தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 01, 2022

கொங்காமட்டை

வணக்கம் அண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடா கொங்காமட்டை நல்லா இருக்கேன்டா... என்ன விசயம் ?
 
சில சந்தேகம் இருக்குணே அதான் கேட்கலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
 
சாண்ட்’’விச் எதுலணே செய்வாங்க ?
மணல்’’லதான்.
 
குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்கிறது யாருண்ணே ?
ஜமீன்தார்தான்.
 
அடைக்கு ஏண்ணே அடைனு பேரு வந்துச்சு ?
அட நல்லா இருக்கேனு சொன்னதுனால அந்தப்பேரே நிலைச்சுருச்சுடா.
 
இந்த வருசம் அறுவடை நல்லா இருக்கணும்னா... என்ன செய்யிறதுணே ?
கொழுந்தியாளோட ஆறுபடை முருகன் கோயிலுக்கு போயிட்டு வாடா.
 
கொழுந்தியாளை கூப்பிட்டா, சகலை கோவிக்கமாட்டானாணே... ?
டேய் நான் கொழுந்தியாள்னு சொன்னது உன்னோட பொண்டாட்டியை.
 
என்னோட மனைவியை நான் எப்படிணே கொழுந்தியாளாக்க முடியும் ?
அடேய் விளங்காமட்டை உன்னோட மனைவியை எனக்கு கொழுந்தியாள்னு சொன்னேன்.
 
உங்க மனைவியோட ஊருக்கு அண்ணியேந்தல்னு பேரு எப்படிணே வந்தது ?
அந்த ஊருல அண்ணியை நடக்கவிடாம ஏந்திக்கிட்டே திரிவாங்களாம்.
 
அப்ப, நானும் அண்ணியை ஏந்தலாமாணே ?
உனக்கு கூடப்பிறந்தவன் இல்லையடா... யாரை ஏந்துவே ?
 
என்ணணே நீங்க, உங்களோட மனைவி எனக்கு அண்ணிதானே ?
டேய் என் வீட்டுப்பக்கம் வந்தே பின்னிப்புருவேன் ஓடுறா...

என்ணணே ஒண்ணுக்குள்ளே ஒண்ணு பட்டுனு பேசிட்டீங்க ?
அதனாலதான்டா நான் அரசியல்வாதி.
 
//************000000*************//
 
சிவாதாமஸ்அலி-
கொங்காமட்டை சரியான கேள்விதான் கேட்டான்.

Chivas Regal சிவசம்போ-
ஊரான் விட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையேன்னானாம்.

26 கருத்துகள்:

 1. ரசித்தேன். குறிப்பாக முதல் நான்கையும்.
  :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது ரசிப்புக்கு நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாங்க ஜி வில்லங்கம் விருமாண்டி வகையறாவாக இருப்பானோ ?

   நீக்கு
 3. //கொழுந்தியாளை// ஹா ஹா ஹா //அண்ணியை ஏந்தலாமாண்ணே// - விடாக்கொண்டனாக இருப்பான் போலிருக்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே கொடாக்கண்டனுக்கு ஏற்ற ஆள்தான்...

   நீக்கு
 4. கவுண்டமணி, செந்தில் பேசுவது போலவே இருக்கிறது.
  நல்ல சந்தேகம், நல்ல பதில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. ரசித்து சிரித்தேன். முதல் ஐந்திலும் வார்த்தைகள் விளையாட்டு அருமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 6. ஹாஹாஹாஹா கில்ல்ர்ஜி, எல்லாமே செம. கொழுந்தியாளை விட மாட்டீங்க போல!!! கொழுந்தியாள் வார்த்தை வைத்து கேள்விகள் தொடர்ந்த போது சொன்னது ஊகிக்க முடிந்ந்துவிட்டு என்றாலும் ஹாஹாஹ்தான். அண்ணியேந்தல்-அண்ணி ஏந்தல்னு ஹாஹாஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மதுரை to பரமக்குடி சாலையில் கீழடி அருகில் உள்ள கிராமம் அண்ணியேந்தல் அவ்வூர் வழியே போனபோது வந்த சிந்தனையே இப்பதிவு.

   நீக்கு
 7. எல்லாம் நன்றாக இருந்தாலும் எனக்கென்னமோ இவங்க இருவரின் நகைச்சுவைகள் பிடிக்காது. பல படங்களை இவங்க நகைச்சுவை என்பது தெரிந்து தவிர்த்திருக்கேன். :( உருவத்தையும் நிறத்தையும் கேலி செய்ய ஆரம்பிச்சு அதை நகைச்சுவைனு சொல்ல ஆரம்பிச்சது இவங்க காலத்திலே தானே! :(((((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமெடி நடிகர்கள் கிடைக்காத காரணத்தால் இவர்கள் இருவரும் கொடிகட்டி பறந்தார்கள்.

   வடிவேலு வந்துதான் இவர்களுக்கு முடிவு கிடைத்தது. எனக்கு இவர்கள் இருவரது காமெடியும் பிடிக்காது.

   பிறரை இழிவாக பேசுவதே கவுண்டமணியின் வேலை. செந்திலுக்கு சுத்தமாக காமெடி வராது.

   சரி எனது நகைச்சுவையை இவர்கள் நகைச்சுவை என்று சொல்வது நியாயமா ?

   இவர்களது புகைப்படத்தை போட்டது தவறோ ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 8. அதென்ன கொங்காமட்டைன்னு பாத்தேன்.ஓகோ! அந்த "ஞானப்பழத்தின் கொட்டை"தானே.சிரிப்பு தாங்கலே.
  அன்புடன் ருத்ரா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. ஹாஹா எப்படி இப்படி யோசிக்கிறீங்க சகோ :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ?
   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 10. பல இடங்களில் சிரிக்க வைத்தீர்கள்.நன்றி

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  நல்ல நகைச்சுவை பதிவு. எதையுமே நன்றாக யோசித்து எழுதுகிறீர்கள். ஒரு யோசிப்புக்கு ஏற்றபடி வார்த்தைகள் இயல்பாக தங்களுக்குள் வர வேண்டுமே.. அந்தக்கலையில் மிகச் சிறந்தவராக ஆகி விட்டீர்கள். மனம் விட்டு சிரிக்க வைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து சிரித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 12. அண்ணியேந்தலு நல்ல பெயரு...கொங்கமட்டைக்கு தெரியுமா..? அந்த ஊரைபத்தி??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தெரியாமல்தான் கேட்கிறான்.

   நீக்கு
 13. எடக்கு/ மடக்கா இருக்கின்றன கேள்விகளும் பதில்களும்!

  கொங்காமட்டை + மாங்காமட்டை
  அப்டினு பெயர்கள் கொடுத்திருக்கலாம் இருவருக்கும்!

  நகைச்சுவை ததும்பிய பதிவு!

  மிகவும் இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு