தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 04, 2022

அண்ணன் நாகேந்திரன் (2)


முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...
 
முன்பு... ஆங்... சூப்பர்வைசர் நாகேந்திரன் வந்து கொண்டிருந்தார்....
 
வேகமாக, நண்பர்கள் நிற்கும் இடத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தேன் நர்சிங் ஸ்டேஷன் வளைவில் சூப்பர்வைசர் நாகேந்திரன் கில்லர்ஜி என்று பக்கத்தில் ஸ்டோர் ரூமுக்குள் அழைத்தார்.
என்னண்ணே ?
(நான் அண்ணன் என்றே அழைப்பேன் காரணம் பழக்கத்தின் நெருக்கம், பரமக்குடி ஏரியா நல்ல மனிதர் நான் வாழ்வில் என்றுமே மறக்கவே கூடாத மனிதரும் கூட)
பிலிப்பைனிகள்ட்ட என்ன, சொன்னீங்க ?
 
நம்ம ஆளுங்களுக்கு தேநீர் கொடுக்கச் சொன்னேன்.
அதான் தெரியுமே தெனம் நீங்க சொல்றதாலதானே டீ கொடுக்கிறாளுக....
வேற, ஒண்ணும் சொல்லலையேணே....
அவளுகள் உங்களை எப்படி கூப்பிடுவாளுக... ?  (கர்ர்ர் சுர்ர்ர் புர்ர்ர் டர்ர்ர்)
கி...கி...ல்...லர்ஜி
.
ய்யோ... உங்களை மொத்த வார்டும் தேடி அலைஞ்சே டயர்டாயிருச்சு இந்தப் பக்கம் வி.ஐ.பி. வார்டு கிச்சன்தானே மைலீங் நிற்பா, ரெண்டு டீ சொல்லுங்க நீங்க சொன்னாத்தான் உடனே கொண்டு வருவாளுக...
மைலீங் அஹோ மைரோன் ஸ்டோர் லோப் டலுவா டீ குஸ்தமோ.
மைலீங், நான் ஸ்டோர்குள்ளே இருக்கேன் ரெண்டு தேநீர் வேணும்
என்று கொஞ்சம் சவுண்ட் கொடுக்க, அப்புறத்திலிருந்து மைலீங் சொன்னாள்...
 
ஊ.. ஊ அஷாவா......வா..... லலாக்கி.... கி.....
சரி புருஷா
அடிப்பாவி இவளுக்கும் தெரிஞ்சு போச்சா ?
என்ன சொல்றா.. ?.
சரினு சொல்றா...
 
இதுக்கா ஒன்றைமுழம் இழுக்கிறா. ஹூம், ஏதோ.. சொல்றீங்க யாருக்குத் தெரியும் ? சரி கில்லர்ஜி பிலிப்பைனிகள்ட்ட ஏன் இப்படி சொன்னீங்க ?
என்னண்ணே சொன்னேன் ?
சரி... இந்த கம்பெனியில எத்தனை பெண்கள் வேலை செய்றாங்க ?
126 பிலிப்பைனியும், 168 ஸ்ரீலங்காவும் இருக்காங்கண்ணே...
 
பரவாயில்லையே நான் சூப்பர்வைசர் எனக்கே, நீங்க சொல்லித்தான் கணக்கு தெரியுது. அவ்வளவு பேரும் உங்களை இப்படித்தான் கூப்பிடுவாளுகளோ... ஏன்னா... நீங்க எல்லோருகிட்டேயும் பேசும்போது பார்த்து இருக்கேன் சரி சில பேரு உங்களை கூயா’’ அப்படினு கூப்பிடுறாங்க, அதுக்கு என்ன அர்த்தம் ?
சகோதரா’’னு அர்த்தம்.
பரவாயில்லையே... நாலுபேரு சகோதரா’’னு கூப்பிடவும் சம்மதிச்சு இருக்கீங்களே... இப்பத்தான் புரியுது கூயானு கூப்பிட்டவளுக பூராம் வத்தலும், தொத்தலும்... சரிதான்.
 
சொல்லிக் கொண்டு இருக்கும்போது கதவு தட்டப்பட...
Yes come in என்றார் சூப்-அண்ணன்
 
கதவைத் திறந்து கொண்டு தேநீர் ட்ரேயோடு உள்ளே வந்த மைலீங் அன்றைய தினத்துக்கு முதல் சந்திப்பாக என்னைப் பார்த்ததால் வழக்கத்தைவிட சந்தோஷமாக கத்தினாள் இப்படி.
மஹந்தங் ஹபி ‘’அத்தான்’’ மாலை வணக்கம் ‘’அத்தான்’’ 
(எப்படியிருக்கும் ? எனக்கு, பக்கத்தில் சூப்பர்வைசர் நாகேந்திரன் அதுவும் சொந்த அண்ணனைப் போல உரிமையோடு நான் குடும்ப விசயங்களையும் பகிர்ந்து கொண்டவர் பல நேரங்களில் பல வகையான உதவிகளும் செய்தவர் அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இவள் என்னை ’’அத்தான்’’ என்று அழைத்து விட்டாளே... அய்யகோ நான் என்ன செய்வேன்  ? வெட்கம்)
அவருக்கு இருந்த கோபத்தை மறந்து சிரித்து விட்டார் ச்சீ போடீ போடீ சத்தியமாக இப்படித்தான் சொன்னார்.
 
Don’ tell like that
Why ?
You know the meaning ?
Yes I know the meaning of husband
Ok you know the meaning, then how you told like that ?
It’s ok no problem.
No problem ? Some time manager will come, so its problem for you and Killergee ok
No problem I will talk to manager, I will solve the problem..
 
போடி, போடி, தொலைஞ்சு வெளியே போடி
சூப்பர்வைசர் நாகேந்திரன் அவளை வெளியே தள்ளி கதவைச் சாத்த அவள் சிரித்துக் கொண்டே சென்று விட்டாள்
 
சொல்லுங்க கில்லர்ஜி ஏன் இப்படி சொன்னீங்க  ?  உங்களுக்கு ஐந்து அத்தைகளும் மூணு தாய்மாமன்களும் மற்ற மாமாவையும் சேர்த்து இருபத்து மூன்று முறைப் பெண்ணு இருக்கு இதில கட்டவேண்டிய ஸைசு மட்டும் பதினேழு இருக்குனு சொன்னீங்க அவுங்க உங்களை அத்தான்னு கூப்பிடுறது பத்தலையா ? கல்யாணம் ஆகிடுச்சு. ரெண்டு குழந்தைங்க இருக்கு எவ்வளவோ... விசயங்கள் பேசுறீங்க, உலக நடப்பை பேசுறீங்க, அரசியல்வாதிகளை, சினிமாக்காரங்களை கிழிக்கிறீங்க, ஆக்கப்பூர்வமா, அறிவுப்பூர்வமா (அவ்வ்வ்வ்வ்வ்வ் அதிரா பேசாமல் படிக்கணும் கேட்டோ) பேசுறீங்க, உங்களுக்கு நான் சொல்லித் தரணுமா ? நான் பார்த்ததால் சரி, மேனேஜர் பி.கேயா இருந்தால் இந்நேரம் உங்க கதி ? தண்ணி இல்லாத பாலைவனத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிடுவானே அந்த மீசைக்காரன். சரி கில்லர்ஜி எப்படி தோணுச்சு இவளுகளைப்பூராம் அத்தான்’’னு சொல்ல வைக்க... ?
சிரித்துக் கொண்டே.... சூப்-அண்ணன் கேட்க... நான் இஞ்சி தின்ற சிங்கம் போல் அமர்ந்து இருந்தேன்.
 
தொடரும்... நாளை மறுதினம்

31 கருத்துகள்:

  1. வார்த்தை தெரிந்தது!  ஆனால் எல்லாம் சும்மா தமாஷ்தானே?  ஏன் நாகேந்திரன் அண்ணன் டென்ஷன் ஆகிறார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அண்ணன் கோபபட்டதின் காணரம் அடுத்த பகுதியில் விளங்கும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. சிரித்து வாசித்தேன். இந்த வார்த்தைதானா அது? நல்ல காமெடிதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. கில்லர்ஜி இப்ப தெரிகிறது அப்ப முடி எல்லாம் இருந்து நல்ல ஸ்மார்ட்டா இருந்திருக்கீங்க!!! ஹாஹாஹா. அதான் அத்தனை பேரும் உங்களை இப்படிக் கூப்பிட்டுருக்காங்க! இப்படிக் கிளப்பிவிட்டவன உங்க தமிழ் சகாக்கள்தானே!? மேனேஜரும் தமிழரோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிளப்பிவிட்டவன - கிளப்பிவிட்டவங்க

      கீதா

      நீக்கு
    2. வருக இதை கிளம்பி விட்டவர் அல்லது சொல்லிக் கொடுத்தவர் யாரென்று அடுத்த பதிவில் தெரியலாம் ?

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள். படிக்கும் போதே சிரித்து ரசித்தேன். சகோதரி கீதாரெங்கன் அவர்கள் சொல்வது போல் இதை யாராவது தங்கள் நண்பர்கள்தான் செய்திருப்பார்களோ? என்ற சந்தேகம் எனக்கும் வருகிறது. விளையாட்டுக்கு கூட நீங்கள் இந்த வார்த்தையை அவர்களுக்கு கற்று தந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். தங்கள் உடன்பிறவா அண்ணனுக்கு தங்களின் நியாயமான பதிலை காண அடுத்த பதிவு வரை நானும் காத்திருக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், ரசித்து சிரித்தமைக்கும் நன்றிகள் பல!

      பதில் அடுத்த பகுதியில் பார்ப்போம் மீண்டும் நன்றி.

      நீக்கு
  5. ரசிகர் கூட்டம் இத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அதுவொரு அழகிய கனாக்காலம்
      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. பன்மொழிப்புலவர் வாழ்க!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் அழகிய கனாக்காலம் நன்றாக இருக்கிறது.
    உங்கள் பழைய படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  8. பிலிப்பைன் பெண்கள் பெருமபலும் நல்லவர்கள். சம்பாதிக்கத்தானே எல்லோரையும் விட்டுவிட்டு வருகிறார்கள். இந்தப் பகுதியை ரசித்தேன். நம்மவர்களில் பலர் தவறாகவும் அவர்களிடம் நடந்துகொள்கிறார்கள். நீங்கள் நல்லவர் என்பதை அவர்கள் புரிந்துவைத்திருப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே ஆம் உதவுவதில் முன்னணியில் இருப்பவர்கள்.

      எல்லாவற்றையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவமானவர்கள்.

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
    2. பிலிப்பைன்ஸ் சென்றிருந்தபோது (சாஃப்ட்வேர் விஷயமாக), அந்த ஆபீஸிலிருந்த பெண் என்னிடம் சொன்னது... என்னவோ தெரியலை.. பெற்றோர் நண்பர்கள் சொன்னதைக் கேட்காமல், இந்த ஊர் வந்திருந்த ஆஃப்ரிக்கன் ஒருவனுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டேன் (அவன் இன்னமும் அவளுடன் இருக்கானா இல்லை திரும்பிப் போய்ட்டானா என்று அவள் சொன்ன நினைவு இல்லை). குழந்தை ஆஃப்ரிக்கன் மாதிரி கறுப்பு நிறத்தில் பிறந்தது. என் ஃப்ரெண்ட்ஸ், உறவினர்கள்ட எல்லாம் கொஞ்சம் ஷேமா இருக்கும் என்றாள்.

      நீக்கு
    3. வருக தமிழரே... பிலிப்பைன்ஸ் பெண்கள் பெரும்பாலும் என்னைவிட சிவப்பாக இருப்பார்கள். காதலுக்கு பெரும்பாலும் கண் இருப்பதில்லை.

      அதேபோல் ஜெர்மன் பெண்கள் நீக்ரோக்களைத்தான் விரும்பி காதலித்து மணக்கிறார்கள். தங்களது மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  9. நம்முடைய மனம் நல்ல எண்ணங்களால் நிறையப் பெற்றால் நம்மைச் சுற்றிலும் நேர்மறை அதிர்வலைகள் பரவியிருக்கும்.. அதன் எல்லைக்குள் கீழ்த் தரமான அதிர்வலைகள் குறுக்கிட்டால் செயல் இழந்து போகும்.. நமக்கான நல்ல வார்த்தைகள் எங்கிருந்தாவது கிடைக்கும்..

    திறந்து கிடக்கும் பணப் பெட்டியில் கூட சாதாரண தாள்களாகத் தெரியும்..

    இதை நான் உணர்ந்திருக்கின்றேன்..

    நாள்பட்ட குப்பை வண்டிகள் கடக்கும் போது நம்மைச் சுற்றி இருக்கும் அதிர்வலைகள் சற்று பாதிப்படைவதும் உண்டு..

    தொடர்ந்த (இறை) தியானத்தால் அதிர்வலைகளை சரி செய்து விடலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது சிறந்த கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்..

    அர்த்தமுள்ள பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  11. அண்ணன் கோவப்பட்ட காரணத்தை அறிய நானும் ஆவலாய் இருக்கிறேன் .
    மற்றபடி உங்களுக்கு புதினம் எழுதும் திறமை உள்ளது. முயற்சிக்கலாம் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. கொஞ்சம் குழப்பமாக இருக்கு. மறுபடிசாவகாசமாப் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மீண்டும் படித்துப் பாருங்கள்.

      நீக்கு