தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 01, 2023

இளம் ஜோடிகளே...

 

ணக்கம் நட்பூக்களே... இது எனது பதிவல்ல, பொதுவாக நான் பிறருடைய பதிவுகளை வெளியிடுவது இல்லை என்பது தாங்கள் அறிந்ததே... பொதுநலம் வேண்டி யாரோ எவரோ எழுதிய அற்புதமான அறிவுரை என்றே சொல்ல வேண்டும் இன்றைய சூழலில் புதிய திருமணமான இளஞ்ஜோடிகள் இதை படித்து பயன் பெறவேண்டிய நல்ல விடயம். - கில்லர்ஜி
 
கணவன் மனைவிக்கிடையே திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்து விடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான பரஸ்பர புரிதல் இல்லாமையே... கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கௌரவம் பார்க்காது, கடைப்பிடிப்பதில் தவறில்லையே...
 
01. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ளுங்கள் காலை வணக்கம் சொல்லிக் கொள்வதில் தவறில்லை.
 
02. வாரத்திற்கொரு முறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம்.
 
03. மனைவிக்கு/ கணவனுக்கு வேண்டியவர்களிடம் தன்மையாக நடந்து கொள்ளுங்கள்.
 
04. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்  கொடுத்தg ஆச்சர்யப்படுத்துங்கள.
 
05. எப்போதும் செய்தித்தாள் அல்லது டிவி பார்த்துக் கொண்டே இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச முயலுங்கள்.
 
06. சமையல் முதல் அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவ முற்படுங்கள்.
 
07. சாப்பிடும் தருணங்களில் டிவி பார்க்காமல் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.
 
08. தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். தலைகோதி விடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக் கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை வலுப்படுத்தும்.மேலும்.
 
09. எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள்.
 
10. இருவருக்கும் பிடித்த, பொதுவான பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கேளுங்கள். அது யதார்த்த சூழலில் கேட்கப்படும்போது மனதுக்குள் புன்னகை உண்டாக்கும்.
 
11. பின்கூட்டி அணையுங்கள், இது உடல் சார்ந்தது மட்டுமின்றி மனரீதியாகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
12. நகைச்சுவையான தருணங்களில் ஒருவருக்கொருவர் விஷயத்தைப் பகிர்ந்து சிரியுங்கள்.
 
13. ஐ லவ் யூ அல்லது ஐ மிஸ் யூ போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக் கொள்ளுங்கள்.
 
14. ஒருவரின் தேவைகள் என்னவேன்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்து கொண்டு நிறைவேற்றுங்கள்.
 
15. வாதம் செய்யும் போதோ, அறிவுரை கூறும் போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் அசட்டை செய்யாது கவனிக்க வேண்டும்.
 
16. தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.
 
17. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையிலும் இருந்து பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
 
18. வெளியிலிருப்பின் அழைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.
 
19. தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.
 
20. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்து வைத்துக்கொள்வது மிக முக்கியம்.
 
21. எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது.
 
22. நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளக் கூடாது.
 
23. உறவினர்கள் இருப்பின், மறைமுகமான, காதல் ஜாடைகளில் பேசிக் கொள்ளுங்கள்.
 
24. பிறந்தநாள், காதலர் தினம் போன்ற நாட்களை மறந்து விடாமல் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக நேரத்தை செலவு செய்யுங்கள்.
 
25. தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.
 
26. கணவனோ, மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டும்போது அவரைக் குத்திக் காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புங்கள்.
 
27. முத்தம் என்பது காமம் சார்ந்ததில்லை அது காதலை வெளிப்படுத்தும் ஊடகமே தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்.
 
28. தான் என்ன செய்தால் மற்றொருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை அறிய முடியவில்லை எனில், நான் என்ன செய்தால் உனக்கு சந்தோசமாக இருக்கும் என வெளிப்படையாக அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
29. எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள்.
 
30. வீட்டில் குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.
 
31. ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக் கொள்ளலாம்.
 
32. வேண்டா வெறுப்பாக இருக்காமல், வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறையைக் காட்டுங்கள்.
 
33. உங்கள் வாழ்வின் கடந்த கால அனுபவங்களை, அதாவது உங்கள் இருவருக்குள் நடந்த ஸ்வாரஸ்யமான காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவு படுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்.
 
34. மனரீதியாக மட்டுமின்றி உடல் ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும் உடல் சார்ந்த நேரங்களில் கூட காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்.
 
35. சாதாரணமாக கை கோர்க்கும் பிடியில் கூடஉனக்காக நானிக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
 
36. ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக இசை, மழை, பௌர்ணமி நிலவு, கவிதைகள், புத்தகங்கள் போன்றவைகள்.
 
37. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் எனக்கு அதுக்கு மேல வலிக்குதுஎன்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.
 
38. என்னதான் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலித்தாலும் அதை வெளிக்காட்டப் பழகுங்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் ப்ரயோஜனப்படாது.
 
39. விட்டுக் கொடுப்பதும், புரிந்து கொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும்.
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
Chivas Regal சிவசம்போ-
நமக்கு டூ லேட்டாகிடுச்சே...

Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

 1. இதையெல்லாம் படித்துவிட்டு, இன்றிலிருந்து நடந்துகொள்ள ஆரம்பித்தால், அவளுக்கு சந்தேகம் வந்துவிடாதோ? ஏதோ பெரிய தவறு பண்ணிட்டாரோ? ஆளே மாறிட்டார்! என்னவா இருக்கும்... இந்தாளு இப்படியில்லையே என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்துவிடுவாளே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   இது புதுமணத்தம்பதிகளுக்கு... என்பதை மறந்து விட்டு எங்கேயோ போய் விட்டீர்களே...

   நீக்கு
 2. நாங்களும் இளம் ஜோடிகள்தாம். அதனால்தான் டவுட்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திங்கட்கிழமையும், அதுவுமா காலையிலேயே பொய் பேசலாமா ?

   நீக்கு
 3. நல்ல யோசனைகள்.  எல்லாவற்றையும் மனதார சோம்பேறித்தனமில்லாமல் பின்பற்றுவது சிரமம்!  புரிந்துணர்வு இருந்தால் இதெல்லாம் தேவை இல்லை என்று தோன்றி விடும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது கருத்து மிகச் சரியானது.

   நீக்கு
 4. அருமை.. அருமை..

  புதுமணத் தம்பதியருக்கு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. புதுமண தம்பததியருக்கு சொல்லியிருக்கும் யோசனைகள் அருமை. ரசித்து படித்தேன். திருமணங்களில் ஆரம்பத்திலிருந்து புரிதல் வந்து விட்டால் நல்லதுதான். முதுமையிலும் ஒருவரையொருவர் ஆண்டவனைப் தவிர்த்து யாராலும் பிரிக்க இயலாது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ஆம் புரிதலின் தொடக்கம் விருப்பம். புரிதல் சரியாக இருந்தால் இறைவனைத் தவிர யாரும் பிரிக்க இயலாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 6. 40. சண்டை சண்டை சண்டை

  39ம் எளிது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   இவைகளை எளிதாக கடந்து விட்டால் எல்லாம் நலமே...

   நீக்கு
 7. மிக அருமயான பதிவு. நானும் இதை படித்து இருக்கிறேன் பத்திரிக்கையில்.
  புரிதல் இல்லையென்றால் வாழ்க்கை நரகம் தான்.
  புரிந்தவர்களுக்கு சொர்க்கம்.
  புரிதல் இல்லாமல் , பிரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

  ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, தன் துணையுடன் மனம் விட்டு பேசுதல் இருந்தால் எல்லாம் நலமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 8. இளம் தம்பதி என்று இல்லை அனைத்து தம்பதிகளுக்கும் பயனுள்ள யோசனைகள்..... விட்டுக்கொடுத்தல், புரிதல் அவசியமான ஒன்று.

  சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. எல்லாவற்றையும் பின்பற்றுவது கடினம். முக்கியமானவற்றை நினைவில் வைத்திருந்து அதன்படி நடக்கணும். நல்ல தேவையான அறிவுரைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 10. பிறருடைய பதிவுகளை பதிவு செய்ததெல்லாம் சரிதான்.... ஆனால் அதை அப்படியே copy & paste செய்து விட்டீர்களோ?... நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளதே... இதனால் அர்த்தங்கள் மாறி தம்பதிகளிடையே வருத்தங்கள் வந்து விடாதோ?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் எடுத்து, ஓட்டினேன் கவனிக்கவில்லை போலும் பிறகு படித்து மாற்றி விடுகிறேன் நண்பரே...

   தகவலுக்கு நன்றி

   நீக்கு