தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

கன்னியும், கணினியும்


       01. அன்று பாடல்களில் தேனிசையாய் சந்தம் கொடுத்தார்கள்.
இன்று பாடல்களில் தேள் கடியாய் சத்தம் கொடுக்கிறார்கள்.
 
02. அன்று படங்களில் கதாசிரியரின் கதைக்கு மதிப்பு கொடுத்தார்கள்.
இன்று படங்களில் நடிகைகளின் சதைக்கு கொடுக்கிறார்கள்.
 
03. அன்று அரசியல்வாதிகள் கொள்கை பிடிப்போடு வாழ்ந்தார்கள்.
இன்று அரசியல்வாதிகள் கொள்ளை அடித்து வாழ்கிறார்கள்.
 
04. அன்று திருமணத்தில் உறவுகளை பன்னீர் தெளித்து வரவேற்றார்கள்.
இன்று விலைவாசி உயர்வால் தண்ணீர் அடித்து வரவேற்கிறார்கள்.
 
05. அன்று ஆசிரியர்களை வழியில் கண்டால் வணங்குவார்கள்
இன்று ஆசிரியர்களை விழியில் கண்டாலே முனங்குகிறார்கள்..
 
06. அன்று படங்களில் வாழ்க்கை பாடங்களை கொடுத்தார்கள்
இன்று பாடங்களில் வல்கர் படங்களால் கெடுக்கிறார்கள்.
 
07. அன்றைய ஆடவர்கள் மனையாளுக்கு கணவனாக வாழ்ந்தார்கள்.
இன்றைய ஆண்கள் மனைவிக்கு கள்வனாக வாழ்கிறார்கள்.
 
08. அன்றைய பெண்டிர் பதிகளுக்கு சதியாக வாழ்ந்தார்கள்.
இன்றைய பெண்கள் கணவனுக்கு சரி பாதி செய்கிறார்கள்.
 
09. அன்றைய அரசியல்வாதிகள் படிக்க வைக்க முயற்சித்தார்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் மக்களை குடிக்க வைக்கிறார்கள்.
 
10. அன்றைய காதலர்கள் காதலிக்காக உயிரைக் கொடுத்தார்கள்
இன்றைய காதலர்கள் காதலியிடம் உயிலைக் கேட்கிறார்கள்.
.
11. அன்றைய மக்கள் வனத்தை கூட கடவுளாக வணங்கினார்கள்.
இன்றைய மக்கள் பணத்தை மட்டுமே வணங்குகிறார்கள்.
 
12. அன்றைய ஆண்கள் கன்னியிடம் மயங்கி வாழ்ந்தார்கள்.
இன்றைய ஆண்கள் கணினியிடம் மயங்கி கிடக்கிறார்கள். 

கில்லர்ஜி தேவகோட்டை

Chivas Regal சிவசம்போ-
பதிவு எழுதும் போதும் கணினியில்தான் கவுறணும்.

28 கருத்துகள்:


 1. இன்றைய ஆண்கள் கணினி மூலம் பெண்களை மயக்குகிறார்கள்

  பதிலளிநீக்கு
 2. யோசித்து பொருத்தமான வார்த்தை ஜோடிகளால் இணைத்திருக்கிறீர்கள்!  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. ஆசிரியர்களை விழியில் கண்டாலே முனங்குகிறார்கள் என்பதற்கு பதில் முறைக்கிறார்கள் என்றோ ஏன், உதைக்கிறார்கள் என்றோ கூட சொல்லலாம்!  கலிகாலம்!

  பதிலளிநீக்கு
 4. வாழ்க்கைப் பாடம்-வல்கர் படம் வரி சூப்பர்! 

  அதேபோல் படிக்க குடிக்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

   நீக்கு
 5. சிறப்பான இணை வாக்கியங்கள்.ஆஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது ரசிப்புக்கு நன்றி

   நீக்கு
 6. மறுபடியும் தங்களது முத்திரைப் பதிவு..

  பதிலளிநீக்கு
 7. ஆசிரியர்களைக் கண்டு மாணவர்கள் யாரும் முனங்குவதில்லை.. அதற்கும் மேலே.. ஆசிரியைக்கு முன்னால் பெல்லி டான்ஸ் ஆடுகின்றான் மாணவன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி என்னிடம் அந்த காணொளி இருக்கிறது.

   பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

   நீக்கு
 8. அனைத்தும் வருந்த வேண்டிய உண்மைகள்...

  பதிலளிநீக்கு
 9. அன்றும், இன்றும் என்று நாம் சொன்னால் "வயதாகி விட்டது புலம்பல்" என்பார்கள் .இப்போது உள்ளவர்கள்.
  உங்கள் எண்ணங்கள் பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. கில்லர்ஜி செம. மிகவும் ரசித்தேன் அன்றும் இன்றும் என்று வார்த்தைகளால் பொருத்த்தமாகச் சொன்னதை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வருகைக்கும், ரசிப்புக்கும் நன்றி.

   நீக்கு
 11. நல்ல காலம், இதுவரை என் அனுபவத்தில், எங்கள் மாணவர்கள் எங்களை நோக்கிக் கை நீட்டியதில்லை, இத்தனைக்கும் நான் ஒரு காலத்தில் மாணவர்களை அடித்திருக்கிறேன். அந்த மாணவனே பயந்து, பள்ளிவிட்டு சென்ற பின் அது மட்டுமே அவன் நினைவில் இருந்திருக்கிறது என்பதை அவன் என்னிடம் வருத்தத்துடன் சொன்னதிலிருந்து நான் மாணவர்களை அடித்ததில்லை.

  துளசிதரன்  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு
 12. இப்பொழுதும் மாணவ மாணவிகள், எனக்கு பலரும் நினைவில் இல்லை என்றாலும், அவர்கள் என்னிடம் அன்புடன் இருக்கிறார்கள் என்பது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இறைவனுக்கு நன்றியும் சொல்லிக் கொள்கிறேன்.

  இப்போதும் ஆண்கள் கணினியிடம் மட்டுமில்லையே பெண்களிடமும் மயங்குகிறார்கள்தானே.

  எல்லாம் நன்றாக இருக்கின்றன. ரசித்தேன்.

  6 வதில் படங்கள் படங்களில் வல்கர் என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நானும் அதைத்தான் சொல்லி இருக்கிறேன்.

   நீக்கு
 13. வழக்கம்போல் கலக்கி இருக்கீங்க கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 14. அனைத்தும் உண்மை நண்பரே!!

  பதிலளிநீக்கு