தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 13, 2023

முனைவென்றி, முனைவர் முனுசாமி


மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? போலி டாக்டர் பட்டமாம் எதுலதான் போலி செய்யிறதுனு விவஸ்தை இல்லையா ? சாலையோர போளி விக்கிற கடையிலதான் போலிதான்னா... இங்கேயுமா ? டாக்டர் பட்டம் என்பது இவ்வளவு இழிவான செயலுக்கு போய் விட்டதே... திரைப்படக் கூத்தாடன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்களாம். எதற்காக தெரியுமா ? போக்கிரி என்ற தேசிய விருது பெற்ற பெருங்காவியத்தில் நடித்ததற்காக...
 
அட, கொங்காப்பயல்களா... பட்டம் என்பதின் பெருமையை குழி தோண்டி புதைத்து விட்டீர்களேடா... வடிவேலுவுக்கு டாக்டர் பட்டம். மனிதநேயமிக்க திரு.மயில்சாமி அவர்களுக்கு கொடுத்து இருக்கலாமே... பணம் கொடுத்தால் கிடைக்கும் என்றால் மொட்டை மாடியில் நின்று பறக்க விடும் பட்டமும் இதுவும் ஒன்றுதானே... இந்த லட்சணத்தில் இதுவும் போலி.
 
விஜய்க்கு தேசிய விருது பெறும் திறமைகள் இருக்கிறதா ? அல்லது தேசிய விருதுக்கு நுழைந்திட பரிந்துரைக்கும்படியான திரைப்படங்களாவது இருக்கிறதா ? அல்லது இனிமேல்தான் வந்து விடுமா ? கமல்ஹாசனின் எத்தனை படங்கள் பரிந்துரைக்கு சென்று வந்தது இதுவே ஒரு வெற்றிதான். ஆயினும் இவரது படங்கள் நிறைய தோல்வியை தழுவின காரணம் ரசனையற்ற ரசிகனுக்கு. நெடுங்காலமாக கற்பூரவாசனை தெரிவதில்லை.
 
முன்பு வலைப்பதிவர் பன்னிக்குட்டி ராம்சாமி என்று ஒருவர் இருந்தார், பிறகு இன்னொரு பதிவர் போலி பன்னிக்குட்டி ராம்சாமி என்று ஒரு நண்பர் வந்தார். அவருடனான எனது புகைப்படம் கீழே காண்க... அதைப்போல டாக்டர் பட்டத்திலும் போலி டாக்டர் பட்டம் போலும். அரசின் செயல்பாடுகள் இந்த நிலையில் இருக்கிறது.
 
இந்த டாக்டர் என்ற பட்டத்தை நிறுத்தி விடுங்கள். உண்மையான சாதனையாளர்களின் மனம் வேதனைப்படும், இறந்தோர்களின் ஆன்மாவும் வேதனைப்படும். ஏனெனில் நீங்கள் டிக்டாக் திருச்சி சாதனா, உடன்குடி ஜி.பி.முத்து போன்றவர்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுப்பீர்கள்.
 
கில்லர்ஜி தேவகோட்டை


Share this post with your FRIENDS…

26 கருத்துகள்:

 1. பல்கலைக் கழகங்கள் தரும் கௌரவ டாக்டர் பட்டங்களில் பெரும்பான்மை, சோப்பு போடவும், தங்கள் தவறுகளை மறைக்கவுமே தரப்படுகின்றன. அல்லது அந்த நடிகர்கள் அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டுவரவுமே உபயோகம். இந்தப் பயலுவ எத்தனை நடிகைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்கன்னும் நீங்க ஆராய்ச்சி பண்ணியிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே தரங்கெட்டு விட்டது பல்கலைக்கழகங்களின் செயல்பாடு

   நீக்கு
 2. அரசியல்வாதிகள் படிச்சு வாங்கும் டாக்டர் பட்டமும், மற்றவர்களால் எழுதிக் கொடுத்து வாங்குவதாம் எனப் பலர் சொல்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப்பட்டத்தின் அர்த்தம் தெரியாமல் ஊசி போடுவேன் என்று சொன்ன அறிவாளியும் உண்டு.

   நீக்கு
  2. முனைவருக்கான ஆய்வுக் கட்டுரைகளை விடுங்கள்..  அவர்கள் மேடைப்பேச்சுகளையே வேறொருவர்தானே தயாரிக்கிறார்!

   நீக்கு
 3. போலி ஆசிரியர்கள் பற்றி எல்லாம் செய்தி வந்ததே!..

  வயிற்றுக்குள் மண்டை ஓட்டை வைத்துத் தைத்த நகைச்சுவைக் காட்சிகள் எல்லாம் இனி அரங்கேறலாம்..

  அதனால் தானே அரசியல் வியாதிகள் வெளிநாட்டு மருத்துவ மனைகளுக்கு!..

  பதிலளிநீக்கு
 4. போலி புருசன் போலி பொண்டாட்டி இதெல்லாம் இப்போது சர்வ சாதாரணம்..

  பதிலளிநீக்கு
 5. கொஞ்சம் பழைய செய்தி.  ஆயினும் சூடான செய்திதான்!  இது மாதிரி டாக்டர் பட்டங்களுக்கு மதிப்புபோய் பற்பல வருடங்கள் ஆகிவிட்டன.  இதை வாங்கி என்ன செய்யப் போகிறார்கள்?  தாங்கள் இதற்கு தகுதி இலலதவர்கள் என்று அவர்களுக்கே தெரியும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல மனதுக்காரர்களுக்கு இதை பெறுவது தவறு என்று தோன்றும்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. . உலகில் எல்லாமே போலியாகி விட்டது. படித்து வராமல் வந்த இந்த பட்டங்களை வைத்து மருத்துவம் பார்த்தால், மக்களின் கதி என்னாவது?

  எல்லாம் போ(கோ)லியாக உருளும் காலத்தின் வசம் ஆகி விட்டது. ஆனால், இந்த டாக்டர் பட்டம் வேண்டாமென தவிர்த்தவர்களும் இருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் எல்லாம் போலி மயம்தான் தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. அறியாமை தலைவிரித்து ஆடுகிறது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி
   அறியாமைகளை கொண்டு வந்தது நாம்தானே ?

   நீக்கு
 8. "போலி" பன்னிக்குட்டி ராமசாமியிடம் நீங்களும் ஏமாந்துவிட்டீர்களா?...

  நம்மை எவரும் கண்டுபிடித்துவிடக்கூடாது கடவுளே என்ற பயத்துடன்... "கில்லர்ஜி" வேறு பக்கத்தில் இருக்கிறார். நாம் போலி என்கிற உண்மை தெரிந்தால் உயிருக்கு ஏதாவது சேதாரம் வந்துடுமோ என்கிற பயத்தில் அவர் வானத்தைப்பார்த்து கடவுளிடம் பிராத்திப்பதைப் பாருங்கள்... பார்ப்பதற்கே பாவமாக இருக்கிறது....

  அதுசரி போலி பன்னிக்குட்டியை சந்தித்த நீங்கள் "ஒர்ஜினல் பன்னிகுட்டி"யை என்றாவது சந்தித்தீர்களா?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலமா ?

   தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நான் ஒரிஜினலை சந்திக்கவில்லை...

   நீக்கு
  2. எல்லாவற்றிலும் போலி...... வேதனை. இந்த மாதிரி நபர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுத்து பட்டத்தின் மதிப்பையே குலைத்து விட்டார்கள்.

   நீக்கு
  3. வாங்க ஜி தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 9. நல்ல விழிப்புணர்வு பதிவு.... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. கஷ்டப்பட்டு படித்து முனைவர் பட்டம் வாங்கியவர்களுக்கு இல்லை மதிப்பு, இவர்களை போன்றவர்களுக்கு தான் மதிபும் மரியாதையும்.

  கெளரவ பட்டம் போன்று ஆகி விட்டது, டாக்டர் பட்டம் .

  பதிலளிநீக்கு
 11. படித்து ஆராய்ச்சி செய்து வாங்கும் முனைவர் பட்டமே மதிப்பிழந்து போகும் அளவு அதில் போலிகள் பணம் கொடுத்தால் கிடைக்கும் முனைவர் பட்டம் என்றிருக்கும் போது (தமிழ்ப்பூ வலைத்தள முனைவர் கூட ஆதங்கப்பட்டிருந்தார்) இந்தக் கௌரவ முனைவர் பட்டங்களில் போலி!!! இப்பவாச்சும் நடவடிக்கை எடுக்கறாங்களே!

  உழைக்காமல் எதுவும் கிடைக்கும் என்பது நடைமுறையாகிவிட்டது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு