நான்,
கீதையைப்பற்றி
போதிக்க வந்த அருணகிரி நாதரும் அல்ல !
பைபிளை பற்றி
சோதிக்க வந்த வேளாங்கண்ணி ஃபாதரும் அல்ல !
குர்ஆனைப்பற்றி
வாதிக்க வந்த நாகூர் மார்க்க தூதரும் அல்ல !
Just you’re Brother.
மனிதன் மதம் தந்த, கதை சொல்லவா ?
இல்லை,
மனிதனை மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானைக்கு மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானை மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம் தந்த பலனால், மனிதன் பதம் பார்த்த, கதை சொல்லவா ?
இல்லை,
பதம் தந்த விளைவால் மனிதன் மதம் கோர்த்த, கதை சொல்லவா ?
இல்லை,
மதம்
வந்ததால் மனிதன் ரதம் இழுத்த, கதை சொல்லவா ?
இல்லை,
ரதம்
கூட மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம்
கொடுமையால் வாக்கு வாதம் வந்த, கதை சொல்லவா ?
இல்லை,
வாதம்
முற்றி பாதம் தொட்டு மன்னிப்பு கேட்ட கதை சொல்லவா ?
இல்லை,
மன்னிப்பு
கேட்கும் முறைக்கு நாதம் மீட்டிய, கதை சொல்லவா ?
இல்லை,
ஆதம்
காலத்து மதம் தீட்டிய, கதை சொல்லவா ?
இல்லை,
மக்கள் தொகையில்
சதம் அடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
தாமதம்
செய்து வந்த புதுமதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
சம்மதம்
சொல்ல வந்தது எம்மதம் என்ற, கதை சொல்லவா ?
இல்லை,
மதம்
இல்லை என்று சொன்ன மானிட, கதை சொல்லவா ?
இல்லை,
மலம்
கழிக்கும் மானிடனேயே மதம் போற்றிய, கதை சொல்லவா ?
இல்லை,
உலகுக்கு
எம்மதம் தொண்டு ஆற்றிய, கதை சொல்லவா ?
இல்லை,
மனதை
குழைத்து மதம் மாற்றிய, கதை சொல்லவா ?
இல்லை,
உணர்ந்து உருகி மதம் மாறிய, கதை சொல்லவா ?
இல்லை,
சதாம் கொண்டு வந்த ஆரிய(ர்), கதை சொல்லவா ?
இல்லை,
பேதம் இன்றி சாதம் ஊட்டிய, கதை சொல்லவா ?
இல்லை,
நெஞ்சு
பதைக்கின்ற மனதை வதைக்கின்ற, கதை சொல்லவா ?
CHIVAS REGAL சிவசம்போ-
இவரு, கதை சொல்லவான்னு
கேட்கிறாரா ? இல்லை கதை சொல்ல, வா ! ன்னு கூப்புடுறாரான்னு புரியலையே ? விளக்கம்
கேட்டா நம்மளை டியூப்லைட்னு சொல்வாரு...





