தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 26, 2024

தங்கரத்தினமே...

ண்ணிக்குடம் எடுத்து போகும்
தங்க ரத்தினமே தங்க நானும்
வாறேன் தங்க வைக்கணுமே
 
வேணாம் நானும் வீட்ல விளக்கு
வைக்கணுமே வெட்டியாக உனக்கு
நானும் விளக்கி வைக்கணுமே
 
மறக்க முடியலையே மஞ்ச
ரத்தினமே மத்தியானம் நான்
வரட்டுமா வறட்டு சத்திரமே
 
மதினி வந்துருவா மருந்து
வைக்கணுமே மருதைக்கு
போகணுமே மருது மச்சானே
 
ஒரு நாளாவது தேதி சொல்லடி
மங்கல ரத்தினமே நல்ல சேதி
தாறேன் நலுங்கு வைக்கணுமே
 
பருசம் நீயும் வைக்கணுமே
பந்தக்காலு நட்டு வைக்கணுமே
பத்தமடைக்கு ஆள்ளனுப்பனுமே
 
அந்த வேலை எல்லாம் சரிதான்
ரத்தினமே பருத்தி தோட்டத்துக்கு
நீயும் சீக்கிரமா வாடி சித்திரமே
 
தனனே தன்னானே எங்க சித்திரமே
தனனே தன்னானே தங்க ரத்தினமே
தனனே தன்னானே எங்க சித்திரமே
தனனே தன்னானே தங்க ரத்தினமே
 
கில்லர்ஜி அபுதாபி


16 கருத்துகள்:

  1. நல்லா எழுதியிருக்கீங்க. பரிசம், பருசம்னு வந்திருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே எல்லாமே கிராமிய வார்த்தை இரண்டும் ஒன்றே...

      நீக்கு
  2. அது என்ன நண்பரே வறட்டு சத்திரமே ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆள் நடமாட்டம் இல்லாத வறண்டு போன சத்திரத்துக்கு கூப்பிடுகிறான்...
      (வறட்டு சத்திரம்)

      நீக்கு
  3. குழு குளு மாந்தோப்பு, தென்னந் தோப்பு, கரும்புத் தோட்டம் எல்லாம் இருக்கும்போது பருத்தித் தோட்டத்திற்கு வரச் சொல்லுறாரே!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒருவேளை அவரு ஏரியாவுல பருத்திக்காடுதான் அதிகம் போல...

      நீக்கு
    2. திருத்தம்: குழு குளு > குளு குளு

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கவிதை வரிகள் நன்றாக உள்ளது. சீக்கிரமாகவே பரிசம் போட்டு தங்க ரத்தினம் வீட்டில் பந்தக்கால் கட்டட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. ரசித்தேன்.  பந்தக்கால் வச்சுட்டு பத்தமடைக்கு ஆளனுப்பனுமா?  ஏன் ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக அந்த காலத்தில், கல்யாணத்திற்கு மணப்பெண்ணிற்கு கல்யாண சீராக தருவதற்கு பத்தமடை பாய்தான் வாங்கித் தருவார்கள். இப்போ காலங்கள் மாறியதில் எப்படியோ.? அதைதான் சகோதரர் நறுக், சுருக் வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார்.

      நீக்கு
    2. ஸ்ரீராம்ஜி தங்களுக்கு சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் சரியான பதில் சொல்லி விட்டார்கள்.

      பத்தமடைக்கு எது பிரபலம் தெரியாதா ?

      நீக்கு
  6. கவிதை அருமை.
    நல்ல சேதி வரட்டும்.

    பதிலளிநீக்கு