தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 09, 2023

மதங்களின் சடங்குகள்

 

றைவனிடம் வேண்டுதல் வைக்கும் மனிதர்கள், தன்னை செல்வந்தனாக்கு என்றும், தங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து நல்ல வாழ்க்கையை கொடு என்றும், நல்ல மாப்பிள்ளை, பெண்ணைக்கொடு என்றும் மனதுள் மனமுருகி கேட்கிறோம்.
 
அவர் கொடுப்பாரா ? மாட்டாரா ? என்பது வேறு விடயம் ஆனால் யாராவது எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்தாய் அதேபோல எனக்கு நல்ல மரணத்தை கொடு என்று கேட்டு இருக்கிறோமா ? நான் வெகு காலமாகவே மனதுள் இதைத்தான் கேட்டு வருகிறேன் எனக்கு அழகிய மரணத்தை கொடு இறைவா என்று. விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு எவ்வளவு வினோதமான மரணங்களை கொடுக்கிறது. கொரோனா உலக மக்கள் முதன் முதலாக சந்தித்த ஓர் கொடுமையான மரணம்.
 
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பது நமது முன்னோர் வாக்கு. கெடுதலிலும் ஓர் நன்மை பயக்கும் என்பதே இதன் உள்ளார்ந்த அர்த்தம். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு எனது தனிமை வாழ்வின் கொடுமையை விரட்ட வெளிநாடு செல்லலாம். என்று தீர்மானித்து ஏற்கனவே போகாத நாடாக தேர்வு செய்தேன் அதாவது தமிழர்கள் அதிகம் இல்லாத நாடாக, அதன்படி எனது நண்பனை தொடர்பு கொண்டேன். அவனொரு பாலஸ்தீனி அபுதாபியில் நட்பானவன், வா உனக்கு வேண்டிய உதவிகளை செய்கிறேன் என்று சொன்னான். கடவுச்சீட்டு காப்பி, புகைபடம், பிற தகவல்கள் எல்லாம் அனுப்பி விட்டேன்.
 
நானும் புறப்படுவதற்கு ஆயத்தமானேன், பிறகு அவனை தொடர்பு கொள்ளும்போது எனக்கு கொஞ்சம் வேலைப்பளு சற்று பொறு என்றான். குடும்பத்திலும் ஒரு சிக்கல் என்னை போகவிடாமல் தடுத்துக் கொண்டே வந்தது. எனது முயற்சிகளை சற்றே தளர்த்தினேன். இச்சூழலில்தான் துருக்கி நாட்டில் பூகம்பம் இரண்டாயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின, கணக்கில் அடங்காத, பல்லாயிரம் மக்கள் மாண்டு விட்டார்கள். எனது நண்பனுக்கு அழைத்தால் அவன் எடுக்க மறுக்கிறான் காரணம் எனக்கு விளங்கவில்லை. நான் போக முயற்சித்த நாடு துருக்கி.
 
அங்கு நிகழ்ந்த கொடூரங்களை காணொளியில் காணும்போது மனம் பதறுகிறது. மனித வாழ்வின் மரணம் அழகாக கிடைக்க வேண்டும். சாலையில் கேபிள் பதிப்பதுபோல இயந்திரங்களால் நீளமாக குழிகள் தோண்டி அவைகளில் மனித சடலங்களை நெகிழி பைகளில் தூக்கிப் போடுவதை காணும் துர்பாக்கிய நிலை. ஏதேதோ மதவாதம் பேசுகிறோம், பிரிவினை பேசுகிறோம், இங்கு குழிகளில் இடும்போது அந்த மதங்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் எங்கே போயிற்று ?
 
மனிதா மரணம் அழகாய் வேண்டும்
அதற்கு இறைவன் ரசிக்கும்
அழகியலாய் நீ வாழ வேண்டும்.
நீ மனிதத்தோடு வாழ் மரணமும்
உனக்கு மகிழ்வாய் அமையும்.
 
இறைவா உலக மக்கள் அனைவருக்கும் இனியெனும் அழகிய மரணம் கொடு
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி

Share this post with your FRIENDS…

26 கருத்துகள்:

 1. இறைவனிடம் எதைக் கேட்டுக் கிடைத்தாலும் மனம் இன்னொன்றையும் கேட்கச் சொல்லும்.

  ஆனால் அல்டிமேட் ஆசை என்பது அழகிய மரணம்தான். அதற்குமேல் கேட்பதற்கு நாமிருப்பதில்லை.

  இந்த மாதிரி காணொளியை காலையில் பார்க்க நேரிடக் கூடாது என்றும் வேண்டுதல்களில் ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளணும் போலிருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   ஆம் இதற்குமேல் உயர்வான வேண்டுதல்கள் இருக்க முடியாது.

   நீக்கு
 2. நான் காணொளியைக் காண முயற்சிக்கவில்லை.  பாருங்கள் எனக்கு அதற்கு கூட மனம் வரவில்லை!

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் சொல்வது சரி, அதைக்கொடு, இதைக்கொடு என்று வேண்டும் எத்தனை நபர்கள் இப்படி வேண்டுதல் வைப்பர்?  வைப்பார்கள்..  யாரென்றால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வாழ்ந்தவர்களும், கசப்பான அனுபவங்களை பெற்றவர்களும், யாருமில்லை தனக்கு என்று எண்ணுபவர்களும்.  ஆயினும் நானும் இனிமேல் இதை என் வேண்டுதல் லிஸ்ட்டில் இணைத்துக் கொள்கிறேன்.  நீங்கள் சொல்வது போல என்னென்னவோ வேண்டிக் கொள்கிறோம்.  நடக்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஸ்ரீராம் இப்படி வேண்டுதல்கள் வைப்பவர்கள் குறைவானவர்களே இருப்பர்.

   நீக்கு
 4. கொரோனாவில் இறந்த என் மாமா இறப்பதற்கு முன் ஒருமுறை சொன்னார்.  கொரோனாவில் நான் இறந்தால் சௌகர்யம்.  யாருக்கும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்.  கார்ப்பரேஷன் காரர்களே தூக்கிப் போட்டு விடுவார்கள்...  அப்படியே நடந்தது வேதனை.  அவர் வேண்டுதலை வைக்கவில்லை.  அபிப்ராயமாக சொன்னார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறந்தும் பிறருக்கு கஷ்டத்தை கொடுக்காதிருக்க வேண்டும் என்று நினைப்பதே உயர்வான எண்ணம்தான்.

   நீக்கு
 5. சிந்திக்க வைக்கின்ற நல்ல பதிவு..

  என் தந்தை சில விநாடிகளில் பிரிந்து விட்டார்..
  உடல் நலிவுற்றிருந்த என் தாய் உறக்கத்திலேயே ஆழ்ந்து விட்டார்..

  இப்படியான பிரிவுகளால் யாருக்கும் பிரச்சினை இல்லை என்றாலும்

  அது தான் பிரச்னையே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புண்ணிய ஆத்மாக்களுக்குத்தான் இப்படி அமையும் ஜி

   நீக்கு
 6. வாழ்வதற்குத் தான் வரங்கள் தேவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்வதற்கு வந்து விட்டோம். அது நமது கையில்...

   நல்ல மரணம் இறைவன் கையில்.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. நல்ல மரணம் அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன். "கீழே விழுந்து இறப்பை தழுவும் வரை பிறர் தயவை எதிர்பார்க்காமல் நல்லபடியாக என்னை கொண்டு போய் விடு." என்றுதான் தினமும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

  காணொளி பார்க்க ஆரம்பித்தேன். மனது கஸ்டமாக உள்ளது. அதனால் பார்க்கவில்லை. "எல்லோரும் இருக்கும் வரை நல்ல ஆரோக்கியத்தை தா" வெனவும் தினமும் பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளேன். நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "எல்லோருக்கும்" என்று படிக்கவும்.

   நீக்கு
  2. வருக சகோ
   ஆம் அனைவரும் நல்ல மரணத்தையே விரும்புவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. மனதை வேதனையில் ஆழ்த்திய பதிவு.

  பதிலளிநீக்கு
 9. "மா" என்றால் "பெரிய" என்று பொருள். அதாவது "மாமரம்" என்றால் பெரியமரம் என்று பொருள்.

  "ம" என்றால் "சிறிய" என்று பொருள். உதாரணமாக "ம"ருக்கொழுந்து என்றால் சிறிய அரும்புகளை கொண்ட கொழுந்து என்று பொருள்.

  "ரணம்" என்பது வேதனையைக் குறிப்பது...

  எனவே, "மரணம்" என்றால் "சிறிய வேதனை" என்று பொருள்.

  எனவே நீண்ட ரணத்தை (வேதனையை) கொண்ட வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மரணம் என்பது அது எந்தவகையில் நடந்தாலும் சிறிய ரணத்தை தருவதுதான்... எனவே மரணத்தை நினைந்து வருந்தற்க... சொல்லப்போனால் மரணம் என்பது வாழ்க்கையைவிட அழகானது.... மிக மிக அழகானது... அது எந்த விதத்தில் நடந்தாலும்....
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. படித்தால் மனம் கனக்கிறது நண்பரே. ஆரோக்கியமும் நல்ல விதமான மரணமும் கிடைத்தாலே பெரும் பேறு தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. எல்லோரும் ஆசை படுவது நல்ல அழகிய மரணம் தான். நம் கையில் இல்லை. காணொளி மனதை கனக்க வைக்கிறது. என் உடன்பிறந்த தங்கையின் கணவர் 8 ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார்கள் யாரும் எதிர்பாரா மரணம். பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை என்பதை உணர்த்தி கொண்டே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது தங்கையின் கணவரது குடும்பத்துக்கு எமது இரங்கல்கள்.

   அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

   நீக்கு