தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 18, 2014

மோகனின் மோகம், மோகனாவுடன்

20.10.1986

தொட்டிச்சியம்மன் துணை.
 
     என் மோகப்பசி மோகனாவுக்கு, உன் மோகமுள் மோகன் மோகத்துடன் எழுதுவது, நான் உன் நினைவால் வாடுகிறேன், நீ உன் அம்மா வீட்டுக்கு சென்று, இன்றோடு ஒன்பது மாதங்களாகி விட்டது, இதுவரை ஒரு லட்டர்கூட போடவில்லை, நானும் ஆபீஸில் வேலை கூடிவிட்டதால், போடலாமென இருந்து விட்டேன், அடுத்த அபார்ட்மெண்ட் அபர்ணாதான், எனக்கு சோறு சமைத்து வைக்கிறாள், அடுத்த மாதம் அவளுக்கு பிரசவமாம், மேலும் மூன்று வருடங்களாக லீவு கிடைக்காத அவளுடைய கணவன் மருதகாசிக்கு, லீவு கிடைத்து விட்டதாம் அதனால் அடுத்த மாதம் 18 ம் தேதி துபாயிலிருந்து வருகிறாறாம், ஆகையால் அடுத்த மாதம் முதல் சமைத்துப் போட முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று வருத்தப்பட்டு, உனக்கு கடிதம் போட்டு, 19 ம் தேதி உன்னை வரச்சொல்லச் சொன்னாள், காரணம் 20 அல்லது 21 ம் தேதி குழந்தை பிறக்கலாமென, நமது குடும்ப டாக்டர் காமினி சொன்னார், மேலும் அபர்ணாவுக்கும் உன்னை பார்க்க வேண்டுமென ஆவலாக இருக்கிறதாம், பாவம் அவளும் என்ன செய்வாள், அவள் அம்மா அலமேலுவையும், அடுத்ததெரு அழகர்சாமி கூட்டிட்டு ஓடிட்டான், துணைக்கு இருந்த அவள் தங்கச்சி சீமாவும் சீரியல்ல நடிக்கப்போயி சீரழிஞ்சு போயிட்டா, அவள் அப்பாவும் வேலூரிலிருந்து வர இன்னும் ரெண்டு மாசம் இருக்காம், அவளுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா... நம் அன்பு மகன் அன்பரசன், எப்படி இருக்கிறான் ? அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை, அதனால நீ கண்டிப்பா அடுத்த மாதம் 19 ம் தேதி வரவும், என் அன்பு மகனுக்கும், உனக்கும் என் ஆசை முத்தம்.19 ம் தேதி காலை, நான் ரயில்வே ஸ்டேஷனில் உனக்காக காத்திருப்பேன்.
 
                                  இப்படிக்கு
உன் ஆசை, மோகனாவின் மோகன்.
 
சாம்பசிவம்-
துபாய்க்காரன், எதுக்கு வர்றானாம்  புள்ளைக்கு பேர் வைக்கவா ? வச்சுட்டு, அப்படியே அவனை பாதயாத்திரையா, காசிக்கு போகச் சொல்லுஞங்க, அவன் கர்மமெல்லாம் தொலையட்டும், 
இன்ஷியல்ல கூட பிரச்சனை இல்லை போலயே !
 
குறிப்பு- 19 ம் தேதி மோகனா வருவாளா... அல்லது கடிதம் ஏதும் வருமா ? எப்படியும், அடுத்த வாரம் நமக்கு தெரிந்து விடும், நல்லதே நடக்கட்டுமென, நல்ல பெருமாளை பிரார்த்திப்போம்

திங்கள், மே 12, 2014

கதை சொல்லவா ?


நான்,
கீதையைப்பற்றி போதிக்க வந்த அருணகிரி நாதரும் அல்ல !   
பைபிளை பற்றி சோதிக்க வந்த வேளாங்கண்ணி ஃபாதரும் அல்ல !  
குர்ஆனைப்பற்றி வாதிக்க வந்த நாகூர் மார்க்க தூதரும் அல்ல !    
Just you’re Brother.

மனிதன் மதம் தந்த, கதை சொல்லவா ?
இல்லை,
மனிதனை மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானைக்கு மதம் பிடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
யானை மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம் தந்த பலனால், மனிதன் பதம் பார்த்த, கதை சொல்லவா ?
இல்லை,
பதம் தந்த விளைவால் மனிதன் மதம் கோர்த்த, கதை சொல்லவா ? 
இல்லை,
மதம் வந்ததால் மனிதன் ரதம் இழுத்த, கதை சொல்லவா ? 
இல்லை,
ரதம் கூட மனிதனை வதம் செய்த, கதை சொல்லவா ?
இல்லை,
வதம் கொடுமையால் வாக்கு வாதம் வந்த, கதை சொல்லவா ?   
இல்லை,
வாதம் முற்றி பாதம் தொட்டு மன்னிப்பு கேட்ட கதை சொல்லவா ?   
இல்லை,
மன்னிப்பு கேட்கும் முறைக்கு நாதம் மீட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
ஆதம் காலத்து மதம் தீட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
மக்கள் தொகையில் சதம் அடித்த, கதை சொல்லவா ?
இல்லை,
தாமதம் செய்து வந்த புதுமதம் செய்த, கதை சொல்லவா ?   
இல்லை,
சம்மதம் சொல்ல வந்தது எம்மதம் என்ற, கதை சொல்லவா ?   
இல்லை,
மதம் இல்லை என்று சொன்ன மானிட, கதை சொல்லவா ? 
இல்லை,
மலம் கழிக்கும் மானிடனேயே மதம் போற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை,
உலகுக்கு எம்மதம் தொண்டு ஆற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை,
மனதை குழைத்து மதம் மாற்றிய, கதை சொல்லவா ?   
இல்லை, 
உணர்ந்து உருகி மதம் மாறிய, கதை சொல்லவா ?   
இல்லை,
சதாம் கொண்டு வந்த ஆரிய(ர்), கதை சொல்லவா ?   
இல்லை,
பேதம் இன்றி சாதம் ஊட்டிய, கதை சொல்லவா ?   
இல்லை,
நெஞ்சு பதைக்கின்ற மனதை வதைக்கின்ற, கதை சொல்லவா ? 
 
CHIVAS REGAL சிவசம்போ-
இவரு, கதை சொல்லவான்னு கேட்கிறாரா ? இல்லை கதை சொல்ல, வா ! ன்னு கூப்புடுறாரான்னு புரியலையே ? விளக்கம் கேட்டா நம்மளை டியூப்லைட்னு சொல்வாரு...

ஞாயிறு, மே 04, 2014

காமக்கொடூரன்கள்


1958 ல், S.S.L.C படித்தவர்கள் என்றால், இப்பொழுது இவர்களுக்கு வயது 70 ஆகி இருக்கும் திரிஷா வயதில் இவர்களுக்கு கண்டிப்பாக பேத்தி இருப்பார்கள், ஆக இவர்கள் பேத்தியை சைட் அடிக்கிறார்கள் அப்படித்தானே ? 
அப்படியானால் இவர்களின் பேரன்கள் யாரை சைட் அடிப்பது ? இது நான் நகைச்சுவைக்காக கேட்கவில்லை. 

சிந்திக்க வேண்டிய உண்மை புதைந்து கிடக்கின்றது, இவர்கள், தங்களது சந்ததிகளுக்கும், இந்த சமூகத்திற்கும் கொடுக்கும் பாடம் இதுதானா ? நாட்டில் ஐந்து வயது குழந்தையை கற்பழிக்கும் காமக்கயவர்களை நாம் குறை சொல்கிறோம் இவர்கள்தான் உண்மையிலேயே காமக்கொடூரன்கள் இவர்களின் உள்ளத்தின் வெளிப்பாடுதான் இந்தச் செயல்பாடுகள்.

இவர்களை பிடித்து பொடாவில் போட்டால் என்ன ? ஆனால் அரசாங்கம் அதை செய்ய மாட்டார்கள், ஏனெனில் இந்த மாதிரியான அறிவுஜீவிகள்தான் இவர்களின் எதிர் காலத்திற்கு தேவை.

நாம் எல்லோருமே சமூக பொருப்புணர்வு இல்லாமல் இந்த பேனர்களை பார்த்து சிரித்து விட்டு போவதால்தான் இந்த மாதிரியான தவறுகள் நடந்து கொண்டே இருக்கிறது, இந்த வயதில் இவர்கள் இப்படியிருந்தால் இன்றைய மாணவர்களை நாம் என்ன சொல்ல முடியும் ? இதில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மரியாதை அந்தந்த இடத்தில், அவர்களுக்கு இழக்கப்படுகிறது, இது இந்த ஜென்மங்களுக்கு தெரிவதில்லை.

வெட்டியாக தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என வாய்ச்சவடால் பேசுவதை நிறுத்தி விட்டு, செயல்பாட்டில் என்று களம் இறங்குகிறோமோ, அன்றுதான் உண்மையிலேயே தமிழன் தலைநிமிர முடியும்.

அதுவரை....
தமிழன் எனசொல்லாதடா,
தலைநிமிர முடியலடா.
சாம்பசிவம்-
அன்னை தெரசாவுக்கு மன்றம் அமைகிற வயசுல இப்படி திரிஷாவுக்கு மன்றமா ?

CHIVAS REGAL சிவசம்போ-
இந்தலெட்சனத்துல, சொல்றாங்கே அந்தக்கால S.S.L.C இந்தக்கால, B.A வுக்கு சமம்னு, நம்ம சொன்னா குடிகாரப்பய, உளர்ர்ர்ரனான்னு சொல்வாங்கே.

சனி, ஏப்ரல் 12, 2014

காம(ராஜா)ர் (M.A, M.A.B.L, M.com, B.com, M.Sc,)


எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை, யார் சிறந்த மனிதர் ? 
எது 100 ஆண்டுகள் பேசும் சாதனை ?
காமராஜரின் ஆட்சி காலம்.

ராஜாஜி நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார், அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜர், அதுதான் அவர் முதன் முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளை சில மாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜர் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார், அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தர விட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென உணவும் அளிக்க திட்டம் தீட்டி நிறைவேற்றினார் ! நிதிப்பற்றாக்குறை, அரசாங்க கஜானாகாலி என்று ராஜாஜி, தமிழகத்தைப் பிச்சைக்கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த, காமராஜர் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தினார்.

நெய்வேலி நிலக்கரித்திட்டம்,
பெரம்பலூர் ரயில்பெட்டி தொழிற்சாலை,
திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்,
ஊட்டி கச்சாபிலிம் தொழிர்சாலை,
ஆவடி கனரகவாகன தொழிற்சாலை,
கல்பாக்கம் அணுமின் நிலையம்,
கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை,
சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை,
மேட்டூர் காகிதத்தொழிற்சாலை,
சென்னை அனல்மின் நிலையம்,
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
சேலம் இரும்பு உருக்காலை,
பெரம்புர் ரயில்பெட்டி தொழிற்சாலை,
அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்  தொழிற்சாலை,
சமயநல்லூர் அனல்மின் நிலையம்,
கிண்டி அறுவைச்சிகிச்சைக்கருவி  தொழிற்சாலை,
துப்பாக்கித்தொழிற்சாலை.

இவை மட்டுமா ? மணிமுத்தாறு, ஆரணியாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி, வீடூர், வைகை, காவிரி, டெல்டா, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜர் உருவாக்கியவை ! அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சியைவிட்டு இறங்கியபோது 14.

 இதுமட்டுமா ? 159 நூல்நூற்பு ஆலைகள், 4 சைக்கிள் தொழிற்சாலைகள், 6 உரத்தொழிற்சாலைகள், 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள், 2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள், ரப்பர் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை.  

கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி என்று, தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.  

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே ! காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான், (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா ?
இல்லை இலவசத்தின் பேரில் நம்மை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா ?
ஆயிரமாண்டுகள் பேசவேண்டிய, சாதனை இது ?
(This is received from "History of Tamilnadu")
என் இனிய, ஓட்டுப்போடும் தமிழக மக்களே.. இனியாவது கொஞ்சம் சிந்திப்போம் !
இல்லையேல் நாளையும் நாம, முச்சந்தியிலே நிற்போம் !

புதன், பிப்ரவரி 26, 2014

சிறையிலிருந்து, சின்னக்குயில்.


மனிதன், விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான் பிறவற்றை உணர்ந்து பார்க்கும் ஆற்றல் உடையவன் ஆகவே அவனுக்கு ஆறறிவு, என்று சொல்லிவிட்டு போனமனிதன், தனது சுயநலத்திற்காக விலங்குகளை கூண்டில் அடைத்து ரசித்துப்பார்க்கவும் சொல்லிவிட்டு போனானா ? காலம்காலமாய் ரசிக்கும் மானிடா நம்மால் ஒரு ½ மணிநேரத்திற்கு இந்தக்கூண்டுக்குள் இருக்கமுடியுமா ? இறைவன் நம்மைப்போல்தான் விலங்குகளையும், பறவைகளையும் படைத்தான் அவைகளை சிறைவைக்க யார் உமக்கு அதிகாரம் கொடுத்தது ? ஆறறிவு படைத்தமனிதன் சுயசிந்தனை கொண்டு காட்டைவிட்டு வெளியே வந்து நாட்டை உருவாக்கினான், மிருகங்களும் காட்டைவிட்டு வெளியே வந்தால் நமது நிலை ? நமக்கு பேசும்சக்தி உள்ளதால் பேசித்தீர்க்கிறோம், அவைகளும் பேசினால் ? இறைவன் படைத்த பூமியில், நீயும் நானும் சமநிலை என்றுகூட சொல்லலாம் ? யார் வெற்றி பெறுவார் ? என்பது வேறுவிசயம் வீடுகளில் பறவைகளை கூண்டுகளில் அடைத்து வைத்து வளர்ப்பவர்களே, அவைகளுக்கு முழுசுதந்திரம் கொடுங்கள் முடிந்தால் விடுதலையே கொடுங்கள் கொடுக்கமனம் வரவில்லையெனில், ஒரு ½ மணிநேரம் கூண்டுக்குள் வேண்டாம் வீட்டு அறைக்குள் இருந்து பாருங்கள், அந்தஅனுபவம் சொல்லித்தரும் ஆயிரம்"வலி"கள்.
Video
(Please ask Audio Voice)