள் பிடித்து விட்டீர்களா? 
    பாடல் வரிகள் ஒத்து போகின்றன. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் இதுவரை இருபது பாடல்களுக்கும் மேல் எழுதி விட்டேனே... வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. ஹா ஹா ஹா என்னாச்சு கில்லர்ஜிக்கு:)) நல்லாத்தானே போய்க்கொண்டிருந்துது:)).. தப்புத்தப்பா தலைப்பு வைக்கிறார்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா நலமா ?
      உல்டா பாடலுக்கு உல்டா தலைப்புதானே வைக்கணும்....

      நீக்கு
  4. சசிகலா ஆன்ரிக்கும்:)) உங்கட பாட்டுக்கும் எந்த ஜம்பந்தமும் இல்லைத்தானே:))...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அரசியல்வியாதிகளிடம் பயக்க வயக்கம் கிடையாது.

      நீக்கு
  5. சிலர் நினைப்பதெல்லாம் நடக்காமலே இருக்கட்டும். நாம் பிழைப்போம்.

    அருமையான உல்ட்டா வரிகள்.
    பாராட்டுகள் அன்பு தேவகோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. பல்லவியை விட சரணங்கள் அருமை.  'எதுதான் தண்டனை' என்றே எழுத முற்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  'இதுதான்' என்று வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ஆம் மாற்றி விட்டேன் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  7. பாடல் வரிகளை அழகாய் மாற்றி அமைத்து இருக்கிறீர்கள்.
    திறமைகள் நிறைய இருக்கிறது உங்களிடம்.
    நினைப்பது எல்லாம் நடப்பது இல்லை. தெயவம் நினைப்பதுதான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. கவிதை நன்று. 'நெஞ்சில் ஒரு காவியம்' என்று தலைப்பு வைத்திருக்கலாம் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தலைப்பின் வார்த்தைகளை அப்படியே உல்டா செய்வதுதானே குறிக்கோள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. போறே போக்க பார்த்தால் கில்லர்ஜி தத்துவ பாடல் ஆசிரியர் ஆகிவிடுவார் போல இருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நாமலும் இப்படியே கத்துவோம்.
      தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. கவிஞர் கில்லர்ஜி
    வாழ்க வாழ்க

    பதிலளிநீக்கு
  11. பாடல் அருமை சார்.
    நேத்து உங்க தேவக்கோட்டையில ATM ஷாக் அடிச்சது னு செய்தி வந்துச்சு.
    அத வச்சும் ஒரு பாட்டு எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  12. கண்ணதாசன் பாடலை கேட்கத்தான் முடியவில்லை... (காது இரண்டும் அவுட்) தாங்கள் தீட்டிய பாடலை படித்து அறிந்து கொண்டேன் நன்பரே!! நடப்பதையே நிணைத்துவிட்டால் குழப்பம் வருவதில்லை...

    பதிலளிநீக்கு
  13. பாடல் நன்றாக இருக்கிறது கில்லர்ஜி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் இரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  15. உல்டா பாடல் அல்டாப்!!! கில்லர்ஜி!

    நான் அடிக்கடி சொல்வதுதான் உங்களுக்குப் பாடல் எழுத நன்றாக வருகிறது கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு