தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 17, 2021

யாருக்கும் வெட்கமில்லை...

 

ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? நாட்டை ஆள ஆசைப்படுபவனின் உள்ளத்தின் வெளிப்பாடு. இவனுக்கு என்ன கொல்லைக்கழிச்சல் ? இவனது மனைவிக்கு நகராட்சி கட்டிடத்தின் வாடகை பாக்கியை கொடுக்க மனமில்லை, இவன் தனது திருமண மண்டபத்தின் சொத்து வரிக்கு விலக்கு கொடுக்க வேண்டுமாம்.

இவன்தான் தமிழ் நாட்டு மக்களின் துயரங்களை நீக்கப் போகிறான் ? இவர்கள் என்ன ஏழையா ? குடிக்க கஞ்சிக்கு இல்லாதவர்களா ? தனது இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணத்தை வெகு ஆடம்பரமாக நடத்தியவன். தனது மகளுக்கு கொடுத்த வரதட்சிணை ஐநூறு கோடியாம். கொடுக்கட்டும் உழைத்தது தனது மக்களுக்குதானே அதில் யாரும் குறை காண இயலாது.

எல்லாவற்றுக்கும் போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடாகும் என்று தூத்துக்குடியில் சொன்னானே... திரைப்படங்களில் போராட்ட வீரனாக நடிக்கும் பொழுது தெரியாதா ? அது திரைப்படம் என்று சொல்வார்களேயானால் அதே திரைப்படங்களில் நல்லவனாக நடித்தவன் மட்டும்தானே... பிறகு எதற்கு இவனை நம்புகின்றார்கள் ? இன்னும் இவ்வகையான வேஷதாரிகளை புரியா மடந்தைகளாய் பூமிக்கு பாரமாய் வெட்டியாய் வாழும் அறியாமைகளை களை எடுக்கும்வரை இன்னும் இன்னல்களை தமிழக மக்கள் சந்திக்க வேண்டியது வரும்.... 

இந்த தமிழன் இன்னும் எவ்வளவு காலங்களுக்கு ஏமாறுவான் ? எத்தனை அரசியல்வாதிகள் வந்தாலும் சரி, எத்தனை திரைப்படக் கூத்தாடிகள் வந்தாலும் சரி அவர்களுக்கு தோரணம் கட்டுவதற்கு வேலையற்ற வீணர்களின் கூட்டம் புற்றீசலாக வருகிறதே... குடும்பத்துக்கு ஒரு வாரிசுதான் வருகிறது அதுவும் இப்படி முடுமைகளாவும், முடுதாறுகளாகவும் வளர்ந்தால் தமிழகத்தை யார்தான் காப்பாற்றுவது ? தேவுடா... தேவுடா... தேவகோட்டை தேவுடா...

இரண்டாவது புகைப்படத்தில் யாரோவொரு அன்பர் தனது கருத்துரையை பகிர்ந்து இருக்கிறார் பாருங்கள். படிப்பதற்கு சற்று அருவருப்பாக இருப்பினும் ஆழ்ந்த நிகழ்கால உண்மைகள் இருக்கின்றது. காரணம் திரையுலகில் எஸ்எஸ்வி அவர்கள் பாடியது போல் இங்கு... யாருக்கும் வெட்கமில்லை.

கீழே யூட்டியூப்பின் காணொளி இணைப்பை தந்து இருக்கிறேன். அதில் இரண்டு மாமேதைகள் உரையாடுகின்றார்கள் இவர்கள் தமிழகத்தின் எதிர்கால நலனைக் குறித்து வாதிடுகின்றார்கள். சுமார் பதினாறு (16) நிமிடங்கள் மட்டுமே அவசியம் பாருங்கள்.

https://youtu.be/9Y5gXlNP0lI

காணொளி

32 கருத்துகள்:

  1. ஆஹா...அருமையான காணொலி...எதிர்பார்த்து ஏமாந்த வலியை நன்றாகப் பதிவு செய்துள்ளார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே ஆம் ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. ஆனால் இன்னும் இவனது ரசிகர்தான் பேசியவைகள் அனைத்தும் உண்மையே...

      நீக்கு
  2. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. கில்லர்ஜி வெட்கம் எல்லாம் இருந்தால் மனுஷன் திருந்திட மாட்டானா?!!!! ஒழுங்கா சட்டத்தை பின்பற்ற மாட்டார்களா?

    இதுக்கு முன்ன விஜய் தன் வெளிநாட்டுக் காருக்கு இறக்குமதி வரி கட்டலைன்னு நியூஸ் போச்சே அவரு விலக்கு கேட்க நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் அவர்கள் செமையா ஒரு தீர்ப்பு கொடுத்தாரே ...செம அதிரடி நீதிபதி. இதை டீல் செய்தவர் அனிதா சுமந்த் போல...ரஜனி அங்கிள் வழக்கை வாபஸ் வாங்குகிட்டாராமே!!!

    முதல் சுய ஒழுக்கம்/மனசாட்சி வேண்டும் இல்லேனா அட்லீஸ்ட் சட்டத்துக்குப் பணிந்தாவது இருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டத்தை ஏமாற்றுபவர்களை மக்களுக்கு அடையாளம் காணும் அறிவு இல்லையே.... என்பதுதான் எனது கவலை. தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. ம்ம்ம்ம் விஜய் மட்டுமா? ரஜினியின் மருமகன் திரு தனுஷ் அவர்களும் வெளிநாட்டுக்காருக்கு வரி கட்டச் சுணங்குகிறாரே! அவருக்கும் நீதிமன்றம் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. இவங்கல்லாம் வரி கட்டச் சோம்பினால் சாமானியர்கள் என்ன செய்வார்கள்? அவங்க தான் ஒழுங்கா வரி கட்டுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. சௌந்தர்யா எப்படியோ போகட்டும். அது அவர் சொந்த வாழ்க்கை/சொந்த விஷயம். வரி விலக்குக் கேட்பது அப்படி இல்லையே! மக்களைப் பாதிக்கும் விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சாதாரண மனிதர்கள் பலரும் நேர்மையாக வாழ்கிறார்கள் என்பது உண்மையே... மனம்தான் மனிதனை நல்வழி படுத்துகிறது.

      சௌந்தர்யாவை நையாண்டி செய்தது நானில்லை அது திருச்சி நண்பராக இருக்கலாம். தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. வரி ஏய்ப்பு .மிக வருத்தம். சரியில்லையே.
    ரசிகனின் வருத்தம் சரியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. காணொலி கேட்டேன். ரசிகர் என்று சொல்லி கொண்டு தலைவரை கேள்விக்கணைகளால் துளைத்து விட்டார்.
    வரியை கட்டி முன் மாதிரியாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ "முன் மாதிரியாக" ஆம் நடித்து காட்டுகிறார்கள் வேறன்றுமில்லை.

      நீக்கு
  8. நீங்க என்னவோ புலம்பித் தள்ளிட்டீங்க கில்லர்ஜி.

    பொதுவா கை கால் நல்லா இருக்கிற சாமானியன், அரசாங்கம் ஓசிக்குத் தருவதை வாங்குவதற்குக் கூசுவான் (பொதுவான நல்லவங்க. மத்தவங்கள்லாம் ரேஷன் கடையில் ஃப்ரீயா பினாயில் கொடுத்தாலும் கியூல நின்னு வாங்கிக்குவாங்க).

    ஆனால் பணக்காரங்க, ஐந்து பைசாவுக்கும் பக்கிகள் மாதிரி சட்டத்தை ஏமாற்றிச் சேர்த்துவைத்து, சேர்த்துவைத்து..வெளியில் எளிமை நியாயம் தர்மம் என்றெல்லாம் பேசி...கடைசியில் சொத்தை விட்டுவிட்டு செத்துப்போவாங்க. தமிழக நடிகர்கள் எல்லாம் படங்களில் ஒரு விதமாகவும் உண்மையில் அதற்கு எதிர்மாறாகவும் இருப்பதைத்தான் சமீபத்தில் உயர்நீதி மன்ற நீதிபதி விஜய், தனுஷ், சூர்யா..என்று பலரின் விஷயத்தில் சாட்டையைச் சுழற்றியதைப் பார்த்தோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே....
      மிகச்சரியாக சொன்னீர்கள் தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. இரண்டாவது விஷயம் பகிர்ந்திருக்க வேண்டாம்.  

    விஜய், தனுஷ், ரஜினி என்று பணம் படைத்ததா இவர்கள் எல்லாம் வரி விலக்கு கோருவது நன்றாய் இல்லை.

    அப்புறம் ஒரு சின்ன திருத்தம்.  யாருக்கும் வெட்கமில்லை என்று எம் எஸ் வி பாடவில்லை!  சோ படமான யாருக்கும் வெட்கமில்லை படத்தில் யேசுதாஸ் எம் எஸ் வி இசையில் கண்ணதாசன் வரிகளை பாடினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இவர்களைப் போன்ற கூத்தாடிதானே... நெல்லைத்தமிழரின் நண்பர் உலக்கை நாயகன் அவர் மட்டும் சரியாக கட்டுகிறாரே....


      தங்களது மேலதிக தகவலுக்கு நன்றி ஜி

      நீக்கு
  10. தங்களின் ஆதங்கம் புரிகிறது
    இந்நிலை மாறும் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மாறினால் மக்களுக்கும் நலமே..

      நீக்கு
  11. உழைப்பிற்குப் பலன் கிடைக்காமல் போகாது. தொடர்ந்து எழுதுங்கள்; எழுதுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கண்டிப்பாக எழுதுவேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    காணொளி கேட்டேன். பதிவு அரசியல் சார்ந்தது. தங்கள் ஆதங்கங்கள் புரிகிறது. காணொளியில் பேசுபவரின் ஆதங்கமும் புரிகிறது. எல்லாம் நலமாக விளைய ஆசைப்படுவோம். மக்கள் எல்லோர் பிரார்த்தனையும் அதுதான்...! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ யூட்டியூப்பின் மேதைகளை பாருங்கள்.

      நீக்கு
  13. வெங்கோலன் எவ்வளவோ வற்புறுத்தியும் என்ன நடக்கும் என்று தெரிந்து விட்டதால் அரசியலியிருந்து விலகி விட்டார்... ரசிகர்கள் ம்ஹிம் வெறியர்கள் பாவம்...

    பதிலளிநீக்கு
  14. காணொளி கேள்விகள் சாட்டையடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் பாவம்தான்.
      ஆனால் கூத்தாடி புத்திசாலி காரணம் பணம் பாதாளத்துக்கு பாலாக வில்லை.

      நீக்கு
  15. உஙகள் பதிவை படித்த பின் இவர் அரசியலுக்கு வராதது நல்லது என்றே தோன்றுகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  16. காணொளி அருமை! பளீரென்று சவுக்கடி! ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வலிக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் நாசூக்காக ஊசி ஏற்றி இருக்கிறார்.

      நீக்கு
  17. மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.....நண்பரே! வெட்கம் என்பது மச்சானை கண்டு மச்சினி வெட்கப்படுகிறாள். என்று பொருள் கொள்ளலாம்...

    பதிலளிநீக்கு