தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 01, 2023

கவிதைக்குடி, கவிதைக்காரி கவிதா

ண்ணகியைப் பற்றிய
குறிப்பு எழுதிய கவிதா
கோவலன் மீது கோபம்
கொண்டே எழுதினாள்
இவள் கவிதைக்காரி
வார்த்தைகள் அருவி
போலவே கொட்டும்
படித்தது என்னவோ
பள்ளிக்கூடம் வரையே
விதைக்குடியின் மகள்.
* * * * * * 01 * * * * * *
விஞ்ஞான வளர்ச்சி
கண்டு பொங்குகவி
இயற்றியவள் மகுடி
போன்றே ஊதினாள்
வார்த்தைகளின் வழி
படிப்பவர்க்கு சிலிர்க்க
வைத்தாள் பதியவும்
உணர்வு கொடுத்தாள்
இவளது கவி கண்டு
வியக்கட்டும் சமூகம்.
* * * * * * 02 * * * * * *
தை பிறந்தால் வழி
பிறக்கும் பொங்கல்
கவிதையை பொங்க
வைத்தாள், அதை
மக்கள் மனதிலும்
தங்கிட வைத்தாள்
பத்திரிக்கைகளிலும்
அதை பரவவிட்டாள்
இவள் பூமிக்கு வந்தது
தை மாதம் பிறந்த நாள்
* * * * * * 03 * * * * * *
க்விக், க்விக் என்றே
பறவையாக பாடுவாள்
மாலை நேரங்களில்
கூடுவாள் அவைகளை
தேடி ஓடுவாள், அதனை
குறித்தும் எழுதுவாள்
கவிதை எழுத இவளுக்கு
கணப்பொழுது போதும்
கவிதை மழை இதோ
க்விக், க்விக் சத்தம்.
* * * * * * 04 * * * * * *
குழந்தை மனம் போல
சிரிப்பாள், அவைகளோடு
இருப்பாள், வயல்களிலே
நிற்பாள் அங்கே கவிதை
எழுதிக் குவிப்பாள், அருவி
மலைகளில் அலைவாள்
மழை வந்தால் நனைவாள்
அங்கும் கவிதை வடிப்பாள்
சிறுமிகளை கண்டால் உடன்
குரங்கு கதை தொடுப்பாள்.
* * * * * * 05 * * * * * *
டில்லி வரையில் இவளது
கவிதை மழை பொழிகிறது
செல்வ மகளிவள் செல்லும்
இடம் எல்லாம் சிறக்கிறது
இவளது கொடியும் நாளை
பறக்கட்டுமே, அதில் புரட்சி
கவிதைகள் எழுதட்டுமே...
காடுகளைக் குறித்து கவிதை
புனையட்டுமே இதோ புதிய
டிங்டாங் என்ற புதுக்கவிதை.
* * * * * * 06 * * * * * *

க--வி--தை--க்--கு--டி
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
ஆறெழுத்து தலைப்பில் கவிதையா ?
 
Chivas Regal சிவசம்போ-
கவிதையை குடிச்சது மாதிரி இருக்குதே... 

 

Share this post with your FRIENDS…

23 கருத்துகள்:

  1. இவ்வளவு கவிதைகளை வரவழைத்த கவதா படத்தை மாத்திரம் இவர் போடவில்லையே! என்ன காரணமாக ருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதா தெரியாதா? காற்றினிலே வரும் கீதம் நாயகி. ஓ மஞ்சு படத்தில் அறிமுகம் ஆனவர்!

      நீக்கு
    2. வருக... இந்த ஊரின் பெயர்ப் பலகை என் மனதை ஈர்த்ததால் கவிதா.... மன்னிக்கவும் கவிதை பிறந்தது.

      ஆனால் நீங்கள் இருவரும் திரைப்பட கூத்தாடியை நினைப்பது முறையா ?

      எனது படம் இருப்பதை கவனிக்கவில்லையோ...

      (ஹூம் நம்ம முகத்தை யார் பார்ப்பார்கள் ? தமன்னாவாக இருந்தால் பார்ப்பார்கள்)

      நீக்கு
  2. தைப் பிறந்தால் - ப் வராது. வந்தது தை மாதம் பிறந்தநாள் என பிறந்தநாள் இடைவெளி இல்லாமல் போட்டிருப்பதால் பொருள்குற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறது. தை மாதம் பிறந்த நாள் எனப் போட்டிருந்தால் சரி.

    பதிலளிநீக்கு
  3. எழுத்துக்கொரு கவிதையா?  வட்டம் மாவட்டம் எல்லாம் இல்லையா?!

    பதிலளிநீக்கு
  4. @ கில்லர் ஜி

    (ஹூம் நம்ம முகத்தை யார் பார்ப்பார்கள் ? தமன்னாவாக இருந்தால் பார்ப்பார்கள்)

    இது தான் உலக நீதி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் உலக நீதி இப்படித்தான் இருக்கிறது.

      நீக்கு
  5. பெயர்பலகை தந்த கற்பனை கவிதை அருமை.கவிதைக்காரி கவிதா வாழ்க!
    காடுகள் குறைந்து வருகிறது, காட்டின் அவசியத்தைப்பற்றி கவிதை படைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    நலமா? நீண்ட நாட்கள் கழித்து, (பல பதிவுகளையும் கடந்து) வருகிறேன்.தங்களின் கடந்த பதிவுகளையும் படிக்கிறேன். இந்தப் பதிவில் கவிதாவை பற்றிய கவிதை பிறந்த அந்த ஊர்பலகை வித்தியாசமாக இருக்கிறது. அதை வைத்து தங்களின் கற்பனைக்கேற்றவாறு கவிதை மழை பொழிந்து விட்டீர்கள். படிக்க நன்றாக உள்ளது. உங்கள் அற்புதமான கற்பனைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    என் இன்றைய பதிவுலக வருகைக்கு தங்களின் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுக்கு என் மனம் நிறைந்த மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பதிவுலக வருகை கண்டு மகிழ்ச்சி.

      கவிதாவை மன்னிக்கவும் கவிதையை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. கவிதைக்குடி கவிதா கவிதைக்குடில இருக்கறதால கவிதை மழையா!!! இல்ல அவங்க கவிதை மழை பொழிஞ்சதால அவங்க ஊர் பெயரையே மாத்திட்டாங்களோ!!! கவிதைக்குடின்னு!!!!

    கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்னு கவைதைக்குடி கவிதாவின் கவிதை மழைல எங்களையும் நனைய வைச்சிட்ட்டா(டீ)ங்க! நடனமும் ஆடுவாங்களா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவைதைக்குடி - கவிதைக்குடி - தட்டச்சுப் பிழை.

      கீதா

      நீக்கு
    2. வருக தங்களது ரசிப்புக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  8. இந்தப் பதிவு ஏனோ கண்ணீல் படவில்லை. கவிதைக்குடி ஊர்ப் பெயரும் அருமை. கவிதை எழுதிய உங்கள் கவிதைகளூம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுக்கு நன்றி

      நீக்கு