கருங்குழி, அழகிய கிராமம் அங்கு செல்வந்தர் கருங்குமலை தனது பணபலத்தால் எதிரிகளை படுகுழியில்
தள்ளி விடுவார். இவருக்கு ஒரே செல்வமகள் இருந்தாள் நல்ல அழகி. பெயர் கனிமொழி,
பார்க்கும் ஆடவர்களை கவரும் கருவிழியழகி அவ்வளவு வசிகரமானவள். அவளை நேர் கொண்ட
பார்வையாக பார்க்க அஜீத்தால் மட்டுமே முடியும் ஆனால் அவராலும் முடியாது காரணம்
ஷாலினி.
பஞ்சாயத்து
போர்டு தேர்தல் வந்தால் அவளும் வேட்பாளரை எதிர்த்து நிற்பாள் ஆனாலும் யாரும்
ஓட்டுப் போடமாட்டார்கள். காரணம் எதிர்த்து நிற்பது எத்திராஜ் இவளது முன்னாள் முதல்
கணவர். தொடர்ந்து பஞ்சாயத்து தலைவராக இருப்பவன். கனிமொழிக்கு தேர்தல் செலவைப்பற்றி
கவலையே கிடையாது. காரணம் அப்பா கருங்குமலை வீட்டில் மூட்டை கட்டி பணத்தை வைத்து
இருக்கிறார்.
தன்னை
எப்பொழுதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இவளது எண்ணம்.
ஆளுங்கட்சியின் அதிகாரம் இருந்தாலும் ரோடு காண்ட்ராக்ட் எடுப்பதில் மும்முரம்
காட்டுவாள். ஆனால் அங்கும் ஒரு சிக்கல் நிற்கும் எவ்வளவு தொகை ஏலம் போனாலும்
பணத்தை இறக்கி இவளை குழியில் தள்ளி பழி வாங்குவதற்காக ஏலம் எடுப்பான். இளங்கோவன்.
இவன் வேறு யாருமல்ல கனிமொழியின் முன்னாள் இரண்டாவது கணவன். இவனும் கருங்குழிதான்.
இருவருமே
விவாஹரத்து விவாஹரத்துக்கு காரணம் முதல் கணவர் வீட்டில் சமைக்கச் சொல்லி
இருக்கின்றார்கள். தமது வீட்டில் சமையலுக்கு வேலைக்காரர்கள் இருந்ததால் சமையல்
கூடம் பக்கமே போனதில்லை. இங்கு மட்டும் எப்படி போவது ? மறுமாதமே விவாஹரத்து கேட்டு நீதி மன்றம் போய் விட்டாள்
கனிமொழி. தன்னை விட்டால் போதுமென்று எத்திராஜூம் எதிர்ப்பின்றி கொடுத்து விட்டான்.
இரண்டாவது
கணவன் இளங்கோவன் விவாஹரத்தானதற்கு காரணம் தெரியுமா ? கணவன் வீட்டில் காலையில் எழுந்து வாசலில் தண்ணீர் தெளிக்க
சொல்லி இருக்கின்றார்கள். மேலும் கிராமத்து பெண்ணுக்கு இது கூடவா தெரியாது ? என்று மாமியார் கேட்டதால் இது நமக்கு சரிபட்டு வராது என்று
இரண்டாவது வாரமே தண்ணீர் காட்டி வந்து விட்டாள். இதில் கவலைப்பட்டே அவளது அம்மா
அங்காளம்மா மாரடைப்பு வந்து குழியிறங்கி விட்டாள்.
நிலுவையில்
சும்மாதான் ஊரை வலம் வந்து கொண்டு இருக்கிறாள். பெரும்பாலும் இரயில் வராத, மக்கள்
கூட்டமில்லாத அந்தி மாலை நேரங்களில் இரயில் நிலையத்தில் பொழுதை கழிப்பாள். காரணம்
ஸ்டேஷன் மாஸ்டர் ரமேஷ் இன்னும் திருமணம் ஆகாத இளைஞன். பார்ப்பதற்கு பாரதிராஜாவின்
நாயகன் ராஜா மாதிரி அழகாக இருப்பான். இருவருக்குள்ளும் மெல்லிய நீரோடை போல் காதல்
அரும்பியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. காரணம் ரமேஷ் கவிதையில் நாட்டமுள்ளவன்
கனிமொழி
பாரதியாரின் கவிதை வரிகளுக்கு மயங்குபவள் பெண்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்க
வேண்டும் என்ற கருத்தில் ஆர்வம் உள்ளவள். ஆகவேதான் தண்ணீர் தெளிப்பதற்குகூட
குனிதல் கூடாது என்று கருதினாள். இவள் இந்த நிலைக்கு போனதற்கு முக்கிய காரணம் இயக்குனர்
பாரதிராஜாதான். அவரது புதுமைப்பெண் திரைப்படத்தை பக்கத்து நகரமான தேவகோட்டைக்கு
போய் அருணா தியேட்டரில் ஆறு முறைக்கு மேல் பார்த்ததின் விளைவு.
இதனால்
பெரியவர் கருங்குமலைக்கு பாரதியார் மீதும், பாரதிராஜா மீதும், கடுங்கோபமும் உண்டு.
ஆனாலும் அரசல் புரசலாக கேள்விப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் ரமேஷ் மீது கோபமில்லை. காரணம்
இங்காவது தேர் நிலை நிற்கட்டுமே என்ற நப்பாசை. தனக்கு வயதும் கூடிக்கொண்டே போகிறதே
தனக்குப் பிறகு இவளை யார் கவனிப்பார் ? என்ற கவலை. மகளுக்கு மீண்டும் வரன் தேடுவதை நிறுத்தி
இருக்கிறார் பெரியவர் கருங்குமலை. இது பதிவுலகில் சிலருக்கும்
அறியப்படுத்தப்படுகிறது.
கில்லர்ஜி அபுதாபி
Chivas Regal சிவசம்போ-
உங்க தொன்னையும் வேண்டாம், உட்காந்து திங்க திண்ணையும் வேண்டாம். போங்கடா நீங்களும் உங்க காதலும்.
இதோ
இந்த சுட்டியில் கேளுங்கள்.
1933- ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய கள்ளக்காதல் கருங்குழி பார்சல் மர்டர்
கேஸ்
Chivas Regal சிவசம்போ-
உங்க தொன்னையும் வேண்டாம், உட்காந்து திங்க திண்ணையும் வேண்டாம். போங்கடா நீங்களும் உங்க காதலும்.
விவாகரத்து என்றாலே பெண்களை மட்டுமே குற்றப்படுத்துவதுதான் சமூகத்தின் அவலம். ஆண்கள் தரப்பிலும் தவறுகள் உண்டு ஆனால் அது பேசப்படுவதில்லை.
பதிலளிநீக்குகில்லர்ஜி, லிங்க் வேறு Tab ல் திறப்பது போலக் கொடுங்கள். இவரது சேனல் நான் அவ்வப்போது பார்ப்பதுண்டு.
கீதா
வருக தங்களது உண்மையான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஆகா...
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கு நன்றி
நீக்குபத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் இந்த மாதிரி செய்திகளை பெரிதாக சொல்லும், நல்லவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது.
பதிலளிநீக்குநீங்களும் 1933 ல் நடந்த சமூக அவலத்தை கதையாக்கி இருப்பது வருத்தமாக இருக்கிறது.
வருக சகோ தங்களது மனதில் பட்டதை எழுதியதில் மகிழ்ச்சி.
நீக்குஉங்களுக்கு கதை, கவிதை நன்றாக எழுத வருகிறது. நல்லதை எழுதுங்கள் சகோ
பதிலளிநீக்குதவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
இது பழைய சம்பவம்தான் தலைப்பு கதையை எழுத வைத்தது.
நீக்குஇதில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
பாரதியாரின் 'நெஞ்சை நிமிர்த்தி நடக்கவேண்டும்' என்ற பிடித்த வரிகளுக்காகததான் குனிந்து கோலம் போடுவதைக் கூட விரும்பவில்லை என்ற வரிகள் சிரிக்க வைத்தன.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக இருந்தது.
அதானே நல்ல கொள்கைதான் போங்க....
நீக்குசிவ தாமஸ் அலியின் வரிகளும் சிரிக்க வைத்தன....
பதிலளிநீக்குஅந்த சுட்டி சென்று பார்க்க வேண்டும்.
சிவசம்போதானே கருத்து சொல்லி இருக்கிறார்.....
நீக்குலிங்க் தரும்போது அதை தனி ஜன்னலில் திறக்குமாறு அமைக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குநல்லது ஜி முயற்சிக்கிறேன்...
நீக்குநாட்டு நடப்பு...
பதிலளிநீக்குநாம் என்ன செய்வது...
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குவித்தியாசமான கதை, இல்லை வாழ்க்கை ஐயா
பதிலளிநீக்குவருக கவிஞரே நன்றி.
நீக்கு/// உடல் நலம் சரியில்லாமல் கடந்த வாரம் முழுவதும் மருத்துவமனை வாசம்.///
பதிலளிநீக்குஎபி யில் செய்தி கண்டேன்.. வருத்தமாக இருக்கின்றது...
உடல் நலனில்
கவனமாக இருக்கவும் ஜி...
தற்போது நலமே ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஸ்பாமில் இருக்கும் என்னுடைய மற்ற கமெண்ட்டுகளையும் விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குநல்லது ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவருத்தமான நிகழ்வு கதை. படிக்கும் போதே மனதை கலங்க வைக்கிறது. இந்த உண்மையான நிகழ்வு சம்பவத்தை நான் அறிந்ததில்லை. அறியவும் வேண்டாமென நினைக்கிறேன்.
தங்கள் உடல் நிலை இப்போது எப்படியுள்ளது. எபியில் தாங்கள் செய்தியாக தந்ததை படித்தேன். வருத்தமாக இருந்தது. உடல்நிலையை பத்திரமாக கவனித்துக் கொள்ளுங்கள். நானும் தங்கள் உடல்நிலை பூரணமாக குணமடைய ஆண்டவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தற்போது நலமே.... தங்களது விசாரிப்புக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீங்கள் பதிவில் எழுதிய கதை மாறுபட்டதாக இருக்கிறது. படித்து ரசித்தேன். அதைக் குறிப்பிடுவதற்குள் உங்கள் உடல்நலக்குறைவு நினைவுக்கு வரவே அதை பற்றி விசாரித்தேன். இப்போது நன்றாக நலம் பெற்று விட்டீர்களா? உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி சகோதரரே .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி சகோ....
நீக்குஉங்கள் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது?
பதிலளிநீக்குமருத்துவமனையில் வாசம் செய்யும் அளவு உடல் நலம் இருந்ததா?
வெயில் காரணமா?
உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். கவலை படாமல் இருங்கள்.
உங்கள் உடல், மனம் இரண்டும் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தற்போது நலம் புதிய காய்ச்சல் என்று சொன்னார்கள்.
நீக்குஅங்கு மருத்துவமனையில் உதவிக்கு ஆள் கூட இருக்கலாமா?
பதிலளிநீக்குஉங்கள் நண்பர்கள் அருகில் இருந்தார்களா?
நண்பர்கள் துணையுடன் நலமாயிற்று.
நீக்குமிக்க நன்றி சகோ.
சுட்டி பார்த்தேன் - 40 நிமிட காணொளி - பிறகு தான் பார்க்க வேண்டும் ஜி.
பதிலளிநீக்குஉடல் நலம் - கவனித்துக் கொள்ளுங்கள் ஜி.
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு