வணக்கம்
நண்பர்களே.... நமது இந்திய நாட்டில் ஒருவேளை உணவுடன் உறங்கின்றவர்களின் எண்ணிக்கை
பல லட்சங்கள் உண்டு இருப்பினும் நமது சமூகம் அவர்களைப் பற்றிய துளியும் சிந்தை
இல்லாது கேளிக்கைகளிலும், பொழுது போக்குகளிலும் நாட்டம் செலுத்துபவர்களின் மோகம்
பெறுகி கொண்டே செல்கிறது. காரணமென்ன ? இறைவன் இவர்களுக்கு பசியின் அருமையை உணர விடாமல்
நல்வாழ்வு அளித்திருப்பதால்தானோ ?
இன்று பயிர்த்தொழில் முற்றிலும்
அழிந்து போனது மட்டுமல்ல, கிராமங்களும் அழிந்து கொண்டே வருகிறது. அதாவது நமது
கிராமத்திலும் நகரங்கள் போலவே எல்லா பொருட்களும் கிடைக்க வேண்டும் என்ற சிந்தையால்
நகரமாக்க வேண்டும் என்று நரகமாக்கி செல்கின்றனர். விவசாய வேலை செய்வதற்கு ஆட்கள்
கிடைப்பதில்லை. இதோ இங்கும் வடநாட்டவர் காலூன்றி விட்டனர்.
நமது இளைஞர்கள் தியேட்டர்களில்
தங்களது அபிமான கூத்தாடன்களின் பதாகைகளுக்கு பாலூற்றிக் கொண்டு தங்களது வாழ்வை
பாழாக்கி கொண்டு செல்கின்றனர். இன்று அவர்களின் சம்பளங்கள் சர்வ சாதாரணமாக இருநூறு
கோடிகளை தாண்டிச் செல்கிறது. வலையொளிகளில் இந்த வேலையற்ற வெட்டிக்கூட்டங்கள்
எங்கள் தலைவர்தான் முதலிடம் என்று சண்டையிட்டு கொண்டு இருக்கின்றனர்.
தனது அபிமானத்துக் குறியவனின்
படத்தின் வசூல் எண்ணூறு கோடி, ஆயிரம் கோடி என்று ஏதோ இந்த தறுதலைகள் தங்களுக்கு
வந்தது போல பேசிக்கொண்டு திரிகின்றது வீட்டில் உலை வைக்க அரிசி இல்லை என்பதை
உணராமல். இதில் பெண்களும் சளைத்தவர்கள் இல்லை. இவர்களுக்கு இந்த உணர்வுப் பெறுக்கு
முளையிடுவது கல்லூரிகளில்தான் வேறெங்கு இருக்க முடியும் ? இதற்கு
காரணவாதிகள் ஆசிரியர்களா ? இல்லை அவர்களுக்குறிய அதிகாரத்தை நாம்தான் பிடுங்கி
விட்டோமே... வேறு யார் ? பெற்றோர்களே...
தியேட்டர்களில் ஆயிரம் ரூபாய்க்கு
டிக்கெட் எடுத்து அதை பார்த்து விட்டு வெளியே வரும் பொழுது இந்த சமூகத்தை
உயர்த்துவதற்கென்றே பிறந்த மாமணிகள் மைக்கை நீட்டிக் கொண்டு நிற்கின்றனர் படம்
எப்படி இருக்கின்றது ? என்று
கேட்பதற்கு அதற்கு அவன் கைக்குழந்தையை சொல்லச் சொல்கிறான் படம் சூப்பர் என்று
அதுவும் சொல்கிறது. தமிழன் என்றுதான் விழித்தெழப் போகின்றான் ? இலங்கையைப் போல்
உணவுக்கு வழியின்றி வரும் பொழுதுதான் உணருவானோ ? அன்று இவர்கள்
போற்றிய கூத்தாடன்கள் எல்லோரும் குடும்பத்தினரோடு வெளிநாட்டில் குடியுரிமை பெற்று
விடுவார்கள்.
எந்த கூத்தாடன்களாவது ரசிகர்களை
மதிக்கின்றனரா ? இல்லையே இதையேன்
இவர்கள் உணர்ந்து பார்ப்பதில்லை ? திரைப்படத்தை வெற்றியடைய வைத்து அவர்களது அடுத்த
படத்தின் சம்பளத்தை ஐம்பது கோடிகள் ஏற்றி விட்டு இவன் வழக்கம் போலவே தெருக்கோடியில்
திரிகின்றான்... இதில் அவர்களுக்கு சம்பளம் பெற்றது போதாதென்று மகிழுந்துகளும்,
விலையுயர்ந்த கடிகாரங்களும் பரிசுகள் கிடைக்கிறது. அதேநேரம் திரைப்படத்
தொழிலாளர்களுக்கு சம்பளம் அதே அத்தக்கூலிதான். ரசிகர்களே... உங்களுக்கு இதில் என்ன
கிடைக்கிறது ? இலவசமாக படம்
பார்க்கும் டிக்கெட்டாவது கிடைக்குமா ? இதில் முதல் காட்சியை காணவேண்டும் என்று மாநிலம்
விட்டு மாநிலம் செல்கின்றீர்களே...
அந்த உழைப்பின் பணம் உங்களுடையது
இல்லை, உங்கள் தந்தையர்களின் உழைப்பு என்பது உலகறிந்த விடயம். அப்படி என்ன இவர்கள்
உலகத்தில் வராத கதையை திரைப்படமாக்கி விட்டார்கள் ? அருபது ஆண்டுகளாக
அரைத்த மாவுதானே ? கீழே
காணொளியில் பேசும் எதிர்கால இந்தியாவின் தூணை பாருங்கடா.. இவனுக்கு உள்ள அறிவு
எல்லாக் குழந்தைகளுக்கும் இருந்தால் ? இந்தியா அன்றுதாண்டா சர்வ நிச்சயமாய் வல்லரசு. அடப்போங்கடா... எனக்கு வாயும் வலிக்குது
விரலும் வலிக்குது.
கில்லர்ஜி அபுதாபி
காணொளி
பையன் இங்கு நல்லாத்தான் பேசறான். இன்னொரு இடத்தில் இவர் பேசியதைக் கேட்டேன். அவ்வளவு ரசிக்கவில்லை! அனா பினா தனமாக ராசியில் கலந்து இருந்தது.ஆனாலும் நிறைய படித்திருக்கிறான்.
பதிலளிநீக்குஎங்கு போய் முடியுமோ, கவலையாக இருக்கிறது நண்பரே.
பதிலளிநீக்குகில்லர்ஜி, இந்தப் பையனின் இதில் பேச்சு ஓகே. ஆனால் எல்லாக் காணொளிகளையும் என்னால் ஏற்க முடிவதில்லை. அறிவும், வாசிப்பும், படித்தலும், புத்திசாலித்தனம் மட்டும் போதாது. அமைதியாகச் செயல்படுவதுதான் நல்லது. மேடைப் பேச்சாளர்களில் பெரும்பாலானோர் பேச்சில் வல்லவர். ஆனால் நடைமுறையில் வேறு. எனவே empty vessels make much noise என்பது போலத்தான் நான் இதைப் பார்க்கிறேன். என்னைக் கேட்டால் இப்படிக் காணொளியில் வைரல் அது இதுன்னு ஆவதை விட அவனுடைய பெற்றோர் இப்பையனை அவரது புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப நன்றாகத் திசை திருப்பி பக்குவமடையச் செய்வது நல்லது. பல காணொளிகளில் அவர் பேசுவது மனப்பக்குவம் இல்லாமல் இருக்கிறது.
பதிலளிநீக்குகீதா
நிறைகுடம் தளும்பாது! இதுதான் பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பட வேண்டும். இது நான் ஒரு பெற்றோராக, குழந்தை உளவியல் ரீதியிலாக நினைப்பது.
நீக்குகீதா
இங்கே எதிர்புற மனையில் ஆறு மாசத்துக்குள் புதிதாக வீடு கட்டி முடித்து விட்டார்கள் - மூன்றே ஆட்கள்..
பதிலளிநீக்குஇவர்கள் இங்கே பிழைப்பு தேடி வந்த வட மாநிலத்தினர்..
நீங்களும் இவங்களைப்்பார்த்துச் சலிச்சுக்கப் போறீங்க. இவங்களும் திருந்தப் போவதில்லை.
பதிலளிநீக்குசிறு வயதில் பெரிய மனுசன் போலப் பேசுவது என்னைக் கவர்வதில்லை. அவர்கள் சொன்னதை ஒப்பிக்கும் கிளிப்பிள்ளைகள்.
ஆமாம் நெல்லை என்னையும் கவர்வதில்லை. சுய சிந்தனைகள் வளராத வயது. பாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகள் உட்பட. அவர்களுக்குத் திறமை இருக்கிறது என்பதை முழுவதும் ஏற்பேன் ஆனால் அவர்கள் பேசுவது பல வயதுக்கு மீறியதாக இருக்கு...பெற்றோர் சொல்லிக் கொடுத்தவை சினிமாக்களில் கற்றவை...என்று....இயல்பாக இருக்க விட மாட்டேன்றாங்கப்பா குழந்தைகளை.
நீக்குகீதா
சினிமா மோகத்தில் இளம் சமூகம் எங்குபோய் முடியுமோ?
பதிலளிநீக்குஅப்பா காசை செலவழித்து கொண்டு கவலை இல்லாமல் இருக்கும் சில பசங்க நடிகர்கள் பின் ஜாலியாக சுற்றுவார்கள்.
பதிலளிநீக்குபொறுப்பு உணர்ந்து விட்டால் அவர்கள் பின்னால் சுற்ற மாட்டார்கள்.
காணொளி பார்த்தேன் கேட்டேன் உழவு தொழிலை பற்றி நல்லா பேசுகிறான் . உண்மையில் உணர்ந்து பேசினால் நல்லதுதான்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவில் தங்கள் ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது? எதையும் புரிந்து கொள்ளாத இப்படிப்பட்ட மக்களை எப்படித் திருத்துவது?
காணொளி கண்டேன். அந்த சிறு பையன் நன்றாகப் பேசுகிறார். வளர்ந்த பிறகும் அவரின் இந்த எண்ணங்கள் இப்படியே மாறுதல்கள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்க்ளுடைய ஆதங்கம் புரிகிறது. என்ன செய்ய? நமக்கெல்லாம் சேற்றில் இறங்க மனமில்லை. விஞ்ஞானத்தின் உதவியுடன் பயிர்த்தொழில் நடந்தால் ஒரு வேளை விடிவுகாலம் வரலாம்.
பதிலளிநீக்குஓ விவசாயம் என்று சொல்லக் கூடாதா...பயிர்த்தொழில் - அந்தச் சிறுவன் பேசுவது நன்றாக இருக்கிறது. அவர் இதே கருத்துகளை எப்போதும் கொண்டிருக்க வேண்டும். பயிர்த்தொழில் செய்து அதன் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு அதன் பெருமை பேசி அதில் உயர்ந்து வர அதை எந்தவித தயக்கமும் இன்றி மகிழ்ச்சியோடு செய்ய உதவியாக இருக்கட்டும் அவருக்குமேதான்.
துளசிதரன்
சினிமா மோகம் - எத்தனை புலம்பினாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை கில்லர்ஜி. உங்கள் ஆதங்கம் புரிகிறது.
பதிலளிநீக்கு