காதலியின் காலில் குத்தியது கருவேலோ...
சில்வர்
குடம் கொண்டு வந்ததேன்
மாமா வாங்கிய வெள்ளி குடம்
எங்கே போய் விட்டது பெண்ணே
ஓ SILVAR என்பதே
வெள்ளிதானோ
சூரிய ஒளி குடத்தில் பட்டு உனக்கு
இடராகலாம் வேண்டாம் கண்ணே
காலில்
குத்தியது என்ன பெண்ணே
கம்பியாக இருக்க கூடாது கண்ணே
கூழாங்கற்கள் நெருடி விட்டதோ...
அதுதான்
உனது பஞ்சு பாதத்துக்கு
இதமாக அக்குபஞ்சர் செய்திருக்கும்
இதற்கு மாற்றாக இருக்க கூடாது
ஒருவேளை
களிமண் குலவையோ
அப்படி இருந்தாலும் பாதகமில்லை
கழுவி விட்டால் கழன்று கொள்ளும்
இல்லை
அறிவு கெட்ட மானிடர்
இட்டுச் சென்ற சலவைக் கட்டியோ
பரவாயில்லை நீரோடு தேய்த்திடு
இல்லை
எனில் பெண்டிர்களின்
மங்கலகரமான மஞ்சள் கலவை
மறந்து போட்டு சென்றனரோ
அதனால்
என்ன மஞ்சள் பாதம்
மேலும் மஞ்சள் நிறம் ஆகுமே
என் மனம் அமைதி கொள்கிறது
மாறாக
கருவேல் முள்ளாக
இருந்தாலோ என் இதயத்தில்
சிவப்பு கண்ணீர் வடிந்திடுமே
சிவந்த
உனது பாதம் கீறல்
படவே கூடாது இதை எனது
மனம் தாங்காது தூங்காது.
ஓவியம்
தந்த ஃப்ரான்ஸ் நண்பர் திரு.பாவலர் சீராளன்.வீ அவர்களுக்கு நன்றி
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
காலில் முள் குத்தியது ஒரு பிரச்சனையா ?
சாம்பசிவம்-
குத்தியது பிரச்சனை இல்லை. யாருக்கு குத்தியது என்பதுதான் பிரச்சனை, உனக்கா இருந்தால்... கில்லர்ஜிக்கு கவிதை வராது பிரச்சனையும் கிடையாது.
மாமா வாங்கிய வெள்ளி குடம்
எங்கே போய் விட்டது பெண்ணே
சூரிய ஒளி குடத்தில் பட்டு உனக்கு
இடராகலாம் வேண்டாம் கண்ணே
கம்பியாக இருக்க கூடாது கண்ணே
கூழாங்கற்கள் நெருடி விட்டதோ...
இதமாக அக்குபஞ்சர் செய்திருக்கும்
இதற்கு மாற்றாக இருக்க கூடாது
அப்படி இருந்தாலும் பாதகமில்லை
கழுவி விட்டால் கழன்று கொள்ளும்
இட்டுச் சென்ற சலவைக் கட்டியோ
பரவாயில்லை நீரோடு தேய்த்திடு
மங்கலகரமான மஞ்சள் கலவை
மறந்து போட்டு சென்றனரோ
மேலும் மஞ்சள் நிறம் ஆகுமே
என் மனம் அமைதி கொள்கிறது
இருந்தாலோ என் இதயத்தில்
சிவப்பு கண்ணீர் வடிந்திடுமே
படவே கூடாது இதை எனது
மனம் தாங்காது தூங்காது.
காலில் முள் குத்தியது ஒரு பிரச்சனையா ?
குத்தியது பிரச்சனை இல்லை. யாருக்கு குத்தியது என்பதுதான் பிரச்சனை, உனக்கா இருந்தால்... கில்லர்ஜிக்கு கவிதை வராது பிரச்சனையும் கிடையாது.
ம்்்்் தாத்தாவையோ இல்லை மாமாவையோ அதே முள் குத்தியிருந்தால் கவிதை வந்திருக்குமா?
பதிலளிநீக்குவருக தமிழரே
நீக்குஅதானே... அவர்களுக்கு ஏன் வருவதில்லை ?
சீராளன் கவிதைகளைப் படித்து பலப் பல மாதங்களாகவிட்டது.
பதிலளிநீக்குஆம் அவர் அதிகம் எழுதுவதில்லை...
நீக்குஅழகிய பெண்ணின் காலில் முள் குத்தினால் பார்க்கும் ஆண்கள் மனதில் ரத்தம் வருகிறது! ரத்தத்தில் கவிதை முளைக்கிறது!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி இதுதான் சிவாஜி பிலிம்ஸின் இரத்தபாசமோ ?
நீக்குமூன்றாம் பிறை படத்தில் சில்க் கமலிடம் காலைக் காட்டி சொல்வார்.. "கால்ல.... முள்ளு... குத்திடுச்சு... " இந்த மூன்று வார்த்தைகளில் அவர் காட்டும் பாவம் காட்சியைத் தெளிவாக்கி விடும்!
பதிலளிநீக்குஅந்த படம் நான் பார்த்ததில்லை, அதில் பங்கு பெற்ற பலர் இன்று இல்லை.
நீக்குகாலில் முள் குத்தினால் வைத்தியம் என்ன தெரியுமா ஜி?
பதிலளிநீக்குபத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய்...
என்ன ஜி நாவில் சுளுக்கு எடுக்கிறீர்கள் ?
நீக்குதரையில் தேய்..
நீக்குஎன்று தமிழ் நயத்துடன் சொல்லி இருக்கின்றார்..
வாழ்க தமிழ்..
ஓஹோ அப்படியா ?
நீக்குகாளமேகப் புலவரின் கைவண்ணம் இது
நீக்குமுக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலேஇக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்?
அதற்கான பதில்,
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் பெயரில் கால் நீக்கி அதில் தேய்
முக்கால் என்பது கைத்தடி. மூவிரண்டு என்பது ஆறு. ஐந்து தலை நாகம் என்றால் நெருஞ்சி முள். கைத்தடி எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்க போகையில் நெருஞ்சி முள் குத்திவிட்டது என்பது இதன் பொருள்.அதற்குப் பதிலளித்த இரண்டாம் நண்பர் பத்துரதன் = தசரதன்பத்துரதன் புத்திரன் = இராமன்புத்திரனின் மித்திரன் = சுக்ரீவன்புத்திரனின் மித்திரனின் சத்துருவின் மனைவி = தாரைதாரையில் ஒரு காலை எடுத்து விட்டால் தரை. நெருஞ்சி முல்லை எடுப்பதற்கு தரையிலே தேய் என்றாராம் இரண்டாம் புலவர்.
முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பதே.
காளமேகப் புலவரின் பாடலை தேடி எடுத்து தந்தமைக்கு நன்றி ஜி
நீக்குதங்கள் மனம் தாங்காதுதான்.
பதிலளிநீக்குஆம் இளகிய மனது நண்பரே...
நீக்கு
பதிலளிநீக்குஆகா..
ஆகா!..
பாவம் அந்த முள்..
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஇப்படி பெண்ணின் காலில் முள்ளு குத்தினா உங்களுக்கு !கவிதை பிறக்குமா!! கில்லர்ஜி! அப்ப இதுக்காக பொண்ணுங்க கால்ல முள்ளு குத்திட்டே இருந்தா என்னத்துக்காறது! பாவம் பொண்ணுங்க...
பதிலளிநீக்குகவிதை நல்ல முயற்சி கில்லர்ஜி! ஆனா நீங்க கும்மிப் பாட்டு, கிராமத்துப் பாட்டு - ஏலேலோ....நடைல ரொம்பச் சிறப்பா எழுதுவீங்க. தாள கதியில்
கீதா
வருக கவிதையை இரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
நீக்குகிராமியபாடல் விரைவில் எழுதுகிறேன்.
கவிதை சிறப்பு. ஓவியமும்.
பதிலளிநீக்குவருக மேடம் வருகைக்கு நன்றி
நீக்குஉங்கள் கவிதையை படித்ததும் சனிப்பெயர்ச்சிக்கு வாரியார் சொல்லும் ஒரு கதை நினைவுக்கு வந்தது. திருமணமான புதிதில் மனைவி காலில் முள் குத்தினால், "சே! உன் காலில் குத்தி விட்டதா இந்த முள், சனியன்" என்பானாம். ஐந்தாறு வருடங்கள் கழிந்து இடுப்பில் ஒன்றும், கையில் ஒன்றுமாக நடந்து வரும் மனைவி காலில் முள் குத்தினால், "பார்த்து வரக்கூடாதா? சனியனே" என்பானாம். முதலில் முள் சனியாக இருந்தது இப்போது மனைவிக்கு பெயர்வதுதான் சனிப்பெயர்ச்சி என்பார்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. வாரியார் சொற்பொழிவுகள் நிறைய கேட்டு இருக்கிறேன்.
நீக்குஇது புதிதாக இருக்கிறது ரசிக்க வைத்தது.
மீள் வருகைக்கு நன்றி மேடம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான ஓவியமும், அதற்கேற்ற கவிதையும் சிறப்பு.
சில்வர் குடம் கொண்டு சென்ற பெண் கால்களில் ஒரு காலணிகள் வாங்கி அணிந்து கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், இப்படி ஒரு அழகான கவிதை பிறக்க வேண்டுமென்பதற்காக அவசரமாக காலணிகள் அணிய மறந்து சென்றாளோ..? என்னவோ!!! :)) கவிதையை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குகவிதையை இரசித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
ஓவியமும் கவிதையும் அருமை
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி
நீக்குகாலணிகள் அணியும் வழக்கம் இல்லையோ? பாவம் தான். ஒரு கவிதை கிடைத்ததே. அதுக்கு அந்தப் பெண்ணுக்கு நன்றி. இதைச் சாக்கிட்டு ஸ்ரீராமின் தமிழறிவும் வெளி வந்து விட்டது. ஓவியம் மிக அழகு. உங்கள் கவிதையும் தான்.
பதிலளிநீக்குவருக சகோ கவிதையையும், ஓவியத்தையும், ஸ்ரீராம்ஜியையும் பாராட்டியமைக்கு மிக்க நன்றி
நீக்குஇந்த பதிவு எப்படி என் பார்வைக்கு தப்பியது!
பதிலளிநீக்குஅருமையான ஓவியம், அருமையான கவிதை.
அந்தக்காலத்தில் பெண்கள் ஆறு குளங்களில் நீர் எடுத்து வருவார்கள், அவர்கள் காலில் செருப்பு அணிந்து கொள்ள மாட்டார்கள்.
சகுந்தலை முள் குத்திய ஓவியம் மாதிரி இருக்கிறது, ஆனால் கையில் சில்வர் குடம்.
வருக சகோ தங்களது வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்.
நீக்குபெண் ஓவியம் மனதை கவர்கிறது. கவிதையும் நன்று. அழகிய பெண்ணை கண்டால் கவிதையும் பிறக்குது : )
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குஆம் ஓவியமே கவிதைக்கு வித்து.