தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 21, 2023

Silver Jubilee Marriage


ந்த மேடைக் கச்சேரியில் என்ன தகராறு ?
மாதவியோடு பாடு’’னு சொல்றதுக்கு பதில், மாதவியோடு படு’’னு சொல்லிட்டானாம்.
* * * * * * * 01 * * * * * * *
 
அந்த புதுமுக நடிகரை இயக்குனர் அறைஞ்சிட்டாராமே ஏன் ?
நாயகியிடம் துணிந்து விடு’’னு சொல்றதுக்கு பதில் துணியை விடு’’னு சொல்லிட்டாராம்.
* * * * * * * 02 * * * * * * *
 
அந்த படத்திலிருந்த நாயகி விலகி விட்டாராமே ஏன் ?
ஆமா அந்த படத்தில் நடிக்கும் வில்லன் கற்பழிப்பு காட்சியில் உண்மையாக நடிப்பேன்’’னு பேட்டியில் சொல்லி இருந்தாராம்.
* * * * * * * 03 * * * * * * *
 
அந்த வங்கி கேஷியரை கொள்ளைக்காரர்கள் சுட்டு விட்டார்களாமே ?
ஆமா பணத்தை எல்லாம் எடு’’னு சொல்லவும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து கொடுத்தானாம்.
* * * * * * * 04 * * * * * * *
 
அந்த பத்திரிக்கை அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டார்களாமே ?
ஆமா பணம் அச்சடிப்பதில் மோசடி செய்தார்’’னு எழுதுறதுக்கு பதிலா, மோடி செய்தார்னு எழுதிட்டாங்களாம்.
* * * * * * * 05 * * * * * * *
 
அந்த படத்து நாயகி சூட்டிங் இடத்துலயே நாயகனை அறைஞ்சிட்டாராமே ?
ஆமா தாலி கட்டுற ஸீன் முடிந்ததும் பெட்ரூமுக்கு போகணும்’’னு சொன்னாராம்.
* * * * * * * 06 * * * * * * *
 
அந்த நடிகையோட கணவர் விவாகரத்து செய்யப் போறதா சொல்றாராமே ?
ஆமா நடிகை ஜீவனாம்சம் தருவேன்’’னு ஆசை காட்டி சொல்லச் சொல்லி இருக்காராம்.
* * * * * * * 07 * * * * * * *
 
அந்த முதலாளி எதுக்கு கேசவனை அடிச்சாராம் ?
குடோணுக்கு ராமாவை அழைச்சிட்டு போகாவா’’னு கேட்கிறதுக்கு பதிலா, ரமாவை அழைச்சிட்டு போகவா’’னு கேட்ருக்கான்.
* * * * * * * 08 * * * * * * *
 
மாதவன் அவன் அக்கா மகனை அடிச்சிட்டானாமே ?
ஆமா மாமா ஸ்கூட்டி கொடு’’னு சொல்றதுக்கு பதில் மாமா கூட்டிக்கொடு’’னு சொல்லி இருக்கான்.
* * * * * * * 09 * * * * * * *
 
சாப்பாட்டு பந்தியில மாப்பிள்ளை வீட்டாரோட எதுக்கு கலாட்டா ?
அவருக்கு ஊத்துன ரசம் தண்ணியாக இருந்துச்சாம் அதுக்குத்தான் சண்டை. போடுறாரு, மாப்பிள்ளையோட மச்சான்.
* * * * * * * 10 * * * * * * *
 
நடிகை கன்னி டயால் இவ்வளவு திறந்த மேனியாக அந்த மாலுக்கு வருகிறாரே எதற்கு ?
ஏதோ கேசட் கடையோட திறப்பு விழாவாம் அதற்குத்தான் இப்படி வந்து இருக்காராம்.
* * * * * * * 11 * * * * * * *
 
கல்யாண பத்திரிக்கையில் வெள்ளிவிழா திருமணம்’’னு போட்ருக்கே ?
ஆமா இது நடிகை நல்லிகாவுக்கு இருபத்து ஐந்தாவது திருமணமாம்.
* * * * * * * 12 * * * * * * *
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

Share this post with your FRIENDS…

43 கருத்துகள்:

 1. இப்போதைய ட்ரெண்டுக்கு "பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளா எடுத்தானாம்" என்பதற்கு பதில் "இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளா கொடுத்தானாம்" என்று கூட சொல்லலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆமாம் இதை எழுதும் பொழுது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வாபஸ் விசயம் வெளியாகவில்லை.

   நீக்கு
 2. எழுத்துப்பிழை வார்த்தை ஜாலங்களில் வரும் அனைத்தையும் ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 3. நடிகையின் 25வது திருமணம்... யார் பாக்கியசாலி? நடிகையா இல்லை புதுக் கணவனா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதையெல்லாம் காணும் நாம்தான் அபாக்கியசாலி

   நீக்கு
  2. ஹாஹாஹா.. கில்லர்ஜியின் நகைச்சுவை உணர்வை நான் எப்போதும் அறிவேன்.

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி தமிழரே...

   நீக்கு
 4. தப்பான புரிதலில் உண்டாகும் கேடுகளை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.
  காணொளி மலையாள பாடல் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. பிழையாமல்
  பிழை..

  பிழையோடு பிழை!..

  வேறு நல்ல பதிவைத் தந்திருக்கலாம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி விரைவில் கோயில் விபரங்களுடன் வருகிறேன்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வார்த்தைப் பிழைகளைச் கொண்டு உருவாகிய பதிவை ரசித்தேன். ஒரு எழுத்து மாறினாலும் விபரீதமாகும் வார்த்தைகள். ஒவ்வொன்றையும் யோசித்து எழுதிய தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.

  எந்த மொழியானாலும் இந்தப் பாடல் இனிமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 7. ஒரு எழுத்து பிழையால் மோசடி மோடி ஆகியது அது போலத்தான் ஒரு இரவின் பிழையால் ஒரு மோசடி தலைவர் பிறந்து இருக்கிறார்

  பதிலளிநீக்கு
 8. ஒரு எழுத்துப் பிழை - கொஞ்சம் "அப்படி" ஆகிப் போனதே கில்லர்ஜி...."அப்படி" ஆகாம இனி பாத்துக்கோங்க ஜி!!!

  இதுக்குத் தலையில் குட்டு வைக்கும், நக்கலடிக்கும் கதாபாத்திரங்களைக் காணலையே - அதாங்க சிவாஸ், சாம்பசிவம் எல்லாரும்...!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. நீலவானா ஓடையிலின் மலையாளப் பாடல் கேட்டேன் கில்லர்ஜி. மலையாளத்திலும் டப்பிங்க் வந்திருக்கு என்பது இப்பதான் தெரியும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவே தெலு(ங்)கிலும் உண்டு.

   நீக்கு
  2. அதாவது, 25வதான கௌதமியின் பாடலைப் போட இந்த கில்லர்ஜிக்கு மனமில்லை. என்ன இருந்தாலும் பரமக்குடி பாசம் போகவில்லை போலிருக்கு. என்ன சொல்றீங்க கில்லர்ஜி?

   நீக்கு
  3. கௌதமிக்கு 25- வயது ?
   எனக்கும் , பரமக்குடிக்கும் பந்தமில்லை தமிழரே...

   நீக்கு
  4. கமலதாசருக்கு எத்தனையாவது என்று யோசித்தேன்

   நீக்கு
  5. அந்த"கணக்கு உங்களுக்குதான் தெரியணும்.

   நீக்கு
  6. என்ன நடக்குது இங்கின??? நெல்லைத்தமிழன் என்பவர் யாராக இருக்குமென யோசிக்கிறேன்:))

   நீக்கு
  7. வாங்க அதிரா ஓசிச்சு ஜொள்ளுங்கோ...

   நீக்கு
 10. பரமக்குடி என் அம்மா வழியில் தாத்தா/பாட்டியின் பூர்விகம். பக்கத்திலிருக்கும் தென்னவராயன் புதுக்கோட்டையில் வீடெல்லாம் இருந்ததாய்ச் சொல்லுவார்கள். உலக்கை நாயகரின் அப்பா வக்கீல் தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னரே தாத்தாவெல்லாம் மதுரையோடு வந்துட்டாங்க. ஆனாலும் தெரியும்னு சொல்லுவாங்க.அங்கே எங்கேயோ பக்கத்திலே தான் அவங்க குலதெய்வக் கோயில் இருக்கு. மாமாக்கள்.மாமிகள்/சந்ததியினர் அடிக்கடி போயிட்டு வருவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பரமக்குடியில் 3 வருடங்கள் இருந்திருக்கிறேன். 1,2,3ம் வகுப்புகள் அங்கேதான். அங்கிருக்கும் மேல்நிலைப் பள்ளியில் என் அப்பா ஹெட்மாஸ்டராக இருந்தார் (அப்போ இருந்த ஹெட்மாஸ்டர் இறந்துவிட்டதால் அப்பாவுக்கு ப்ரொமோஷன்). ரவி தியேட்டரில் ராஜ ராஜ சோழன் படம் பார்த்த நினைவு இருக்கிறது. தியேட்டருக்கு அருகில் ஒரு புகழ் பெற்ற வக்கீல் இருந்தார் (ஸ்ரீநிவாசன்). அவர் பையன் என்னுடன் படித்தான். (அவங்க பணக்காரங்க. நான் வாத்தியார் பையன்)

   நீக்கு
  2. அப்போ வைகையாற்றில் குளித்த நினைவும், வெள்ளம் வர ஆரம்பிக்கும்போது தண்ணீருக்கு முன்னால் ஓடியதும் (ரொம்ப அசட்டுத் தைரியம்) நினைவுக்கு வருது.

   நீக்கு
  3. கீ.சா.சகோ...
   தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
  4. நெ.த.
   பரமக்குடி ரவி தியேட்டர் விடயம் முன்பு சொல்லி இருக்கிறீர்கள் தமிழரே...

   நீக்கு
 11. நீலவானம்னு தேவிகா/ஜிவாஜி நடிச்ச படம் தான் தெரியும். பார்த்திருக்கேன். இது என்ன படமோ? எல்லோரும் மலையாளம் டப்பிங்கானு கேட்கிறாங்க! இஃகி,இஃகி, இஃகி, நமக்குத் தமிழில் இருப்பதே தெரியலை.. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "வாழ்வே மாயம்"
   இந்தப்படம் மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றது.

   நீக்கு
 12. வார்த்தைகளிலும்/எழுத்திலும் விளையாடும் உங்கள் தமிழார்வம் போற்றத் தக்கது. ம்ம்ம்ம் மோசடியை "மோடி" என மாற்றி அல்ப சந்தோஷப்படுபவர்கள் தமிழகத்தின் பிரம்மாண்ட ஊழல்களைக் கண்டும் காணாமல் இருப்பது ஆச்சரியமா இருக்கு எனக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே மோடியை எதற்கு இப்படி சொல்கிறார்கள் ?

   நீக்கு
 13. நடிகர்கள் நூறாவது விழா கொண்டாடடுட்டும் நண்பரே!!

  பதிலளிநீக்கு
 14. வார்த்தை விளையாட்டு...... ரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
 15. ஆவ்வ்வ்வ் கில்லர்ஜி நலம்தானே?? நகைச்சுவை எனச் சொல்லிப்போட்டு, அடிஅடி என அடிக்கிறீங்களே இது நியாசமோ?? சே சே டங்கு ஸ்லிப்பாகுதே.. நியாயமோ?.. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே வாங்க அம்பானி தங்களது வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு