தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 04, 2024

ஒரு வரியில் சிறு கவிதை

ழுதுகின்றான் இங்கு புதுக்கவிதை நம்ம கில்லர்ஜியின் தனி புதுமை – மலேஷியா வாசுதேவன்
 
01.  அசைத்துப் பார்க்க ஆசை இருக்கு.
02.  மாலை நேரம் மலையில் நடந்தான்.
03.  இரும்பு போட்டு கரும்பு வாங்கினான்.
04.  பேய் வந்ததால் நாய் குரைத்தது.
05.  பிணம் புதைக்க பணம் வேண்டும்.
 
06.  உயிரைப் போக்கிட கயிறை எடுத்தான்.
07.  தண்ணீர் பிடிக்க கண்ணீர் வடித்தாள்.
08.  விளை நிலம் விலை போனது.
09.  சிலை வடித்தான் பிழை இல்லாமல்.
10.  சண்டை வந்ததால் மண்டை பிளந்தது.
 
11.  வாரம் முழுக்க பாரம் தூக்கினான்.
12.  கள்வன் மறுதினம் கணவன் ஆனான்.
13.  கட்டில் சுகத்தால் தொட்டில் வந்தது.
14.  கவி வந்தான் காவி உடுத்தியபடி.
15.  மாடியில் போய் முடி வெட்டினான்.
 
16.  மது குடித்ததும் மாதுவை தேடினான்.
17.  பணயம் வைத்து பயணம் செய்தான்.
18.  கல்லை எறிந்து பல்லை உடைத்தான்.
19.  கோபி கொடுத்த காபி சுவையானது.
20.  மாமி கோயிலில் சாமி ஆடினார்.
 
21.  பம்பு செட்டில் பாம்பு நுழைந்தது.
22.  ஆண்டி மகள் பாண்டி ஆடினாள்.
23.  அய்யா கொடுத்த கொய்யா இனித்தது.
24.  விழி பொருத்தியதும் ஒளி வந்த வாழ்வு.
25.  மயில் ஆடியதும் குயில் பாடியது.
 
26.  பருந்து விரட்டியதும் பறந்து ஓடியது.
27.  மாமன் சம்பாரிக்க ஓமன் போகிறார்.
28.  பாட்டு பாடியதும் துட்டு விழுந்தது.
29.  அணையில் நடந்து யானை போனது.
30.  உணவு சாப்பிடுவது கனவு போலானது.
.
கில்லர்ஜி புதாபி

24 கருத்துகள்:

  1. மீட்டா சொல்லித் தந்ததா? வார்த்தை விளையாட்டு கொள்ளாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீட்டா தமிழில் மாட்லாடுவதில்லை!  ஒன்லி அங்கிரேஜி 

      நீக்கு
    2. வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  2. தங்களால் மட்டுமே இதுபோல் கவிபாட முடியும் நண்பரே. அருமை

    பதிலளிநீக்கு
  3. படித்தேன்.  கமெண்ட் அடித்தேன்!

    பதிலளிநீக்கு
  4. சொந்தக் கற்பனையில் சந்த நயத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சொந்த கற்பனையில்//

      ஜி அப்படீனாக்கா... இதுவரையில் நான் வாடகைக்கு வாங்கியா எழுதினேன் ?

      நீக்கு
    2. ஹா..  ஹா..  ஹா...   சந்த நயத்துக்கு சொந்தத்தைச் சேர்த்தேன்!

      நீக்கு
    3. ஓஹோ... ஐயம் தீர்த்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  5. கற்பனை வியக்க வைத்தது. பாராட்டுகள் ஜி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஒரு சொல் கவிதை வரிகளை ரசித்துப் படித்தேன். தங்களின் கற்பனை திறனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    கவலை மறந்ததால் புதுக்
    கவிதை பிறந்தது.
    பொறிகள் பறப்பது போல
    பல வரிகள் உதித்தது.
    கருத்து செறிவினால் அவை
    பொருத்தம் மிகுந்தது.
    கண்ட கண நேரத்தில்.எங்கள்
    மனம் மகிழ்ந்தது.

    அருமை. ஒவ்வொன்றையும் ரசித்தலில் .தங்களுடன் இணைந்து நானும் சில வரிகளை புனைந்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனது கவிதை தங்களை மற்றொரு கவிதையை எழுத தூண்டியதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. கவிதை நன்றாக இருக்கிறது.
    உங்கள் கவிதை
    கமலா அவர்களை கவிதை எழுத வைத்து விட்டது.
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் மகிழ்ச்சிக்கு மிக்க நன்றி சகோதரி. சகோதரர் கில்லர்ஜி அவர்கள் கவிதை மழையே பொழிந்துள்ளார். அவருக்கு முன் நான் சாதாரண கவிதை துளிகள்தாம் தந்துள்ளேன். அவர் கவிதை நயம் மிக நன்றாக உள்ளது. பாராட்ட வார்த்தைகள் பத்தாது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. கில்லர்ஜி சூப்பர்! நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. உங்கள் வித்தியாசமான சிந்தனை எப்போதுமே வியக்க வைக்கும். இப்போதும் அப்படியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. கவிதை வரிகள் மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் உள்ளன!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு