ஞாயிறு, மே 04, 2014

காமக்கொடூரன்கள்


1958 ல், S.S.L.C படித்தவர்கள் என்றால், இப்பொழுது இவர்களுக்கு வயது 70 ஆகி இருக்கும் திரிஷா வயதில் இவர்களுக்கு கண்டிப்பாக பேத்தி இருப்பார்கள், ஆக இவர்கள் பேத்தியை சைட் அடிக்கிறார்கள் அப்படித்தானே ? 
அப்படியானால் இவர்களின் பேரன்கள் யாரை சைட் அடிப்பது ? இது நான் நகைச்சுவைக்காக கேட்கவில்லை. 

சிந்திக்க வேண்டிய உண்மை புதைந்து கிடக்கின்றது, இவர்கள், தங்களது சந்ததிகளுக்கும், இந்த சமூகத்திற்கும் கொடுக்கும் பாடம் இதுதானா ? நாட்டில் ஐந்து வயது குழந்தையை கற்பழிக்கும் காமக்கயவர்களை நாம் குறை சொல்கிறோம் இவர்கள்தான் உண்மையிலேயே காமக்கொடூரன்கள் இவர்களின் உள்ளத்தின் வெளிப்பாடுதான் இந்தச் செயல்பாடுகள்.

இவர்களை பிடித்து பொடாவில் போட்டால் என்ன ? ஆனால் அரசாங்கம் அதை செய்ய மாட்டார்கள், ஏனெனில் இந்த மாதிரியான அறிவுஜீவிகள்தான் இவர்களின் எதிர் காலத்திற்கு தேவை.

நாம் எல்லோருமே சமூக பொருப்புணர்வு இல்லாமல் இந்த பேனர்களை பார்த்து சிரித்து விட்டு போவதால்தான் இந்த மாதிரியான தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது, இந்த வயதில் இவர்கள் இப்படியிருந்தால் இன்றைய மாணவர்களை நாம் என்ன சொல்ல முடியும் ? இதில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மரியாதை அந்தந்த இடத்தில், அவர்களுக்கு இழக்கப்படுகிறது, இது இந்த ஜென்மங்களுக்கு தெரிவதில்லை.

வெட்டியாக தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என வாய்ச்சவடால் பேசுவதை நிறுத்தி விட்டு, செயல்பாட்டில் என்று களம் இறங்குகிறோமோ, அன்றுதான் உண்மையிலேயே தமிழன் தலைநிமிர முடியும்.

அதுவரை....
தமிழன் எனசொல்லாதடா,
தலைநிமிர முடியலடா.
சாம்பசிவம்-
அன்னை தெரசாவுக்கு மன்றம் அமைகிற வயசுல இப்படி திரிஷாவுக்கு மன்றமா ?

CHIVAS REGAL சிவசம்போ-
இந்தலெட்சனத்துல, சொல்றாங்கே அந்தக்கால S.S.L.C இந்தக்கால, B.A வுக்கு சமம்னு, நம்ம சொன்னா குடிகாரப்பய, உளர்ர்ர்ரனான்னு சொல்வாங்கே.

14 கருத்துகள்:

 1. இதெல்லாம் காலத்தின் கொடுமை.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் கில்லர்ஜீ - நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது ? 70-75 வயதில் வசிப்பவர்கள் திரிஷாவிற்குப் பேனர் வைக்கிறார்களா ? கொடுமையிலும் கொடுமை - உர்ய்ப்பட வழியில்லை - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. தமிழ் நாட்டில் திரைப்பட மோகம் எந்த அளவுக்கு புரையோடி இருக்கிறது என்பதை எடுத்துரைக்க இந்த பதாகை ஒன்றே போதும். வெட்கக்கேடு என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல!

  பதிலளிநீக்கு
 4. ஏற்கனவே சினிமா நடிகைக்கு கோயிலே கட்டிவிட்டார்களே?! பொழுது போக்கிற்கு என்ன வேணும்னாலும் செய்யலாம் போல இருக்கு தலைவா! என்னத்த்த்த்த சொல்ல?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தமாதிரி ஆளுகளையெல்லாம் துபாய்க்கு கொண்டு வந்து கன்ட்ரக்சன்ஸ் வேலையில விட்டா,,,,, சரியா வந்துடும் ஆனா சம்பளம் கொடுக்ககூடாது சோறு மட்டும் கொடுக்கனும்.

   நீக்கு

 5. சிறந்த கருத்துப் பகிர்வு
  தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ இல் இணைத்து உதவுங்கள்.

  பதிலளிநீக்கு

 6. சிறந்த கருத்துப் பகிர்வு
  தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ இல் இணைத்து உதவுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. நல்லது தங்களின் வரவுக்கும், உதவிக்கும் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 8. எனக்கு சிரிப்புத்தான் வருகிறது..

  அப்புறம் உங்கள் வலைப்பூ வடிமைப்பு வாவ்..
  ஜோர் மாமே

  பதிலளிநீக்கு
 9. சிரிக்கத்தானே,,,, மாமு இவ்வளவும்.

  பதிலளிநீக்கு
 10. பெருசுகளுக்கு இளமை திரும்பகிறது நண்பா.... அதான் திரி..சாவுக்கு பேனர் வைத்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...