தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 05, 2022

காந்தி சிலை அழுகிறது...

ணக்கம் நண்பர்களே... ‘’அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’’ என்ற வைரமுத்துவின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

இதோ எனது பாடல்...
 
காந்தி சிலை அழுகிறது வெவ்வேறு
தூளியிலும் உன் அகம் தெரிகிறது
காந்தி சிலை அழுகிறது வெவ்வேறு
தூளியிலும் உன் அகம் தெரிகிறது

சந்திரன் கூட்டத்து சுந்தரியே
மண்கோந்தை வீட்டினில் கந்திரியே
காந்தி சிலை அழுகிறது வெவ்வேறு
தூளியிலும் உன் அகம் தெரிகிறது
 
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
கேணியில் வண்டு வீழும்போது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
தாபம் கொன்று தந்தால்... மோது
நஞ்சுக்குள் தீமை வைத்து மோசம் என்பாய்
பன்னீரில் வழுக்கிக் கொண்டே பாசம் என்பாய்
இனிமையிலே வறுமையிலே
இத்தனை காலடி வளமையிலே
 
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
பட்டென உறவுகள் தொட்டன நனவுகள்
ஆமைகளும் சமையடி மலங்குயிலே
காந்தி சிலை அழுகிறது
 
வெவ்வேறு தூளியிலும்
உன் அகம் தெரிகிறது
பாகம் யாவும் நோயின் தேகம்
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
தேகம் மாற தீதான் மோகம்
மண்ணுக்குள் கல்லை வைத்து யார் புதைத்தது
வெண்ணீரில் குளிக்கும்போது குளிர்கின்றது
 
கொஞ்சம் பொறு பஞ்சு தரும்
பாவாடை பிழிந்து பூசுகிறேன்
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
மான்கொம்புகள் வைத்த தடங்களில்
சாணியை கரைத்து வீசுகிறேன்
காந்தி சிலை அழுகிறது
 
வெவ்வேறு தூளியிலும்
உன் அகம் தெரிகிறது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
குப்பியில் துப்பிய ரத்தினமே
அவசிய சாஸ்திரி மத்தளமே
காந்தி சிலை அழுகிறது
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
வருடம்: 1981
படம்: ராஜபார்வை
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, மதுரை சோமு

இதோ வைரமுத்துவின் பாடல் வரிகள்
 
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
 
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
தேனில் வண்டு மூழ்கும்போது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
 
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
 
தேகம் யாவும் தீயின் தாகம்
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
 
நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்
அந்தி மழை பொழிகிறது
 
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
ஆஆஆஆஆஆ....... ஆஆஆஆஆஆ...
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=uMdpWbjG7U0
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

24 கருத்துகள்:

  1. ரசித்தேன்.

    கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது 

    மண்ணுக்குள் கல்லை யார் புதைத்தது...  உங்கள் வரியில் ஒரு வார்த்தை குறைகிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் அந்த வரியை சரி செய்து விட்டேன்.

      காப்பி பேஸ்ட்டில் பிழையாகி விட்டது தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பாடல் நன்றாக உள்ளது. ரசித்தேன். தங்களது கற்பனை வரிகள் திரைப்பட பாடலுடன் ஒன்றி வருகிறது. தங்களது கற்பனை வளத்திற்கு பாராட்டுக்கள்.

    அந்த முதல் படம் பார்க்க கஸ்டமாக உள்ளது. காந்தி சிலை ஏன் இப்படி? யாரும் கவனிக்கவில்லையா?

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி

      நீக்கு
  3. நன்றாக அழட்டும். பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  4. //காந்தி சிலை அழுகிறது..//

    காந்தியே வந்து அழுதாலும் பிரச்னை இல்லை!..

    பதிலளிநீக்கு
  5. சாணியைக் கரைத்து ஊற்றுகிறேன் - என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊற்றுகிறேன் என்பது அபிஷேகமாகி விடுமோ...

      நீக்கு
  6. அன்றைக்கு வங்க தேசத்து முஸ்லீம்களால் நவ்காளி இந்துக்கள்
    திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.. பெண்கள் வயது வித்தியாசம் இன்றி வன்புணர்வுகளுக்கு ஆளாகினர்.. இந்துக்களின் வீடுகளும் உடமைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன..
    வழிபடும் தலங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.. பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்..
    அப்போது இந்த காந்தி சொன்னாராம் - மன்னித்து விடுங்கள்.. - என்று..

    யாரை,!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தியமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  7. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
    உடைந்த காந்தி சிலை எங்கு கிடைத்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எங்கு உடைத்தார்கள் என்பது தெரியவில்லை.

      இணையத்தில் கிடைத்தது தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. கில்லர்ஜி.....காந்தி சிலை அழுகிறதுன்னுட்டு உள்ளே வேற வரிகள்....நீங்கள் எழுதியிருப்பது நல்லாருக்கு உங்கள் திறமை பாட்டுக்கு பாட்டு போல ஆனா ஆரம்பமும் உள்ளேயும் வித்தியாசமாக இருக்கே என்று...அதுதான் யோசனை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நான் எப்போதும் சொல்வது வரிகளுக்கு எதிர்பதம் எனது வரிகள்...

      நீக்கு
  9. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பாட்டெழுதும் திறன். ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  10. அடிக்கடி காந்திசிலை உடைப்புக்கள் நடக்கின்றன நமது நாட்டிலும் உண்டு ஏனோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் நல்லவரும், கெட்டவரும் உண்டு.

      நீக்கு