வணக்கம் நட்பூக்களே எமக்கு இது ஆயிரமாவது
பதிவு (1000) தங்களது பேராதரவே எமது இந்த சிறிய
சாதனைக்கு சாத்தியமாயிற்று. இதில் உங்களுக்கு பயனாக நான் என்ன செய்தேன் ?
என்பதை தாங்களே சொல்ல
வேண்டும். அப்படி நானென்ன எழுதி விட்டேன் ? என்னை நானே கேட்டு கேள்விக்கென்ன
பதில் கிடைத்தவைகள் இதோ...
எழுதுகோல்
எடுத்து இன்றைய எனது தமிழனின்
நிலைபற்றி எழுதி இருக்கிறேன் தமிழனின்
பண்பாடு காட்டி
இருக்கிறேன். என்
மொழிகள் பற்றி
எழுதி இருக்கிறேன் எனது மகனுக்கு தமிழ்VANAN என்று பெயர் வைத்து இருக்கிறேன், எழுதும்
பதிவுகளில் முழுமையான தமிழ் எண்கள் பயன் படுத்தி இருக்கிறேன். பிழையிருந்தாலும் நான் படிக்காதவன்
என்று சொல்லி தப்பிக்க
இயலும். காமக்கொடூரன்கள்
கண்டால் அவர்கள் முகத்தில் தூ
என்று துப்பி இருக்கிறேன். எனக்குள்
ஒருவன் வாழ்வதை உங்களுக்கு காட்டி இருக்கிறேன்.
என்னால் இயன்ற அளவு குறுங்கவி
என்ற பெயரில் கிறுக்கி
இருக்கிறேன். கலாச்சாரக்
கொலையாளிகள் முகத்தை
கிழித்து இருக்கிறேன். தேவகோட்டை to கீழக்கரை அழைத்துப் போய் இருக்கிறேன். சந்தேகப்பட்டு தமிழர்கள் அறிவாற்றலான பரம்பரையா ?
என்று கேட்டு இருக்கிறேன்.
குழந்தைகளுக்கு வாழ்த்துப்பா
பாடியிருக்கிறேன்.
தவறிழைத்த டால்மியாபுரம்,
டவுட்டு டவுசர் கிழித்து இருக்கிறேன். ஹிந்தமிழ் பேசிப்பழகி இருக்கிறேன். திரு. ஜியெம்பி ஐயா அவர்களுக்கு பயந்து
அரசியல்வாதிகளை கிலி
கிளி கிழிக்கும்
ஆசையை அடக்கி இருக்கிறேன்.
ஏமாளித் தமிழர்களின் வந்தாரை
வாழவைப்போம் என்ற
கொள்கையை எதிர்த்து இருக்கிறேன். அத்தியின் வரவுபற்றி விளக்கி இருக்கிறேன். ஒண்ணுமே புரியலே உலகத்திலே... என்று புலம்பியவர்களை ஆற்றுப்படுத்தி
இருக்கிறேன்.. ஆன்மீகமும்,
நாத்திகமும் பேசி
இருக்கிறேன். நாட்டுக்கு தியாகங்கள் செய்த காமராஜர் போன்றவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறேன். அப்பா
என்னும் தாரகமந்திரம் சொல்லி இருக்கிறேன். சுட்டபழம்
தந்து இருக்கிறேன்.
உங்களுடன் மௌனமொழி
பேசி இருக்கிறேன்.
இந்தியாவின் பெயரைக் காப்பாற்றிய அபிநந்தனுக்கு அபிநந்தனம் செய்து இருக்கிறேன். உறவுகளின் வீட்டில் காது குத்தும் போது... பார்த்து சொல்லி இருக்கிறேன். மகளுக்கு திருமணம்... செய்து இருக்கிறேன். மனிதமூளைபற்றி ஆராய்ந்து கிருஷ்ணகிரி, கிறுக்கன் கிருஷ்ணன் ஆகி இருக்கிறேன். எழுத்தாளன் ஆக முயற்சி செய்து இருக்கிறேன். தேவகோட்டை, தேவையறிந்த தேவதையம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று இருக்கிறேன். பதிவெழுதி வளர்ச்சியும், வீழ்ச்சியும் கண்டு இருக்கிறேன். கில்லர்ஜி ஜூவல்லர்ஸ் திறந்து இருக்கிறேன்.
ஆயிரம் அர்த்தங்கள் புதுப்பித்து இருக்கிறேன். அரசியலில்
குதிப்பது எப்படி ? என்று நிகழ்த்தி காட்டி இருக்கிறேன். ஒரு நாயின் கதறல் கேட்க வைத்து இருக்கிறேன். சந்தேகச்செடி அறுத்து வீசி இருக்கிறேன்.. தலையணை மந்திரம் கடந்து இருக்கிறேன். பாரதிராஜா ரஜினியை திட்டாதீர் என்று சொல்லி இருக்கிறேன். கமல்ஹாசன்
அவர்களுக்கு... கடிதம் எழுதி இருக்கிறேன். ஒஸாமாவும், நானும் சந்தித்ததை காட்டி இருக்கிறேன். கணபதி
பப்பா மோரியா என்று பாடி இருக்கிறேன்.
இவ்வளவு தூரம் நான் எழுதுவதற்கு பதினெட்டாம்படி
கருப்பர் துணை இருந்து இருக்கிறார். கேப்பையில் டால்டா வடித்து இருக்கிறேன். சாத்தான்குளம்,
சாமியார் சாரங்கபாணி வீட்டிலேயே போய் இந்தப்படை
போதுமா ? என்று கேட்டு இருக்கிறேன். குடிகாரனின்
வில்லுப்பாட்டு கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். சுலைமாணி குடித்து இருக்கிறேன். என்னை மயக்க நினைத்தவளை போடி கொங்காச்சிறுக்கி
என்று விரட்டி இருக்கிறேன்.
தமிழ்
அருவியில் குளித்து இருக்கிறேன்.
பேராசை
பெருநஷ்டம் என்பதை
உணர்ந்து இருக்கிறேன்.
துபாயில் தமிழ் (நிகழ்)ச்சி கண்டு இருக்கிறேன். இரை தேடி உழைத்ததில் இறை தந்த பரிசு பெற்று இருக்கிறேன். தள்ளாத வயதிலும்... எழுதுவதற்கு எண்ணம் கொண்டு இருக்கிறேன். கோவில்பட்டி, கோடாங்கி கோமுட்டி வீட்டில் எனது பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறேன். பல பெண்கள் நீங்க அழகா இருக்கீங்க... என்று ஜொள்ளுவதை கேட்டு இருக்கிறேன் MONEY மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிறேன். எடப்பாடி, எத்தன் எல்லப்பன் அவர்களிடம் வாதாடி கடமை கண்ணியம் கட்டுப்பாடு எங்கே ? என்று கேட்டு இருக்கிறேன். ஒரு டைரியின் கதி கண்டு இருக்கிறேன்.
பாளையங்கோட்டை,
பாட்டி பார்வதி வீட்டில் போய் தாலாட்டு
பாடி
இருக்கிறேன் ரஞ்சிதா
மேடம் அவர்களிடம்
ஸூட்டிங் ஸ்பாட்டில் போவோமா...
ஊர்கோலம்... என்று பாடி இருக்கிறேன். எனக்கும்
விடியுமா ? என்று நித்தியிடம் சொல்
தமிழா... என்று கேட்டு வர சொல்லி இருக்கிறேன். நூர்
இஸ்லாமிய வங்கி மேலாளர் மேனகாவிடம் என்
காதல், உன் காதில் சொல்வேன் என்று சொல்ல, அர்த்தம்
அபத்தமானது என்பதை தெளிந்து இருக்கிறேன். அடிக்கடி விழித்தெழு
தமிழா... என்று கூவி இருக்கிறேன்.
எல்லாம்
நன்மைக்கே... என்று சொல்லி இருக்கிறேன் நாலு
வேலி நிலம் வாங்கிப் போட்டு இருக்கிறேன். 4 பேர் 4 விதம் பேசுவதை கேட்டு இருக்கிறேன். ஜாதி
வெறியும், அகலக் குழியும் வெட்டுவதை பார்த்து இருக்கிறேன். அவர்களுக்கு நெய்ப்பந்தம்
பிடிக்கச்
சொல்லி இருக்கிறேன். தனி
ஒருவன் என்றே நினைந்து வாழ்கிறேன். தமிழ்க்
கலாச்சாரம் தெரிய முணைந்து இருக்கிறேன். அடுத்த வீட்டு பெண்களை ராஜபார்வை
பார்க்காது
இருக்கிறேன். தமிழ் படும்பாடு
in தமிழ்நாடு என்பதை காட்டி இருக்கிறேன்.
தமிழ்ச்சங்கு ஊதி மகிழ்ந்து இருக்கிறேன். காவாலி பயல்களுடன் வாழ்ந்து இருக்கிறேன். புருஷனுக்கேத்த புண்ணியவதி வீட்டில் போய் கன்னத்தில் முத்தமிடு என்று கேட்டு இருக்கிறேன். கிஸ்ஜியானந்தா என்று மக்களை என்னை அழைக்க வைத்து இருக்கிறேன். தமிழைக் காப்போம், தரணியில் வாழ என்று அழைத்து இருக்கிறேன். தன்மானம் நிறுத்தி வாழ்கிறேன். உகாண்டா அரசுக்கு ஓர் கடிதம் எழுதி இருக்கிறேன் தமிழ்ப்பதிவருடன், in UAE ஊர் சுற்றி இருக்கிறேன்.
கணவனுக்கு
கல்லடி கொடுக்க வைத்து இருக்கிறேன். கருப்பு
சட்டையில், சிவப்பு ரத்தம் கண்டு இருக்கிறேன். மர்மச்சாமி
வீட்டில்
அவரது மாமன்
மகனும், அத்தை மகளும் தங்கி இருப்பதை கண்டு இருக்கிறேன். கொடுத்துட்டு
போங்க, அத்தான் என்றவளின் முரண்பாடு கண்டு இருக்கிறேன். அம்மா...
தாயே... என்று வீதியில் கேட்பதை
பார்த்து இருக்கிறேன். தேவகோட்டை, தேவதை தேவகி நூலெழுதி எனது கனவு
நனவானது கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். வெல்லத்தான் நினைக்கிறேன்... உங்களிடம் சொல்லி
இருக்கிறேன்.
பிரதமர் மோடி அவர்களிடம் கொரோனா
காலத்தில் உயிரின்
விலை உயருமா ? என்று கேட்டு இருக்கிறேன். அவளும்,
நானும் சில நேரங்களில் ஹி... ஹி... ஹி... மரண தண்டனை வேண்டும் என்று வாதிட்டு இருக்கிறேன். திரைப்படக்
கூத்தாடிகளிடம் வெட்கப்படுவோம்
என்று
சொல்ல நினைக்கிறேன். தமிழ்
வாழ்க என்று கூறி ஆயிரம் பதிவுகள்
எழுத வைத்தமைக்கு நன்றிகள் ஆயிரத்தில் இவ்வளவு இணைப்புகள் மட்டுமே தந்து இருக்கிறேன்.
என்றும் உங்கள் வாழ்த்துகளை வேண்டி கில்லர்ஜி பூர்வீகம்
தேவகோட்டை
சாம்பசிவம்
இப்பதிவில் சிறப்பம்சம் ஏதோ எனது விழிகளுக்கு தெரிகிறதே ?
சிவாதாமஸ்அலி-
தொடர்ந்து சிறப்புடன் எழுத எங்களது நல்வாழ்த்துகள் நண்பா...
Chivas Regal சிவசம்போ-
இம்பூட்டு வேலை செய்து இருக்கே யாரும் உள்ளே போவார்களா ?
இந்தியாவின் பெயரைக் காப்பாற்றிய அபிநந்தனுக்கு அபிநந்தனம் செய்து இருக்கிறேன். உறவுகளின் வீட்டில் காது குத்தும் போது... பார்த்து சொல்லி இருக்கிறேன். மகளுக்கு திருமணம்... செய்து இருக்கிறேன். மனிதமூளைபற்றி ஆராய்ந்து கிருஷ்ணகிரி, கிறுக்கன் கிருஷ்ணன் ஆகி இருக்கிறேன். எழுத்தாளன் ஆக முயற்சி செய்து இருக்கிறேன். தேவகோட்டை, தேவையறிந்த தேவதையம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று இருக்கிறேன். பதிவெழுதி வளர்ச்சியும், வீழ்ச்சியும் கண்டு இருக்கிறேன். கில்லர்ஜி ஜூவல்லர்ஸ் திறந்து இருக்கிறேன்.
துபாயில் தமிழ் (நிகழ்)ச்சி கண்டு இருக்கிறேன். இரை தேடி உழைத்ததில் இறை தந்த பரிசு பெற்று இருக்கிறேன். தள்ளாத வயதிலும்... எழுதுவதற்கு எண்ணம் கொண்டு இருக்கிறேன். கோவில்பட்டி, கோடாங்கி கோமுட்டி வீட்டில் எனது பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறேன். பல பெண்கள் நீங்க அழகா இருக்கீங்க... என்று ஜொள்ளுவதை கேட்டு இருக்கிறேன் MONEY மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு இருக்கிறேன். எடப்பாடி, எத்தன் எல்லப்பன் அவர்களிடம் வாதாடி கடமை கண்ணியம் கட்டுப்பாடு எங்கே ? என்று கேட்டு இருக்கிறேன். ஒரு டைரியின் கதி கண்டு இருக்கிறேன்.
தமிழ்ச்சங்கு ஊதி மகிழ்ந்து இருக்கிறேன். காவாலி பயல்களுடன் வாழ்ந்து இருக்கிறேன். புருஷனுக்கேத்த புண்ணியவதி வீட்டில் போய் கன்னத்தில் முத்தமிடு என்று கேட்டு இருக்கிறேன். கிஸ்ஜியானந்தா என்று மக்களை என்னை அழைக்க வைத்து இருக்கிறேன். தமிழைக் காப்போம், தரணியில் வாழ என்று அழைத்து இருக்கிறேன். தன்மானம் நிறுத்தி வாழ்கிறேன். உகாண்டா அரசுக்கு ஓர் கடிதம் எழுதி இருக்கிறேன் தமிழ்ப்பதிவருடன், in UAE ஊர் சுற்றி இருக்கிறேன்.
சாம்பசிவம்
இப்பதிவில் சிறப்பம்சம் ஏதோ எனது விழிகளுக்கு தெரிகிறதே ?
தொடர்ந்து சிறப்புடன் எழுத எங்களது நல்வாழ்த்துகள் நண்பா...
இம்பூட்டு வேலை செய்து இருக்கே யாரும் உள்ளே போவார்களா ?
வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக ஜி வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குபாவாயிரம் படைத்த பாவலனுக்கு இணையாக
பதிலளிநீக்குஓராயிரம் படைத்த ஒப்பற்ற தலைவனாம் - இனி
ஈராயிரமும் படைக்க இறைஞ்சுகிறேன் இறைவனிடம்
பூவாயிரம் தூவி புகழ்பாடி தாழ் பணிந்தே.
தங்களது கவிதை வழி வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே...
நீக்குபல்துறைகளிலும் சுவாரஸ்யமாக எழுதி கலக்கி வரும்தேவகோட்டைஜிக்கு வாழ்த்துகள் இன்னும் ஆயிரமாயிரமாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குசாதனைகள் கொண்டாட்டம் சந்தோஷம் வாழ்த்துக்கள் மேலும் சிறக்க.
பதிலளிநீக்குதங்களது முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தாங்கள் ஆயிரம் பதிவை தொட்டதற்கு எனது ஆத்மார்த்தமான வாழ்த்துகள். மேலும் ஆயிரமாயிரம் பதிவுகள் எழுதி எழுத்துலகில் சாதனை செய்ய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு பதிவுக்கும் இணைப்பு தந்து சிறந்த வரிகளைக் கொண்டு செதுக்கி இந்த ஆயிரமாவது பதிவை அற்புதமாக உருவாக்கிய உங்கள் உழைப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பதிவை ரசித்தேன். பாராட்டுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குபதிவின் சுட்டிகளை கவனித்து சொன்னமை அறிந்து மகிழ்ச்சி ஆம் கடுமையான உழைப்புதான்.
ஆயிரம் பதிவுகள் உண்மையிலேயே பெரும் சாதனைதான். அதுவும் இந்த ஆயிரமாவது பதிவினை எண்ணற்ற இணைப்புகளோடு வெளியிட்ட தங்களின் அயரா முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பரே.
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களின் எழுத்துப் பயணம்.
வருக நண்பரே தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி.
நீக்கு1000 ! பதிவுகள் எழுத துபாயில் இருந்து ஏதாவது பிரத்தியேக A I மென்பொருள் கொண்டு வந்தீர்களா ? பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎழுதியது எல்லாவற்றையும் தொகுத்து "கில்லெர்ஜீயின் 1001 அற்புத இரவுகள் (அறுவைகள் ?) " என்று ஒரு மின் புத்தகம் வெளியிடலாம்.
ஐயாவின் உணர்வுப்பூர்வமான, உயர்ந்த எண்ணங்களோடு வாழ்த்தி ஆலோசனை தந்தமைக்கு நன்றிகள் பல!
நீக்குபாராட்டுகள். நல்லா தொகுத்துள்ளீர்கள். அது சரி... ஒரு பேத்தியை மாத்திரம் பார்ப்பதுபோல் உள்ளது?
பதிலளிநீக்குவருக தமிழரே பாராட்டுக்களுக்கு நன்றி. இரண்டு பெயர்த்திகளும் இருக்கிறார்களே...
நீக்குதொடர்ந்து அயராமல் எழுதுங்கள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குநல்லது எழுதுவதற்கு அழற்சி வராது. ஆனால் வருகையாளர்கள் குறைவானது விட்டதால் மனச்சோர்வு வருகிறது.
நீக்குஆளில்லாத கடையில் டீ ஆற்றிய கதையாகி விடக்கூடாதே...
ஆயிரந்தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியே..! - என்று ஏதோ வசனம் மனதில் வர, ஏய்.. நிறுத்து ! -என்று சொல்லிக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஆயிரத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எழுத்தார்வம் வளரட்டும்.
நன்றி சொன்ன பெயர்த்திகளுக்கு நன்றி!
வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.
நீக்குஇந்த ஆயிரமாவது பதிவு மிகவும் வித்தியாசமாக மாறுப்பட்ட வடிவில் வெளிவந்து இருக்கிறது அருமை பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஎலே!.. இம்புட்டு வெரசா எங்கல போறே?...
பதிலளிநீக்குஅதாம் லே.. நம்ம கில்லர் ஜி இருக்காகளே.. அவுக ஓராயிரம் பதிவு போட்டதுக்கோசரம் அலுவா கிண்டிட்டு இருக்காவளாம்... மொத ஆளா நின்னு வாங்கிடணும் லே!.. அதுக்காகத் தான் இந்த ஓட்டம்!..
வாங்க ஜி அலுவா வாங்க போகும்போது என்னை மறந்திடாம எனக்கும் ஒரு தொண்ணை வாங்கிட்டு வாங்க, நான் திண்ணையிலதான் உட்கார்ந்து இருக்கேன்...
நீக்குஆளுக்கு ஒரு தொன்னை தானாம்!..
நீக்குபோய்யா வெண்ணெய்.. ண்டு சொல்லிட்டாக!..
அப்படியா... நம்மளைப்பத்தி எடுத்து சொன்னீங்களா ஜி ?
நீக்குமேட்டிளந் தென்றலாய் தேவ
பதிலளிநீக்குகோட்டைக்குள் குயிலின் கீதம்
வேட்டையில் வீரன் என
சாட்டையுடன் சங்கநாதம்..
ஓய்வினை அறியா ஒளியாக
ஆயிரம் பதிவுகள் அற்புதமாக
காவியம் காட்டும் தமிழாகச் சொல்
ஓவியம் காட்டிடும் ஒளிநிலவே
நாவினில் இனிக்கும் தமிழாலே
நலம் பெற வேண்டும் பல்லாண்டு!..
அன்பின்ஜி
நீக்குதங்களது கவிதை வழி வாழ்த்து அருமை மிக்க நன்றி
வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமுக்கியமாக தொடர் பதிவு எழுத வைத்து உள்ளீர்கள்... அதையும் இணைத்து விடலாம்...
ஹா.. ஹா.. வாங்க ஜி அதை எனக்கு முன்பே பலர் அறிமுகப்படுத்தியதுதானே... தங்களது கருத்துக்கு நன்றி ஜி
நீக்கு1000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் ஜி.
பதிலளிநீக்குஅனைத்து பதிவுகளையும் இங்கு சொன்னது அருமை.
நிறைவில் தங்கள் பேத்திகள் நன்றி சொன்னது அருமை.
இந்த பதிவுக்கு உங்கள் உழைப்பு தெரிகிறது.
மேலும் மேலும் உற்சாகமாக பதிவுகள் வர வேண்டும். பேத்திகள் ஆசையாக படிக்க வேண்டும். தங்கள் ஐயாவை பாராட்டி வாழ்த்த வேண்டும்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தையும், வாழ்த்துகளையும் பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குமிகப்பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள்! ஆயிரமாவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்! இனிய பாராட்டுக்கள்!!
பதிலளிநீக்குவருக சகோ தங்களது மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குஆகா! அருமை தோழரே! தமிழ்ப் பதிவுலகே வெறிச்சோடிப் போன பின்னும் விடாது எழுதிக் குவித்து 1000ஆவது பதிவை எட்டியிருக்கும் உங்கள் ஊக்கத்துக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்! அதுவும் இத்தனை பதிவுகளை ஒரே பதிவு போலக் கோவையாகச் சொன்ன விதம் அழகு, வியப்பு! இவ்வளவும் செய்ததாகப் பட்டியலிட்ட நீங்கள் இடையில் என்னைப் போல் சிலருக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தியும் இருக்கிறீர்கள் என்பதையும் இங்கு மகிழ்ச்சியுடன் பதிவு செய்ய விழைகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்! அன்பு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், வாழ்த்தியமைக்கு மகிழ்ச்சியான நன்றிகள் பல!
நீக்கு1000 பதிவுகள்...... மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி...... தொடரட்டும் உங்கள் பதிவுகள்.....
பதிலளிநீக்குதகவல் தெரிவித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றியும், மகிழ்ச்சியும்.
நீக்குவாழ்த்துகள் கில்லர்ஜி! மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் மேலும் நீங்கள் எழுதி இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும். அனைத்துப் பதிவுகளையும் ஒருமித்து அதை இணைத்துப் பதிவாகவே சொல்லியிருபப்து ஆச்சரியப்பட வைக்கிறது. அற்புதம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி
நீக்குகில்லர்ஜி வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅருமையாக வித்தியாசமாகச் சொல்லியிருக்கீங்க. பதிவின் தலைப்புகளின் சரமே பதிவாய். நல்ல தொடுப்பு! தொகுப்பு.
பாட்டி வீட்டுல தாலாட்டுப் பாடி அட ரஞ்சிதாகிட்ட போவோமா ஊர்கோலம்னு ஹாஹாஹா என்னடா நித்திய காணலியேன்னு பார்த்தா அடுத்த வரில வந்துட்டாப்ல!!
இன்னும் நிறைய எழுதுங்க கில்லர்ஜி. சோர்வு வேண்டாம் எழுதிக் கொண்டே இருங்கள் பார்ப்பவர்கள் பார்க்கட்டும் வாசிப்பவர்கள் வாசிக்கட்டும்...அதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதிக் கொண்டே இருங்கள் கில்லர்ஜி
மீண்டும் வாழ்த்துகள்!
கீதா
வருக பார்வையாளர்கள் குறைவதால் எழுதுவதற்கு விருப்பங்கள் குறைகிறது மற்றபடி எழுதுவதற்கு தடைகள் ஏதுமில்லை.
நீக்குநாங்கள் இருவர் எழுதியுமே (ஹிஹிஹி இடையில் காணாமல் போய் மீண்டும் வந்தாலும் ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னுதானே!!!!) முக்கித் திணறி 500 கூடத் தொடலைன்னு நினைக்கிறேன். எத்தனை பதிவுகள் என்பது கூட நான் பார்த்ததும் இல்லை....ஒவ்வொருவரும் போடும் போது நினைப்பதுண்டு எத்தனைன்னு ஆனால் பார்ப்பதே இல்லை..
பதிலளிநீக்குபோட்டதை விட ட்ராஃப்டில் நிறைய இருக்கும் ஹிஹீஹிஹிஹி...
மீண்டும் வாழ்த்துகள் ஜி!
கீதா
புதிதாக எழுதாவிட்டாலும் டிராப்ட் பதிவுகளை சரி செய்து வெளியிடுங்கள்.
நீக்குதொடரும் தங்களின் சாதனைகளுக்கு என்றென்றும் என் வாழ்த்துகள் நண்பரே!!!
பதிலளிநீக்குவருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள் கில்லர்ஜி வாழ்த்துக்கள்.. கரெக்ட் ரைமுக்குத்தான் காலை உள்ளே வச்சு வந்திருக்கிறேன்போலும்:))... அதுசரி அல்வா வடை பாயாசம் ஏதும் இல்லையோ...
பதிலளிநீக்குஅறுபது வயசில ஆயிரம் பதிவோ:). ஹையோ டங்கு ஸ்லிப்பாகி அது அறுபதாச்சு மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஹா ஹா ஹா... ஆயிரம் பதிவுக்கு வெறும் ஒன்பது ஸ்டைலிலதானே போஸ்ட் குடுத்திருக்கிறீங்கள்:), ஒரு அஞ்ஞூறு போஸ்ட் ஆவது குடுத்திருக்க வேண்டாமோ:))..
குட்டீஸ் கொள்ளை அழகு, திருஸ்டி சுத்திப் போடச் சொல்லுங்கோ.. மகனின் குட்டீஸோ? இனிசல் ஒன்றாக இருக்குதே...
வாங்க அதிரா நலமா ?
நீக்குதங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல!
ஏன் நீங்கள் பதிவுகள் எழுதுவதில்லை ?
ஆயிரம் பதிவுகள் எழுதின சாதனையை விட அவற்றில் பலவற்றிற்குச் சுட்டி கொடுத்துப் பதிவும் போட்டு அனைவரையும் அசர அடிச்சுட்டீங்க. அது மிகப் பெரிய சாதனை! வாழ்த்துகள்/பாராட்டுகள்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்தி பாராட்டியமைக்கும் நன்றிகள் பல!
நீக்குஆயிரம் பதிவுகளும் அருமையான பதிவுகள். சாதனைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருக கவிஞரே வருகைக்கு நன்றி
நீக்குஆயிரம் பதிவுகள் என்பது உங்கள் சாதனை மட்டுமல்ல, அயராத உழைப்பினையும் ஊக்கத்தினையும் காட்டுகிறது. மேலும் பல ஆயிரங்கள் எழுத இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅப்புறம் , எதுக்காக உகாண்டா அரசுக்கு கடிதம் எழுதினீர்கள் .
வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஅவைகளை சொடுக்கி பாருங்கள் புரியும்.
அன்பின் தேவகோட்டைஜி,
நீக்குஎன்றும் வாழ்க வளர்க.
தங்களின் உணர்ச்சி பூர்வமான எழுத்துகளைப் படிப்பதே
ஒரு சுவாரஸ்யம்/ஆயிரம் பதிவுகளில் பதினாயிரம் செய்திகள் கொடுத்திருப்பீர்கள்.
ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும்.
தமிழ் சொல் பளிச்சிடும்.
நேர்மை சுடர்விடும்.
எனக்கென்னவோ உங்களது
உணர்ச்சி தெறிக்கும் வேகம் இன்னும் செழித்து
வளரும் என்றே தோன்றுகிறது. உங்கள்
கணினி அறிவு பளிச்சிடுகிறது இந்தப் பதிவில். அமோகமாக
இருங்கள் அப்பா.
பேத்திகள் அருமையோ அருமை.
வளம் பெறுக. ஆசிகள்.
வாங்க அம்மா தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும், பெயர்த்திகளை ஆசீர்வதித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
நீக்குவிரைவில் ஒரு
பதிலளிநீக்கு"நாலாயிரத்திவ்ய பிரபந்தம்"
முடிக்க
என் வாழ்த்துக்கள்!
________________________________
ருத்ரா
வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி
நீக்குஆயிரம் பதிவுகள் பல்லாயிரமாக மலர்ந்து சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்கு