திங்கள், ஆகஸ்ட் 15, 2022

உண்மையான சுதந்திரமா ?

 

மது நாடு சுதந்திரம் அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் (75) கடந்து விட்டது இருப்பினும் இன்றைய தினத்தை அரசு சுதந்திரமாக கொண்டாடுகிறதா ? பல்லாயிரம் காவலர்களை பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு தில்லியில் மட்டுமின்றி நாட்டின் தலைநகரங்கள் எங்கும் கொண்டாடுகிறது.

காரணம் தீவிரவாதிகளால் பிரச்சனை வருமென்ற முன்னெச்சரிக்கை தீவிரவாதிகள் உருவாகுவதின் காரணம் என்ன ? இதை இந்த அரசு சிந்தித்து தீர்வுக்கு வழி வகுக்கின்றதா ? இன்னும் எத்தனை ஆண்டுகள் அடுத்த தலைமுறை நூறாவது தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடும். பல கோடிகள் இதற்காக செலவு செய்யும்.
 
அரபு நாடுகளில் மன்னர்கள் (நமது நாட்டு ஜனாதிபதி பிரதமர், முதல்வர் போன்றவர்கள்) சாலைகளில் சாதாரண மனிதர்கள் போல் சமிக்ஞை திடல்களின் பாதசாரிகளோடு பச்சை விளக்கு வரும்வரை நின்று சட்டத்தை மதித்து நடந்து செல்கின்றார்கள்
.
இதன் அடிப்படை காரணமென்ன ?
எதிரிகள் இல்லை காரணமென்ன ?
மக்களுக்கு பிடித்தமான ஆட்சி.
 
நமது நாட்டிலோ மந்திரி சாலையை கடக்கிறார் என்பதற்காக பொதுமக்களை வெயிலில் நிறுத்தி வைக்கின்றனர் காவல் துறையினர். காரணம் அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு. எத்தனை மனிதர்களுக்கு அவசரமான வேலை இருந்திருக்கும் இதை அரசால்பவர்கள் நினைக்கின்றார்களா ?
 
1992-ல் நான் சென்னையில் மாலை வேளையில் செல்வி ஜெயலலிதா சாலையை கடக்கிறார் என்பதற்காக நான் சென்ற பேருந்தை சுமார் முப்பது நிமிடங்கள் நிறுத்தி வைத்தார்கள். நான் அயல் தேசம் செல்வதற்கு தேர்வாகி கடவட்டையை கொடுப்பதற்காக சென்றவன். அந்த முப்பது நிமிட தாமதத்தால் அன்று நான் சௌதி அரேபியா செல்ல முடியவில்லை. பிறகு 1996-ல் அபுதாபி சென்றேன் என்பது வேறு விடயம்.
 
இப்படி நிகழ்வுகளை அன்றாடம் சந்தித்த சென்னைவாசிகள் அதன் பிறகு செல்வி ஜெயலலிதாவை நிராகரித்தார்களா ? இல்லை மீண்டும் பெருவாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய வைத்தார்கள். மக்களிடம் குறைகளை வைத்துக் கொண்டு அரசால்பவர்களை குறை சொல்வது நியாயமற்றது. சிந்திப்போம் மாற்று வழிகளை தேடுவோம்.
 
நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்பதே நிதர்சனம். பள்ளியில் குழந்தைகளுக்கு மிட்டாய் கிடைக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அன்று விடுமுறை கிடைக்கிறது. ஊடகங்கள் திரைப்படக் கூத்தாடிகளை அழைத்து நாட்டுப்பற்றை குறித்து கேள்வி கேட்டு அன்றைய நிகழ்வுகளை கடத்துகின்றார்கள். தகுதியற்றவர்கள் பலரையும் தேசியக்கொடியை ஏற்றி வைக்க அழைக்கப்படுகிறார்கள். இருப்பினும் சம்பிரதாயத்துக்காக பதிவர்கள் அனைவருக்கும் கில்லர்ஜியின் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
 

கில்லர்ஜி தேவகோட்டை

காணொளிகள்

51 கருத்துகள்:

 1. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி...

  பதிலளிநீக்கு
 2. ஹிட்லர் ஆட்சி போல், எப்படியெல்லாம் சிறுக சிறுக ஏமாற்றுப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரும் அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால் போதும்... அந்த விழிப்புணர்வு வர வேண்டும்...

  பரிவார கும்பல் அழிய வேண்டும்... துதி பாடும் 3% கும்பல் ஒழிய வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் மக்களுக்கு நல்லவர், கெட்டவர் தெரியவில்லையே... ஜி

   நீக்கு
 3. 1980 களில் தெருமுனையில் நின்று கூட தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் நிலை இருந்தது.  அதை, அந்த சுதந்திரங்களை மாற்றியது ராஜீவின் கொலை.  வன்முறை உலகை அச்சுறுத்துகிறது.  இப்போது வன்முறை இல்லாத, வன்முறையை கடுமையாக சட்டங்களை வைத்து அடக்கும் ஜப்பானில் கூட கொலை அரங்கேறியுள்ளது.  அப்புறம் எப்படி சுதந்திரமாய் மந்திரிகள் தெருவில் நடமாடுவார்கள்?  எல்லா நாட்டிலும் அந்த வன்முறையாளர்களை காக்கவும், ஆதரிக்கவும் உள்நாட்டிலேயே ஒரு கூட்டமும் இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி உண்மை கெட்டவர் என்று தெரிந்தும் ஆதரிப்பவர் கெட்டவர் தானே...?

   நீக்கு
 4. இருக்கும் சுதந்திரத்தையாவது பேணிக்காப்போம்.  சுதந்திர தின வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 5. கில்லர்ஜி நீங்கள் தலைவர்களின் சுதந்திரம் வன்முறை பத்தி சொல்லி உண்மையான சுதந்திரமான்னு கேட்டிருக்கீங்க. அதற்கு சான்ஸே இல்லை. உள்ளே நடப்பது உங்களுக்கே தெரியும். அந்த வன்முறைக்கு நம்ம ஆளுங்களே காரணம்.

  அதை விடுங்க அது பெரிய லெவல்....சாதாரண பெண் குழந்தைகளுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை எனும் போது...இதோ இரண்டு மூன்று தினங்களாக பாலியல் கொடுமை....நான் செய்திகள் பார்ப்பதே அபூர்வம். இப்ப கூகுள் அனுப்பியதில் இவைதான் இருக்கின்றன....ஒரு நல்ல செய்தி கூட இல்லையா?

  சுதந்திர தின வாழ்த்துகள்!!!!!!!!!!

  எபி சனிக்கிழமை பதிவு வரை காத்திருக்கணும் போல நல்ல செய்திகள்பார்க்க!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இந்த நாடு நாசமாக போவதற்கு காரணம் அரசியல் தலைவர்களோ, பொதுமக்களோ அல்ல!

   எல்லாக்கட்சியிலும் நிரம்பி கிடக்கும் தொண்டர்கள் என்ற அடிமைகள்

   தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

   நீக்கு
 6. துபாய் தவிர மற்ற அரபு நாடுகளில் ஆள்பவர்கள் சர்வசாதாரணமாகச் செல்லுவதை நான் பார்த்ததில்லை. உள்ளூர் மக்களுக்கும் அரசை விமர்சிக்க உரிமை கிடையாது (சௌதி, ஓமன், கத்தார் போன்ற நாடுகளில்). அனைத்து நாடுகளிலும் எக்ஸ்பேட்களுக்கு அந்த உரிமை கிடையாது. பஹ்ரைனில் மற்றவர்களைப் பாதிக்காத வன்முறை உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு
 7. டாஸ்மாக் அரசைத் தேர்ந்தெடுப்பதும் மக்களே. ஜனநாயகத்தில் ஆள்பவர்களைக் குறை சொல்லுவதைவிட மக்களை மட்டுமே குறை சொல்லவேண்டும். அதிலும் போதை வஸ்துக்களை ஆதரிக்கும் தமிழர்களைத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நான் என்றுமே சொல்வது மக்களே இதனுடைய தொடக்கம்...

   நீக்கு
 8. சாலைகளில் எந்த நேரத்திலும் யாரும் தைரியமாகச் செல்ல அரகு நாடுகளில் மட்டும்தான் முடியும், தாய்வானையும் சேர்த்துக்கொள்ளலாம். சிங்கப்பூரும் ஓக்கே என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. வடகொரியாவையும் சேர்த்துக் கொள்ளலாம்

   நீக்கு
 9. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.

   நீக்கு
 10. கில்லர்ஜி அந்தக் குட்டிப் பெண் செம!!! ரொம்ப ரொம்ப அழகான நடனப்பிடிகள்!!! அசைவுகள். வெளிப்பாடுகள். நல்ல திறமை உள்ள குழந்தை. வாழ்த்துவோம். இக்குழந்தையும் எல்லாப் பெண் குழந்தைகளும் நல்ல குணங்களுடன் பாதுகாப்புடனும் - இது ரொம்ப முக்கியமாகிறதுஇப்போது - தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு பெருமை சேர்க்கட்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அந்தப்பெண் குழந்தையின் அபிநயம் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.

   நிச்சயம் இந்தப்பெண் பெரிய நடிகையாக வரும்.

   நீக்கு
 11. கடத்தில் தேசிய கீதம் - அருமை!!! செமை!

  கீதா

  பதிலளிநீக்கு
 12. 30 நிமிட தாமதம் 4 வருடங்களாக நீடித்தது என்பது வருத்தமான செய்தியே நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே என்னை விடுங்கள் கர்ப்பிணி பெண்கள் ஆட்டோவில் போவார்களே...

   நீக்கு
 13. சுதந்திர தின வாழ்த்துகள்
  காணொளிகள் அருமை.

  பதிலளிநீக்கு
 14. சுதந்திர தின நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  பகிர்வை படித்து விபரங்கள் தெரிந்து கொண்டேன். காணொளிகள் அருமை. கட வாத்தியத்தில் தேசிய கீதம் நன்றாக வந்துள்ளது. அவரது திறமைக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றிகள் பல!

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தங்களுக்கு இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  தங்களது பகிர்வை படித்து விபரங்கள் தெரிந்து கொண்டேன். சிலவற்றை என்றுமே தவிர்க்க முடியாது. காணொளிகள் கண்டு ரசித்தேன். கட வாத்தியத்தில் தேசிய கீதம் நன்றாக வந்துள்ளது. அவரது திறமைக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டு வேலைகளின் கெடுபிடியில் நான் தாமதமாக வந்தமையால், ஒன்றிற்கு இரண்டாக போனஸ் கருத்துரைகள் பதிவாகி விட்டன.

   நீக்கு
  2. போனஸ் கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
 17. அன்பின் சுதந்திர நாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 18. தீவிரவாதிகள்/ பயங்கரவாதிகள் - சமாளித்து விடலாம்...

  உடன் பிறந்த நோய் போலத் துரோகிகள்...

  இவர்களே தீவிரவாதத்துக்குக் கதவைத் திறந்து விடுகின்றவர்கள்..

  பதிலளிநீக்கு
 19. வங்கியின் மேலாளராக இருந்தவனே முகமூடியுடன் வந்து கொள்ளையடித்திருக்கின்றான்...

  அரசு அலுவலில் இருப்பவனே அந்நிய நாட்டவனுக்கு passport வாங்கித் தருகின்றான்..

  என்ன செய்ய?..

  இந்நாட்டின் தலையெழுத்து..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல எண்ணங்களை குழந்தைகள் மனதில் விதைக்க ஆளில்லை ஜி

   நீக்கு
 20. 40 ஆண்டுகளுக்கு முன் லஞ்சம் கொடுக்க முடியாததால் வேலை வாய்ப்பை இழந்தேன்.. இன்று வரையிலும் கஷ்டம்.. அன்றைக்கு அநியாயத்துக்குத் துணை போனவர்களின் வாழ்க்கை நன்றாகத் தான் இருக்கின்றது - தலைமுறை தலைமுறையாக!..

  ஆனாலும் காலம் பதில் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேர்மையாளர் நிம்மதியாக வாழமுடியாது என்பது இன்று உறுதியான தீர்வு.

   நீக்கு
 21. என்ன இருக்கிறதோ இல்லையோ,எழுத்துச் சுதந்திரம் நிச்சயம் இருக்கிறது!முக நூல் பதிவுகளே சாட்சி.
  நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தாங்கள் சொல்வதில் நூறு சதவீதம் சரியென்று சொல்லி முடியாது இப்பொழுது நிறைய பிரச்சனைகள் வாட்ஸ்-அப் குழுவினருக்கு வருகிறது.

   தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 22. இந்தியாவில் இருக்கும் சுதந்திரம் மற்ற நாடுகளில் இல்லை என்பதை அந்த அந்த நாட்டுக்குப் போனால் தான் தெரியும். இங்கே இருந்து கொண்டு பாதுகாப்பு என்பதே கூடாது என்று சொல்லுவது எளிது. நேரில் பார்த்தால் தான் தெரியும். எல்லா நாடுகளிலும் தலைவர்களுக்குப் பாதுகாப்பு என்பது உண்டு. இந்தியாவில் மட்டும் இல்லை. உலகத்தலைவர்கள் அனைவருமே கடுமையான பாதுகாப்புக்கட்டுப்பாடுகளில் தான் இருக்காங்க. தேசபக்தி என்பது ஓர் உணர்வு உணர்ந்தவர்களுக்குத் தான் புரியும் சொல்லிப் புரிந்து கொள்ளுவது இல்லை தேசபக்தி. இங்கே இருந்து கொண்டே/வாழ்ந்து கொண்டே நம் நாட்டைப் பற்றியே குறை கூறுவதும் எள்ளி நகையாடுவதிலும் இந்தியர்களை மிஞ்ச அதிலும் தமிழர்களை மிஞ்ச எவரும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தேசபக்தி என்பது ஓர் உணர்வு உணர்ந்தவர்களுக்குத் தான் புரியும் சொல்லிப் புரிந்து கொள்ளுவது இல்லை//

   உண்மையான வார்த்தை.

   நீக்கு
 23. நீங்கள் அனைவரும் வெறுக்கும் குஜராத்தில் முதல்மந்திரியைப் பெயர் சொல்லிக் கூப்பிட முடியும். சாதாரணமாகச் சாலைகளில் நம்மைப் போன்றே நடந்து செல்வார்கள். முன்னால் இருந்த காங்கிரஸ் அரசின் முதல் மந்திரிகளாக இருந்த சிமன்பாய் படேலை "சிமன்பாய்" என்றே மக்கள் அழைப்பார்கள். ஊர்மிளாபென் படேல் முதல்வர் ஆனப்போ "ஊர்மிளாபென்" என்றே அழைப்பார்கள். தேர்தல் நேரத்தில் எந்தவிதமான விறுவிறுப்பும் இருக்காது எங்கும் கட்சிக்கொடிகளையே பார்க்க முடியாது. தேர்தல் பிரசார நேரத்தில் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டால் கூடக் கைகளைப் பிடித்துக்கொண்டு வணக்கம் சொல்லிக்கட்டி அணைத்துக் கொள்வார்கள். இப்போ நாங்க அங்கிருந்து வந்து இருபது வருஷங்கள் ஆகிவிட்டன. என்றாலும் எதுவும் மாறவில்லை என்பதை அங்கிருக்கும் எங்கள் நண்பர்கள் சொல்லுகின்றனர். முதல்மந்திரி விவசாய நிலத்தைப் பார்வையிடச் சென்றால் சாதாரணமாகவே செல்லுவார். சிவப்புக்கம்பள வரவேற்பெல்லாம் இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ பக்கத்தில் கேரளாவில் முதல்வரை சராசரி மனிதரால் தான் பார்க்கின்றனர்.

   தமிழகத்தில்தான் கடவுளாக நினைக்கின்றனர்.

   நீக்கு
 24. கேனயர்கள் நிறைந்த நாட்டில் கிறுக்கு பய நாட்டாமைதான் நடப்பு அமலில் இருக்கிறது நண்பரே......

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...