தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, செப்டம்பர் 16, 2022

கண்ணாடித்திரை

01. இப்பொழுதெல்லாம் மகன்களுக்கு திருமணம் செய்த மறுநாளே தனிக்குடித்தனம் வைப்பதே மரியாதையாகிறது.
 
02. இப்பொழுதெல்லாம் பிறரது மரணமோ, ஜனனமோ எனக்கு சலனத்தை தராதோ என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.
 
03. இப்பொழுதெல்லாம் முழுமையான நல்லவனாக வாழ்ந்தது முட்டாள்த்தனமோ என்ற சிந்தை அடிக்கடி தோன்றுகிறது.
 
04. இப்பொழுதெல்லாம் வாழ்வை முழுமையாக தொலைத்து விட்டதால் மறுபிறவி கிடைத்தால் நல்லது என்றே நினைக்கிறது.
 
05. இப்பொழுதெல்லாம் உறவுகளிடம் பேசுவது ஆபத்தில்தான் முடியுமோ என்ற எண்ணம் வருகிறது.
 
06. இப்பொழுதெல்லாம் விருப்பமில்லாதவனோடு பழகுவது நம்மை சொரணை அற்றவனாக்கி விடுமோ என்று மனம் நினைக்கிறது.
 
07. இப்பொழுதெல்லாம் பெண்கள் சீரியல் பார்ப்பதால்தான் கூட்டுக்குடும்பம் பிரியும் நிலைக்கு செல்கிறது.
 
08. இப்பொழுதெல்லாம் கடன் வாங்குவது காலச்சனியானது என்பது மாறி கொடுப்பது அப்படியாகும் நிலையாகிறது.
 
09. இப்பொழுதெல்லாம் குடும்பத்தில் பிறந்து அனாதையாவதை விட பிறக்கும் போதே அனாதையாவது மேலாகிறது.
 
10. இப்பொழுதெல்லாம் தனிமையில் வாழ்வதைவிட தண்ணியோடு வாழ்வது சரியோ என்று தோன்றுகிறது.
 
11. இப்பொழுதெல்லாம் மனைவி இறந்தவுடன் உடன்கட்டை ஏறுவது சரியாகுமென்று தெரிகிறது.
 
12. இப்பொழுதெல்லாம் எனது விழிகளுக்கும், இமைகளுக்கும் இடையே அடிக்கடி கண்ணாடித் திரைகள் விழுகிறது.
 
கில்லர்ஜி தேவகோட்டை

39 கருத்துகள்:

  1. காலம் மாறும் காட்சிகளும் மாறும்
    கோலம் மாறும் கொள்கைகளும் மாறும்

    இது நியதி ஜி
    அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே நலமா ?
      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இப்பொழுது எல்லாம் கடவுளை வணங்கி வழிபட்டு அர்ச்சனை அபிஷேகம் பண்ணிவிட்டு மோடியின் புகழ் பாட தொடங்குகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அது கட்சியில் அடிமையாக சேர்ந்தவர்கள்தானே ?

      நீக்கு
  3. இப்பொழுதெல்லாம் கடவுளை வாழ்த்திபாடி துதித்துவிட்டு உடனே சாத்தான் புகழ்பாட தொடங்குகிறார்கள் (சாத்தான் யார் என்று சொல்லைத்தான் தெரியவேண்டுமென்பதில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே சாத்தான்கள் நிறைந்து விட்டனர்...

      நீக்கு
  4. அன்பு தேவ கோட்டை ஜி. வெகு நியாயமான பதிவு. உண்மைதான். எல்லாம் நன்மையா இருக்க என் ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது ஆசிகளுக்கு நன்றி

      நீக்கு
  5. சுவாரஸ்யமான  சிந்தனைகள்.  ஆனாலும் எல்லாம் இப்படியாகாமல் சரியாகும் என்றே நம்புவோம்.  "நாளைப்பொழுது என்றும் நல்லபொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா" என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடலை வாரத்துக்கு மூன்று முறை கேட்கவும்!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி நல்லதொரு பாடல் வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. இப்போதெல்லாம்..பெரும்பாலும் அனைவரும் எதிர்கொள்வதே. நேர்மறையான எண்ணங்களைக் கொள்வோம். மற்றவற்றை விடுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  7. அம்மா இறந்த தனிமை உங்களை இன்னும் வாட்டுகிறது. அந்த அன்பு ஒருக்காலும் மீண்டும் கிடைக்காது. "பற்றற்று இரு" என்று சொன்னார்கள். பற்றை விட்டால் ஏகாந்தம் இனிமை. வாழ்வது கடமை எனக் கொள்க.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ''பற்றை விட்டால் ஏகாந்தம் இனிமை'' அருமையான கருத்து நன்றி ஐயா

      நீக்கு
  8. நேற்று இரவு உறங்கவில்லையா? இரவு 12 மணிக்கு எல்லாம் பதிவு எழுதுகிறீர்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுநாள் வரையில் வந்த அனைத்து பதிவுகளும் இதேநேரம்தான் ஐயா பார்த்தில்லையா ?

      அபுதாபியில் இருக்கும்போது சாதாரண நேரம்தான், இங்கு வந்த பிறகு உறக்கம் இல்லை.

      நீக்கு
  9. ஞான நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றீர்கள்..

    தேவகோட்டையில் இருந்து ஞானஒளி எங்கும் பரவட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  10. எத்தனை அனுபவ வலிகள்... இன்னமும் பலருக்கும் பல துயரங்களோடு வாழ்வு உள்ளது என்பதையும் நாம் சற்றே நினைக்க வேண்டும்...

    சில பாடல்கள் மனதிற்கு ஆறுதல் தரும் மருந்து - அதில் ஒன்று :-

    மயக்கமா ? கலக்கமா ?
    மனதிலே குழப்பமா ?
    வாழ்க்கையில் நடுக்கமா ?

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...
    வாசல்தோறும் வேதனை இருக்கும்...

    வந்த துன்பம் எதுவென்றாலும் - வாடி நின்றால் ஓடுவது இல்லை...

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் -
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்...

    ஏழை மனதை மாளிகை ஆக்கி -
    இரவும் பகலும் காவியம் பாடு

    நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து - நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு...

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி - நினைத்து பார்த்து நிம்மதி நாடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இந்தப்பாடலின் இரசிகன் நான் அடிக்கடி கேட்பேன் ஜி தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மனதையும் கலங்க வைக்கிறது. முதல் ஐந்து இப்போதெல்லாம் நிதர்சனமான உண்மைதான். எல்லாம் இப்போது மாறிய காலத்தினால் வந்தது... வருவது. மனதை ஒரு நிலைப்படுத்தி விட்டால் நல்லது என்கிறார்கள். எங்கே... அது பல நிலைகளில் தவிப்பதால்தான் இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது. இறைவன் துணை இப்போது மட்டுமின்றி எப்போதும் தங்களருகில் சேர்ந்திருக்க அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கில்ல்ர்ஜி உங்கள் மனம் புரிகிறது என்றாலும் 3, 10, 11 வேண்டாமே என்றுமே வேண்டாம்.

    12 மனது கஷ்டமாகிறது. என்றாலும் நல்லது நடக்கும் கில்லர்ஜி. நம்பிக்கை கொள்ளவும். இது சொல்வது எளிது நடமுறை கஷ்டம் என்பதும் தெரியும்தான்.

    உங்களை எப்போதும் எங்கேஜ்டாகவே வைத்திருங்கள்...ஊக்கத்தோடு ஏதேனும் ஒன்று செய்துகொண்டே இருங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் பல!

      நீக்கு
  13. உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கும் தோன்றியது ஜி.
    எத்தனை உடன்பிறப்புகள் இருந்தாலும் தனிமை சில நேரம் இது போல புலம்ப வைக்கிறது.

    தனபாலன் சொன்ன பாடலை தான் நினைத்து கொள்வேன். நீங்களும் அடிக்கடி கேட்பேன் என்று சொல்லி விட்டீர்கள்.

    தன்ணியோடு வாழ வேண்டாம். பிடித்த நபர்களுடன் பேசுங்கள், மனதுக்கு பிடித்த பாடல்கள் கேளுங்கள், நம்பிக்கையோடு இருங்கள் காலம் மாறும் காட்சிகள் மாறும். எல்லோரும் உங்கள் அன்பை புரிந்து கொண்டு உங்ககளிடம் வரும் நாளும் விரைவில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை ஆறுதல் வழியாக தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. இன்னுமா மேன் நீ பிளாக் எழுதறே என்று தான் தங்களைப் பார்த்து கேட்க வேண்டும். நான் எழுதி நாளாகிவிட்டது. உங்கள் பதிவு எனக்கு உற்சாகத்தை வழங்கியிருக்கிறது.

    பதிவில் மூன்றாவது எனக்கு பொருத்தம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. 3ம் 6ம் அற்புதம் நண்பரே. கலக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  16. இப்படி எல்லாம்.......தனிமை எண்ணவைக்கிறது . இதுவும் கடந்து போகும். மனதை தளரவிடாதீர்கள் .மனதுக்கு பிடித்ததை செய்யுங்கள் காற்றாட வெளியில் சென்று வாருங்கள்.

    பதிலளிநீக்கு